பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மார்
2013
00:00

விண்7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 வெளியாக இருப்பது, மக்களின் பரவலான விருப்பத்தினை மைக்ரோசாப்ட் மதிப்பதனையே காட்டுகிறது. அதே நேரத்தில், மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்ப்பதுவும் நியாயமே.
கா. தங்க சரவணன், திண்டுக்கல்.

ஒரு காலத்தில் இமெயில் என்றால் அது ஹாட் மெயில் தான். ஹாட் மெயில் தளத்தில் மின்னஞ்சல் அக்கவுண்ட் கொண்டிருப்பதனை ஸ்டேட்டஸ் அடையாளமாகக் கருதியவர் பலர். உலக அளவில் மக்களை இணைக்கும் பாலமாக பல ஆண்டுகள் இது இயங்கியது. தங்கள் கட்டுரை பழைய நாட்களை மனதிற்குள் கொண்டு வந்தது.
எஸ். பூமிநாதன், திண்டிவனம்.

ஹாட் மெயில் அக்கவுண்டிலிருந்து அவுட்லுக் தளம் செல்வது குறித்த அனைத்து சந்தேகங் களையும் தீர்க்கும் முறையில் தெளிவாக விஷயங்களைத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி.
என். பிரகாசம், கோவை.

பிரேஸ் இட் பயன்படுத்தி என் குடும்ப உறுப்பினர்களின், குறிப்பாக குழந்தைகளை கார்ட்டூன் சித்திரங்கள் போல அமைத்து பிரிண்ட் எடுத்ததில், அவர்களுக்கு அதிக சந்தோஷம். குழந்தைகளுக்கு உதவும் இது போன்ற செய்தி களை அதிகம் தரவும்.
கா. சந்தோஷ் குமார், திருப்பூர்.

பயர்பாக்ஸ் கிராஷ் ஆனாலும், அதில் பாதுகாப்பு வழிகள் அதிகம் என்பதனை, உங்கள் கட்டுரை தெளிவாக விளக்கியது. எழுதியவருக்கு நன்றி.
சி.கண்மணி, சென்னை.

சிடி சிக்குவது காலப் போக்கில் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் ஏற்படுகிறது. ஆனால், அவற்றிற்குத் தீர்வாக இத்தனை வழிகள் உள்ளன என்பது நம்மை அமைதிப்படுத்துகிறது.
ஆர். கிறிஸ்டோபர், புதுச்சேரி.

பி.டி.எப். பைல்களின் கட்டமைப்பை ஒன்றுமே செய்திட முடியாது என்று இதுவரை எண்ணிக் கொண்டிருந்தோம். இந்த அளவிற்கு மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது வியப்பாக உள்ளது. தகவலுக்கு நன்றி.
ஆ. தென்னவன், சி.வி. இராமன் அறிவியல் பேரவை, சிதம்பரம்.

ஆங்கில மொழியினை நூறு சதவீதம் சரியாக அதனைத் தாய் மொழியாகக் கொண்டவர் போலப் பயன்படுத்த முடியாது என்பது உண்மை. இருப்பினும், அதில் ஏற்படும் தடுமாற்றங்களைத் தெளிவாகக் காட்டும் நீங்கள் சுட்டிக் காட்டிய தளம் மிகவும் அருமையான பயன்களைத் தருகிறது. மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் இது உதவும்.
பேரா. டாக்டர் எஸ்.லஷ்மணன், செய்யாறு.

உயர்ரக மொபைல் போன்கள் மக்களிடம் அதிக எண்ணிக்கையில் சென்றடைய வேண்டும் எனில், தவணை முறை திட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும். இதனை தமிழ்நாடு ஏற்கனவே மற்ற பொருட்களுக்குப் பின்பற்றி வெற்றி கண்டுள்ளது. ஸ்மார்ட் போன் மார்க்கட்டில் வந்துள்ள இந்த முறை மக்களிடம் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்களைக் கொண்டு சென்று அவர்களின் வாழ்க்கை ஆதாரத்தையும் உயர்த்த வழி வகுக்கும்.
பேரா. கா.ஸ்ரீதரன், மதுரை.

பிரவுசர் பாதுகாப்பு என்பது இன்றைய அத்தியாவசிய தேவையாய் உள்ளது. அடிக்கடி கவனிக்க வேண்டிய விஷயமாகவும் உள்ளது. இந்த வகையில் பயர்பாக்ஸ் நமக்கு பல கேடயங்களைத் தந்து பாதுகாப்பான வழிகளைத் தருவதை நன்றாக விளக்கத்துடன் தந்துள்ளீர்கள்.
என். மஹாலஷ்மி சுந்தரேசன், திருச்சி.

ஹாட்மெயில் டு அவுட்லுக் மாற்றம் குறித்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது உங்கள் கட்டுரை. நானும் என் நண்பர்களும் இந்த பிரச்னை குறித்து பலமுறை யோசித்திருக்கிறோம். ஆனால், உங்களின் விளக்கங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.
கா. உதயச் சந்திரன், கம்பம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X