ஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
00:00

விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக சில வியூக்களை அமைத்துள்ளது. அவை thumbnails, titles, icons, list மற்றும் display with details என வகைப்படும். இவற்றை மாற்றி மாற்றி பார்க்கையில் எந்த போல்டருக்காக மாற்றுகிறோமோ அந்த போல்டர் மட்டுமே அந்த வியூ வகையில் காட்சி அளிக்கும். ஆனால் அனைத்து போல்டர்களும் அதே போல் காட்சி அளிக்க நீங்கள் எண்ணி னால் மேலும் சில கிளிக்குகளை ஏற்படுத்த வேண்டும். அவற்றை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம்.
முதலில் ஏதேனும் ஒரு போல்டரைத் திறக்கவும். “View” என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்குப் பிடித்த வியூவினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின் டூல்ஸ் மெனு சென்று Folder Options என்பதில் கிளிக் செய்து Folder Options டயலாக் பாக்ஸ் திறக்கவும். இங்கே Folder Options டயலாக் பாக்ஸில் வியூ டேப்பில் கிளிக் செய்திடுங்கள். இந்த டயலாக் பாக்ஸின் மேலாக உள்ள Apply to all folders என்பதில் கிளிக் செய்து முடிக்கவும். இப்போது நீங்கள் மேற்கொண்ட மாற்றம் குறித்து உறுதி செய்திட “Set all the folders on your computer to match the current folders view settings (except for toolbars and folder task)? Change will occur the next time you open them” என்ற மெசேஜ் காட்டப்படும். ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது நீங்கள் எந்த வியூவில் அமைத்தீர்களோ அந்த வியூவில் அனைத்து போல்டர்களும் காட்சி அளிக்கும். இப்போதும் கூட குறிப்பிட்ட ஒரு போல்டரை நீங்கள் விரும்பும் தோற்றத்தில் பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X