வேர்ட் டிப்ஸ்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
00:00

வேர்டில் ஸ்பெஷல் தேடல்:






வேர்ட் டாகுமெண்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேட நாம் பயன்படுத்துவது Find/Replace என்னும் சிறப்பு வசதி ஆகும். இதன் மூலம் சொல்லைத் தேடுகிறீர்கள். அது மட்டுமா? இன்னும் பலவற்றை குறிப்பாக அச்சில் வராத கேரக்டர்களையும் இதன் மூலம் தேடலாம் என்று தெரியுமா? ஒரு கேரட் சிம்பல், + அடையாளம், பார்மட்டில் பயன் படுத்தப்படும் பாரா இடைவெளி, ஹைபன் என அனைத்து ஸ்பெஷல் கேரக்டர்களையும் இதன் மூலம் தேடலாம். எப்படி என்பதனைப் பார்ப்போமா? முதலில் Find/Replace வசதி பெற Ctrl + F அல்லது Ctrl + H அழுத்துங்கள். இந்த கட்டத்தில் கீழே இருக்கும் கட்டங்களில் ஒன்றாக More என்ற பட்டன் இருக்கும். அதனை அழுத்தவும். கீழாக Format மற்றும் Special என்ற இரு கட்டங்கள் கிடைக்கும். இதில் Special என்ற பட்டனை அழுத்த மேல் நோக்கி ஒரு கட்டம் விரிவடையும். இதில் அனைத்து ஸ்பெஷல் கேரக்டர்கள் மற்றும் பார்மட் வசதிகள் இருக்கும். இவற்றின் வகையைப் பார்த்தால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? என்று நீங்கள் ஆச்சரிய மடைவீர்கள். இவற்றில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துத் தேடச் சொல்ல லாம்.

எழுத்தைச் சுருக்க இரு வழிகள்:






எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த ஒரு பைலிலும் காணப்படும் எழுத்தின் அளவைப் பெரிதாக்கவும் சிறியதாக மாற்றவும் இரண்டுவித கட்டளைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவை Ctrl + Shift + > மற்றும் Ctrl + Shift + என ஒரு வகை.
Ctrl + [ மற்றும் Ctrl + ] என ஒரு வகை. ஏன் இரண்டு விதமான கட்டளைகள்? இதன் செயல்பாட்டில் வேறுபாடு உண்டா? எனக் கேட்டால் "ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்து அளவுக்கான கீழ்விரியும் பட்டியலைப் பார்த்தால் இதற்கான விடை தெரியும். இந்த பட்டியலில் வரிசையாக எழுத்தின் அளவு இருக்காது. 8 லிருந்து 12 வரிசையாக வரும் எண் பின்னர் 14, 16 எனச் செல்லும். அப்படியானால் எழுத்தின் அளவு 13,15 வேண்டும் என்றால் என்ன செய்வது? இங்கே தான் மேலே கூறப்பட்ட இரு வகைக் கட்டளைகள் வேறுபடுகின்றன. முதலில் தரப்பட்ட மூன்று கீகள் இணைப்பு (Ctrl + Shift + >) எழுத்து அளவு பட்டியலில் உள்ள எண் படி அளவைப் பெருக்கும், குறைக்கும். எடுத்துக்காட்டாக இந்த கட்டளையைப் பயன் படுத்துகையில் 12க்குப் பின் எழுத்தின் அளவு 14 ஆக உயரும். 14ல் இருந்தால் குறைக்கும் போது 12 ஆகக் குறைக்கப்படும். ஆனால் இரண்டாவது வகைக் கட்டளையான இரண்டு கீ (Ctrl + [) கட்டளை யைப் பயன்படுத்துகையில் அவை எழுத்தின் அளவை ஒவ்வொன்றாகக் குறைக்கும், கூட்டும்.

டெக்ஸ்ட்டுக்கு அதிக இடம் வேண்டுமா?:






நீங்கள் எம்.எஸ். வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்து கையில் உங்கள் டெக்ஸ்ட்டுக்கு நிறைய இடம் வேண்டும் என எண்ணுபவரா? எதற்கு இந்த தேவையில்லாத மெனு மற்றும் பார்கள் இருக்கின்றன என்று எரிச்சல்படுபவரா? வேர்ட் செட் அப்பில் ஒரு சில டிக் அடையாளங்களை ஏற்படுத்துவதன் மூலமும் நீக்குவதன் மூலமும் இதனை மேற்கொள்ளலாம். அதே போல மீண்டும் வேண்டும் என்றாலும் அவற்றை மீட்டுக் கொள்ளலாம். இதற்கு முதலில் Tools மெனு செல்லவும். பின் அதில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து வரும் டேப் விண்டோவில் View என்னும் டேபைக் கிளிக் செய்திடவும். இதில் Horizontal Scroll Bar, Status Bar, Vertical Scroll Bar என்ற மூன்று பார்களும் அவற்றின் எதிரே செக் பாக்ஸ்களும் இருக்கும். இதில் எது உங்களுக்குத் தேவை இல்லை என எண்ணுகிறீர்களோ அதில் டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள். பின் வேர்ட் தொகுப்பில் டெக்ஸ்ட் தயாரிக்கையில் அல்லது எடிட் செய்கையில் உங்கள் மானிட்டரில் அதிக இடம் கிடைக்கும்.
நீங்கள் டிக் அடையாளம் எடுத்துவிட்ட பார்கள் இருக்காது. இதனால் டெக்ஸ்ட் அடிக்கச் சற்று கூடுதலாக இடம் கிடைக்கும். நீக்கிய இந்த பார்கள் மீண்டும் வேண்டும் என்றால், மீண்டும் இதே வழியில் சென்று வியூ டேப் அழுத்தித் தேவையான பார் களுக்கு முன்னால் உள்ள பாக்ஸ் களில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால் போதும்.

பார்க்கும் பக்கம் மட்டும் அச்சாக:






வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து கிடைக்கும் விண்டோவில் current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக் குறைக்கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை வைத்துக் கொண்டு பின் Ctrl + P மற்றும் Alt + E அழுத்தவும். அந்தப் பக்கம் மட்டும் பிரிண்ட் ஆகும்.

வேர்ட் டேபிள்களில் செல் தலைப்புகள்:






வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். அதனை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில் அது பல பக்கங்களில் அமைந்திருப்பதனையும் அடுத்த அடுத்த பக்கங்களில் டேபிளில் உள்ள வரிசைகளுக்கான தலைப்புகள் இல்லை என்பதனையும் உணர்கிறீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஹெடர்கள் வந்தால் தானே ஒவ்வொரு காலமும் எது குறித்த தகவல்களைக் கொண்டுள்ளன என்று எளிதாகத் தெரியும். உடனே முதல் பக்கத்தில் இருக்கும் டேபிள் தலைப்பு உள்ள படுக்கை வரிசையினை அப்படியே காப்பி செய்து ஒவ்வொரு பக்கத்தின் முதல் வரிசையிலும் புதிய வரிசையினை ஏற்படுத்தி பேஸ்ட் செய்திடலாம். ஆனால் இது இன்னும் பிரச்னையை ஏற்படுத்தும். பின்னாளில் ஏதேனும் ஒரு வரிசையை இணைத்தாலோ அல்லது நீக்கினாலோ இரண்டாம் பக்கத்திலிருந்து உள்ள தலைப்பு அடுத்த பக்கத்திற்கோ அல்லது முந்தைய பக்கத்திற்கோ செல்லும். இந்த குழப்பத்தினைச் சரி செய்திட ஒரு வழியினை வேர்ட் தருகிறது. இதற்கான தீர்வினை Headings என்ற பகுதியில் பெறலாம். ஆம்; முதலில் முதல் பக்கத்தில் டேபிள் தலைப்பு அமைத்த வரிசையினை செலக்ட் செய்திடவும். பின் Table மெனு செல்லவும். விரியும் மெனுவில் கிடைக்கும் பிரிவுகளில் Heading Rows Repeat choice என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். பழைய வேர்ட் தொகுப்பாக இருந்தால் Headings என்று மட்டுமே இருக்கும். இனி பார்த்தால் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பில் இந்த ஹெடர்கள் இருக்கும். நீங்கள் எத்தனை வரிசையினை சேர்த்தாலும்
நீக்கினாலும் இது அப்படியே தான் இருக்கும். இந்த ஹெடர்களில் மாற்றம் செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டால் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு வரிசையில் மட்டுமே மாற்ற முடியும். இரண்டாவது பக்கத்திலோ அல்லது வேறு பக்கத்திலோ உள்ள ஹெடரில் மாற்ற முடியாது. மேலும் முதல் பக்கத்தில் என்ன மாறுதல் செய்கிறோமோ அது மற்ற பக்கத்திலும் அப்படியே மாற்றப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X