பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
00:00

பேஸ்புக்கில் இரண்டு அக்கவுண்ட்களை அமைத்துவிட்டு, எப்படி ஒன்றை முழுமையாக நீக்குவது எனத் திண்டாடிக் கொண்டிருந்தேன். தங்கள் தகவல் கட்டுரை உதவியது. நன்றி.
கே. ரமேஷ் குமார், சென்னை.

பொதுவாக சமூக வலைத் தளங்கள், தங்களிடம் பதிந்துள்ளவர்களை அப்படியே வைத்துக் கொள்கின்றன. நீக்குவது குறித்த தகவல்களைத் தருவதில்லை. அக்கவுண்ட் நீக்கும் வழிகளை நீங்கள் விளக்கியது நல்ல தகவல்.
கே. என். காஞ்சனா, கோவை.

மைக்ரோசாப்ட் நினைத்தால், விண்டோஸ் ஸ்டோர்ஸை இன்னும் வளப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு உதவலாம். தொடர்ந்து இலவசமாக சின்ன சின்ன அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தர வேண்டும்.
நீ. கலை அரசன், திண்டுக்கல்.

பொறுப்பான சமூக தளமாக ட்விட்டர் தொடர்ந்து இயங்குவதே அதன் வெற்றிக்குக் காரணம். இதில் உள்ள சிலரின் தகவல்களை உங்கள் கட்டுரையில் கோடி காட்டியிருக்கலாம்.
என். கந்தசாமி, திருப்பரங்குன்றம்.

சமூக ஊடகங்கள் குறித்த தகவல்கள் வியப்பைத் தருகின்றன. இந்தியாவில், பேஸ்புக் பயன்பாடு, மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருப்பது எதிர்பாராத தகவல்.
கா. ஸ்ரீராம், திருப்பூர்.

எக்ஸெல் சார்டிங் குறித்த டிப்ஸ் மிக அருமை. அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்தது. நன்றி.
எஸ். மாவடியான், மதுரை.

எக்ஸெல் ஆல்ட்+ஷிப்ட் கீ பங்ஷன் கொடுத்தது போல, மற்ற தொகுப்புகளுக்கும், இதே போல வரிசைப்படுத்தித் தந்தால், பிரிண்ட் எடுத்து அலுவலகத்தில் பயன்படுத்த உதவியாக இருக்கும்.
ஆர். மேகலா, விழுப்புரம்.

மொபைல் போன்களும் தற்போது ஹேக்கர்களின் தாக்குதல்களுக்கு பலியாகின்றன என்ற எச்சரிக்கை செய்தி அனைத்து மக்களுக்கும் செல்ல வேண்டும். இது குறித்த செய்திகள் அதிகம் பரவ வேண்டும். தீர்வுகளும் இலவசமாக அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
சி.ஜே. அப்துல் ஹமீது, காரைக்கால்.

டெக்ஸ்ட்டை மறைத்து அச்செடுத்துத் தரும் வசதியை வேர்ட் கொண்டிருப்பதனை டிப்ஸாகக் கொடுத்தது நல்ல உதவி. இதுவரை இந்த டூலினை அறியாமலேயே வேர்ட் பயன்படுத்தி வந்திருக்கிறேன். தகவலுக்கு நன்றி.
கா. இறையரசன், தஞ்சாவூர்.

மொபைல் போன்களில் கூட, சோஷியல் நெட்வொர்க் தளப் பயன்பாடு தான் அதிகமாக உள்ளது. இது மக்களிடையே உறவினை வளர்க்க மட்டுமே பயன்பட்டால், நலம் கிடைக்கும்.
கா. ஸ்ரீனிவாசன், திருச்சி.

வேர்டில் நாமாக டெம்ப்ளேட் தயாரித்துப் பயன்படுத்தலாம் என்ற தகவல் விளக்கமாக இருந்தது. பயனுள்ள தகவல்.
கே.எஸ். பூரணி மாலா, சென்னை.

ஹீட் ஸிங்க் குறித்த பதிலில், அதன் செயலாக்கத்தினை முழுமையாகப் பயன்படுத்த நாம் எப்படி லேப்டாப் கம்ப்யூட்டரை அமைத்துப் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்புகள் தந்திருக்கலாம். அடுத்த கம்ப்யூட்டர் மலரில் எதிர்பார்க்கிறேன்.
எம். சுந்தரம், தாம்பரம்.

எமோட்டிகான் குறித்த என் கேள்விக்கு விரிவான பதில் தந்தது மகிழ்ச்சி. தகவலும் புதுமையாக இருந்தது.
என்.ஸ்ரீலேகா, பொள்ளாச்சி.

விண்டோஸ் 8 விலை குறைக்கப்பட்டால், நிச்சயம் பல நிறுவனங்கள், கல்வி நிலையங்களில், இதன் பயன்பாடு அதிகரிக்கும். மைக்ரோசாப்ட் இந்திய நிர்வாகிகள் இதனை ரெட்மண்ட் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். நீங்களும் ஊடகங்களில் தகவல் வெளிவர உதவ வேண்டும்.
பேரா. சி. ஆறுமுகம், மதுரை.

சிகிளீனரின் புதிய பதிப்பிற்கான தள முகவரி கொடுத்திருக்கலாமே? கூகுள் சர்ச் சென்று தேடும் வேலையும் நேரமும் மிச்சமாகியிருக்கும்.
என். சுந்தரமோகன், பழநி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X