Advertisement
மதுரத்வனியின் வயலினிசை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 மார்
2013
00:00

சென்னை மந்தைவெளியில், சண்முகப்ரியா இசை அமைப்பு சார்பில், "மதுரத்வனி' என்ற தலைப்பில் சிறந்த வயலினிசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சேர்த்தலை சிவகுமார் சிறப்பாக வயலின் வாசித்து, ரசிகர்களை மகிழச் செய்தார். பிரபல வயலின் மூத்த விதூஷி கலைமாமணி டி.ருக்மிணியின் சீடர் இவர்.
இந்த நிகழ்ச்சியில் கானடா ராகம், கண்டஜாதி அட தாளத்தில் அமைந்த ராமநாதபுரம் ஸ்ரீ சீனிவாச அய்யங்கார் இயற்றிய, "நெர நம்மி' என்று துவங்கும் வர்ணத்தை ஒன்று இரண்டாம் காலப் பிரமாணத்துடனும் முக்தாயி சிட்டை ஸ்வரங்களில் ஜொலிக்க வைத்த பிரயோகங்களுடன் அமர்க்களமாக வாசித்தார்.
தொடர்ந்து வழக்கமாக விநாயகப் பெருமானை வணங்கி வாசிக்கும் பத்ததியில், ஸ்ரீ முத்தையா பாகவதருடைய, "சித்தி விநாயகம்' (மோகன கல்யாணி) (ஆதி - கண்ட நடை) கீர்த்தனையை நயமாக கையாண்டார். இந்த நிகழ்ச்சியில் சிவகுமார், புகழ் பெற்ற தமிழ் கீர்த்தனங்களாக பாபநாசம் சிவன் அருளிய, "சித்தம் இரங்காததேனய்யா' (சகானா) (த்ருபுட) மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியின், "வருவாரோ' (சாமா) (ஆதி) இரண்டையும் மிக நயமாக வாசித்ததும் பாராட்ட வைத்தது.
அனுபவம் வாய்ந்த வாசிப்பை எடுத்துக்காட்டும் வகையில், சேர்த்தலை சிவகுமார், பிரதானமாக கையாண்டு, இந்நிகழ்ச்சியில் வாசித்த கரஹரப்ரியா ராகத்தின் கிரமமான மூன்று ஸ்தாயி விரிவுகளும் தொடர்ந்த தானமும் அவரே இயற்றிய, "சுவாமி வரமருள்' என்று துவங்கும் (ஆதி - இரண்டு களை) பல்லவியை கால் இடத்தின் எடுப்புடன் லயத்தை மிகச் சிறப்பாக கையாண்டு வழங்கிய விதம் அருமை.
ஏ.எஸ்.ரங்கநாதன் மிருதங்கத்தில் மிக அருமையாக வாசித்தார். குறிப்பாக, சொற்கட்டு நயம், நாதம் எல்லாமே படு ஜோர். அரிஹர சுப்ரமண்யத்தின் (கடம்) வாசிப்பும் சிறப்பாக இருந்ததால், நிகழ்ச்சிகளை கட்டியது. மதுரத்வனியின் மதுரமான நிகழ்ச்சி இது.
- மாளவிகா

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.