Advertisement
மதுரையில் மிருதங்க இசை விழா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
00:00

மதுரையில் வாழ்ந்து இசை வளர்த்த பெரியோர்கள் பலர். அவர்களில் மிருதங்கம் வாசிப்பதில் பல மாணவர்களை உருவாக்கி, தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டவர், மதுரை ராமசாமி அய்யங்கார். ராமசாமி அய்யங்காரின் முதன்மை மாணவர்களான கே.நாராயண் மற்றும் கே.தியாகராஜன் இணைந்து தங்களது குருவின் நினைவாக, 19 ஆண்டுகளாக இசை விழாவை நடத்தி வருகின்றனர். இவ்விழாவில் காலை முதல் மாலை வரை பல்வேறு வளரும் இசை கலைஞர்கள் பங்கேற்றனர்.
நாதஸ்வர இசைக் கலைஞர் அபிராமம் கணேசனை பாராட்டி கவுரவித்தனர். வழக்கறிஞர் எம்.எஸ்.மீனாட்சிசுந்தரம், தமிழிசைச் சங்க அறங்காவலர் எஸ்.மோகன் காந்தி, நாதஸ்வர மேதை எம்.பி.என். பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்தினர்.
விழாவில், சிறப்பு இசை நிகழ்ச்சியாக, காலையில், களக்காடு சகோதரர்கள் தியாகராஜன் மற்றும் சீனிவாசன் பாடினர். மாலை சிறப்பு நிகழ்ச்சியாக, மிருதங்க இசை அறிஞர் மதுரை தியாகராஜன் அமைத்த, "சிம்ம நந்தன தாளப் பல்லவி' என்ற ஒரு சிறப்பான இசை வேள்வி தொடங்கியது. ரெங்கநாயகி வாய்ப்பாட்டு, சச்சிதானந்தம் வயலினுடன் இப்பல்லவி அரங்கேறியது.
மதுரை, சொக்கநாதர் கோவில் வடக்கு பிரகாரத்தில் சிம்மநந்தன தாளம் பற்றி கல்வெட்டு உள்ளது. மொத்தம் 128 அட்சர காலங்கள் கொண்ட இத்தாளம் பற்றிய விவரம் தெரிவதற்கு, சங்கீத உலகில் 20 ஆண்டுகள் உழைக்க வேண்டும். அத்தகைய சிம்மநந்தன தாளத்தில், ரெங்கநாயகி, ராகம், தாளம், பல்லவியை சிறப்பாக வழங்க, மதுரை தியாகராஜன் குழுவினர், சிறந்த லய ஞானத்துடன் இத்தாளத்தை கையாண்டு, தாள உலகின் தனித்துவமான கவுரவத்தை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.