அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 மார்
2013
00:00

அன்புள்ள அக்கா,
என் வயது 52. நான் பள்ளி ஆசிரியர். கிறிஸ்தவன். என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் இது. முப்பது ஆண்டுகளுக்கு முன், நான் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அவள் என்னை காதலித்தாள்; நானும், அவளை உயிருக்கு உயிராக நேசித்தேன்.
இருவரும் கடிதங்கள் பரிமாறிக் கொண்டோம். அவள் வீட்டில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு. என்னை மறந்து விடும்படி அவள் பெற்றோர் கூறினர். அவளை அடித்துத் துன்புறுத்தினர். அவளோ என்னை மறக்கவில்லை; மணந்தால் என்னையே மணப்பேன் என்ற உறுதியுடன் இருந்தாள். எனக்கு எழுதிய கடிதத்திலும், "ஓர் அனாதை என்ற முறையில் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்...' என்று எழுதினாள்.
எங்கள் காதல் புனிதமானது. அவளும், நானும் மனம் விட்டுப் பேசியிருக்கிறோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனக்காகக் காத்திருப்பதாகக் கூறினாள். மூன்று ஆண்டுகள் எங்கள் காதல் தொடர்ந்தது. ஆனால், திடீரென கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டாள்.
என்னை எப்படித்தான் மறந்தாளோ? அவள் வீட்டார் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஊரை விட்டே அவள் போய் விட்டாள். எங்கு இருக்கிறாளோ தெரியவில்லை. எங்கோ ஆசிரியையாகப் பணிபுரிவாள் என்று நினைக்கிறேன். காதலில் தோல்வியுற்ற நான், என் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டேன். இன்று எனக்கு திருமண வயதில் இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இன்னும் என்னால் என் பழைய காதலியை மறக்க முடியவில்லை.
அவள் நினைவு வரும்போதெல்லாம், அவள் தந்த கடிதங்களை எடுத்துப் படிப்பேன். இதெல்லாம் என் மனைவிக்கு தெரியாது. நான் இறப்பதற்குள் என் பழைய காதலியை தூரத்தில் இருந்தாவது ஒரே ஒருமுறை பார்க்க மனம் ஏங்குகிறது. என் எண்ணம் தவறா? அவள் அனுப்பிய கடிதங்களை தீயில் போடவோ, கிழித்து எறியவோ என் மனம் மறுக்கிறது; அவற்றை ஒரு பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வருகிறேன்.
அவளுக்கும் இப்போது ஐம்பது வயது இருக்கும். அவளையும், அவள் குழந்தைகளையும் பார்க்க மனம் ஆசைப்படுகிறது. எனக்கு நீங்கள் தான் ஒரு வழி கூற வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் அன்புத் தம்பி.

அன்பிற்குரிய சகோதரருக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது. முப்பது வருடங்களுக்கு முன் காதலித்த பெண்ணை, இன்னமும் மறக்காது மனசுக்குள் வைத்து, அவளது கடிதங்களை பத்திரமாக பாதுகாத்து வருவதாக எழுதியிருக்கிறீர்கள். கிட்டத்தட்ட வாழ்க்கையில் அரை நூற்றாண்டைத் தாண்டிய உங்களுக்கு, நான் புதுசாக எதையும் சொல்லப் போவதில்லை. ஆனாலும், புனித பைபிளில் வருவது போல, "பெரியோர் எல்லாம் ஞானிகள் அல்ல; முதியோர் எல்லாம் நீதியை அறிந்தவர் அல்ல' என்பது போல், மனச்சலனம் என்பதும், தாபம் என்பதும், எல்லா வயதினரிடையேயும் சகஜம்.
யார் கண்டது சகோதரரே... நீங்கள் காதலித்த பெண்ணே உங்களுக்கு மனைவியாக அமைந்திருந்தால், சில வருடங்களுக்குப் பின்னால், அந்த மணவாழ்க்கையே உங்களுக்கு கசந்திருக்கலாம் அல்லது சுமையாகிப் போயிருக்கலாம். "காதல் ஜெயிப்பதே - அது தோல்வியுறும் போது தான்' என்று கூட சொல்வதுண்டு. மறுபடியும் அவளையும், அவள் குழந்தைகளையும், ஒரு முறையேனும் தள்ளி இருந்தாவது நீங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்; இந்த ஆசை ஒன்றும் தப்பானதல்ல.
ஆனால், உங்கள் மனசுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பழைய காதலிக்கும், தற்போதைய ஐம்பது வயதுப் பெண்மணிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.
அன்றைக்கு சின்ன விஷயங்களுக்குக் கூட கன்னம் குழிய சிரித்தப் பெண்— இன்றைய வாழ்க்கையில் எந்திர கதியில் சிக்கி, சிரிப்பையே தொலைத்திருக்கலாம். அன்றைக்கு சின்னஞ்சிறு குழந்தைகளைப் பார்த்தவுடன் முகமலர்ந்து, அள்ளி அணைத்து விளையாடிய சிறு பெண் — இன்று குழந்தைகள் பெற்று, பேரன் பேத்திகளைப் பார்த்து, சதா சிடுசிடுத்த முகமுடையவளாக மாறியிருக்கலாம் அல்லது உங்களை விட்டுப் பிரிந்து, இன்னொருவரை மணந்தவள், நீங்கள் எதிர்பார்த்தபடி, பழைய காதலனையே நினைத்து, நொந்து நூலாகாமல், அன்பான கணவரின் அரவணைப்பில் பழசை மறந்து, புதிய வாழ்க்கையில் மிகவும் ஒன்றிப் போயிருக்கலாம். அதைப் பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றமாகவும், "ச்சீ இவ்வளவு தானா...' என்பது போலவும் மனசு சங்கடப்படலாம்.
வாழ்க்கை என்பது ரயில் பயணம் போலதான். யாரோ வருவர்... யாரோ போவர். நேற்று நடந்ததை நேற்றுடன் விட்டுவிட்டு, நாளை நடக்கப் போவதைப்பற்றி அநாவசிய கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிராமல், இந்த நிமிடம் நமக்கு என்ன இருக்கிறதோ, அதில் சந்தோஷமாக இருப்பதே நல்லது.
நீங்களாக உங்கள் பழைய காதலியை தேடிப்பார்க்க முயற்சி செய்யாதீர். தேடலின் முடிவில் ஏமாற்றமும், வருத்தமும், தர்மசங்கடமும் உங்களுக்கு நேரிடலாம். அப்படியொரு சந்திப்பு உண்டென்று கடவுளின் சித்தமாக இருந்தால் அது நடக்கும்.
ஆனாலும் சகோதரரே... தற்போதைய வாழ்க்கையில், ஒவ்வொரு மனிதனும் தன் இதய சாம்ராஜ்யத்தில் - கடவுளின் முன் சத்ய வாக்கு கொடுத்து, கை பிடித்த ஒருத்தியை மட்டுமே வீற்றிருக்க வைத்து, அவளுக்கு உண்மையான வனாகவும், தோழனாகவும் இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் வாக்கு. ஆதலால் —
பைபிளில் மத்தேயு 18ம் அதிகாரத்தில் 8,9 வது வசனங்களில் கூறியிருப்பது போல...
"உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு. நீ இரண்டு கையுடயவனாய் அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
"உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படு வதைப் பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது எனக்கு நலமாயிருக்கும்!'
— இதை அப்படியே உங்கள் வாழ்க்கையிலும் எடுத்துக் கொள்ளலாமே... எது ஒன்று நமக்கு துன்பத்தையும், மனகிலேசத்தையும் கொடுத்து, அந்த ஒன்றை சுமந்தபடி, நாம் காலம் முழுக்க பாரம் சுமப்பதைக் காட்டிலும், அந்த ஒன்றை தூக்கிப் போட்டுவிட்டு அமைதியுடன் வாழலாமே...
ஆதலால், தரிசனம் கிடைக்காதா என்று ஏங்க வேண்டாம். கடவுளின் கரிசனம் எப்படியோ - அப்படியே நடக்கட்டும் என்று கடவுளிடமே விட்டுவிடுங்கள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (48)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
praj - Melbourn,ஆஸ்திரேலியா
06-ஏப்-201311:01:21 IST Report Abuse
praj வாழ்க்கையில் எதற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும் என்று நண்பருக்கு தெரியவில்லை. காதல் என்பது கானல் நீர் போன்றது....அதில் குளிக்கவும் முடியாது ,குடிக்கவும் முடியாது.. பார்க்கலாம் பருக முடியாது...நாம் நினைபதெல்லாம் நடப்பதில்லை....நடப்பதெல்லாம் நாம் நினைத்தவை அல்ல...நேற்றைய உணவு இன்றைக்கு ஒவ்வாது...கை வழுவி போன காதல் அப்படித்தானே... காதல் கடிதங்களை எரித்துவிட்டு திருமணம் செய்திருக்க வேண்டும். காதலுக்கு எந்த இலக்கணமும் இல்லை என்பது தவறு..ஒரு நடிகனை ,நடிகையை எத்தனையோ பேர் காதலிகிறார்கள் எல்லோரையும் அவர்கள் திருமணம் செய்ய முடியுமா..வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் கடந்து வந்த பaதையை விட கடக்கவேண்டிய பாதை முக்கியம்...சகுந்தலா அம்மாவின் பதில் சரியானது.
Rate this:
Share this comment
Cancel
jaffer1987 - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-201322:42:50 IST Report Abuse
jaffer1987 முதியவரே இது ஒன்றும் ஆட்டோகிராப் படம் இல்லை , தன பழைய காதலியை பார்க்க செல்வதற்கு , நிஜத்தில் அவ்வாறு சென்றால் இரு குடும்பத்திற்கும் தேவை இல்லாத குழப்பங்கள் சந்தேகங்கள் வரும் . நாம் யாரும் ஞானி அல்ல இதை புரிந்து கொள்ள சாதாரண மனிதர்கள் தான் . இதனை வருடம் சம்பாதித்த நல்ல மதிப்பை குடும்பத்திலும் சமுதாயத்திலும் இழந்து விடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
04-ஏப்-201302:38:48 IST Report Abuse
GOWSALYA உமா,காயத்ரி மற்றும் எல்லோருக்கும் அன்புடன் கூடிய வணக்கம்......"' போற்றுவார் போற்றலும்: தூற்றுவார் துற்றலும் போகட்டும் கண்ணனுக்கே "" என்று எண்ணிக்கிட்டு கருத்துகளை எழுதுங்க .....நிலவுக்குப் பயந்து பரதேசம் போகமுடியாது நண்பர்களே.....எனது உடல் நிலை சரியில்லை.....இறைவன் கிருபையால் கூடிய விரைவில் வருவேன்........என்றும் அன்புடன் அம்மா.
Rate this:
Share this comment
Pachiappan - bengaluru,இந்தியா
05-ஏப்-201319:53:26 IST Report Abuse
Pachiappanஅன்புள்ள கௌசல்யா அம்மா, தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்ளுங்க. அந்த பிரபஞ்ச நாதன் அருளால் நீங்க ஆரோக்கியமாக இருக்க வேண்டுகிறேன். நன்றி....
Rate this:
Share this comment
Cancel
nilla - Bangalore,இந்தியா
03-ஏப்-201317:06:39 IST Report Abuse
nilla நீங்கள் விரும்பும் சந்திப்பு எந்த ஒரு திருப்பத்தையும் தரலாம் .. அதற்கு தயாராகுங்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஏப்-201313:05:55 IST Report Abuse
Jeyaseelan எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கும் என்றே தோன்றுகிறது, எனக்கும் கூட. ஆனால் ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடக்கூடாது என்பதற்காக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் தவிர்த்து வருகிறேன். நமது இயல்பான மனிதாபிமான ஆசை அந்த பெண்ணுக்கு எதுவும் பிரச்னையை கொடுத்துவிடக்கூடாது, அவர்களும் குடும்பம் கணவன் குழந்தைகள் என்று இருக்கிறார்கள். அந்த தேன்கூடு கலைந்து விடக்கூடாது. நமது செயல் அவர்களுக்கு துன்பத்தை கொடுக்குமானால் நாம் அவர்களை காதலித்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க என்று விலகி செல்வது உங்களுக்கும் அவர்களுக்கும் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
prabu.usa@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
02-ஏப்-201313:45:31 IST Report Abuse
prabu.usa@gmail.com குமரன நம்பனாலும் நம்பலாம் இந்த கெழவன நம்பகூடாது
Rate this:
Share this comment
Cancel
Indian - Cbe,இந்தியா
02-ஏப்-201308:17:41 IST Report Abuse
Indian Hi
Rate this:
Share this comment
Cancel
Honeyboy - Bangalore,இந்தியா
02-ஏப்-201307:26:26 IST Report Abuse
Honeyboy Gayathri, Really I like your way of expression about love. if u r interested we shall be fris, my email is boy25121984@gmail.com
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
01-ஏப்-201316:42:54 IST Report Abuse
சகுனி என்னை பொறுத்தவரை இவர் தேவை இல்லாமல் பழைய குப்பைகளை கிளறுகிறார் .......... இளமை கால நினைவுகள் இன்பம் தரும் ........ ஆனால் நிதர்சனம் என்று வரும்போது இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே கூட அபிப்ராய பேதங்கள் உண்டாகலாம் ......... இவரின் எதிர்பார்ப்பு பொய்யாகலாம் ........ மேற்படி பெண் கட்டாய திருமணம் புரிந்திருந்தாலும், அன்பான கணவன், அளவான குழந்தைகள் மற்றும் அமைதியான குடும்பம் என்று பிரச்சினைகள் இன்றி போய்க்கொண்டிருக்கலாம் ....... இந்த நேரத்தில் இவர் தலையிடுவது என்பது தேவை இல்லாதது ....... வீண் குழப்பங்களை உருவாக்கும் ....... இரண்டு குடும்பங்களும் நிம்மதியை தொலைக்க ஏதுவாகும் ....... ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் ...... ஒரு கால் அந்த பெண்ணுக்கு வாய்த்த கணவன் சந்தேக பிராணியாய் இருந்து......... இவர் விஷயம் தெரிந்து அந்த பெண்ணை (இந்த வயதில், இதனை கால தாம்பதியதிற்கு பின்) இப்போது திடீரென்று சந்தேகபட தொடங்கினால்......... சித்ரவதை செய்தால்....... அந்த கொடுமையை என்னவென்பது ......... அதற்கு யார் பொறுப்பு .... என்ன சொல்லி அந்த மனிதரை சமாதானம் செய்யமுடியும் ....... அந்த குடும்பத்தின் நிலை என்னாகும் ....... அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களின் நிம்மதியுமல்லவா தொலைந்து போகும் ...... அது மட்டுமல்ல ..... இதுவரை உங்களை பற்றி உயர்வை நினைத்திருந்த உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உங்கள் விஷயம் தெரிந்தால் என்னாகும் ....... தலையில் இடி விழுந்ததாக அல்லவா நினைப்பார்கள் ......... இத்தனை நாள் அந்த பெண்ணை மனதில் நினைத்துகொண்டு தான் என்னுடன் வாழ்ந்தீர்களா என்று உங்கள் மனைவி உங்களை வினவினால் அதற்க்கு உங்களின் பதில் என்னவாக இருக்கப்போகிறது? ......... இதெல்லாம் தேவையா? ........ இவருக்கே திருமண வயதில் 2 மகள்கள் இருப்பதாக கூறியுள்ளார் ....... அவர்களுக்கு நல்லபடியாக மணமுடித்து ..... மாப்பிள்ளை மற்றும் பேர குழந்தைகள் மூலம் கடைசி நாட்களில் அமைதியான வாழ்வை வாழ்வதை விட்டுவிட்டு ......... எதற்கு இந்த தேவையில்லாத ........ அதுவும் 30 வருடம் கழித்து ...... இப்படி ஒரு ஆசை? ....... எங்கிருந்தாலும் வாழ்க என்று மானசீகமாக உங்கள் முன்னாள் காதலியை வாழ்த்திவிட்டு ...... (உங்கள் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள) பழைய காதல் கடிதங்களை கிழித்து எறிந்துவிட்டு ........ குடும்பத்தில் + தெய்வ வழிபாட்டில் உங்கள் கவனத்தை திருப்புங்கள் ....... நல்லதே நடக்கும் ........
Rate this:
Share this comment
Cancel
Subbu Kani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஏப்-201316:42:20 IST Report Abuse
Subbu Kani இந்த மாதிரி எண்ணங்கள் வருவது சகஜம். தொலைவில் இருந்து காண்பதில் தவறு இல்லை.அதற்காக முயற்சி எடுத்து போக கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.