பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
00:00

எக்ஸ்பி தொடர்ந்து பயன்படுத்துவதால் நாம் சந்திக்கக் கூடிய அபாயங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நிச்சயம் தங்கள் கட்டுரையைப் படித்த பின்னர், பலர் அதனை மேம்படுத்தி அடுத்த சிஸ்டத்திற்கு மாறுவார்கள்.
டி.கைலாஷ், சிதம்பரம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நாம் எதிர் கொள்ளும் சில சிக்கல்களைத் தெளிவாக்கிய துடன், அவற்றை எப்படி நிறுத்தலாம் என்பதனையும் தந்தது மிகவும் உதவியாக உள்ளது.
ஆர். திலகா, சிதம்பரம்.

ஆக்ஷன் சென்டர் மெசேஜ் என்ற தலைப்பில் தந்துள்ள தகவல் இதுவரை கேள்விப்படாததாக இருந்தது. விளக்கத்திற்கு நன்றி.
செ. உமையாள், காரைக்குடி.

வேர்டில் ரீசன்ட் பயன்பாடு இத்தனை நாள் நாங்கள் அறியாத ஒன்றாகும். மற்றவற்றிலும் நீங்கள் காட்டிய நுணுக்க வசதிகள் அருமை. உங்களுக்குத்தான் இத்தகைய தகவல்களெல்லாம் கிடைக்கின்றன. உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக்கள். உதவிக்கு நன்றி.
என். கருணா, மதுரை.

பைண்ட் அண்ட் ரீபிளேஸ் டூல் அதிக வசதிகளைக் கொண்டது. ஆனால் யாரும் அனைத்தையும் பயன்படுத்துவது இல்லை. இவை அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுரை ஒன்றைத் தரவும்.
ஜே. சிக்கந்தர், விழுப்புரம்.

இடைவெளியுடன் செல்களை அமைத்து டேபிளை அமைப்பது நல்ல தோற்றத்தினைத் தருகிறது. உதவியாய் உள்ளன உங்கள் டிப்ஸ்கள் மற்றும் குறிப்புகள்.
டாக்டர் சா.காஞ்சன மாலா, திருப்பரங்குன்றம்.

விண்டோஸ் 7 தரும் இடைஞ்சல்களையும் தந்து, அந்த சிஸ்டம் தரும் வசதிகளையும் தந்தது, வாசகர்களுக்கு அனைத்தையும் தர வேண்டும் என்ற உதவிடும் எண்ணம் தெரிகிறது. இது போல இன்னும் சில வசதிகளையும் பட்டியலிடவும்.
பேரா. ஆ. சூரிய பிரகாஷ், சென்னை.

""சிஸ்டத்தினை ரிப்பேர் செய்திட'' என்ற டிப்ஸ், மிகவும் உதவியாய் உள்ளது. இதே போல வாரா வாரம் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 குறித்து அறிய விரும்புகிறோம்.
சி.ஜெயகிருஷ்ணன், விழுப்புரம்.

முதல் கேள்வி பதிலைப் படித்தவுடன் இதுதான் கேப்சா டெஸ்ட்டா என வியந்தேன். படத்துடன் விளக்கம் தெளிவாக இருந்தது.
கே. எஸ். சீலன், திருப்பூர்.

கம்ப்யூட்டர் மெதுவாகச் செயல்படுவது குறித்த கட்டுரை ஒன்று தரவும். நீங்கள் அளித்துள்ள பதில் ராம் மெமரியை மட்டும் குறிவைத்து சொல்கிறது. மற்ற காரணங்களையும் விரிவாகச் சொல்லவும்.
மா. திருஞானம், சென்னை.

வேர்டில் மனதிற்குப் பிடித்த அடிக்கோடுகள் என்ற தகவல் சூப்பர் சார்! இப்போதெல்லாம், சொற்களின் கருத்துக்கேற்ப கோடுகளை அமைத்து, எங்கள் டாகுமெண்ட்களைத் தயாரிக்கிறோம்.
சி. ராஜேந்திரன், சிவகாசி.

விண்டோஸ் 7ல் தரப்பட்டுள்ள கிரெடென்ஷியல் மேனேஜர் சிறப்பான ஒரு வசதி. இன்னும் இது போல புதிய தகவல்களை நிறைய தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆ. முருகானந்தம், கணிப்பொறியியல் மாணவர், தென்காசி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X