தாயும், மகளும் இணைந்து ஆடிய நடனம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
00:00

சுஸ்ஸ்வராவின் நடன விழாவின் இறுதி நாளின் கடைசி நடனம் அமெரிக்கா புகழ் மைதிலி குமார் மற்றும் ரசிகா குமார், தாயும் மகளும் இணைந்து நடன நிகழ்ச்சியை நமக்களித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டனர். தனது நடன நிறுவனத்தை கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 33 ஆண்டுகளாக நடத்தி, பல ஆயிரம் நடன நிகழ்ச்சிகளை கொடுத்தும் பல மாணவ, மாணவியர்களை உருவாக்கி, கடல் கடந்து கலைச் சேவை செய்து வருகிறார்.
இவரது குரு, டி.ஆர்.தேவநாதன், இந்திரா ராஜன். இந்திரா ராஜன் நேரில் வந்து பார்த்து ரசித்தார். நடனக் கலைஞர் நந்தினி ரமணி, பேராசிரியர் சந்திரசேகரன், குரலிசை கலைஞர் சங்கர நாராயணன், மதுரை முரளீதரன் என, கலைஞர்கள் பெருமளவில் கண்டு களித்தனர். முதல் நடனப் பாடலாக மதுரை முரளீதரன் எழுதி, இசையமைத்து நடன அமைப்பு செய்துள்ள, காவிரி நதியின் பெருமையை விளக்கும் பாடல் இதை ரசிகா குமார் ஆடினார். நல்ல உயரம், நீண்ட கண்கள், பரந்த தோள்கள் என அங்க லட்சணத்தை பெற்ற மிக விறுவிறுப்பாக ஆடினார்.
காவிரி மிகவும் புண்ணிய நதி. குடகில் உற்பத்தியாகி தென் கங்கையாக அது பிரவாகம் செய்யும் இடங்களில் அன்றிருந்த நிலைமையை ரசிகா நன்கு விளக்கினார். அவள் நமக்கு தரும் பாக்கி யத்தை அவள் அளித்த நீரையே அர்க்யமாக அளித்து வழிபட்டு வருவதை சித்தரித்து கொடுத்தார். மிக வித்தியாசமாக ஜதி அமைத்து அதிலேயே காவிரியின் பிரவாகத்தை கொடுத்து அசத்தி விட்டார். நாம் யாரிடம் காவிரி நதி நீரை கேட்க முடியும்; நடனத்தில் தான் பார்க்க முடியும் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள ஒரு அற்புதமான நடனம். அடுத்து மிகப் பிரபலமான பைரவி ராகம். தஞ்சை நால்வரின் வர்ணம் மோகமான, "இந்த வேளையில்' எனத் தொடங்கும் பல்லவியின் வரிகளுக்கு நடனத்தை தொடங்கி, அனைத்து ஜதிகளையும் மிக சிறப்பாக ஆடினர்.
நாயகனின் வரவிற்காக காத்திருக்கும் நாயகியின் மனப்போக்கை படம் பிடித்துக் காட்டும் வர்ணம் ஒவ்வொரு கட்டத்திலும் கதை சொல்லியது. ரசிகாவின் தாய் மைதிலி குமார், நந்தனார் சரித்திரத் தை மிக அற்புதமான பாடலில் நடனம் அமைத்து கொடுத்தார். அக்காலத்து செல்வந்தர்கள் உயர்குலத்தோர் என்று கருதி,செருக்குற்று தன் கீழ் பணிபுரிவர்களை அடிமைகளாக எப்படி நடத்தினர் என்பதை மைதிலி தன் நடனத்தின் மூலம் கொடுத்தார்.
சிதம்பரம் என்று எண்ணியவுடன் என் மனம் உன்னைக் காணத் தவியாய் தவிக்கிறது. ஆனால், எண்ணியவுடன் உன் தரிசனம் கிடைக்க நான் உயர்குடியில் பிறக்கவில்லை. மாறாக தாழ்ந்த குலத்தில் வேலை செய்து பிழைக்கும் அற்ப பதர் நான். எப்படி உன்னை காண்பது? ஆனால், உன் பெருமைகளை என் சக தோழர்களிடம் சொல்லி அனைவரும் போகலாம் என்றெல்லாம் சொல்கிறேன். "நில்லடா சிவலோகம் செல்ல' என்று எடுத்துக் கூறிவிட்டு முடியாமல் தவிக்கிறேன். இது நியாயமா? என்பதை அழகாக அபிநயித்தார். அனைவரும் சமம் என்று உணர்த்திய, நந்தன் உண்மை சரித்திரத்தை கதையை எத்தனை முறை கேட்டாலும் நடனத்தில் கண்டு ரசித்தாலும் மனம் துள்ளிக் குதித்து கரையும் என்பதை தன் நடனத்தால் உணர்த்தினார் அமெரிக்கா வாழ் மைதிலி குமார்.
- ரசிகப்ரியா.

Advertisement

 

மேலும் கலை மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
02-ஏப்-201313:57:13 IST Report Abuse
amukkusaamy தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை என்று தெரியாமலா சொன்னார்கள் நம் முன்னோர்கள் ....வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.