கொரட்டூர் கல்சுரல் அகடமியின், ஸ்ரீ தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியை ஒட்டிய இசை நிகழ்ச்சியை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் பாடிய இளம் இசைக் கலைஞர் கலைமகன், ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். வில்லுப்பாட்டு கலைஞர் கலைமாமணி சுப்பு ஆறுமுகத்தின் பேரர் இவர். தந்தை - தாய் அனைவருமே இசையிலும், தமிழ் மொழி ஆற்றலிலும் சிறந்தவர்கள்.
சுருதி சுத்தம் சங்கீதத்திற்கு வேண்டிய குரல் அழுத்தம், குழைவுகள் ஆகியவற்றுடன், மதுரை சோமுவை நினைவுபடுத்தும் இசை வளம் இவரிடம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பமே, மூலை வீட்டு ரங்கசாமி நட்டுவனாருடைய "சலமேல' ஆதி தாள வர்ணம். தமிழ் இனிமையை பரப்பும் பாரம்பரியம். இவரும் திருவருட்பா (ராமலிங்க அடிகளார்) பாடலை, கவுளை ராகத்தில் சிறப்பாகப் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.
கலைமாமணி சுப்பு ஆறுமுகம் இயற்றிய, "எப்போ வருவாரோ'வில் தமிழ் இனித்தது. மகாகவி பாரதியின், "எத்தனை கோடி இன்பம்' பாடலுடன் மதுரமாகப் பாடி, நிறைவாக டாக்டர் பாலமுரளியின், "பிருந்தாவன சாரங்கா' தில்லானாவுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இளம் நவீன் வயலின் வாசிப்பு, மிக நன்றாக இருந்தது. இளம் திருச்சேறை கவுசிக்கின் சிறப்பான மிருதங்க வாசிப்பும், கூடுதல் மெருகு நிகழ்ச்சிக்கு. இளம் கூட்டணியின் சிறப்பான நிகழ்ச்சியாக ரசிக்க வைத்தது.
- மாளவிகா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.