சுகம் தரும் செவ்வாய்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஏப்
2013
00:00

ஏப்., 9 கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி
திதிகள் 15. முதல் திதி பிரதமை. பிரதமை என்றால் முதலிடம் வகிப்பது. ஒரு நாட்டின் முதல்வரை, "பிரதமர்' என்று சொல்வது இதனால் தான். அடுத்தது துவிதியை. "துவி' என்றால், இரண்டு. "டூ' என்ற ஆங்கிலச்சொல் கூட, இதிலிருந்து பிறந்தது தான். திரிதியை என்றால், மூன்று. இதில், திரி என்ற சொல் இருக்கிறது. அடுத்த திதியான சதுர்த்தியில், சதுர் என்றால் நான்கு. கடவுளின் நான்கு கரங்களை, சதுர்புஜம் என்பர். அடுத்து பஞ்சமி; பாஞ்ச் என்றால், ஐந்து.சஷ்டி என்றால், ஆறு. முருகனுக்குரிய திதி. இதனால் தான் அவருக்கு ஆறு முகம் இருக்கிறது. சப்தமியில் வரும் சப்தம் என்றால், ஏழு. கோவில்களில் ஏழு அம்பிகைகளைக் கொண்ட, சப்த கன்னியர் சன்னிதி இருக்கும். அஷ்டமி என்றால், எட்டு. துர்க்கைக்கு எட்டு கை. அஷ்ட புஜ துர்க்கை என்பர். நவமி ஒன்பதாம் திதி. நவரத்தினம், நவக்கிரகம் எல்லாமே ஒன்பது தான். தசமியில் உள்ள, தசம் என்றால், பத்து. ராவணனை, தசமுகன் என்பர். பத்து தலை உடையவன் என பொருள்.ஏகாதசி என்பதை, ஏகம் - தசம் என பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்பது, பத்து. இரண்டையும் கூட்டினால், 11. இது, 11ம் திதி. இதுபோல துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்பதையும் பிரித்து பொருள் பார்த்தால், 12,13,14 என வரும். பூர்ணமான அமாவாசை அல்லது பவுர்ணமி ஆகியவை, 15ம் திதியாகும்.இவற்றில், தேய்பிறை சதுர்த்தசி திதி செவ்வாய்க்கிழமை சேர்ந்து வருமானால், அது கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி எனப்படும். கிருஷ்ண என்றால், தேய்பிறை. அங்காரகன் என்றால், செவ்வாய்.சில குடும்பங்களில் கொடிய பாவம் இருக்கும். இது வழிவழியாக வந்து நம்மை கஷ்டப்படுத்தும். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு தலைமுறையில் இருந்த தாத்தா, தன் மனைவி, பிள்ளைகளை கைவிட்டிருப்பார். சிலர், கொலையே கூட செய்திருக்கலாம். சிலர், பெண்களை ஏமாற்றி கைவிட்டிருக்கலாம். கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் கையாடியிருக்கலாம். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் விட்ட சாபம், எத்தனை தலைமுறையானாலும் தொடரும். அந்த குடும்பங்களிலுள்ள பெண்கள், கணவனை இழப்பதும், கைவிடப்படுவதும், ஆண்களால் ஏமாற்றப்படுவதும், அகால மரணம் அடைவதுமான சம்பவங்கள் தொடரும்.இவர்களின் பரம்பரை, வறுமையில் வாடும். ஒருவேளை, பணமிருந்தாலும் நிம்மதியின்றி வாழ்வர். இந்த தலைமுறை மட்டுமின்றி, எதிர்கால பரம்பரைக்கும் இந்த சாபம் தொடரும்.இது மட்டுமல்ல... சில குடும்பங்களில் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கும். அந்த ஆத்மாக்கள் அமைதியின்றி அலையும்.இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும் நாளே, கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி. இந்நாளில், பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும். இதற்கென்று சில ஹோமங்கள் உள்ளன. அவற்றை வேதியர்கள் மூலம் செய்ய வேண்டும். இதனால், முன்னோர் பாவம் நம்மைத் தொடராது.ஐப்பசியில் வரும் தேய்பிறை சதுர்த்தசியை, "நரக சதுர்த்தசி' என்கிறோம். அன்று தான் தீபாவளி கொண்டாட்டம். அதாவது, பாவம் மட்டுமே செய்து வாழ்ந்த ஒரு அசுரன், கிருஷ்ணரால் கொல்லப்பட்டான். இதிலிருந்து சதுர்த்தசி, பாவங்களை அழிக்கும் திதி என்பது உறுதியாகிறது. அது, செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து வந்து, அந்நாளில் இறை வழிபாட்டை மேற்கொள்வோமானால், ஒரு தலைமுறையின் பாவத்தையே அழித்து, எதிர்கால தலைமுறையை சுகமாக வாழ வைக்கிறது. இந்நாளில், அவரவர் குலதெய்வத்தையும் வணங்க வேண்டும். புண்ணியத் தலங்களான காசி, ராமேஸ்வரம் போன்ற தலங்களுக்கு சென்று புனித நீராடி, முந்தைய பாவங்கள் தீர, கடவுளை பிரார்த்தித்து வர வேண்டும்.பொதுவாக, மக்கள் செவ்வாய்கிழமையை ஒதுக்கித் தள்ளுவதுண்டு. ஆனால், அந்த கிழமை ஒரு தலைமுறையின் பாவத்தையே அழிக்கிறது என்றால், அதை சுபநாளாகத்தானே கொள்ள வேண்டும்! ***
தி. செல்லப்பா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.RAJAGANAPATHY - chennai,இந்தியா
09-ஏப்-201313:37:59 IST Report Abuse
V.RAJAGANAPATHY மிகவும் பயனுள்ள தகவல் . மிக்க நன்றி
Rate this:
Share this comment
Cancel
Kalakkal Mano - Chennai,இந்தியா
08-ஏப்-201317:16:22 IST Report Abuse
Kalakkal Mano மிக மிக உபயோகமான கருத்துக்கள்... மிக்க நன்றி திரு செல்லப்பா அவர்களே.. நன்றிகள் பல தினமலருக்கு...
Rate this:
Share this comment
Cancel
sengottai sreenivasan - nagasaki,ஜப்பான்
07-ஏப்-201306:13:56 IST Report Abuse
sengottai sreenivasan திரு செல்லப்பா அவர்களின் விளக்கங்கள் மிகவும் அருமை. ஒவ்வொரு முறையும் இந்த திதிகள் என்னை குழப்பியது உண்டு... இவரது அருமையான எளிமையான விளக்கங்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன.. தினமலர் இவரது புகைப்படத்தை வெளியிட வேண்டுகிறேன்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.