அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மார்
2013
00:00

பெண் சிசுக் கொலைக்கு எதிரான குரல், பலமாக ஒலித்து கொண்டிருக்கிறது; கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை! ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத்தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது, "பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நூல். அதிலிருந்து சில பகுதிகள்:
இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்பாடுகள் தான். இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன், அவர்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றவும், பின், அவர்கள் ஆத்மா சாந்தியடையவும், ஆண்மக்களே தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும், சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும். அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க, ஆண் மக்களே தேவைப்பட்டனர். ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை, பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், அவர்கள் பொறுப்பாயிற்று இது.
இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின், பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று, வாழ்ந்து வருகின்றனர்.
பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுப்பதும், பெற்றோருக்கு ஒரு சுமையான பொறுப்பாகி விட்டது. கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ, அவர்களை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பும் பெற்றோரைச் சேர்கிறது.
அதிக பெண்களைப் பெற்ற தந்தையை, சமூகம் தாழ்வாகக் கருதுகிறது. ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்து கொண்டாலும், அவன் குடும்பம் ஏற்றுக் கொள்கிறது; பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டால், குடும்பம் அவளைப் புறக்கணித்து, ஏற்பதில்லை.
— இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசுக் கொலைக்கு காரணமாகிறது என்கிறது இந்நூல். இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?
***

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் செயல்பாடு குறித்து, முன்பே ஒரு முறை கொட்டித் தீர்த்து இருக்கிறேன்.
வங்கி அலுவலர்களின் அலட்சியப் போக்கும், பேச்சும், நடவடிக்கைகளும் மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.
ஐந்து ரூபாய், பத்து ரூபாய் கடன் வாங்கியவர்களை விரட்டோ விரட்டு என விரட்டுவர் - கணக்கில் ஊழல் செய்ய, உடன் இருந்தே உதவி செய்வர் - கை கட்டி வாய் பொத்தி, "சலாம்' அடிப்பர்.
நம் சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் போதோ, போடும் போதோ கூட விரட்டுவர். "என்னப்பா... கணக்கை, "ஆப்பரேட்' செய்யவே இல்லைன்னு ஆடிட்டுல எழுதி வச்சிருக்காங்க...' — இது பேங்க் கிளார்க்கின் கேள்வி.
"எங்கண்ணன் ஊரிலிருந்து, "செக்' அனுப்பினால் தான், இந்த கணக்கை பயன்படுத்துவேன்!' — வாடிக்கையாளர் பதில்.
"நோ... நோ... அப்படியெல்லாம் சொல்லக் கூடாது... "ரெகுலரா ஆப்பரேட்' செய்யணும்!'
"சரி சார்... இனிமேல் உங்க சொல்படியே நடக்கிறேன். செக் புத்தகத்துல, 20 தாள் இருக்கு... தினமும், 25 ரூபாய்க்கு, "செக்' போட்டு அனுப்புறேன்...' என, அப்பாவி போல முகத்தை வைத்து அந்த வாடிக்கையாளர் கூறவும், பேங்க் கிளார்க்கின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே...
பேங்கில் வேலை செய்பவர்கள் மீது, பொது மக்கள், வாடிக்கையாளர்களுக்கு வெறுப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவ்வப்போது, ஆங்காங்கே அது வெடித்துக் கொண்டும் உள்ளது.
போகட்டும்... பேங்க் நடவடிக்கை பற்றி கேள்விப்பட்ட சுவையான சம்பவங்கள் மூன்று:
* இது கேரளாவில்: தமிழகத்தில் வேலை பார்த்து வந்த வங்கி மேலாளர் ஒருவர், கேரளாவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அங்கு, அவர் பொறுப்பேற்ற வங்கியில், பல ஊழல்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று: ஒருவருக்கே பல பெயர்களில், சிறிதும், பெரிதுமாக பத்து லோன் கொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது. அதே ஆசாமி, பதினோராவது லோன் வாங்க வந்திருக்கிறார். "முதலில் வாங்கிய பத்து லோனையும் திரும்பச் செலுத்துங்கள்... புது லோன் குறித்து பின்னர் முடிவு செய்யலாம்!' எனக் கூறியிருக்கிறார், தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்ற வங்கி மேலாளர்.
சிறிது நாட்களுக்குப் பின், போலீஸ் பாதுகாப்புடன் வங்கி மேலாளர் மற்றும் வங்கி அதிகாரிகள், அந்த ஆசாமியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
கையில் பெரிய அரிவாளுடன் வீட்டு வாசலில் நின்று, "உள்ளே காலடி வைத்தீர்கள்... வெட்டிப் போட்டு விடுவேன்!' என மிரட்டியிருக்கிறார் ஆசாமி. போலீசாரிடம், "என்னங்க... வெட்டி விடுவேன் என்கிறான்... பிடியுங்க... "அரஸ்ட்' செய்யுங்க...' எனக் கூறியிருக்கிறார் வங்கி மேலாளர்.
"அயாள் வெட்டட்டே... பின்னே நோக்கம்...' — அவன் வெட்டட்டும்... அப்புறம் பார்க்கலாம்... வெட்டினால் தான் கேஸ் போட முடியும் என்பது போல, சாதாரணமாக கூறி முடித்து விட்டனர். பயந்து போன மேலாளர், அன்றே லீவு போட்டு விட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாறுதல் வாங்கி வந்து விட்டார்!
* கிணறு வெட்ட கடன் வாங்கி இருந்திருக்கிறார் ஒரு விவசாயி. இதிலிருந்து இதுவரை கிணறு வெட்டப்பட்டு விட்டது என வங்கியின், "பீல்டு ஆபீசரும்' சர்வே நம்பர் போட்டு சான்றிதழ் கொடுத்து விட்டார். கிணறு வெட்டப்படவேஇல்லை!
வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற தொகையில் பெருந்தொகை ஒன்று, "பீல்டு ஆபீசர்' பைக்குச் சென்று விட்டது! மீதிப் பணத்தில், தன் மகளுக்கு திருமணத்தை முடித்து விட்டார் விவசாயி. வங்கி கடனை திரும்ப கட்டவே இல்லை! கடன் கட்டாததால், விவசாயியை சந்திக்க, வங்கி அலுவலர்கள் வரப்போகின்றனர் எனத் தெரிந்து, "என் கிணற்றை காணவில்லை!' என போலீசில் புகார் ஒன்றை கொடுத்து விட்டார் விவசாயி!
வங்கி அதிகாரிகள் - போலீசுக்கு ஒரே திகைப்பு! — கிணறு காணாமல் போகுமா? "உங்க வங்கி அதிகாரியே சான்றிதழ் கொடுத்துச் சென்றுள்ளார். சர்வே நம்பர் உட்பட எல்லா விவரங்களும் உள்ளன. ஆனா, இப்ப பாருங்க... என் கிணற்றை காணோம்!' என விவசாயி கூறவும், ஊழல் நடந்திருப்பது அம்பலத்திற்கு வர, கடனைப் பற்றி பேசாமல் வாய் மூடி, திரும்பி இருக்கின்றனர் வங்கி அதிகாரிகள்!
* இது, சமீபத்தில் நடந்தது: லென்ஸ் மாமா, கணக்கு வைத்திருக்கும் வங்கியில், அவரது நண்பரும், கணக்கு வைத்துள்ளார். நண்பருக்கு, "லாக்கர்' ஒன்று தேவைப்பட்டு இருக்கிறது. இரண்டு வருடங்களாக வங்கி மேலாளரிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்து சலித்து, பின்னர் ஏதோ சிபாரிசு பிடித்து லாக்கர் வாங்கி விட்டார்.
வங்கி மேலாளர் மீது இருந்த கொதிப்பை தணித்துக் கொள்ள, இரண்டு கிலோ கருவாடு வாங்கி, தம் லாக்கரில் வைத்து பூட்டி விட்டு, வெளியூர் சென்று விட்டார் லென்ஸ் மாமாவின் நண்பர். லாக்கர் ரூம் முழுக்க கருவாடு நாற்றம்... ஏன் பேங்க் முழுவதுமே நாற்றம்... எந்த லாக்கரில் இருந்து நாற்றம் வருகிறது என கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள், லென்ஸ் மாமாவின் நண்பருக்கு போன் செய்து இருக்கின்றனர். அவர் ஊரில் இல்லை. உடனே, லென்ஸ் மாமாவிடம் தகவல் கூறியுள்ளனர்.
நண்பருக்கு போன் போட்டு, "அழுகும் பொருட்களை லாக்கரில் வைக்கக் கூடாது எனச் சட்டம் இருக்கிறதாம்... உன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி எனக்கு போன் செய்தனர். எதற்கு வம்பு... அதை எடுத்து விடேன்...' எனக் கூறியிருக்கிறார் லென்ஸ் மாமா.
"இந்த பப்பு எல்லாம் என்னிடம் வேகாது... எனக்கும் சட்டம் தெரியாதா என்ன? கருவாடு இனிமே எப்படிய்யா அழுகும்? இன்னும் நாலு நாள் அவஸ்தை படட்டும்... அப்புறம் பார்க்கலாம்...' எனக் கூறி விட்டார்; சொன்னபடியே செய்தும் விட்டார்.
உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டிருந்த வங்கி அதிகாரிகள், பின்னர் இறங்கி வந்து, பணிந்து கேட்டபின், கருவாட்டை எடுத்து அப்புறப்படுத்தி இருக்கிறார்.
மக்கள் பணத்தை சம்பளமாக பெறும் பலருக்கு, சில நேரங்களில், "ஷாக் டிரீட்மென்ட்' கொடுத்தால் தான் சரி வரும் போலுள்ளது.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spicer - salem,இந்தியா
23-மார்ச்-201311:36:30 IST Report Abuse
spicer பெண் ஆதிக்கத்தின் எதிர்மரை விளைவு பெண் சிசுக் கொலைக்கு பெரிதும் காரணம். பெண்களுக்கு தலை கணம் கொஞ்சம் அதிகம் அது தான்
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
22-மார்ச்-201318:18:12 IST Report Abuse
LAX லென்ஸ் மாமாவின் நண்பருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துவிடுங்கள் Mr. அந்துமணி. சபாஷ் சரியான நடவடிக்கை. இதற்குப்பிறகாவது வங்கி ஊழியர்கள்/அதிகாரிகள் பொறுப்பாக செயல்பட்டு கடமையை செவ்வனே செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
21-மார்ச்-201315:05:11 IST Report Abuse
Mustafa பொதுவாக இப்போது எல்லா வங்கிகளிலும் ஊழியர் பற்றாக்குறை வுள்ளது. காரணம் பணிச்சுமை மற்றும் சம்பள விகித வித்தியாசம் ( I .T .துறை வளர்ச்சி முக்கிய காரணம் )
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
22-மார்ச்-201318:04:40 IST Report Abuse
LAXஇருந்தும் வங்கிப் பணிகளுக்கு மொய் வைத்து தேர்வெழுதுபவர்கள் எத்தனை ஆயிரம்/லட்சம் பேர்?...
Rate this:
Share this comment
Cancel
spicer - salem,இந்தியா
21-மார்ச்-201310:29:13 IST Report Abuse
spicer ஆண்களின் சராசரி ஆயுட்காலம் குறைவடைந்துள்ளமைக்கான சரியான காரணிகளை இனங்காட்டி ஆண்களுக்கு கிரமமான ஆலோசனைகளை வழங்கி அவர்களின் ஆயுட்காலத்தை பெண்களுக்கு நிகராகக் கொண்டு வர முனையாமை. ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள். பெண்கள் ஆண்டுக்கு 28 ஆயிரம் பேர் தான் தற்கொலை செய்கிறார்கள். ஆண்களையும் காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kadavul - Nagpur,இந்தியா
20-மார்ச்-201316:48:48 IST Report Abuse
kadavul பெண் சிசுக் கொலைகள் நம் நாட்டில் மட்டும் தான் உண்டா? மற்ற நாடுகளில் இல்லையா? இணையத்தில் இந்த தலைப்பை பற்றி தேடி பாருங்கள். இது உலகளாவிய ஒரு கொடுஞ்செயல் என்பதை அறிந்துகொள்வீர்கள். அந்த புத்தகத்தில் சொல்லியிருப்பதுபோல் ஹிந்துக்கள் மட்டுமே பெண் சிசுக் கொலையில் ஈடுபட்டிருந்தால், இன்று ஹிந்து மதமே இருக்க முடியாது. எனவே யாரோ சிலர் மூடத்தனமாக செய்யும் இந்த செயலுக்காக ஹிந்து மதத்தின் மீது குறை கூறுவது என்பது முட்டாள்தனமே. ஏற்கனவே சிலர் கருத்து சொல்லியிருப்பது போல ஹிந்து மதத்தை பற்றியும் ஹிந்துக்களை பற்றியும் யார் எது வேண்டுமானாலும் சொல்லலாம், கேட்பதற்கு ஆளோ அமைப்போ இல்லை என்பதாலேயே இந்த நிலைமை.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
19-மார்ச்-201304:42:47 IST Report Abuse
GOWSALYA உண்மை தான் சகோதரர் ராமன்....புனித குரானிலும்,பைபிளிலும் முதற்பக்கமே எழுதியிருக்கார்கள்....அதாவது,இந்து மதத்திற்கு ஆதியுமில்லைஅந்தமுமில்லை என்று.......இந்து மதத்தில் பெண்ணுக்கு சரிபாதி உரிமை கொடுத்துள்ளார்கள்ஆனால்,அடுத்த மதங்களில் பெண்ணை அடிமையாகவே வைத்துள்ளார்கள்.அதற்காக மற்ற மதங்கள் சரியில்லையெனச் சொல்லவில்லை.எல்லா மதங்களிலும் நல்ல கோட்பாடுகள் உள்ளன......தன் மருமகளுக்குப் பெண்குழந்தை என்று கோபப்பட்டு ,கள்ளிப்பால் கொடுத்துக் கொல்கிறார்கள்,ஆனால்,தானும் ஒரு பெண் என அந்த மாமியார் நினைக்கத் தவறுகிறார்.அதேமாதிரி,ஒரு கணவன் தன் மனைவி பெண் குழந்தை பெற்றதும் அவள்மேல கோபப்படுகிறான்ஆனா,தானும் அதற்கு ஒரு கருவி என்பதை ஏனோ மறந்துவிடுகிறான்.....இப்படிப்பல பல .......சிசுக் கொலைக்கும் ,மதத்துக்கும் என்ன தொடர்பு?...எதற்கு மதங்களை இழுக்கணும் ??????....."" ஒன்றே மதம்: ஒன்றே ஜாதி: ஒருவனே தேவன் என ஏன் நினைக்ககூடாது?........எல்லோரின் இரத்தமும் சிவப்பு,அதில் பிரிவுகள் தான் வேறு....இதை எப்போ நம் மக்கள் நினைப்பார்கள்?????
Rate this:
Share this comment
Cancel
Bala - NY,யூ.எஸ்.ஏ
19-மார்ச்-201301:19:48 IST Report Abuse
Bala ஒரு குறிப்பிட்ட கோட்பாடுகளை வைத்து அதனுள் வாழவேண்டும் என்று இந்து மதம் கூறவில்லை. பண்டைய காலத்தில் மனிதன் எவ்வாறு வாழ்ந்தானோ (ஒழுக்கமுடன்), அந்த வாழ்க்கை முறையிலிருந்து தோன்றியது தான் இந்து மதம். ஒருவனுடைய வாழ்க்கை முறையில் அவன் பிறர்த்தியாருக்கு கெடுதல் பண்ணினால் அவனுக்கும் அது வந்து சேரும் என்று இந்து மதம் கூறுகிறது. 'அந்துமணி' க்கு ஒரு கேள்வி: இந்து மதத்தில் ஆணுக்கு நிகராக பெண் தெய்வங்களையும் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம் (உதாரணமாக அர்த்தனாரீஸ்வரர்). கிறிஸ்த்துவத்தில் ஒரு பெண்ணை போப்பாக நியமித்திருந்ததாக எனக்குத் தெரியவில்லை. தெளிவுப்படுத்தவும். வாரப் பத்திரிகையில் வெளியிட எவ்வளவோ தகவல்கள் உள்ளன. அதையெல்லாம் விட்டு விட்டு இந்து மதத்தைப் பற்றி கேவலமாக எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள்..
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
22-மார்ச்-201318:07:34 IST Report Abuse
LAXஉங்கள் கோபம் ஓ.கே. வழிபடும் தெய்வங்கள் சரி. உயிருள்ள பெண்களை மதிப்பதில்....? இருப்பினும், இது ஒரு வார பத்திரிகை. இன்னும் வரும் வாரங்களில் அனைத்து மதத்தில் உள்ள நூல் குறிப்புகளும் வெளியாகும் என எதிர்பாருங்களேன்.......
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
18-மார்ச்-201306:18:47 IST Report Abuse
Ajaykumar உலகில் உள்ள மதங்களின் தாய் மதமாம் எம் ஹிந்து மதம், அதில் உள்ள கருத்துகளே மற்ற மதத்திலும் நீங்கள் காணலாம். பெண்களை உயர்வாக போற்றும் ஒரே மதம் ஹிந்து மதம்.
Rate this:
Share this comment
Cancel
Murthy - Bavaria,ஜெர்மனி
17-மார்ச்-201313:26:01 IST Report Abuse
Murthy ஒரு அக்கௌன்ட் ஓபன் பன்னுவதுரக்கு இவர்கள் செய்யும் பந்தா இருக்கிறதே தாங்க முடியாது. இன்று வா நாளை வா என்று இழுத்து அடித்து கடைசியில் அட்ரஸ் ப்ரூப் சரி இல்லை வேறு கொண்டு வா என்பார்கள். அனைத்தையும் சரி செய்து கொண்டு போய் கொடுத்தால் வாங்கி வைத்து கொண்டு அக்கௌன்ட் புக் வருவதற்கு 10 நாள் ஆகும் என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். இத்தனைக்கும் இவர்களுக்கு மத்திய அரசு சம்பளம் அணைத்து அரசு விடுமுறைகளையும் அனுபவித்து விட்டு வாடிக்கையாளர் வந்தால் எண்டா வந்தால் என்பது போன்று பார்பார்கள்.
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
17-மார்ச்-201318:29:49 IST Report Abuse
Ramanஅக்கௌன்ட் திறக்க நிறைய விதி முறைகளை பின்பற்ற வேண்டும். கறுப்பு பணத்தை வெள்ளையாக்குதல் (laundering) என்பதை தடுக்க இது மிகவும் முக்கியமான ஒரு செயல். வங்கிகள் மீது தான் பழி வரும். இன்று HSBC, ICICI வங்கிகள் படும் பாட்டை கவனித்தால் தெரியும். அத்துடன் வங்கி ஊழியருக்கு வேலை போகும், சிறை தண்டனயும் உண்டு. ஆகவே அவர்களை சொல்லி குற்றமில்லை. நமது நாட்டில் அட்ரஸ், ஆள் போன்றோரை சரி பார்க்கும் background checking முறைகள் இன்னமும் முதிர்ச்சி பெறவில்லை. ...
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
22-மார்ச்-201318:13:27 IST Report Abuse
LAXஅக்கவுண்ட் ஓபன் பண்றதுக்கு வாடிக்கையாளர்களை இழுத்தடிக்கும் கால அவகாசத்தில் குறிப்பிட்ட நபர் அளிக்கும் அட்ரெஸ் வங்கிகளால்/முகவர்களால் சரிபார்க்கப்படுகிறதா Mr.ராமன்? இதுவும் அரசியல் போலதான், ஏமாற்றி பெரிய ஆள் போல விரல்களில் பெரிய பெரிய மோதிரம் என்று வேஷம் போட்டுக்கொண்டு 4-5 பேர்களுடன் வந்து ஓவராகப் பேசி அலப்பறையைக் கொடுத்தால் அவர்களை நம்பி கணக்கே இல்லாமல் கடன் வழங்கிவிட்டு, பின்னர் வசூலிக்கும்போது விழி பிதுங்குவர். ஆனால் முறையாக ஒரு சாமானியன் உண்மையாக நோக்கத்துக்காகவும், திருப்பிக்கட்டும் நாணயத்துடனும் கடன் கேட்பவர்களுக்கு தேடிக்கண்டுபிடித்து ஏதேனும் காரணங்களைச் சொல்லி கடன்கள் மறுக்கப்படும்....
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
17-மார்ச்-201312:18:09 IST Report Abuse
mangai அரசுடைமை வங்கிகளில் வாடிக்கையாளர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் கொடுமை... சில நாட்களுக்கு முன்பு எனக்கும் மோசமான ஒரு அனுபவம் ஏற்பட்டது.. நான் சும்மா விடவில்லை சம்பப்த பட்ட நபரை left n right வாங்கிய பின் வேலை முடிந்தது..
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
22-மார்ச்-201318:14:13 IST Report Abuse
LAXசூப்பர்.... வாழ்த்துக்கள். எப்போதும் நம் உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.