இதப்படிங்க முதல்ல....
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 மார்
2013
00:00

ராம நாராயணனின் 126வது படம்!






உலகிலேயே அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர் ராம.நாராயணன். குரங்கு, நாய், பாம்பு என்று மிருகங்களை வைத்தே அதிகப்படியான படங்களை இயக்கிய அவர், சமீபத்தில் சந்தானம் - பவர் ஸ்டார் சீனிவாŒன் நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை தயாரித்தார். அதைத் தொடர்ந்து, இப்போது தன், 126வது படமாக, நான் சரக்கு நீ ஊறுகாய் என்றொரு படத்தை தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில், பவர் ஸ்டாருடன், ஒரு குரங்கும் முக்கிய வேடத்தில் இடம் பிடித்துள்ளது.
சினிமா பொன்னையா

ஜோதிட நம்பிக்கையில் அனுஷ்கா!






ஆன்மிகம், ஜோதிடம் இரண்டிலுமே அபார நம்பிக்கை கொண்டவர் அனுஷ்கா. படங்களுக்கான, "அட்வான்ஸ்' வாங்கும்போது, கதை கேட்கும்போது என, நல்ல நேரம் பார்த்தே செயல்படுவார். மேலும், சில சர்ச்சைக்குரிய டைரக்டர்களின் படவாய்ப்புகள் வந்தால், அதில் நடிப்பதா, வேண்டாமா என்பதை, தன் குடும்ப ஜோதிடரை ஆலோசித்தே முடிவெடுக்கிறார். நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை!
எலீசா

விமலை புலம்பவிட்ட படாதிபதிகள்!






கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார் விமல். அவரிடத்தில், இப்போது உங்களது படக்கூலி பல கோடிக்கு எகிறி விட்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டால், "என்னது கோடியா? அதுக்கு எத்தனை சைபர் போடணும்?' என்று கேட்கிறார். அதோடு, கைநிறைய படம் இருந்தாலும், இன்னமும் கைநிறைய சம்பளம் வாங்க முடியல, என்று சொல்லும் விமல், "பல புரடியூசருங்க, பேசினதுல பாதி சம்பளத்தை கூட பைசல் பண்ண மாட்டேங்கிறாங்க...' என்றும் புலம்புகிறார்.
சி.பொ

லட்சுமிமேனன் பச்சைக்கொடி!





கும்கி, சுந்தர பாண்டியன் படங்களில் நடித்த லட்சுமிமேனன், அடுத்து முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். "அப்படியென்றால், கவர்ச்சி நடிப்புக்கு மாற வேண்டியிருக்குமே?' என்று கேட்பவர்களிடம், பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிற பட்சத்தில், அதிரடி கவர்ச்சி நாயகியாக அவசியம் உருவெடுப்பேன்...' என்று கூறியுள்ளார் லட்சுமிமேனன். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
எலீசா

ஆர்யாவுக்கு பொருத்தமான ஹன்சிகா!






சேட்டை படத்துக்காக ஆர்யா, ஹன்சிகா நடித்த, "அகலாதே அகலாதே' என்ற பாடலின் வீடியோவை, யுடியூப்பில் வெளியிட்டதை அடுத்து, ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. "பாடலை விட, பாடலில் நடித்த ஆர்யா - ஹன்சிகா இருவரது அந்நியோன்யமான நடிப்பு அட்டகாசமாக உள்ளது' என்று பெருவாரியான ரசிகர்கள் கருத்து சொன்னதையடுத்து, "இப்போதைய நடிகையரில், ஹன்சிகா தான் எனக்கு பொருத்தமான ஜோடி...' என்று, "பில்டப்' கொடுத்து வருகிறார் ஆர்யா.
சி.பொ.,

விஷ்ணுவுக்கு புதிய படமில்லை!





வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமான விஷ்ணுவுக்கு, நீர்ப்பறவை படத்தையடுத்து, புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டவில்லை. சில நட்பு வட்டார இயக்குனர்களிடம் கேட்டு பார்த்தும், யாரும் செவி சாய்க்காததால், மனசுடைந்து போய் விட்டார் விஷ்ணு. இதையடுத்து, சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர் மனைவி ரஜினி, விஷ்ணுவுக் காக ஒரு கதை தயார் செய்துள்ளார். அதை படமாக்க, சில படாதிபதிகளிடம் பேசி வருகிறார்.
சி.பொ.,

தயாரிப்பாளர் தேடும் வடிவேலு!





கே.எஸ்.ரவிக்குமார், சிம்புதேவன் உட்பட, மூன்று இயக்குனர்களிடம் கதை ஓ.கே., செய்து வைத்துள்ளார் வடிவேலு. ஆனால், அந்த கதையை சொல்லி, வடிவேலுதான் ஹீரோ என்று சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் சொன்னதும், தயாரிப்பாளர்கள் நழுவிக் கொள்கின்றனர். அதனால், இப்போது தனக்கான தயாரிப்பாளர்களை, தானே தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வடிவேலு.
சினிமா பொன்னையா

பூபதி பாண்டியன் இயக்கும், பட்டத்து யானை படத்தில், சமையல் கலைஞராக நடிக்கிறார் விஷால். இப்படத்தில் விஷாலின் சமையலை ருசி பார்த்து, மார்க் போடுவது தான் படத்தின் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு வேலையாம்.

அவ்ளோதான்!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காயத்ரி - Chennai,இந்தியா
31-மார்ச்-201307:55:52 IST Report Abuse
காயத்ரி நல்ல வேளை..பவர்ஸ்டார் தான் ஹீரோ, குரங்குக்குப் பவர்புல் வேடம், என்று சொல்லாமல் விட்டீர்களே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X