பின்னணி பாடகர்களுக்கு மரியாதை கிடைக்கச் செய்த டி.எம்.எஸ்.
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 மார்
2013
00:00

மார்ச் 24 - டி.எம். சவுந்தரராஜன் பிறந்த நாள்

உலகத்தில் உள்ள தமிழ் மக்களிடையே, "டி.எம்.எஸ்.,' என்றால் அறியாதவர் இருக்க முடியாது. இனிமையான குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல், உணர்ச்சிப்பூர்வமாக பாடுவது ஆகியவை, டி.எம்.சவுந்திரராஜனின் தனிச் சிறப்பு. தமிழ் சினிமா இசை உலகில், நீண்ட காலம், இவர் இருந்த இடத்தை இன்னும் யாராலும் பிடிக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இவரது பழைய பாடல்களின் சிறப்புக்கு காரணம் கேட்டதற்கு, "சிறந்த கவிஞர்கள், காலத்தால் அழியாத தத்துவங்களோடு எழுதிய வரிகள், அதற்கு உயிரோட்டமான மெட்டமைத்து கொடுத்த இசை அமைப்பாளர்கள் துணையுடனும், கதாபாத்திரங்களின் நல்ல நடிப்போடும் ஒட்டி வந்ததால், நான் பாடிய பாடல்கள் இன்றும் மக்களால் நேசிக்கப்படுகிறது...' என்று அடக்கத்துடன் கூறுகிறார் டி.எம்.எஸ்.,
தற்சமயம், 91வது பிறந்த நாள் கொண்டாடும் இவர், இப்போது திரைப்படங் களில் பாடாவிட்டாலும், இவர் பாடிய பழைய பாடல்கள், வானொலி, தொலைக்காட்சி மூலம், தினசரி செவிகளில் ஒலிக்காத நாளில்லை. பிரபலமான கலைஞர்களை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், அவர்களுக்கு மேடையில் பொன்னாடை அணிவித்து, ஷீல்டு கொடுப்பது வாடிக்கை. ஒவ்வொரு பிரபலங்கள் வீட்டிலும், ஷீல்டுகள் நிரம்பியிருக்கும். அதே போன்று, டி.எம்.எஸ்., வீட்டிலும் ஏராளமான ஷீல்டுகள் உள்ளன. ஷீல்டு என்றதும், ஒரு பிளாஷ்பேக் நினைவை டி.எம்.எஸ்., கூறினார்:
கடந்த 1959ல், சிவாஜி கணேசன் நடித்த, "பாகப்பிரிவினை' படம் 100 நாள் ஓடியது. அதைக் கொண்டாட, தயாரிப்பாளர் வேலுமணி ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார். அந்த படத்தில் இவர் பாடிய, "ஏன் பிறந்தாய் மகனே...' என்ற பாடல், மிகவும் பிரபலமானது. பின்னணி பாடிய இவருக்கும் அழைப்பு.
அன்று மாலை பட்டு வேஷ்டி, ஜிப்பா அணிந்து, விசிறி மடிப்பு அங்க வஸ்திரம் தோளில் புரள, வைர மோதிரங்கள் விரல்களில் மின்ன, அத்தர் வாசனையுடன் விழாவிற்கு சென்றார் டி.எம்.எஸ்., மாலை மரியாதைகளுக் கிடையே, அரசியல் பிரமுகர்களும் திரை உலக பிரபலங்களும் பேசினர். நடிகர்களும், மற்றவர்களும் பரிசுகளை பெற்றுக் கொண்டனர். காத்திருந்து பார்த்தார் டி.எம்.எஸ்., இவருக்கோ, மற்ற பின்னணி பாடகர், பாடகியருக்கோ எந்த பரிசும் இல்லை. நிகழ்ச்சி முடிந்து வந்த அன்றிரவு, தூங்கவில்லை.
மறுநாளே, விழா ஏற்பாடு செய்த பாகப்பிரிவினை தயாரிப்பாளர் வேலுமணியிடம், "ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்கள் எவ்வளவு முக்கியமானது என்பது நீங்கள் அறியாததல்ல. இதில் உள்ள பாட்டுகளை நீக்கிவிட்டு, படத்தை ஓட்டிப்பாருங்க... அதோட முக்கியத்துவம் தெரியும். அப்படி இருக்கும்போது, பின்னணி பாடியவர்களுக்கு பரிசு கொடுக்கும் எண்ணம் வரவில்லையே...' என்று, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் டி.எம்.எஸ்.,
தாராள மனமும், கலைஞர்களிடம் நட்பும் கொண்டவர் தயாரிப்பாளர் வேலுமணி. அவர், டி.எம்.எஸ்.,சின் வருத்தத்தை புரிந்து கொண்டார். அடுத்த படத்திலிருந்து பின்னணி பாடுபவர்களுக்கும் விருதுகள் வழங்குவோம் என்று அறிவித்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு பட விழாவிலும், டி.எம்.எஸ்., மட்டுமின்றி, அவரது முயற்சியால், மற்ற பின்னணி பாடகர்களும் ஷீல்டு கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.
எந்த பின்னணி பாடகருக்கும் இல்லாத வகையில், டி.எம்.எஸ்.,சுக்கு இன்றும் ரசிகர் மன்றம் உள்ளது. ரசிகர்கள் என்று சொல்லாமல், "டி.எம்.எஸ்., பக்தர்கள்' என்று கூறிக் கொள்வர். அதில், பெரும்பாலும் இளைஞர்கள் உள்ளது தான் ஆச்சரியம். ஒவ்வொரு ஆண்டும், டி.எம்.எஸ்., பிறந்த நாள் விழாவில், சாலமன் பாப்பையா, லியோனி குழுவினரின், "பாட்டு பட்டி மன்றம்' நடத்தி, வசதி அற்றவர்களுக்கு தேவையான உதவிகள் புரிகின்றனர். இந்த ஆண்டும், தன் பக்தர்கள் மத்தியில், 91வது பிறந்த நாள் கொண்டாடும் டி.எம்.எஸ்.,சுக்கு நாமும் வாழ்த்துக் கூறுவோம்.
***

டி.எம்.எஸ்., தான், மாணவ பருவத்தில் பட்ட கஷ்டத்தை நினைத்து, திரை உலகில் பிரபலமானவுடன், காலமான தன் மகன் பெயரில், ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவிகளை இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறார்.
***

மதுரையில், அரசமரம் இசை, இலக்கிய விழாவில், டி.எம்.எஸ்., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய அப்போதைய அமைச்சர் காளிமுத்து, டி.எம்.எஸ்., பாடல் பற்றி இப்படி கூறினார்:
சிங்கத்தின் முழக்கம்
சிறுத்தையின் பாய்ச்சல்
வேங்கையின் கம்பீரம்
புலியின் வேகம்
மின்னலின் வீச்சு
அருவியின் ஓட்டம்
தென்றலின் தெம்மாங்கு
நிலவின் குளிர்ச்சி...
ஆகிய அவ்வளவும் அடங்கியிருக்கும் குரல்தான் டி.எம்.எஸ்.,சின் சங்கீத மணிக்குரல், அவர் வீரப்பாட்டு பாடினால் கோழைக்கும் வீரம் வரும். சோகப்பாட்டு பாடினால் கல்மனம் கொண்டவருக்கும் கண்ணீர் வரும். காதல்பாட்டு பாடினாலோ சந்நியாசிக்கும் காதல் வரும் என்று, கூறியதும், அந்த பகுதியே கை தட்டலால் அதிர்ந்தது.
***

எம்.எஸ்.ராமகிருஷ்ணன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
28-மார்ச்-201313:46:45 IST Report Abuse
Pasupathi Subbian ஆனால் சிறிது தலை கர்வத்தை குறைதிருக்கலாம் . என்ன செய்வது வித்தை இருக்குமிடத்தில் கர்வம் இருந்தே தீரும் .
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
28-மார்ச்-201311:31:45 IST Report Abuse
p.saravanan மதிப்பிற்குரிய அய்யா TMS அவர்களின் பாடிய பாட்டுக்கள் அனைத்தும் காலத்தால் அழியாத காவியங்கள் .குறிப்பாக சொல்ல போனால் நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இளம் நெஞ்சம் படகாக மாறும் போன்ற பாடல்கள் அவரின் குரல் வலிமை காட்டும்.அய்யாவை சந்திந்து ஆசி பெற வேண்டும் என்ற ஆசையே என் வாழ் நாள் லட்சியம் .
Rate this:
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
27-மார்ச்-201314:25:55 IST Report Abuse
News Commitor அந்தக்காலத்தில் TMS பாடிய பாடல்களை வானொலியில் கேட்கும் போதே அந்தப்பாடலின் கதாநாயகன் யாராக இருக்கமுடியும் என கணித்துவிட முடியும். இவர் பாடிய பாடல்களில் எதிலும் தமிழின் உச்சரிப்பு தவறியதில்லை ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிப்பு பிசகாமல் இணைத்து வார்த்தைகளாக பாடும் திறமை கொண்டவர், இவரைபோன்று ஒரு பாடகரை நான் பார்த்ததில்லை. SPB யின் விசிறியான எனக்கு, இவரின் தமிழ்ப் பாடல்கள் அவ்வளவு பிடிக்கும். "யார் அந்த நிலவு?", "ஓடும் மேகங்களே..".. இன்னும் பலப்பல நெஞ்சை வருடும் பாடல்களை மறக்க முடியவில்லை. இவரது அருமை இந்தக்கால இளைஞர்களுக்கு எவ்வளவு புரியும் என தெரியவில்லை. ஆனால் ஒன்று, பழையபாடல்கள் என்று ஓரம்கட்டும் இன்றைய தலைமுறை மக்களே ஒருமுறை இவரது மெல்லிய தென்றல் பாடல்களை வரிசையாக இணைத்து, ஒரு அமைதியான இடத்தில அமர்ந்து i-phoneல் கேட்டு பாருங்களேன், அந்த இனிமையான அனுபவமே வேறு. மனச்சுமையும், கவலையும் நீங்கி மனம் இலகுவாகும், முயன்று பார்ப்பதில் தவறில்லையே?
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
26-மார்ச்-201314:27:58 IST Report Abuse
pattikkaattaan முருகா .. என்று இவர் பாடினால்,உருகாத மனமும் உண்டோ ?...
Rate this:
Share this comment
Cancel
Subbumahalingam Ramani - Bangalore,இந்தியா
25-மார்ச்-201320:15:56 IST Report Abuse
Subbumahalingam Ramani TMS is a leg. May God bless him to complete 100 years.
Rate this:
Share this comment
Cancel
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-மார்ச்-201317:30:49 IST Report Abuse
ganesan b(ganesh) TMS குரல் கடவுள் அருள் பெற்ற குரல். அந்த குரலில் இதுவரை ஒருவரும் பிறந்ததும் இல்லை. பிறக்கபோவதும் இல்லை. நாபிக்கமலத்திலிருந்து ஓம்கார ஒலியுடன் வரும் குரல் அது. எனவே MGR ,சிவாஜி,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இவர்களது வாய் அசைப்புக்கு ஏற்றாப்போல் இருக்கும். TMS பாடல்களை கேட்கும்போதே அது எந்த நடிகருக்கு பாடியது என்பதை புரிந்து கொள்ளலாம். TMS நலமுடனும், ஆரோக்யத்துடனும் நிறைய ஆண்டுகள் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்."எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்" என்ற அவரது பாடலுக்கு உங்கள் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவனாக " நாங்கள் இருக்கிறோம்" என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்,
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Fredericia,டென்மார்க்
25-மார்ச்-201302:42:30 IST Report Abuse
Ramesh தினமலருக்கு மிக்க நன்றி ஐயா டி எம் எஸ் என்ற ஒப்பாரும் மிக்காருமில்லா பாடகரை பெருமைப்படுத்தியமைக்கு தமிழர்கள் இன்று குப்பை கூளங்களையே போற்றி தலையில் வைக்கின்றான் என்று நடு நிலையில் நின்று சொல்லுகின்றேன் நல்ல வர்களை வல்லவர்களை போற்றுதல் பேணுதல் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Fredericia,டென்மார்க்
25-மார்ச்-201302:37:22 IST Report Abuse
Ramesh டி.எம்.சவுந்தரராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு விருது வழங்கினார் கே.ஜே.ஜேசுதாஸ் ஜேசுதாசுக்கு இருக்கும் அக்கறை பெரிய மனசு பாராட்டுக்குரியது தமிழக ஊடகங்கள் டி எம் எஸ் போன்ற பொற்குரலோனை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல தமிழின உச்சக்குரலோனை தமிழகம் கண்டு போற்றாது இருப்பது வேதனை வெட்கம் திரைத்துறையினரின் அலட்சியம் அழகல்ல யார் யாரையோ தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தமிழக திரையுலகு டி எம் எஸ் ஐ கண்டு கொள்ளாது இருப்பது கழுதை அறியுமோ கற்பூர வாசம் என்ற பழமொழியை நினைவு படுத்துகின்றது
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Fredericia,டென்மார்க்
25-மார்ச்-201302:30:42 IST Report Abuse
Ramesh டி எம் எஸ் - பிரபஞ்சத்தை தொடும் குரல், அவருக்கு முன்னால் எவருக்கும் நிற்க அருகதை இல்லை, சிவாஜியும் எம்ஜிஆரும் டி எம் எஸ் இல்லாவிட்டால் நொய்வு கண்டிருப்பார்கள் அவர்கள் டி எம் எஸ் விடயத்தில் நன்றி மறந்தவர்களாக இருந்தார்கள் என்பதே காலம் காட்டிய உண்மை
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
24-மார்ச்-201311:13:19 IST Report Abuse
Skv இன்னுமொரு பிறவி எடுத்தாலும் இவருக்கு இவரே இணை ஆகமுடியுமா வாழ்க பல்லாண்டு தங்கள் பாதங்களுக்கு கோடி நமஸ்காரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.