அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
00:00

பீச் மீட்டிங்; வழக்கம் போல கூட்டம்.
"என்னாச்சி, உங்க ஒயிட் அம்பாசிடர்?' என பெரியசாமி அண்ணாச்சியிடம் கேட்டார் லென்ஸ் மாமா.
"நல்ல ராசியான வண்டிவே அது... அதுல போனா, போன காரியம் நடக்கும்... என்ன... வண்டி கொஞ்சம் பளசா போச்சு... 18 ஆயிரம் ரூபாய்க்கு வித்துப்புட்டேன்...' என்றார் அண்ணாச்சி.
"இதான்... மூட நம்பிக்கையோ, மூடாத நம்பிக்கையோ... தமிழர்களின் வாழ்வில் ஒன்று கலந்து விட்டது, அநேக நம்பிக்கைகள்...' என ஆரம்பித்த லென்ஸ் மாமா, நீண்ட லெக்சர் ஒன்றை ஆரம்பித்தார்:
எண்ணெய் தேச்சு குளிச்சிட்டு கல்யாண வீட்டுக்குப் போகக் கூடாது...
சூரிய அஸ்தமனத்திற்கு பின், தலைமுடி வெட்டக் கூடாது, நகம் வெட்டக் கூடாது, சலவைக்கு அழுக்குத் துணிகளை போடக் கூடாது, ஊசி, உப்பு, மோர், தீப்பெட்டி ஆகியவற்றை இரவல் கொடுக்கக் கூடாது.
விடிந்ததும், முகம் பார்க்கும் கண்ணாடி, நிறை குடம், கொடி, விளக்கு, மஞ்சள், தாமரை, தங்கம், சூரியன், கடல், கோபுரம், மழை, மலை, கன்றுடன் கூடிய பசு, மனைவியின் முகம், பைத்தியக்காரன், கருங்குரங்கு, யானை, மிருதங்கம் ஆகியவற்றை காண்பது நன்மை தரும்.
வீட்டுத் தரையை பெருக்கிச் சுத்தம் செய்யும் போது, குப்பைக் கூளத்தை சேகரித்து, வீட்டுக்கு வெளியே கொட்டி விட வேண்டுமென்று, தாய், தன் மகளுக்கு அறிவுறுத்துகிறாள். குப்பையை மூலையிலே குவித்து வைத்தால், அவள் ஒரு நல்ல நாளில் (திருவிழா, திருமணம் முதலிய நாட்களில்) வீட்டுக்கு விலக்காக இருக்க நேர்ந்து, மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பேற்றை இழப்பாள் என்பதும் ஒரு நம்பிக்கை. வீட்டு மூலைகளில் தூசி சேர்வது கடனுக்கும், கவலைக்கும் அறிகுறி.
உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது. அமாவாசைக்கு நான்காம் நாளில் சந்திரனைப் பார்த்தால், நினைவாற்றல் பாதிக்கப்படும்.
நகத்தை கடிப்பது, தண்ணீரை வீணாக்குவது, கால் ஆட்டுவது, வீட்டுக்குள் ஆமைகள் புகுவது ஆகியவை, வரப்போகும் வறுமைக்கு அறிகுறி. கால்களை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்துக் கொள்வதும், கைகளை முழங்கால் அருகே கட்டிக் கொள்வதும் பிணத்தின் அடையாளங்கள்.
கோடித் துணிகளை மூலையில் மஞ்சள் தடவிய பிறகே உடுத்த வேண்டும்.
இடது கையால் எதையும் கொடுப்பதும், வாங்கிக் கொள்வதும், மற்றொரு சாராரை அவமதிப்பதாகும். வடக்கே தலையும், தெற்கே காலும் வைத்துப் படுக்கக் கூடாது. இதுவே மரணத்திற்குரிய கடவுளின் திக்குகள்.
வடகிழக்கு, தென்மேற்கு மூலையில் தான் கிணறு வெட்ட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் பயணம் மேற்கொள்ளக் கூடாது, வீட்டுச் செல்வத்தை பிறருக்குக் கொடுப்பது கூடாது. தானம் மட்டும் இந்த கிழமையில் கொடுக்கலாம்.
இப்படி எவ்வளவோ நம்பிக்கைகளை கடைபிடித்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டனர் நம் மக்கள், என்று முடித்தார் மாமா.
"அந்தக் காலத்துலயே இருக்கீங்க மாமா... அவனவன், "சாட்டிலைட்' மூலமா உலகில், எங்கோ, எவன் வீட்டு பெட்ரூமையோ கூட படம் எடுத்து விடறான்... நீங்க என்னன்னா, நம்மூர் தொல்பொருள் துறைக்காரங்க மகாபலிபுரத்துல கடல் கோவில் பக்கத்துல, "இங்கே போட்டோ எடுக்கக் கூடாது...'ன்னு பத்தாம் பசலித்தனமா போர்டு வச்சு இருக்கிற மாதிரியில்ல இருக்கு உங்கள் பேச்சு...' என்றேன்.
"சும்மா நிறுத்து கண்ணு... அந்த, "சாட்டிலைட்'டை அனுப்புறத்துக்கு முன், சூடம் காட்டி, தேங்காய் உடைச்சுத் தான் அனுப்பறான்...' என்றார்.
அத்தோடு விட்டாரா மாமா...
"இதப்பாரு... மூன்றாம் எண் குருவுக்கு உரியது. 3ந் தேதியில் பிறந்தவர்கள் குரு ஆதிக்கம் கொண்டவர்கள். கருணாநிதி 3ந் தேதி பிறந்தவர். குருவிற்கு நிறம் மஞ்சள். கருணாநிதி மஞ்சள் துண்டு அணிகிறார். கோவிலுக்கு போனால், நவக்கிரகங்களை சுற்றி வரும் போது பாரு... குருவுக்கு மட்டும் மஞ்சள் துண்டை இடுப்பில் சுற்றி இருப்பர். சீர்திருத்தம், கீர்திருத்தம் பேசியவங்க எல்லாமே, முன்பு மூட நம்பிக்கைன்னு பேசி வந்ததை கைவிட்டுட்டாங்க...' என்றார் லென்ஸ் மாமா.
அதன் பிறகு நான் எதுவும் பேசவில்லை.
***

கடந்த வாரத்தில் ஒரு நாள், "ஈ - மெயில்' என்னென்ன வந்திருக்கிறது என, கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தாய்லாந்து நாட்டில் இருந்து ஒரு வாசகியின் கடிதம் வந்திருந்தது. அவர் தென் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண்தான். மிக செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். கம்ப்யூட்டர் துறையில் மெத்த படித்தவர். சென்னையில் சில காலம் பணியாற்றிக் கொண்டிருந்த போதே பல ஆயிரம் அதிகமாக சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்; குடும்பத்தின் ஒரே வாரிசு.
இதே துறையில் தாய்லாந்து நாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு வரன் வந்ததும், சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். இப்போது இருவருமே தாய்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இருவருமே அடிக்கடி, "ஈ - மெயில்' மூலம் கடிதம் அனுப்புவர்.
தாய்லாந்தில் இருந்து, அமெரிக்காவில் வேலை வாங்கிக் கொண்டு, அங்கே செல்வது தான் இருவரின் திட்டமாக இருந்தது. இவர்களைப் போன்ற திறமையும், அனுபவமும் உள்ளவர்களுக்கு, அமெரிக்காவில், தலைக்கு எட்டு லட்ச ரூபாயும், அதற்கு மேலும் மாதச் சம்பளம் கிடைக்கிறது. இதில் ஒரு சோகம், இதற்கு வரியாக பெருந்தொகையை பிடித்துக்கொள்வர் என்பது தான்.
அந்த வரியையும் கட்டாமல் இருக்க, ஒரு உபாயம் கண்டுபிடித்து விட்டனராம் நம்மாட்கள். மிகப் பெரிய வீடு ஒன்றை கடன் போட்டு வாங்கி விடுவது... வரியாக கட்ட வேண்டிய தொகையை, கடனுக்கு கட்டி விடுவது, சொத்துக்கு, சொத்தும் சேர்ந்தது... வரியும் கட்ட வேண்டியது இல்லை!
இந்திய மூளை அபாரமானது; இந்தியாவிலேயே வரி கட்டாமல், "டேக்கா' கொடுக்கத் தெரிந்தவனுக்கு, அமெரிக்கா எம்மாத்திரம்!
இந்தியர்கள் இப்படி மாளிகைகளாக வீடுகளை வாங்கிக் குவிப்பதால், அங்கேயே பிறந்து, அங்கேயே வாழும், மிடில் லெவல் அமெரிக்கர்களுக்கு, வந்தேறிகளான இந்தியர்கள் மீது, பொறாமை உணர்ச்சி தோன்ற ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
கம்மிங் பேக் டு த பாயின்ட்... இப்போது, கணவருக்கு மும்பையில் ஒரு வேலை கிடைத்துள்ளது. தாய்லாந்தைவிட அதிக சம்பளம்; கார்-வீடு, கம்பெனியே கொடுத்து விடுகிறது. மனைவிக்கும் மும்பையில் வேலை கிடைக்கும்!
கணவன் மனது சபலப்படுகிறது; இந்தியா சென்று விடலாமென்று... மனைவிக்கு விருப்பமில்லை; அவருக்கு அமெரிக்கா சென்று சில வருடங்கள் வேலை செய்ய விருப்பம்!
அதற்கு அவர் கூறும் காரணங்கள்:
* இதே உழைப்புக்கு, அமெரிக்காவில் இரண்டு பங்கு அதிக ஊதியம் கிட்டும்.
*தொடர்பே இல்லாத கலாச்சாரத்தையும், மக்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமையும்!
*அமெரிக்காவில் வசிக்கும்போது, அங்கேயே குழந்தை பெற்றுக் கொண்டால், அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். அதனால், பின்னாளில் பலன் அதிகம்.
— இப்படி அவர்களுக்குள் விவாதம் நடந்து கொண்டிருக்க, அப்பெண்மணி இது தொடர்பாக எனக்கு, "ஈ-மெயில்' அனுப்பி இருந்தார். இதோ, கடிதத்தின் சுருக்கம்:
பாசம் மிக்க அண்ணனுக்கு —
நானும், என் கணவரும் இங்கு நலம்! நீங்கள் நலமா? லென்ஸ் மாமா நலமாகவே - "உற்சாகமாக'வே இருப்பார் என நம்புகிறோம்!
அண்ணா... ஒரு பெண்ணுக்கு, "தான்' என்ற, "சுயம்' - பெற்றோரோடு இருக்கும் போதோ - தனியாக வாழும் போதோ தான் இருக்கிறது.
பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாகத் திகழ்ந்தேன். கல்லூரியில் முதல் மாணவியானேன். பட்ட மேற்படிப்பில், "கோல்டு மெடல்' பெற்றேன்.
சென்னையில் இருந்தபோது, பெரிய பெரிய, "சாப்ட்வேர்' நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டு சம்பளம் கொடுத்து என்னை வேலையில் அமர்த்திக் கொண்டன.
சின்ன வயதில் இருந்தே நான் ஒரு, "அன்லக்கி கேர்ள்!' டாக்டருக்கு படிக்க நினைத்தேன்... "நேரோ' வாக சீட் கிடைக்காமல் போனது... ("கிடைக்காமல் போனது' பற்றி இன்னும் சில எழுதி இருந்தார்!) இப்போது பாருங்கள்... என் அமெரிக்க கனவும் நிறைவேறாமல் போய்விடும் போலுள்ளது.
"லைசன்சுடு செக்ஸ்'க்காக ஒரு பெண், தன், "சுயத்தை' இழப்பதுதான் நம் நாட்டு பெண்களின் தலையெழுத்து போலும்...
இப்படிக்கு,
அன்பு தங்கை.

— என எழுதியிருந்தார்.
"கணவனே கண்கண்ட தெய்வம்... கல்லானாலும் கணவன்... புல்லானாலும் புருஷன்...' என்று இருந்த நம் பெண்களுக்கு, இன்று, தான், தன் சுயம் என்ற புதிய எண்ணம் மெதுவாக உருவாகி வருகிறதா? இதுபோன்ற புதிய எண்ணம் பெண்களிடம் உருவாகி வருவதற்குக் காரணம் எதுவாக இருக்கும்? இந்த எண்ணம், பெண்களுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்குமா - தீமை செய்யுமா?
மண்டையப் போட்டு குழப்பிக் கொண்டுள்ளேன்.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vpnselva Natarajathevar - singapore,சிங்கப்பூர்
19-ஏப்-201306:52:17 IST Report Abuse
Vpnselva Natarajathevar 30 ஆண்டுகள் சிங்கப்பூரில்..வாழ்ந்து முடித்து விட்டேன், சுயம் ...பெண்ணுரிமை...என்று பேசுவதெல்லாம் சுய நலமே. ஒரு பெண் பொருளாதாரத்தில் யாரையும் சாரவில்லை எனில் அவள் குணமே வேறு. இரு தலைகள் இருந்தால்...இரு எண்ணங்கள்...இரு வழி... ஏமாற்றம் மட்டுமே எஞ்சும்.
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
17-ஏப்-201318:48:53 IST Report Abuse
vandu murugan நிறைய சம்பாதிக்கிரவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவவும் , ஏழை எளியவர்களை படிக்க வைக்கவும்
Rate this:
Share this comment
Cancel
Thia - New York,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201300:00:03 IST Report Abuse
Thia அப்பா, அம்மாவிடம் இந்தியாவில் வேலை பார்க்கும் ஒருவனையே மணப்பேன் என்று சொல்லியும் விதி வசத்தால் அமெரிக்கா இருப்பிடமக்கிவிட்ட என்க்கு, என் நாடும், என் கிராமமும், என் நாட்டு மக்களும் தினமும் என் உயிருக்குள்ளே பயணம் செய்கிறார்கள். வெகு நாட்கள் இங்கு இருப்பதால் சொல்கிறேன். "சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?" "மின்னுவதெல்லாம் பொன் அல்ல" அன்பு சகோதரி திலகவதி
Rate this:
Share this comment
Cancel
Padmavathi - Chennai,இந்தியா
15-ஏப்-201316:59:02 IST Report Abuse
Padmavathi இப்போது நாட்டில் எது ஆணாதிக்கம், எது பெண் சுகந்திரம், என்று தெரியவில்லை, நம் தேவைக்கு தான் பணமே தவிர, பணத்தேவைக்கு நம் இல்லை, நாம் ஒன்றும் 500,1000 வருடங்கள் வாழ போவதில்லை, வாழும் பொது நிறைவாக வாழ வேண்டும், நீங்கள் இப்போ எதை நோக்கி ஓடினாலும் ஒரு காலகட்டத்தில் நிற்கவோ, இல்லை தடுக்கி விழாவோ (கண்டிப்பாக ) நேரும், அப்போது நின்றால் துணை நிற்க, விழுந்தால் கரம் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள், அப்போது ( அரசாங்கத்தை வரி எய்ப்பு செய்து சேர்த்து வைத்த ) உங்கள் கரையான் அடித்திருக்கும் பணத்தை வைத்து எதையும் சரி செய்ய முடியாது.
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
15-ஏப்-201314:45:06 IST Report Abuse
anandhaprasadh அந்தப் பெண்ணைப் பற்றி.. மும்பைக்கு வரவேண்டும் என்ற அந்தப் பெண்ணின் கணவர் விரும்புவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை... வெளிநாட்டில் வாழும் பலர் சொல்வது இதுதான்... கிடைப்பது பணம் மட்டுமே... ஆனால் இழப்பவை கணக்கற்றவை... ஒரு விசேஷம், நாள் கிழமைகளில் ஊருக்குப் போய், பெற்றோருடன் அளவளாவி, அம்மா கையால் சாப்பிட்டு, அவர்கள் தமது பேரன் பேத்திகளைக் கொஞ்சும் அழகைப் பார்த்துக் கொண்டு, கிளம்பும்போது கண்கள் பனித்தாலும், இங்கே இருக்கும் மும்பை தானே.. நினைத்தால் 3 மணி நேரத்தில் வந்து விடலாம் என்ற எண்ணம் எவ்வளவு பெரிய ஆறுதல்... பிள்ளைகளுக்கு மட்டுமல்ல.. பெற்றோருக்கும் தான்... இந்த சுகம் அமெரிக்காவில் போய் உட்கார்ந்துகொண்டால் கிடைக்குமா... நாளை அமெரிக்கா கெளம்பணுமாப்பா... ஜாக்கிரதையாப் போ... டைம் இருக்கும்போது போன் பண்ணு என்று கண்ணீரோடு பெற்றோர் வழியனுப்பி, மனதுக்குள் "மறுபடி எப்போ பாப்போம்'ன்னு தெரியலையே" என்று உள்ளுக்குள் கதறும் வேதனையை எந்த ஆறுதல் சொல்லி ஆற்ற முடியும்...
Rate this:
Share this comment
Cancel
Christopher Ruban - Singapore,சிங்கப்பூர்
15-ஏப்-201304:45:32 IST Report Abuse
Christopher Ruban அந்துமணி-யின் விசிறி நான். நீங்கள் எழுதும் பெரும்பாலான விடயங்கள் முற்போக்கானவை. உங்கள் குழப்பத்திற்கு என் பதில், இந்த உங்கள் அன்பு தங்கை, ஒரு அமெரிக்க கனவு நிராகரிகப்படுவதால், இவ்வளவு நாளும் சேர்ந்து வாழ்ந்த தன் கணவனை "லைசென்ஸ்டு செக்ஸ் பார்ட்னெர்" ஆக்கிவிட்டார். இதன் பின்னணி என்ன என்பது நமக்கு தெரியாவிட்டாலும், குடும்பம் என்பது விட்டுக்கொடுத்து, அனுசரித்து போவது என்பது நம் எல்லாருக்கும் தெரியும். "செக்ஸ்" மட்டும் தான் இல்லறமா? குடும்பமா? இதற்கு எல்லாம் காரணம்? பணம், புகழ், பெருமை. இவருக்கு, படிப்பில், வேலையில் திறமை இருக்கிறது - இதனால் அளவுக்கு அதிகமான பணம் கிடைகிறது. பணத்தை பார்க்க பார்க்க, இன்னமும் பணம் வேண்டுமென்று மனம் கேட்கிறது. இந்த உலகத்தையே "எக்ஸ்ப்ளோர்" செய்யவும் , உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும், "என்டேர்டைன்மென்ட்" -களையும் அனுபவிக்கவும் மனம் ஏங்குகிறது. கணவன் ஒருவேளை குடும்பம், குழந்தை என்று "செட்டில்" ஆக நினைத்திருப்பார். பெண்களே, உங்களுக்கு பணம், ஆடம்பரம், அதிகாரம், கேளிக்கை, பொழுதுபோக்கு - இவை மட்டுமே வாழ்வின் குறிகோளாக இருந்தால், தயவுசெய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள். எனக்கு இந்த உலகிலேயே மிகவும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் அன்பிற்கும் உரித்தானவர் என்னுடைய அம்மா - ஒரு பெண். அனால் நான் என்னுடைய படிப்பு, வேலை மூலமாக - இந்தியா மற்றும் சிங்கப்பூரில் பார்த்த,அறிந்த, தெரிந்த பெரும்பான்மையான இளம் பெண்களை பற்றி என்னுடைய பார்வையில் எழுதுகிறேன். இது எல்லா பெண்களையும் பற்றிய பொதுவான கருத்து அல்ல. பெரும்பான்மையான இன்றைய பெண்கள், மெச்சூரிட்டி இல்லாதவர்கள். வெளித்தோற்றத்தை, டிரெஸ்ஸிங் சென்ஸ்-ஐ, பாவனையை, ஆடம்பரத்தை, பணத்தை, பார்த்து மயங்குபவர்கள். புகழ் வார்த்தைகளுக்கு, பொய்யான வர்ணிப்புக்கு ஏங்கி அடிமையாகி இருப்பவர்கள். கேளிக்கை, ஆடம்பரம், அதிகாரம் பொழுதுபோக்கு இவற்றை அதிகமாக நாடுபவர்கள். இவை எல்லாம் எங்கு கிடைக்கிறதோ அதை / அவரை / அவர்களை பின்பற்றுபவர்கள். எனக்கு ஒரு அமைதியான மகிழ்ச்சியான குடும்பம் வேண்டும் என்று எள்ளளவும் நினையாதவர்கள். இன்னமும் இவர்கள் "தான்", "சுயம்" - என்று இருந்தாலோ, அதை நாம் பெண் சுதந்திரம் என்று ஆதரித்தாலோ, அழிவு நம் எல்லோருக்கும்தான். இந்திய கலாச்சரம், திருமண குடும்ப உறவு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, குடும்ப உறுப்பினர்களின் (தம்பதியர் - பெரியவர் – குழந்தைகள்) அன்பு பிணைப்பு இவை எல்லாமே அழிந்துவிடும். பின்பு நாமும், "வெஸ்டர்ன் கல்சர் -இல்" வாழ வேண்டியதுதான். நான்கைந்து வருட திருமண வாழ்கைக்கு பின் தனித்து வாழும் தாய்மார்கள்... தந்தையர்கள்.. சில வருட பெற்றோர் அரவணைப்புக்கு பின் தனித்து வாழும் பிள்ளைகள்... தேவையா இது நமக்கு? கடைசியாக ஒன்று : (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மம்மூட்டியின் வசனம்) எல்லாம் இந்த அழகும் இளமையும் இருக்கிறவரைதான்
Rate this:
Share this comment
kooli - saakkadai,இத்தாலி
16-ஏப்-201301:48:37 IST Report Abuse
kooli இது ஆண்களுக்கும் பொருந்தும்...
Rate this:
Share this comment
Cancel
Sanghimangi - Mumbai,இந்தியா
14-ஏப்-201314:00:27 IST Report Abuse
Sanghimangi மும்பையில் இருப்பதால் வீட்டிற்கு நினைத்த நேரத்திற்கு எந்த தடையும் இல்லாமல் வந்து செல்லலாம். ஐரோப்பாவில் படிக்கும் என் நண்பன் வீட்டிற்கு ஒரே வாரிசு. அவனது தந்தை எதிர்பாராமல் இறந்து விட, இந்தியா திரும்பி வர அவனுக்கு உடனே அனுமதி கிடைக்கவில்லை. மூன்று நாள் கழித்துதான் வர முடிந்தது. அதுவரை குளிர்சாதன பெட்டியில் அவனது தந்தையின் உடலை வைத்து பார்க்கும் அவல நிலைதான் மிச்சம். இது அவனது இயலாமை நிலை. செல்வமும் கிடையாது. இந்த வாசகிக்கோ, செல்வ செழிப்பான நிலையிலும், பேராசை விட்டபாடில்லை. எதுவும் ஒரு அளவுக்கு மேல் தேவைப்படாது. இங்கு மும்பை வந்த பிறகும் கூட, வெளிநாடுகளில் சில மாதங்கள் பணி நிமித்தம் செல்லலாமே? அதை விடுத்து, ஆணாதிக்கம் அல்லது வேறு சில காரணங்களை சொல்லிக்கொண்டு பிரச்சினையை திசை திருப்புவதை ஏற்றுகொள்ள முடியாது. Their negative mentality is stopping them to arrive at a right solution to this issue. சென்னையை சேர்ந்த இவருக்கு அமெரிக்க கலாசாரத்தை கற்றுகொள்ளும் ஆர்வம் இருப்பதாக சொல்வது சுத்த பொய், மும்பையிலும் அதே தொடர்பில்லாத கலாசாரம் காத்துகொண்டு இருக்கிறது. எல்லாம், நான், என் முடிவு என்று பிடிவாதம் பிடிப்பது மட்டுமே பிரச்சினை. ஏதோ சிறு வயதில் ஆசைப்பட்டது கிடைக்கவில்லையாம்? யாருக்கு எல்லாமும் கிடைக்கிறது? எத்தனையோ பேருக்கு ஐஸ்வர்யா ராயை மனம் செய்து கொள்ள ஆசைதான், அது எப்படி நடைமுறைக்கு ஒத்து வராது என்று கேலி செய்கிறோமோ, கிட்டத்தட்ட இதுவும் அந்த அளவிற்கான பேராசைதான். எட்டிவிடும் தூரம் மட்டுமே வித்தியாசம். சொந்த நாட்டில் வாழும் வாய்ப்பை சப்பை கட்டு கட்டி எட்டி உதைக்கும் வாசகியின் நிலை பரிதாபத்திற்கு உரியது.
Rate this:
Share this comment
Cancel
sengottai sreenivasan - nagasaki,ஜப்பான்
14-ஏப்-201307:49:00 IST Report Abuse
sengottai sreenivasan இந்த சகோதரியின் முறையீடு மிக மிக நியாயமான துதான்...... பெண் புத்தி பின் புத் தி என்று ஆணாதி க்க சிந்தனை விதைக்கப்ப ட்ட நமது ஆண் மனங்களுக்கு, வாழ்க்கை யின் பல முக்கிய கட்டங்களில் ஆண் எடுக்கும் முடிவை விட , பெண்மணிகளின் முடிவுகள் சரியாக இருக்கும் என்கிற அனுபவ அறிவு இருப்பதில்லை ... மிக முக்கியமான ஒரு முடிவு எடுக்கும் போது உணர்வுகள் முன் பெஞ்சுக்கு வரக் கூடாது... கடந்த தலை முறையை சேர்ந்த என் போன்றோருக்கு , நா ங்கள் பட்ட தாரிகள் ஆன போது இந்தியா வின் எதிர்காலத்தில் நிறைய நம்பிக்கை இருந்தது... காரணம் அப்போது காமராஜ் கக்கன் நேரு போன்ற தன் நலம் கருதா தலைவர்கள் இருந்தனர்.... மக்களின் மன நிலையும் தியாகம், சத்தியம், போன்ற நற்குண ங் களுடன் அமைந் திருந்தது.... ஆகவே வெளிநாட்டுக்கு நிரந் தரமாக செல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை வேண்டாம் என்று பலர் மறுத்து இங்கேயே தங்கி விட்டதற்கு ,தேசப்பற்றும் ஒரு முக்கியமான உந் துதல் ஆக இருந்தது...... தற்போது நமது நாட்டில் நிலவும் சூழ் நில யையும் ,மக்களின் மனநிலையையும் வைத்து பார்க்கும் போ து .......... இன்னும் இருபது வருடங்கள் கழித்து இவர்களின் குழந் தைகள் இந்த நாட்டில் படித்து முன்னேறும் வாய்ப்பு மிக குறைவாகவும் ,இந்த நாட்டின் நகரங்கள் மேன்மேலு ம் நரகங்கள் ஆகும் சாத்தியக்கூ றுகள் மிக வலுவாக இருப்பதாலும் .... சகோதரியின் அறிவு பூர்வமான முடிவு அவரது துணை வரது உணர்வு பூர்வமான முடிவினை வெல்ல வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
dhaavanesh - birmingham,யுனைடெட் கிங்டம்
15-ஏப்-201302:03:06 IST Report Abuse
dhaavaneshஐயா ஸ்ரீனிவாச ..அந்த பெண்ணிற்கு இருப்பது அமெரிக்க என்ற போதை அன்றி வேறு இல்லை. நீங்கள் கூறவது போல் இந்தியா வில் சூழ் நிலை சரி இல்லை தான். அதற்கு முதலில் நீ திருந்த வேண்டும்,...தனி மனித ஒழுக்கம் உன்னக்கு கிடையாது.. அப்புறம் நீ ஏன் நாட்டை கூறுகிறாய்...நீ படிப்தற்கு அரசாங்கம் 1008 செலவு செய்யும். நீ கேவலம், கூட ஒரு 3 லக்ஹ்ஸ் அதிகம் கொடுக்கிறாங்க ஓடுறே ... அந்த பெண் இங்கு வாழ்வதற்கு சிரம பட்டு து இருந்தால் ஓகே ...இங்கியே கணிசமான சம்பளம் வரும் போது அப்புறம் ஏன்... நீங்கள் என்னை கேள்வி எழுபலாம்...நான் மேற்படிப்பு படித்து விட்டு கண்டிப்பாக இந்தியா வில் தான் பணி யாற்றுவேன்...
Rate this:
Share this comment
kooli - saakkadai,இத்தாலி
16-ஏப்-201301:44:26 IST Report Abuse
kooli ஒரு இடத்தில் இருப்பதும் இருக்காததும் அவரவர் இஷ்டம்...இதில் ஏதோ தேச பக்தி, பெண்ணுரிமை என்று ரொம்ப பேச வேண்டாமே தாவேனேஷ்: நீங்க மாத்திரம் இங்கிலாந்தில் " அரசாங்கம் 1008 செலவு செய்யும்"..பணத்தை சாப்பிட்டு இந்தியா ஓடுவது எந்த நியாயமோ அதே நியாயம் தான் அம்மணியின் அமெரிக்க விழைவும் தண்ணி இல்ல...எலெக்ட்ரிசிட்டி இல்ல..லஞ்சம்..எங்கு போனாலும் ரிசர்வேஷன் வேறு.. ஏதோ கிடச்சு எங்கேயோ போனால், இந்தியாவின் பாரமும் குறையும், அவர்களின் விருப்பமும் நிறையும் .....
Rate this:
Share this comment
rajasekar - abbasiya,குவைத்
16-ஏப்-201310:41:15 IST Report Abuse
rajasekarநல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டிங்க....எல்லாம் அனுபவிச்சிட்டு மத்தவனுக்கு அத பண்ணாத இதபன்னாதனு அட்வைஸ் பண்ற கூட்டங்கலை எனக்கும் பிடிக்காது ...
Rate this:
Share this comment
Cancel
Edi Shivaji - Fairfield,யூ.எஸ்.ஏ
14-ஏப்-201306:32:02 IST Report Abuse
Edi Shivaji இது தவறு அமெரிக்க வரித்துறை நிர்வாகம் அவ்வளவு ஏமாளி அல்ல. ஒருவர் வசிக்கும் அவருடைய சொந்த வீட்டுக்கு மட்டும் தான் இந்த சலுகை. அதுவும் வீடு வாங்க கடன் வாங்கினால், அதற்கு வட்டியும் முதலுமாக கட்டவேண்டும். அதில் வட்டி தொகையை மட்டும் தான் வரி விலக்கு. மேலும் எல்லா வரிவிலக்குகளுக்கும் சேர்த்து ஒரு லிமிட் உண்டு. மேலும் அமெரிக்காவில் வீடுவிலை குறையவும் வாய்ப்பு உண்டு. இப்போது வீடு விலை குறைந்து கொண்டே வருகிறது. அவரவர்கள் வீட்டை கிடைத்த பணத்திற்கு துண்டை காணும் துணியை காணும் என்று ஓடுகிறார்கள். நம்மூர் மாதிரி இங்கு வீட்டு விலை எப்போதும் ஏறுமுகம் இல்லை. யாரோ தவறாக சொல்லி இருக்கிறார்கள். இதை நம்பி அமெரிக்காவில் வேலை கிடைத்தவர்கள் உடனே வீடு வாங்க வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.