கம்ப்யூட்டருக்குப் புதியவரா - பிரிண்டருக்கான குறிப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஆக
2010
00:00

பிரிண்டர்கள் இப்பொழுது ஓரளவு நியாயமான விலையில் கிடைப்பதால் எல்லோரும் அவற்றை வாங்கி விடுகிறார்கள். ஆனால் பிரிண்டரின் விலையை விட அதனுள் பொருத்த வேண்டிய இங்க் கார்ட்ரிட்ஜ் அல்லது டோனர் கார்ட்ரிட்ஜ் விலைதான்  மயக்கத்தை உண்டாக்குவதாக பலர் எண்ணுகின்றனர்.   கார்ட்ரிட்ஜை சிக்கனமாகப் பயன்படுத்தினால், இந்த பயத்திலிருந்து நீங்கள் மீளலாம்.  அந்த வகையில் பிரிண்டர் தொடர்பான சில ஆலோசனைகள் கீழே தரப்பட்டுள்ளன. 
எப்போதும் பிரிண்டருக்கான புதிய டிரைவரை நிறுவ வேண்டும். பிரிண்டரை வாங்கும்போது அதனுடன் தந்துள்ள டிரைவரை பின்பு மேம்படுத்தியிருப்பார்கள்; அந்த டிரைவரில் உள்ள பிழைகளை நீக்கியிருப்பார்கள்; புதிய வசதிகளை அதில் சேர்த்திருப்பார்கள். எனவே உங்களின் பிரிண்டரைத் தயாரித்த நிறுவனத்தின் வெப் தளத்தில் நுழைத்து, அதன் புதிய பதிப்பு டிரைவர் வெளியாகியிருந்தால் அதை டவுன்லோடு செய்து கம்ப்யூட்டரில் நிறுவுங்கள்.
பிரிண்டரை ஆப் செய்ய, பிரிண்டரில் உள்ள சுவிட்சையே பயன்படுத்துங்கள்; பவர் ப்ளக் அருகே  உள்ள சுவிட்சை பயன்படுத்தாதீர்கள். பிரிண்டரில் உள்ள ஆஃப் சுவிட்சை அழுத்தினால், உடனே பிரிண்ட் ஹெட்டை சுத்தம் செய்து அதை சரியான இடத்தில் நிலை நிறுத்துகிற வேலையை பல இங்க்ஜெட் பிரிண்டர்கள் செய்கின்றன.
இப்போதைய பிரிண்டர்கள் எல்லாம் யுஎஸ்பி (USP) போர்ட்டுகளில் இணைக்கப்படும் விதத்திலேயே வெளியாகின்றன. நீங்கள் பயன்படுத்தும்  பழைய பிரிண்டரை பேரலல் போர்ட்டில் இணைத்திருந்தால் அந்த பிரிண்டர் கேபிள் IEEE 1284  வரையறைக்கு ஏற்றதா என்பதைப் பாருங்கள். (பல மலிவான பிரிண்டர் கேபிள்கள் உள்ளன. அவை IEEE 1284 வரையறைக்கு ஏற்ப தயாரிக்கப்படடவை அல்ல). இந்த வரையறையிலான கேபிள்களால் அச்சின் வேகம் கூடும்.  Bidirection வசதி இந்த கேபிளில் உண்டு.
பிரிண்டரை பேரலல் போர்ட்டில் இணைத்திருந்தால் பயாஸின் (BIOS) செட்டப்பில் நுழைந்து ECP அல்லது EPP  செட்டிங்கை கொண்டு வர வேண்டும்.Enthaneed Parallel Port (EPP) மற்றும்  Enhanced Capabilities Port (ECP)  ஆகியவை பயாஸ் செட்டப்பின் எந்த மெனுவின் கீழ் வருகிறது என்பதைப் பார்த்து அவற்றை Enabled என மாற்றுங்கள். பயாஸை பாதுகாத்து வெளியேறுங்கள். இவை எல்லாம் பழைய கம்ப்யூட்டரில், பழைய பிரிண்டரைப் பயன்படுத்துவோருக்கே. நீங்கள் புதியதாக அண்மைக் காலத்தில் இவற்றை வாங்கி இருந்தால், மேலே உள்ளதை ஒதுக்கிவிட்டுப் படியுங்கள்.
பயன்படுத்தாத போது பிரிண்டரை மூடி வையுங்கள். தூசிகள், அழுக்குகள், காகித பிசிறுகள் போன்றவற்றால் பிரிண்டர்கள் சரியாக இயங்காமல் போய் விடும். எனவே பிரிண்டரின் உள்ளே துடையுங்கள். சிறிய வாக்வம் கிளீனர் மூலம் பிரிண்டரின் உள்ளே உள்ள அழுக்குகளை உறிஞ்சி எடுங்கள். தூசிகள் வராத இடத்தில் பிரிண்டரை வைப்பது நல்லது.
பிரிண்டர்ஹெட்டை அவ்வப்போது துடைக்க வேண்டும். பிரிண்டருடன் வந்துள்ள சாப்ட்வேரில் பிரிண்டர்ஹெட்டைச் சுத்தப்படுத்தும் வசதி உள்ளதா எனப் பாருங்கள். இருந்தால் அந்த சாப்ட்வேரை இயக்கி பிரிண்டர்ஹெட்டை துடையுங்கள். சாப்ட்வேரில் அந்த வசதி இல்லாவிடில் பிரிண்டர் ஹெட்டை துடைக்கிற வழி பிரிண்டருக்கான புத்தகத்தில் தரப்பட்டுள்ளதா எனப்பாருங்கள். பிரிண்டர் ஹெட்டை மிதமான வெந்நீரில் நனைய வைத்த  பிசிறற்ற துணியால்   துடையுங்கள்.  Isopropxl Alcohol  திரவத்தில் முக்கிய பஞ்சால் பிரிண்டர்ஹெட்டை துடைக்கவும் செய்யலாம்.
சரியான காகிதத்தையே பயன்படுத்துங்கள். பிரிண்டருக்கான  தகவல் புத்தகத்தில் எப்படிப்பட்ட காகிதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். மிக அதிக எடை கொண்ட காகிதங்களைப் பயன்படுத்தினால் அவை பிரிண்டரினுள் சிக்கி கொள்ளலாம். சில காகிதங்கள் இங்கை உறிஞ்சி பரப்பி விடுகின்றன. எனவே அச்சைப் பார்க்க/படிக்க எரிச்சலாக இருக்கும். தரமான காகிதங்களைப் பயன்படுத்துங்கள். மடங்கிய, கிழிந்த, வளைந்த காகிதங்களை அச்சடிக்கப் பயன்படுத்தாதீர்கள். இவை பிரிண்டரினுள் சிக்கி கொள்ளலாம்.
இங்க்ஜெட் பிரிண்டர்களைப் பயன்படுத்துகிறவர்கள் வாரம் ஒரு முறையாவது அச்சடிக்க வேண்டும். அந்த வாரம் அச்சடிக்க ஒன்றும் இல்லையே என்று சும்மா இருந்துவிட்டால் இங்க் உறைந்துபோய் விடும். பின்பு இங்க் கார்ட்ரிட்ஜையே தூக்கி எறிய வேண்டியதுதான். எனவே Test Printவசதியைப் பயன்படுத்தி கறுப்பிலும், வண்ணத்திலும் அச்சடியுங்கள். தேவைப்படுகிறதோ இல்லையோ வாரம் ஒரு முறை எதையாவது அச்சடிக்கிற பழக்கத்தை மேற்கொண்டால் பிரச்னைகள் எழாது.
ஓரிரு வாரங்கள் வெளியூர் செல்ல நேரிட்டால் கார்ட்ரிட்ஜை கழற்றி, காற்று புகாவண்ணம் நல்ல காகித உறையில் அதை வைத்து மூடுங்கள். கார்ட்ரிட்ஜை வாங்கும்போது அது இருந்த உறையை பத்திரப்படுத்தி வைத்திருந்தால், அந்த உறையை இப்பொழுது பயன்படுத்தலாம்.
அச்சடிப்பதற்கு முன்னர் பிரிண்ட் பிரிவியூவைப் பாருங்கள். பிரிவியூவில் நன்றாக இருந்தால் மட்டுமே அச்சடியுங்கள். இதனால் காகிதமும், இங்க்கும்/டோனரும் வீணாகாது. ஒரு காகிதத்திலேயே பல படங்களை அல்லது டாக்குமெண்டுகளை அச்சடிக்க முடிந்தாலும் நமக்கு பணம் லாபமே.  Fine Printஎன்ற யுடிலிட்டியை www.download.comதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள். ஒரு காகிதத்திலேயே பலவற்றை அச்சடிக்கும் ஆற்றல் இதற்குண்டு.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X