விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மெமரி அமைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மார்
2013
00:00

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன. அண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி கம்ப்யூட்டர் ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப் படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக மெமரி கம்பைனிங் (memory combining) என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராம் இயங்கும்போதும் ராம் நினைவகத்தில் இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மெமரி கம்பைனிங் செயல்பாடு, ராம் மெமரி இடத்தைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து, ஒரே அப்ளிகேஷன் புரோகிராம், ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இயக்கத்திற்கு வந்து, அத்தனை முறை மெமரியைப் பயன் படுத்தி இருந்தால், அதனை விடுவிக்கிறது. இதன் மூலம் 10 முதல் 100 மெகா பைட் அளவில் மெமரி கிடைக்கும்.
விண்டோஸ் சிஸ்டம் தரும் சில சேவைகளுக்கான புரோகிராம்கள் இயங்க ராம் மெமரியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப் படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இத்தகைய 13 சேவை புரோகிராம்கள் இயங்குவது நிறுத்தப்பட்டுள்ளன. சில நாமாக இயக்கும்படி மாற்றப்பட்டுள்ளன. சில சேவை புரோகிராம்கள் “Start on Demand” என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக, விண்டோஸ் இயக்கத்தில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இயங்கும் சில புரோகிராம்கள், தனித்தனியாக இயங்குகை யில் அதிக இடம் எடுத்துக் கொண்டன. இவற்றை ஒன்றாக்கிக் குறைந்த அளவில் ராம் மெமரியினை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
எந்த புரோகிராம்களுக்கு ஒதுக்கப்பட்ட மெமரியை வைத்துக் கொள்வது, எவற்றை நீக்குவது என்ற வழியை விண்டோஸ் 8 ஒரு புதிய வழிமுறை மூலம் மேற்கொள்கிறது. எடுத்துக் காட்டாக, சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பைல் ஒன்றைத் திறக்கையில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனைச் சோதனை செய்திட ராம் மெமரியில் இடம் எடுத்துச் செயல்படுகிறது. இதனை ஒருமுறை மேற்கொண்டால் போதும். எனவே அடுத்த முறை இந்த சோதனைக்கான ராம் மெமரி இடம் சேமிக்கப்பட்டு, இடம் தேவைப்படும் மற்ற புரோகிராம்களுக்குத் தரப்படுகிறது.
மேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் போல இன்னும் சிலவும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நிர்வாக நடைமுறைகளாக வர இருக்கின்றன. இவற்றின் இயக்கத்தால், 1 அல்லது 2 ஜிபி ராம் மெமரி இடம் கொண்ட கம்ப்யூட்டர்களில், ராம் மெமரி தேவை யானதற்கு மட்டும் பயன்படுத்தப் பட்டு, கம்ப்யூட்டர் இயக்கத்தில் மந்த நிலை ஏற்படாது. ஏற்கனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்க குறைந்தது 404 எம்பி ராம் எடுத்துக் கொண்ட நிலையில், விண்டோஸ் 8 சிஸ்டம் 281 எம்பி மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எனவே ராம் மெமரி இடம் இல்லாததனால், அப்ளிகேஷன்கள் இயங்குவது தாமதமா கின்றன என்ற குறை இனி இருக்காது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X