அம்பாளின் அனுக்கிரகம் வேண்டுமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 மார்
2013
00:00

கண்ணாடி வளையல் கலகலக்க...
கொலுசு சத்தம் கிலுகிலுக்க...
நடந்தால் கொள்ளை விருப்பம்
இவருக்கு... யார் இவர்?

பெண்களை தெய்வமாக வழிபட்டு வந்த நாடு நம் நாடு. ஒவ்வொரு பெண்மணியையும் அம்பாள், பரமேஸ்வரியாகவே பாவித்து மரியாதை செய்தனர். அந்தக் கால பெண்களின் தியாகமும், மகத்தானதாக இருந்தது. இப்படிப்பட்ட பெண்மணிகளை பரமேஸ்வரியாக பாவித்து, சுவாசினி பூஜை செய்வதைப் பார்த்திருக்கலாம். இவர்களுக்கு புது வஸ்திரம் அளித்து, புஷ்பம், மங்கல திரவியங்கள் கொடுத்து, பலகையில் உட்கார வைத்து, பூஜை செய்து நமஸ்காரம் செய்வர். இதில், வயது கணக்கில்லை.
சுவாசினி என்றால் நமஸ்காரம் செய்யலாம், அவர்களும் அட்சதை போட்டு ஆசீர்வதிக்கலாம். பல இடங்களில் இந்த சுவாசினி பூஜையை ஏராளமான பொருட்செலவில் வசதி படைத்தவர்கள் நடத்துகின்றனர். இதில், சுவாசினியாக உட்காருவதும் அல்லது தரிசனம் செய்வதும் கூட மகத்தான புண்ணியம்.
ஸ்ரீவித்யா பாசனையில் இந்த சுவாசினி பூஜைக்கு, விஸ்தாரமாக விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. ஏதோ பொம்பளைதானே என்று அலட்சியமாகப் பேசக் கூடாது. "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே...' என்று ஒரு வாக்கியம் உண்டு. இதற்கு, பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்றும், அழிக்கவும் முடியும் என்றும் விளக்கம் கூறுவர். சீதையால் ராவணனும், திரவுபதியால் கவுரவர்களும் அழிந்தனர் என்று உதாரணம் சொல்வர். அது, அவ்வளவு பொருத்தமானதல்ல.
அம்பிகை, பராசக்தி பெண். அவள் தான் உலக மக்களை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்தவள். அவள் இந்த மூன்று தொழில்களையும் திறம்பட நடத்தி வருகிறாள். அதனால், ஆவதும், அழிவதும் பெண்ணாலே என்பது இங்கு பொருந்தும். இதற்கான பல கதைகள் புராணங்களில் உள்ளன.
அம்பிகையையே சுவாசினியாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுவுமின்றி அம்பாளின் நெற்றியிலே குங்கும திலகம் பிரகாசிக்கிறதாம்; வாக்கிலே தாம்பூலம் கமழுகிறதாம். சிவானந்த லஹரி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் இதைப் பற்றி ஸ்லோகம் இயற்றியுள்ளார்.
பெண்கள் நெற்றியில், மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. கைகளில் கண்ணாடி வளையலும், கால்களில் சலங்கையுடன் கூடிய கொலுசும் அணிய வேண்டுமாம். கையில் உள்ள கண்ணாடி வளையல் சப்தமும், கால்களில் உள்ள கொலுசின் சலங்கை சப்தமும் கேட்டு, அம்பாள் மகிழ்ந்து, கூடவே இருப்பாளாம்.
அம்பாளுக்கு எது பிரியமோ அதைச் செய்வது நல்லது. இப்படியெல்லாம் அலங்காரம் செய்து, அம்பாளாகவே விளங்கலாமே! பெண்கள் தலையில் நேர் வகிடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூட சொல்லப்படுகிறது. அதற்கான காரணங்களையும் சாஸ்திரம் சொல்கிறது.
பெண்கள் தினமும் தாம்பூலம் தரித்துக் கொள்ள வேண்டும். வாய் நிறைய வெற்றிலை போட்டு, வாய் கோவைப் பழம் போல் சிவப்பாக இருக்க வேண்டும் என்று கூட சொல்லப்பட்டுள்ளது. அப்போ, அம்பாளின் ஆசையை நிறைவேற்றி, பூலோக அம்பாளாகவே மாறி விட்டால், நம்மைப் பார்த்து மகிழ்ந்து, நமக்கு வேண்டிய அனுக்கிரகம் செய்யமாட்டாளா என்ன?
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinakaran.E - Chennai,இந்தியா
31-மார்ச்-201310:57:24 IST Report Abuse
Dinakaran.E நல்ல பயனுள்ள கட்டுரை
Rate this:
Share this comment
Cancel
Dinakaran.E - Chennai,இந்தியா
31-மார்ச்-201310:55:57 IST Report Abuse
Dinakaran.E முற்றிலும் சரியே இப்படி தான் பெண்கள் இருக்க எல்லா ஆண்கள் விரும்புகின்றனர் இப்படி இருந்தால் எந்த ஆணும் கழுகு பார்வயில் பார்க்க மாட்டான் தெய்வமாக நினைப்பான்
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
31-மார்ச்-201308:06:59 IST Report Abuse
காயத்ரி மஞ்சள் கிருமி நாசினி, சிறந்த அழகு சாதனப் பொருள். மஞ்சள் பூசுவதையும் குங்குமம் வைத்துக் கொள்வதையும் நாகரிகக்குறைவாக நினைக்கும் இன்றைய யுவதிகளை என்ன சொல்வது? ஸ்டிக்கர் பொட்டாவது இருக்கிறதா? அதுவுமில்லை..பிறகெங்கே வளையல்களும் கொலுசுகளும்..லட்சக்கணக்கில் செலவழித்துத் திருமணம் செய்து வைக்கப்படும் பிரபலங்களின் வாரிசுகள் கழுத்துக்களைப் பார்த்தால் அமங்கலமாக இருக்கும்..தலைவிரிகோலம் வேறு( நுனிப்பின்னல் போட்டு முடியை விரித்து விடலாம்)..இந்து சாஸ்திரம் இறந்த வீடுகளில் மட்டுமே தலை முடியை விரித்துப் போட வேண்டுமாய்ச் சொல்கிறது.. வகிடெடுத்துப் பின்னும் பின்னல், குங்குமம், மஞ்சள், வளையல்கள், கொலுசு, பட்டுப்பாவாடை, புடவைகள், கழுத்தணிகலன் இவையெல்லாம் ஏட்டில் மட்டுமே படித்துத் தெரிந்து கொள்ளக் கூடிய அவல நிலை நேராமல் இருந்தால் நல்லது.ம்ம்..மிகவும் பயனுள்ள கட்டுரை..பெண்கள் அனைவரும் படிக்க வேண்டிய, பின்பற்ற வேண்டிய விஷயங்கள்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-ஏப்-201313:48:52 IST Report Abuse
Nallavan Nallavanநீங்கள் சொல்லும் அனைத்தும் ஏற்கத் தக்கதே .... எனினும் தலையாய ஒரு கேள்வியை நீங்கள் முதலில் கேட்டிருக்க வேண்டும் .... """" இந்தியாவில் நதிகளுக்கெல்லாம் பெண்ணின் பெயர் பல இந்துக் கடவுள்களில் பெண் கடவுள்களும் அதிகம் ..... எனினும் ஆறுமாதக் குழந்தை உட்பட (நினைத்தாலே ரத்தம் கொதிக்கிறது), வயதான பெண்மணிகள் உட்படக் கற்பழிக்கப்படுவதும் ..... கற்பழிக்கப்பட்டு சாலையிலோ, கிணற்றிலோ, ரயில் தண்டவாளங்களிலோ, சாலையிலோ வீசி எறிந்து கொல்லப்படும் அவலமும் இங்குதான். அது ஏன்? """" என்ற கேள்விதான் அது .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X