நோக்கியா ஆஷா 310
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
00:00

நோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசை மொபைல் போன்களில் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் ஆஷா 310 மொபைல் போன் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அனைவரும் வாங்கும் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில் வை-பி வசதியுடன் கூடிய மொபைல் போனாக இது அமைந்துள்ளது.
இதன் திரை 3 அங்குல அகலத்தில், ஸ்கிராட்ச் எதுவும் ஏற்பட முடியாத பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பு திறன் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதில் இயங்குவது எஸ் 40 ஆஷா ஆப்பரேட்டிங் சிஸ்டம். ஸ்வைப் செய்து இயக்கும் வகையிலான இன்டர்பேஸ் இயங்குகிறது. எளிதாக மாற்றிக் கொண்டு இயக்கும் வகையில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள சிம் மேனேஜர் நமக்கு இந்த வசதியினைத் தருகிறது. போனை ஆப் செய்திடாமல், சிம்மினை மாற்றிக் கொள்ளலாம். பேஸ்புக், ட்விட்டர் சமூக தளங்களுக்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. டெட்ரிஸ், பெஜவல்டு, பிபா 2012 உட்பட 40 கேம்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் தடிமன் 13மிமீ. எடை 104 கிராம். வை-பியுடன், ஜி.பி.ஆர்.எஸ்., A2DP இணைந்த புளுடூத் 3.0., மைக்ரோ யு.எஸ்.பி. 2.0., யு.எஸ்.பி. மூலம் சார்ஜ் செய்திடும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன. 3.5 மிமீ ஆடியோ ஜாக், மியூசிக் பிளேயர், பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் உள் நினைவகம் 20 எம்.பி. இதனை 32 ஜிபி வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம். இதன் பேட்டரி 1110 mAh திறன் உடையது. இந்த மொபைல் போன் கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.5,550.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X