அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஏப்
2013
00:00

பாசமுள்ள அம்மாவுக்கு —
எனக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
நான் திருமணமாவதற்கு முன், பி.எஸ்.சி., பட்டப் படிப்பு முடித்திருந்தேன். என் கணவரின் முயற்சியால், பி.எட்., பட்டம் பெற்று, ஒரு ஆசிரியை பணிக்கு தகுதி பெற்றிருக்கிறேன்.
என் கணவர் எம்.எஸ்.சி., பி.எட்., படித்து, ஒரு தனியார் பள்ளியில் சொற்ப சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறார். அத்துடன் பைனான்சும் செய்து வந்தார். கெட்ட பழக்கம் ஏதும் இல்லை.
என்னிடம் என் மாமியார் நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்கவில்லை. அதாவது, என்னை மதிப்பதில்லை. இதனால், என் கணவருக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை வரும்.
என் கணவர், அம்மா பிரியர் அல்ல வெறியர். அதனால், நான் எது சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். இத்தருணத்தில், நாம் தனியாக குடித்தனம் போக வேண்டும் என்று, எவ்வளவு முறை கெஞ்சியும், கேட்டும் அதற்கு அவர் செவிசாய்க்க வில்லை.
விடுமுறைக்கு என்னை கொண்டு வந்து தாயார் வீட்டில் விட்டுச் சென்றார். நான் இதைப் பயன்படுத்தி, "தனிவீடு பார்த்தால்தான் வருவேன்...' என்று பிடிவாதமாக இருக்கிறேன். இவ்வாறு ஒன்றரை ஆண்டுகள் கழிந்தன. என் பிள்ளையை எங்கள் ஊர் பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைக்கிறேன். நாங்கள் பிரிந்துதான் இருக்கிறோம்.
இதற்கிடையில் என்னை அழைக்க வந்தபோது, என் தந்தைக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அவரை திட்டி அனுப்பி விட்டார். அதிலிருந்து குழந்தைகளைப் பற்றி விசாரிப்பதும் இல்லை. என்னைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை.
தற்போது, பைனான்சில் பெரு நஷ்டம் ஏற்பட்டு, சொந்த வீட்டையே விற்று விட்டதாகவும், குடியும், குடித்தனமுமாக
இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.
இதற்கிடையில் இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செவிவழிச் செய்தியாக உள்ளது.
அவர் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தாயாரோ, "அவர் தனியாக போனால்தான் உன்னை அனுப்புவேன்...' என்று பிடிவாதமாக இருக்கிறார்.
எங்கள் உறவினர்களோ, எங்கள் பிரிவினைப் பற்றி கவலைப்படவில்லை. எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத என் கணவர், பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாவதற்கு நான் காரணமாக இருந்து விட்டேனோ என எண்ணத் தோன்றுகிறது.
என் கணவர் கஷ்டப்படும் போது அருகில் இருந்து ஆறுதல் கூற முடியவில்லையே என்று ஒரு பக்கம் மனம் ஏங்குகிறது. இருந்தாலும், என் தாயார் ஒரே பிடிவாதமாக உள்ளார்.
இந்நிலையில் நான் எடுத்திருக்கும் முடிவு சரிதானா? தனித்து வாழ முடியுமா?
உங்கள் மகளுக்கு இந்த நேரத்தில் தாங்கள் கூறும் அறிவுரை யாது?
இப்படிக்கு,
பாசமுள்ள மகள்.


அன்பு மகளுக்கு,
உன் கடிதம் பார்த்தேன். என்ன பெண்ணம்மா நீ... மாமியாரை பிடிக்கவில்லை என்று புருஷனையே விட்டு விட்டு வருவாயா? மாமியார் கொடுமைக்காரியாகவே இருக்கட்டும். நீ ஒன்றும் படிக்காத கட்டுப்பெட்டி பெண் இல்லையே! நீயும் ஆசிரியர் பயிற்சி பெற்று, பட்டமும் வாங்கியிருக்கிறாய். கல்லூரியிலும் சரி, இப்போது தனித்து நின்று ஏதாவது ஒரு பள்ளியில் ஆசிரியை வேலைக்குப் போனாலும் சரி, இது போன்ற சொந்தம் இல்லாத மாமனார்-மாமியார்கள் (உனக்கு மேல் உள்ளவர்கள்) எத்தனை பேரை சந்தித்திருப்பாய்... சந்திக்கப் போகிறாய்... படிப்பின் காரணமாகவும், உத்தியோகத்தின் நிமித்தமாகவும், இதெல்லாம் சகித்துக் கொண்டும், அனுசரித்தும் போவாய் தானே...
எத்தனை ஆசிரியைகள், தலைமை ஆசிரியரிடம் சுமூகமாகப் பழகுகின்றனர்? எலியும் - பூனையுமாக ஒரு பக்கம் இருந்தாலும், அதற்காக வேலையை விட்டு விட்டா வந்து விடுகின்றனர். அப்படி விட்டு விட்டு வந்தால், மாதம் பிறந்தவுடன் மளிகைக்கும், வீட்டு வாடகைக்கும், பாலுக்கும், குழந்தைகளின் படிப்புக்கும் எங்கே, யாரிடம் போய் நிற்பர்?
ஆக, இந்த ஒரு அல்பகாரணத்திற்காகவே, எத்தனையோ சிடுமூஞ்சி மேல் அதிகாரிகளை, பெண்கள் சகித்துக் கொண்டும், சமயங்களில் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியும், கோபத்தைக் காட்ட, குறைந்த பட்சம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாவது வளைய வளைய வருகின்றனரே தவிர, வேலையை உதறுகின்றனரா?
அப்படியிருக்க, எத்தனையோ விதமான குழந்தைகளின் மனப்போக்கு தெரிந்து, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, அன்புடன் தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுத்து, குழந்தைகளின் பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாய் பதில் அளித்து, கூட வேலை செய்யும் சக ஆசிரியைகளிடம் எல்லாம் நட்புடன் பழகி, "சிறந்த ஆசிரியை' என்ற பட்டத்தை வாங்க வேண்டிய நீ, மாமியார் என்கிற முரட்டு தலைமை ஆசிரியையையும், கணவன் என்கிற அசட்டுக் குழந்தையையும் அப்படியே விட்டுவிட்டு விலகி வந்தது தப்பும்மா.
யோசித்துப்பார்... ஒரு தாயாரால், தன் மகனுக்கு வயிறு பார்த்து சாப்பாடு போட முடியும். தலைவலி, காய்ச்சல் என்றால், வேளா வேளைக்கு மருந்து கொடுக்க முடியும். அவன் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்து வந்தால், "எதற்காகடா இந்த வம்பு... வேண்டாம் விட்டுவிடு...' என்று சொல்ல தான் முடியும்.
அதே போல, வேறு பெண் தொடர்பு, தகாத சகவாசம் ஏற்பட்டால், "ஓ' வென உட்கார்ந்து அழத்தான் செய்வாள். ஒரு மனைவி தான் இதுபோன்ற சமயங்களில் நயமாகவும், அதட்டியும் சொல்லி, அவனை வழிக்கு கொண்டு வர முடியும்.
உன் அம்மாவுக்கு தன் மகள் கஷ்டப்படுகிறாளே என்ற பரிவு இருக்கலாம்... ஆனால், அந்தப் பரிவே, மகளின் எதிர்காலத்துக்கு ஒரு சிறையாகி விடக்கூடாது பார்... செடிகள் வளர தண்ணீர் அவசியம் தான். அதே சமயம், நிறையத் தண்ணீர் விட்டால் செடி என்ன ஆகும்? அழுகிப் போய் விடாதா?
செடிக்கு சூரிய வெளிச்சமும் தேவை. தண்ணீரை ஊற்றி நிழலில் வைத்தால் செடி பூக்குமா, காய்க்குமா?
உன் வரையில், உன் மாமியார் தான் உனக்கு சூரிய வெளிச்சம். நீ, உன் கொடுமைக்கார மாமியாருடன் எதிர்த்து நில். நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். நாலு தடவை மாமியாரின் குரலுக்கு அடங்கிப் போ. ஐந்தாவது முறை நானும் மனுஷி தான் என்பதை, உன் வார்த்தைகளில் காட்டு. இது ஒரு விதமான போராட்டம்.
உன் தாயாருடன் எத்தனை தரம் சண்டை போட்டிருக்கிறாய்? அது போல, தாராளமாய் சண்டை போடு. இன்னொரு பக்கம் மாமியாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் மறவாமல் செய். இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் நிலைமை சரியாகும். அதை விட்டு, ஏரி மேல் கோபித்துக் கொண்டு குளிக்காமல் போனால் ஏரிக்கு நஷ்டமா, அந்த முட்டாளுக்கு நஷ்டமா?
உன் அம்மா, அப்பா காலத்துக்குப் பிறகும் நீ வாழ வேண்டும். ஆதலால், புடவைத் தலைப்பை இழுத்து செருகிக் கொண்டு, குழந்தையையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு, உடனே புருஷன் வீட்டை நோக்கி வீறு நடை போடு. வாழ்த்துகள்.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (61)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yembee - Nagercoil,இந்தியா
13-ஏப்-201319:15:56 IST Report Abuse
yembee பெண்களுக்கு படிப்பும் பொருளாதார சுகந்திரமும் மிக மிக முக்கியம். ஒரு வேலை தன்னம்பிக்கை கொடுக்கும் அதே நேரம், வாழ்கையின் நெளிவு சுளிவுகளையும் கற்றுக்கொடுக்கும். எத்தனை நல்லவிதமாக நடந்து கொண்டாலும் எரிச்சல் படுபவர்களும் எந்த தீமையை செய்யாவிடினும் கொடுமைப்படுத்துபவர்களும் இங்கு உண்டு. கணவனால் சமமாக நடத்தப்படாத பெண் தன மருமகளை கீழாக நடத்த முனைவதுண்டு. மகன் தன மனைவி சொல் கேட்பதும் அன்பாயிருப்பதும் அம்மாவுக்கு ஒரு அநாதரவாக நினைப்பது துரதிர்ஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel
Palani Selvam - Hyderabad,இந்தியா
13-ஏப்-201317:33:42 IST Report Abuse
Palani Selvam கடிதத்திலிருந்து - என் கணவர், அம்மா பிரியர் அல்ல வெறியர் இந்த பொண்ணு மட்டும் ஒன்றை வருஷமா அம்மா வீட்டுல இருக்கு. அம்மா சொன்னதை மட்டும் கேட்டுக்குது. இதுவும் அம்மா வெறியர் தான். பிரச்சினை இந்த பொண்ணுட்ட தான். நல்லா பொண்ணு கதை சொல்லும் போல.. சனியன் தொலைஞ்சதுன்னு கணவர் இருக்க வேண்டியது தான். ஆனா பிள்ளைய எப்படி விட முடியும்? நிறைய குடும்பங்கள்ல இது தான் நடக்குது... ஆம்பிளைங்க பாடு திண்டாடட்டம் தான்..
Rate this:
Share this comment
Cancel
KV SAM - Lobito,அங்கோலா
13-ஏப்-201313:26:30 IST Report Abuse
KV SAM மாமியாரும் மருமகளும் பிரண்ட்ஸ் ஆக மாறுங்கள்...எதனை மாமனார் மருமகன் டீம் நட்புடன் இருக்கிறார்கள்? ஈகோ வை தூக்கி எறியுங்கள்....பிறந்த வீட்டு பெருமை பேசி ஏளனம் செய்யும் எந்த மருமகளும் மாமியாரை பகைத்து கொண்டுதான் வாழ வேண்டும்....அம்மாவின் அன்பும் அரவணைப்பும் மருமகளுக்கும் போக வேண்டும்...அதே சமயம், மனைவி அம்மாவை தவறக நடத்தினால் கணவன் கண்டிக்க தயங்க கூடாது... மொத்தத்தில் மாமியார் மருமகள் உறவு தாய் பெண் உறவு போலே இருக்க வேண்டும்...தனிக்குடிதனே மீ சிறந்தது ,மாமியார்கள் வந்து போய்க்கொண்டிருக்கிற வரையில்....அவரவர் எல்லை, உரிமை தெரிந்து நடக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
12-ஏப்-201302:49:57 IST Report Abuse
காயத்ரி மருமகள் மெச்சிய மாமியாராக இருக்க சில யோசனைகள்: மகனை விட மருமகளிடம் நல் உறவு பேணும் மாமியாரால் தான் கடைசி வரை நல்ல உறவையும் இணக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். வீட்டிற்கு வரும் மருமகளை மறு-மகளாகப் பாவியுங்கள். அவரையும் குடும்பத்தில் ஓர் அங்கமாக நடத்துங்கள். எந்த முடிவுகளையும் மருமகளையும் வைத்தே எடுங்கள், அவரை முன்னிலைப்படுத்துவது மட்டற்ற மகிழ்வைக் கொடுக்கும்.மருமகளைப் பற்றிப் பெண்ணுடனோ அக்கம்பக்கம், உறவினர்களிடமோ குறைபாட்டு பாடாதீர்கள். மருமகள் ஆரம்பகாலத்தில் செய்யும் சமையல் முன்னே பின்னே இருந்தாலும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வேலை வாங்குங்கள். அந்தப் புகழுரைகளுக்கும் உங்கள் அன்பிற்குமே அடிமையாகும் பெண்ணின் உள்ளம்.எக்காரணம் கொண்டும் உங்கள் மகளுடன் ஒப்புமைப்படுத்திப் பேச வேண்டாம். அது தேவையற்ற சஞ்சலங்களை மருமகள் மனதில் ஏற்றி விடும். மகள்- மருமகள் உறவில் நல்ல நட்பைப் பேணச் செய்வது மிகவும் நலன் பயக்கும். அவர்கள் நன்றாகப் பார்த்துக் கொள்வதால் மகிழ்வுடன் இருப்பதை மனம் திறந்து அடிக்கடி சொல்லுங்கள். என் மருமகள் மாதிரி வராது என்று அனைவரிடம் புகழாரம் சூட்டுங்கள். ஓர்ப்படி என்றால் ஓர்படியில் வைக்கப்படுபவர்கள் என்று பொருள்.இரண்டு மருமகள்கள் இருக்கும் இல்லங்களில் ஒருவரை உயர்த்தி ஒருவரைத் தாழ்த்தவும் வேண்டாம். வீட்டிற்கு வீடு வாசற்படி. என்றோ நடந்த சண்டையை மனதில் வைத்துக் குத்திப் பேசாதீர்கள். சண்டைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். சமையலின் போது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, காய்கள் திருத்தித் தருவது இப்படி என்னென்ன வழியில் உதவலாம்(என்னென்ன வழியில் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று சிந்திப்பதற்குப் பதில்) என்று யோசித்துச் செய்யும் மாமியாரை எந்த மருமகளுக்குப் பிடிக்காது.மருமகளின் பெற்றோர், உடன் பிறந்தோர், உற்றாரையும் மரியாதையாக உபசரித்துப் பாசத்துடன் விருந்தோம்புங்கள். உங்கள் உறவினர்களுக்கும் அதே பாசத்தை மருமகள் வழங்குவார். உங்கள் சேமிப்புப் பணத்திலிருந்து மருமகளின் பிறந்த நாளின் போது புடவை, சுரிதார் அல்லது பிடித்த பொருட்களை இன்ப அதிர்ச்சியாகும்படி பரிசளியுங்கள். அந்த நாள் மருமகளின் பாதங்கள் பூமியில் படாமல் பறக்கட்டும்.என்ன தான் பெற்றவராக இருந்தாலும் மகனுக்கு ஒன்று என்றால் அதிகம் பாதிப்பிற்குள்ளாவது மருமகள் மட்டுமே, அனைத்தையும் விட்டு விட்டு இந்தக் குடும்பமே தன் குடும்பமாக நாடி வந்த கிருஹலெட்சுமி, உரிமையும் அதிகம்.அப்பெண் உங்கள் மகனுடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது இடைவெளி விட்டு அவர்கள் சந்தோஷத்தைப் பக்கத்தில் இருந்து ரசியுங்கள்(ஏதோ சுற்றுலா செல்கிறார்கள், வெளியில் போய் வருகிறார்கள்..இப்படி)சிற்சிலக் குறைகளை ஒதுக்கி விட்டு நிறைகளைப் பாராட்டுங்கள், ஊக்கப்படுத்துங்கள், அறிவுரையாகக் கூறாமல் உங்கள் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகள், நீங்கள் புரிந்த சாதனைகளைக் கதையாகக் கூறுங்கள், நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொடுங்கள்.இப்படி நீங்கள் இருப்பீர்களானால் எந்த மருமகளுக்கும் உங்களைப் பிடிக்கும், அதையும் மீறிப் பிடிக்கவில்லையா? கவலையே வேண்டாமே, உங்கள் கடமைகளையும் அன்பையும் சரிவரக் காட்டின ஆத்மதிருப்தி கிடைத்திருக்கிறது தானே.. வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் முன்மாதிரியாக இருந்தால் பின்னால் மருமகளும் மாமியாராகும் போது சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்வாள்.
Rate this:
Share this comment
Saravanakumar Ps - London,யுனைடெட் கிங்டம்
12-ஏப்-201316:05:31 IST Report Abuse
Saravanakumar Psஅப்ப நீங்க ஒண்ணுமே பண்ண மாட்டீங்க குட் this is applicable for Daughter-in-law as well. They should also start the change...
Rate this:
Share this comment
காயத்ரி - Chennai,இந்தியா
13-ஏப்-201300:12:05 IST Report Abuse
காயத்ரி திரு. சரவணக்குமார் அவர்களுக்கு,31 மார்ச் 2013 இதழின் இது உங்கள் இடம் பகுதியில் மருமகளுக்கு ஆலோசனைகள் சொல்லி இருக்கிறேன், முதலில் சொன்னது மருமகளுக்குத் தான், இங்கு மாமியார் என்னவெல்லாம் செய்தால் மருமகள் மனதில் இடம் பிடிக்கலாம், உறவுகளுக்குள் சிக்கல்கள் வராது என்று குறிப்பிட்டிருக்கிறேன், முடிந்தால் அந்தப் பகுதிக்குச் சென்று வாசித்துப் பார்க்கவும். இருவருமே உறவுகளுக்குள் சிக்கல்கள் வராமல் குடும்பம் என்ற அமைப்பைச் சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
12-ஏப்-201302:28:15 IST Report Abuse
காயத்ரி நாம் எல்லாருமே என்ன நினைக்கிறோம் தெரியுமா? மற்றவர்கள் நியாயமாக நடந்தால் தான் நாமும் நியாயமாகவும் அன்பாகவும் நடப்போம் என்று. அவர்கள் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அந்த அன்பை நம்மிடமிருந்து கொடுக்க முன்வருவதில் தயக்கம்,பனிப்போர் எல்லாமே. அவரவருக்கென்று நியாயங்களின் அளவுகள் மாறுபடுகிறது. ஆனால் பெற்றவர்களைப் பார்த்துக் கொள்வது என்பது கடமைகளில் ஒன்று. பெண்ணைப் பெற்றவர்களையோ பையனைப் பெற்றவர்களையோ பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுடையது. இதில் நல்லவர், கெட்டவர் என்ற பேதம் இல்லை. நாம் போன ஜென்மத்தில் செய்த கர்ம பலனைத் தான் இப்போது அனுபவிக்கிறோம், இந்த ஜென்மத்தில் செய்யும் புண்ணியங்களை இதே பிறவியில் நாமோ நம் குழந்தைகளோ அடுத்த பிறவியிலும் அனுபவிப்போம்.எதையும் எதிர்பாராமல் நம் கடமைகளைச் செய்து விட்டால் நமக்குப் பாவங்கள் சேராமல் புண்ணியங்களும் ஆத்மதிருப்தியும் கிடைக்கும். மிகவும் கொடுமைப்படுத்தும் மாமியார்களின் /மருமகள்களின்பாவ-புண்ணியங்களுக்கேற்ப அவரது வாழ்வும் வரும் பிறவியும் அமையும். பிடித்த சிறிய கதை. ஒரு பெண் தன் அம்மாவிடம் தன் மாமியாரைப் பற்றிப் புலம்புகிறாள். அதற்கு அந்த அம்மா, நீ உன் மாமியாரை என்னைப் போல் நினைத்துக் கொள்ளேன், சிறியவள் தானே, பெரியவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போ', இதே பெண் தன் மகனுக்கு மணமுடித்து மருமகளைப் பற்றி வயதான தன் தாயிடம் புலம்பும் போது, 'அவள் சின்னப் பெண், அனுபவம் காணாது, நீ பெரியவள் தானே, உன் பொண்ணைப் போல நினைத்து விட்டுக் கொடு' என்பார்..விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போனதில்லை. கண்மூடித்தனமாக அடிமை வாழ்வு வாழச் சொல்லவில்லை. அனுசரித்து எதில் விட்டுக் கொடுக்கலாம், எதில் விலகி நடக்கலாம், எங்கு தனியே செல்லலாம், எங்கு சேர்ந்து இருக்கலாம் என்று பகுத்தறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். பெற்றவர்களுக்குப் பண ரீதியாகவோ ஷரீர ரீதியாகவோ மன ரீதியாகவோ பிரச்சினைகள் என்றால் கண்டிப்பாக அனுசரனையாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை. ஓடமும் ஓர் நாள் வண்டியில் ஏறும். பின்னாளில் நம் சந்ததியினருக்கு நம்மில் கண்டுபிடிக்க நூறு குறைகள் தென்படலாம். புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும், செய்து பார்ப்பதிலும் சிக்கல்கள் இருக்கும். இருந்தாலும் அவரவர் தத்தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செவ்வனே செய்து முடித்து விட்டால் நல்லது. உமா அவர்கள் குறிப்பிட்டது போல இங்கும் வேண்டாம், அங்கும் வேண்டாம், அவரவர் எல்லையிலே கடமைகளைச் செய்து வரலாம். திரு.கணபதி கண்ணனின் கருத்துக்களும் அருமை.
Rate this:
Share this comment
Cancel
KV SAM - Lobito,அங்கோலா
11-ஏப்-201314:25:58 IST Report Abuse
KV SAM காயத்ரி, இசொல்வது முற்றிலும் சரி, மாமியார் கொஞ்சமாவது நல்ல அம்மாவை இருந்தால். விஷம் உமிழும் அம்மாக்களை பிரிந்து வாழ்வது சரிதான்...எத்தனை பாதைகள் குழந்தைகளை கொஞ்சாமல் டிவி பார்ப்பதும், தன்னைப்பற்றியே புலம்பி ,தான் தன மாமியாரிடம் துன்பட்டதைப் போலவே மருமகளையும் துன்புறுத்துவது என்ன நியாயம்? பெண்ணை பெற்ற அம்மா வாகட்டும், பிள்ளைய பெற்ற அம்மவகட்டும், முதலில் பாசத்தை காட்டுங்கள் குழந்தைகளை தூக்கி கொஞ்சுங்கள்,,,டிவி சனியனை தலை முழுகி விட்டு நல்ல பாட்டியை இருங்கள்....அப்படியும் மருமகள் கொடுமைய.....நிச்சயம் அந்த பெண்ணுக்கு எதிர்காலத்தில் துன்பம் வந்தே தீரும்...
Rate this:
Share this comment
Cancel
Raja ramesh - chennai,இந்தியா
11-ஏப்-201307:23:45 IST Report Abuse
Raja ramesh உன் வழக்கை, நீதான் முடிவு எடுக்கவேண்டும் . அதை விட்டுவிட்டு அடுத்தவரின் முடிவுக்கு விட்டல் நீதான் கஷ்டம்படவேண்டும். படித்தவள் தானே நீ யோசி .. வாழ்க வளமுடன்...
Rate this:
Share this comment
Cancel
Ganapathy Kannan - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-201312:22:36 IST Report Abuse
Ganapathy Kannan சகோதரி உமா, தங்கள் வேதனை புரிகிறது. எப்பொழுது தங்கள் தந்தையார், தன் தாயாரை எதிர்த்து, வேற்று சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தாரோ, அப்போதே தங்கள் தாயாரின் நலன்களைப் பாதுகாப்பதில் அவர் உறுதியாயிருந்திருக்க வேண்டும். திருமண விசயத்திலேயே அவர் தன் குடும்பத்தாரிடமிருந்து முரண்பட்டே திருமணம் செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது, உங்கள் தாய்க்கு உரிய மதிப்பை, அந்த மாமியார் வழங்க மறுக்கும்பட்சத்தில், அவர் உறுதியாக அதை எதிர்த்திருக்க வேண்டும் அல்லது அந்தக் குடும்பத்திலிருந்து விலகி, தனிக்குடித்தனம் வந்திருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்ததன் காரணமாக, உங்கள் அம்மாவுக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுத்தப் பட்டுள்ளது. குழந்தைகளான உங்களுக்கும் நிச்சய்ம் தாயின் மனவேதனை கண்டு, குழந்தைகளின் இயல்பை விட்டு, மகிழ்ச்சியை இழந்து, மன உளச்சல் ஏற்பட்டிருக்கும். குடும்பத்துப் பெரியவர்கள், குழந்தைகள் வளச்சிக்கு எதிரான செயல்களை நிறுத்தினார்கள் என்றால், அனைத்துக் குடும்பங்களிலும் நிம்மதியே நிறைந்திருக்கும். தங்கள் தாயைப் போன்ற பெண்கள் வணங்கிப் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களால்தான் இங்கு குடும்பம் என்ற, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மன நலம் காக்கும் அமைப்பு காக்கப் படுகிறது. ஒன்று மட்டும் உண்மை. இங்கு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைவருமே, யானையைப் பார்த்த குருடர்கள் போன்று, அவரவர் தடவிப் பார்க்கும் பகுதியை வைத்து, யானை தட்டையானது, யானை தூண் போன்றது என்று பலவிதமாக எண்ணிக் கொண்டு, கருத்துக்களை முன்வைக்கிறோம். ஆனால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கே அந்த நிலையின் உக்கிரம் புரியும். வாணலியில் வறுக்கப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கத் தான், அந்தச் சூடு தரும் வேதனையின் உண்மையான அளவு தெரியும். மற்றவர்கள் அதை உணர்தல் கடினமே. இருப்பினும், பொதுவான சூழல் சார்ந்த அறிவுரைகள் முன்வைக்கப்படுதல் இயல்பே. ஆனால் கூட்டுக் குடும்பம் என்ற பெயரில் கூடிஇருந்து கொண்டு, ஒருவரை ஒருவர் சித்திரவதை செய்துகொள்வதை விட, பிரிந்து இருந்து, அவ்வப்போது சந்திக்கும்போது உண்மையான பிரியம் காட்டினால் அதுவே சிறந்ததாகும். -அன்புடன் கண்ணன்
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
10-ஏப்-201322:56:47 IST Report Abuse
Umaஅன்பு கணபதி கண்ணன் அண்ணா, மனமார்ந்த நன்றிகள்.என் பாட்டி அம்மாவை கொடுமைபடுதியதால என் இளமை காலத்துலே நிறைய மன உளைச்சல் அதனாலே துணிச்சலா மனசுலே சரினு பட்டா சரி, தவறுனா தவறு அப்படினு வெளிப்படையா இருக்க ஆரம்பிச்சிட்டேன். அதனாலே சில பல உறவுகளுக்குள்ளே சிக்கல் இருந்தாலும் எனக்கு மன அமைதி இருக்கு. அது தானே முக்கியம். மீண்டும் நன்றி அண்ணா. இந்த வாரம் நிறைய டைம் கிடைச்சது அதனாலே நிறைய எழுதினேன், இனி கொஞ்சம் கஷ்டம்....
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
11-ஏப்-201318:12:26 IST Report Abuse
Umaஅன்புச் சகோதரர் கணபதி கண்ணன் அவர்களுக்கு நன்றிங்க. எங்கம்மா மாதிரி குடும்பம் கதம்பம்னு குட்ட குட்ட குனியவும் வேணாம், ரொம்ப ஆடவும் வேணாம். எல்லாருமே அவங்கவங்க எல்லை தெரிஞ்சு நடக்கணும், எப்போ தன் மனைவி கொடுமைப்படுத்தப்படறானு தெரியுதோ அங்கே நீங்க சொன்ன மாதிரி கணவர் சப்போர்ட் பண்ணணும். அடுத்து எங்கே அம்மா பாவம், மனைவி ஆடறாங்களோ அங்கே அவங்களை தட்டி வைக்கணும். இப்படி ஆண் சரியா இருந்தாலே சரியாகும். நன்றி....
Rate this:
Share this comment
Cancel
pudur mani - madurai,இந்தியா
10-ஏப்-201311:24:25 IST Report Abuse
pudur mani நிறைய உறவுகள் பிரிவதற்கு பெரியவர்கள் காரணம்
Rate this:
Share this comment
rajasekar - abbasiya,குவைத்
11-ஏப்-201311:44:25 IST Report Abuse
rajasekarஇருக்காது.. ...
Rate this:
Share this comment
Cancel
nellai - nellai,இந்தியா
10-ஏப்-201310:40:15 IST Report Abuse
nellai A mother takes twenty years to make a man of her boy, and another woman makes a fool of him in twenty minutes. -Robert Frost -
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.