கூட்டுக் குடும்பம் மலரட்டும்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மார்
2013
00:00

மார்ச் 17 - திருப்பரங்குன்றம் பங்குனி உற்சவம்

கூட்டுக் குடும்பங்கள் இருந்த அந்த காலத்திலும் கூட, பிள்ளை - பெற்றோர், அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை கருத்து வேறுபாடு ஏற்பட்டது இயல்பே. ஆனால், அந்த பிரிவு நிரந்தரமாக இல்லை. யாரோ சிலர் மத்தியஸ்தம் செய்து, குடும்பங்களை இணைத்தனர். அக்காலத்தில், ஒரு வீட்டில் திருமணம் என்றால், ஒரு வாரம் முன்பே உறவினர்கள் குவிந்து விடுவர். ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு பார்ப்பர். கருத்து வேறுபாடு வரத்தான் செய்யும். அதை ஒரு பெரியவர் மத்தியஸ்தம் செய்து, வளராமல் பார்த்துக் கொள்வார். இப்படி இருந்தது அந்தக்காலம்.
இந்த ஒற்றுமைக்கு காரணம் என்னவெனில், அன்று நல்லொழுக்க பாடங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத் தரப்பட்டன. பள்ளிகளில் மட்டுமல்ல, வீடுகளில் தாத்தா, பாட்டிகள், தங்களுக்கு தெரிந்த புராணக் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பர்.
திருப்பரங்குன்றத்திற்கு நீங்கள் பலமுறை போய் இருப்பீர்கள். ஆனால், கருவறையை உற்றுக் கவனித்தீர்களா! அது முருகன் கோவில் என்றாலும், மூலவர் முருகன் இல்லை. பரங்குன்றநாதராகிய சிவனே மூலவர். அம்பாள் ஆவுடைநாயகியாகிய பார்வதி. சிவனின் எதிரே எல்லா கோவில்களிலும் நந்தி தான் இருக்கும். ஆனால், இங்கே சிவனின் மைத்துனரான பவளக்கனிவாய் பெருமாள் இருக்கிறார்.
இந்த இடத்திலேயே, குடும்பத்தின் ஒற்றுமையும், விட்டுக்கொடுக்கும் தன்மையும் புலப்படுகிறது. அடிப்படையில், திருப்பரங்குன்றம் சிவாலயமாக இருந்தாலும், தந்தை பரங்குன்றநாதர், தன் இளைய மகன் முருகனுக்காக இதை விட்டுக் கொடுத்துள்ளார். அண்ணன் கணேசனும் இதில் பங்கு கேட்கவில்லை.
கருவறையில் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் முருகன் இருக்கிறார். திருமணத்துக்கு பிரம்மாவின் தேவியரான காயத்ரி, சாவித்திரி, கலைமகள் ஆகியோர் வந்திருக்கின்றனர். முருகனுக்கும், பிரம்மாவுக்கும், "ஓம்' என்ற பிரணவம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. பிரம்மாவை முருகன் தண்டித்து விட்டார். ஆனா<லும், அதை மனதில் கொள்ளாமல், பிரம்மனும் திருமணத்துக்கு வந்திருக்கிறார். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்ற தத்துவத்தை இது நினைவுபடுத்துகிறது. தெய்வானையின் தந்தை இந்திரன் வந்திருக் கிறார். கனியைக் கொண்டு வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதையெல்லாம் மறந்து, திருமணத்துக்கு அழைக்கப்பட்ட நாரதரும், கருவறையில் காட்சி தருகிறார். உறவினர்கள் எல்லாரும் மண மேடையில் சிரித்த முகத்துடன் கூடி நிற்கின்றனர். பக்தர்களாகிய நமக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. ஆனால், ஏதோ தெய்வக் காட்சி என நினைத்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு போய் விடுகிறோம். அதிலுள்ள உள் அர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை.
நம் வீட்டு இன்றைய திருமணங்களை எண்ணிப் பாருங்கள். ஒரு கண் மணமேடையிலும், இன்னொரு கண் Œõப்பாட்டு பந்தியிலும் இருக்கிறது. திருமணம் முடிகிறதோ இல்லையோ, உ<றவினர்களெல்லாம் அடித்துப் பிடித்து சாப்பாட்டை முடிக்கின்றனர்; கொண்டு வந்த மொய்யை எழுதுகின்றனர். போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். மதியம் 2:00 மணிக்கெல்லாம் கல்யாணக் களையே இல்லாமல் போய்விடுகிறது. கடமைக்காக வருவது தான் இன்றைய உறவுகள்.
திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா ஆரம்பமாகிறது. பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து கருவறையில் பரங்குன்றநாதர், எதிரே பெருமாள், முருகன் சன்னிதியிலுள்ள தெய்வங்கள், அடுத்திருக்கும் கணபதி, துர்க்கை ஆகியோரை பார்த்தாவது, நம் குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற உணர்வுடன் திரும்ப வேண்டும். மீண்டும் கூட்டுக் குடும்பம் மலர்ந்தால் தான், கலாச்சார சீரழிவும் தடுக்கப்படும். இதெல்லாம் நடக்காது என்பதல்ல. ஒவ்வொருவரும் மனது வைக்க வேண்டும். நாம் மனம் வைத்து கேட்டால், பரங்குன்றம் முருகன் வரம் தர மறுக்க மாட்டார்.
***

தி. செல்லப்பா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.S.Balakrishnan - Doha,கத்தார்
22-மார்ச்-201303:01:29 IST Report Abuse
K.S.Balakrishnan கூட்டு குடும்பமா ????? இந்த வார்த்தைய , உங்கள் மனதார , உங்கள் இல்ல துணையிடம் சொல்லிபாருங்கள் அன்றைய தினம் முழுவதும் அந்த வீடு ?????????????????????????? ஐயோ வேண்டாங்க ஒரு பக்கம் பெத்து வளத்து ஆளாக்கி , நம்மை ஒரு மனிதனா வாழ வைத்த பெற்றோர் மறுபக்கம் உன்னையே நம்பி வந்த பொண்ணு. ஒரு பக்கம் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட விட்டுகொடுத்து போக முடியாம Kodumadaa Saami (அதுவும் வீட்டுக்கு மூத்த ஆண் பிள்ளையா பிறக்கவே கூடாதுடா சாமி) வீட்டுக்கு வருகின்ற மூத்த மகாலக்ஷ்மிகளுக்கு கொஞ்சம் கூட கூட்டு குடும்பத்தை பற்றி எதுவுமே தெரியமாட்டேங்குது . கல்யாணம் முடிந்த மறுநாளே தனியா போகணும் அப்புறம் படுகின்ற பிரச்னை ,வேதனைவெளியில் சொல்ல mudiyaathu Ellorum Onnaa Iruppomaa Appadi Onna Erunthu Kudumbam Nadathum pothu Antha sugamay thanithaan ONNA IRUKKA KATHUKKANUM ANTHA UNMAYA SONNA OTHUKKANUM
Rate this:
Share this comment
Cancel
JEYAKUMAR - madurai,இந்தியா
21-மார்ச்-201320:24:12 IST Report Abuse
JEYAKUMAR இன்றைய சூழலில் எல்லாமே அவசரகதிதான். சொந்த அண்ணன் தங்கை திருமணத்திற்கே, முழுநாள் இருக்க முடியாத சூழல் உள்ளது. அதுதவிர அவரவர்களின் வேலை அமைப்புதான்
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
17-மார்ச்-201304:41:27 IST Report Abuse
Skv அந்த நாள் திருமணங்கள் நெஜம்மாவே மகிழ்சிதான் சிவசங்கர் எழுதிய பாலங்கள் படிங்க . உறவுகளின் பலம் தெரியும் இன்று நடக்கும் பல திருமணங்கள் ஜஸ்ட் வெறும் கண்காட்சியா த்தான் இருக்கு . பேச்சிலர் பார்ட்டின்னு சொல்லிண்டு குடிச்சு கூத்தடிக்கரது மருதாணி வைப்பதுன்னு ஒரு புதிய சடங்கு ( இதனால் சிலர் பிழைப்பு நடக்குது)ன்னு விட்டுடலாம் இதுக்கு சிலவு செய்றது பெண்ணை பெத்தவா தான் , முன்பு சாஸ்திரிகள் தச்சினை சில ஆயிரங்களே ஆனால் இன்று காலிலே சுருக்க முகூர்த்தம்னா ஒரு ரேட் பேசி கலெக்ட் பண்றாக, அடுத்த நெக்ஸ்ட் முகூர்தம்னு ஓடராக . அவர்களும் நன்னா இருக்கட்டும் என்று தான் நெனெஇக்கிரென் . சாச்திரங்களைவிட சம்ப்ரதாயங்களை விட resepshanum பார்த்யுமே பிரதானம் ஆயிட்டுது. உறவுகளை காட்டிலும் நட்புக்கும் பணக்காராளுக்கும் முக்கியம் நு ஆயுட்டுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.