அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
00:00

அன்புள்ள அக்காவுக்கு,
உங்கள் உடன்பிறவா சகோதரி எழுதிக்கொள்வது. எனக்கு 37 வயதாகிறது. இரண்டு குழந்தைகள். என் கணவர் நன்கு படித்தவர். வெள்ளை மனசு. யாரையும் எளிதில் நம்பி விடுவார். கல்யாணமாகி இருபது வருடம் ஆகிறது. பெற்றோர் பார்த்து பேசி முடித்த கல்யாணம். கடந்த சில வருடங்களாக எனக்கும், என் கணவருக்கும் சண்டை வருகிறது. என் கணவருக்கு மாதத்தில் இருபது நாட்கள் வெளியூரில் வேலை. பத்து நாட்கள் தான் என்னுடன், என் குழந்தைகளுடன் இருப்பார். "வேலையென்று வெளியூர் செல்ல வேண்டாம்... எனக்கும், என் குழந்தைகளுக்கும் தனியாக இருக்க கஷ்டமாக இருக்கிறது; உள்ளூரில் இருந்து வேலை பாருங்கள்' என்றால் அவர் கேட்பதே இல்லை. இதனால், சண்டை வருகிறது.
என் கணவர், வெளியூரில் இருக்கும் தன் நெருங்கிய நண்பர் ஒருவரை, வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து வந்தார். நண்பர் கல்யாணம் ஆனவர். அவருக்கு நான்கு குழந்தைகள். அவர் என் குழந்தைகளிடமும், என்னிடமும், என் கணவரிடமும் அன்பாக நடந்து கொண்டார். அவரை எங்கள் எல்லாருக்கும் பிடித்து விட்டது. நண்பரின் மனைவி குழந்தைகளை, நான், என் கணவர், குழந்தைகள் போய் பார்த்து வந்தோம். நண்பர் குடும்பத்தாரும், என் குடும்பத்தாரும் நன்றாக பழகினோம்; கடந்த பத்து வருடமாக நண்பர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டார்; என் கணவர் என்னைப் பார்க்க வரும்போது, அவரும் வந்து போவார்.
இந்நிலையில், நான் மட்டும் தனியாக நண்பரின் வீட்டுக்கு போய் அவர் குடும்பத்தாரை பார்க்க போனேன். அங்கு நண்பர் மட்டும் இருந்தார். அவர், "மனைவி, குழந்தைகள் வெளியூர் சென்று விட்டனர்...' என்று சொன்னவுடன், நான் ஊருக்கு கிளம்பலாம் என்று எழுந்தேன். அந்த நண்பர் என்னிடம் தப்பாக நடந்து கொள்ள முற்பட்டார். நான் மிகவும் பயந்து, "இதெல்லாம் தப்பு' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை; எவ்வளவோ போராடியும் என்னால் அவரிடம் இருந்து, என் பெண்மையை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
நான் இப்படி ஆகிவிட்டேன்; எனக்கே தலை சுற்றுகிறது; இப்போது எல்லாரிடமும் கோபம் வருகிறது; எரிந்து விழுகிறேன். பைத்தியம் பிடித்தவள் போல ஆகிவிட்டேன்; என் நிம்மதி போய் விட்டது; ஒரு பெண்ணுக்கு கற்புதானே உயிர். அது பறிபோய் விட்ட நிலையில், உயிர் வாழ வேண்டுமா? வேலை செய்யும் போதும், தூங்கும் போதும் நான் செய்த தப்பு என்னை முள்ளாய் குத்துகிறது. வெளியில் யாரிடமும் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து வாழ்வதை விட, சாவதே மேல் எனத் தோன்றுகிறது.
அந்த நண்பர் இப்போது, என் குழந்தைகள், என்னுடன் எல்லாம் பேசுவது இல்லை. அன்பு, பாசம் எல்லாம் பொய் தானா! யாரையும் நம்ப கூடாதா? இவ்வளவு நாள் பழகியதெல்லாம் உண்மையில்லையா? என் மனம் படும் வேதனையை யாரிடமும் சொல்லி அழ முடியவில்லை. நான் வாழ்வதா, சாவதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
உங்கள் அன்பு,
உடன் பிறவா சகோதரி.


அன்பு சகோதரிக்கு...
உன் கடிதம் கிடைத்தது. படித்து மிகவும் மனம் வருந்தினேன். உன் கணவர் நிறைய படித்தவர். வெள்ளை மனசு, யாரையும் எளிதில் நம்பி விடுவார் என்று எழுதியிருக்கிறாய்... அப்படி நம்பி, தன் நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து வைத்ததின் பயன், அந்த நண்பன் உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைத்து விட்டான்.
ஆனாலும், சகோதரி, உத்தியோக நிமித்தமாய் வெளியூர் போகிறவர்களுக்கு அங்கங்கே பலர் உதவுவதும், அப்படி உதவுவதாலேயே நண்பர்களாகுவதும் சகஜம்தான். உன் கணவர் அவர்கள் வீட்டில் போய் சாப்பிட்டு தங்கியிருந்தது போல, அவரையும் தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து வந்திருக்கலாம். இந்த நட்பு, காலப் போக்கில் இறுகியும் இருக்கலாம்.
ஆனால், கண்ணம்மா... என்ன தான் உன் கணவரின் உயிர் நண்பன் என்றாலும், நீ, அந்த ஊருக்கு போயிருந்தபோது, உன் கணவரோ அல்லது வேறு துணையோ இல்லாமல் தனியாக அவன் வீட்டிற்கு போனது தவறு. இதற்காகத் தான் இந்த நாளில் முன் கூட்டியே போன் செய்தோ, கடிதம் எழுதியோ, நாம் வரும் நேரத்தில், அவர்கள் குடும்பம் வீட்டில் இருக்கிறதா, வந்தால் பேச, தங்க வசதிப்படுமா என்பதை எல்லாம் அறிந்து, பிறகே போக வேண்டும் என்ற ஒரு வழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
ஆனாலும், உனக்கு வெள்ளை மனசுதான். இதையெல்லாம் எதிர்பார்த்தா நீ போயிருப்பாய்? நாலு பிள்ளை பெற்று, பத்து வருடங்களாக சினேகம் பாராட்டி, கடைசியில் நண்பரின் மனைவியையே...
அவன் மறுபடியும் உன் வீட்டிற்கு வருவதாகவும், உன்னிடமோ, உன் குழந்தைகளிடமோ முகம் கொடுத்து பேசுவது இல்லை என்றும், இதுதான் நட்புக்கு லட்சணமா, அன்பு, பாசம் எல்லாம் பொய்தானா என்று கேட்டு எழுதியிருக்கிறாய். இவ்வளவு நடந்து முடிந்த பிறகும், எப்படி நீ அவன், உன்னிடம் முன்பு போல் பேசுவது இல்லை என ஆதங்கப்படுகிறாய். எனக்குப் புரியவில்லை.
அவனுக்கு உன்னையோ, உன் குழந்தைகளையோ பார்க்க, முகம் எங்கே இருக்கிறது? அவன் வருவதே கூட, நீ எந்த அளவில் இதுபற்றி உன் கணவரிடம் சொல்லியிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் இருக்கும் அல்லவா?
இந்த இடத்தில், நான் ஒன்று சொன்னால், நீ கொஞ்சம் மனசை திடப்படுத்தி, இந்த அக்கா சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
"ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது' என்கிற பழமொழி உனக்குத் தெரியுமல்லவா? ஏதோ அவன்தான் பலாத்காரம் செய்தான் என்றால், நீ பயந்து போய் இதெல்லாம் தப்பு என்று அவனுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. கொஞ்சம் மன உறுதி இருந்திருந்தால், கத்தியோ, கூச்சல் போட்டோ, வாசலுக்கு ஓடி வந்தோ உன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனாலும், இப்படிப்பட்ட அயோக்கியர்கள், தங்கள் பக்கத்து தவறை அப்படியே மூடி மறைத்து, உன் பெண்மையைப் பற்றித்தான் குறை கூறுவர்.
உன் கணவரும் அப்பாவியாக இருப்பதால், உன்னிடம் வந்து தன் ஆத்திரத்தை, எரிச்சலைக் காட்டுவார்.
ஆதலால், நடந்தது நடந்து விட்டது. உனக்கு இதை நினைத்து நினைத்து ஆத்திரமும், அவமானமும், துக்கமும் ஏற்படுகிறது என்றால் அது நியாயமான விஷயம் தான். இப்படியொரு உணர்வு உனக்கு இருப்பதே பாராட்டுக்குரியது.
மனசில் உள்ள அந்தரங்கங்களை, ஆத்திரங்களை, அவலங்களை, அப்படியே சேமித்து வைக்காதே! பின்னாளில் நீ, ஒரு மனநோயாளியாகி விடுவாய். உன் குழந்தைகளுக்காக நீ வாழ வேண்டும்; உன்னுடைய வாழ்க்கையில் இந்தக் கறுப்பு நாள், ரப்பரால் அழிக்கப்பட வேண்டும் என்றால் ஒரு காரியம் செய்.
மனசில் இருப்பதை எல்லாம் ஒரு நோட்டு புத்தகத்தில் வார்த்தைகளாக கொட்டு! அவன் மீதுள்ள ஆத்திரம், அவனை எப்படியெல்லாம் பழிவாங்க நினைக்கிறாயோ அத்தனையும் கொட்டு... இதை மற்றவர்கள் பார்க்காமல் — (முக்கியமாக உன் கணவர்...) எரித்து சாம்பலாக்கு. அத்தோடு தலைமுழுகி விடு. உன் மனம் லேசாவதை உணர்வாய். இப்பொழுது உன் மனம் குப்பைக் கூடையாக இருக்காது. பூக்கடையாக மாறிவிடும்.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (67)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayasri - madurai,இந்தியா
19-ஏப்-201313:08:59 IST Report Abuse
Jayasri நல்ல பதில் அம்மா
Rate this:
Share this comment
Cancel
lucky - CA,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201305:06:07 IST Report Abuse
lucky எல்லோரும் தப்பு செய்தது அந்த பொண்ணு மட்டும் தாணு சொல்றத என்னால சரின்னு சொல்லமுடியாது . தப்பு செய்றவங்கள விட அந்த தப்ப செய்றதுக்கு காரணமா இருக்கிற அவ புருசனை தான் சொல்லணும் . புருஷன் சரியாய் இருந்தா எந்த பொண்ணும் தப்பு செய்ய மாட்ட (விதி விலக்கு இருக்கு ). அந்த புருஷன் மனைவி உடைய தேவை அறிந்து செயல் பட்டு இருந்தா இந்த மாதிரி ஒரு தப்பு நடக்க வாய்ப்பு இல்லை. கணவனின் கையாலகாத தனம் தான் இந்த பெண் செய்த தவறுக்கு முக்கிய காரணம். அதற்காக நான் ஒருபோதும் இந்த பெண் செய்த தவறு சரி என்று ஒரு போதும் ஆகாது. இது போல் மறுபடியும் நடக்காமல் பார்த்து கொள்வது தான் அந்த பெண்ணின் புத்திசாலித்தனம். அவள் கணவன் வேலை செயும் எடம் அருகே வீடை பார்த்துகொண்டு இருவரும் சேர்ந்து இருப்பதே மேலும் தவறு நடக்காமல் இருக்க சரியாய் யோசனை என நினைக்கிறன்.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
19-ஏப்-201303:10:40 IST Report Abuse
GOWSALYA அனைத்து அன்பு நண்பர்களுக்கும் வணக்கம்......எல்லோரும் நலம்தானே?அம்பாள் துணை.....இந்த இடத்து வரவிரும்பாதது,...சுனில்,நீங்க சொன்னாப்போல இல்லை.....குற்றம் எனும்போது ஆண்..பெண் என்ற வித்தியாசம் இருக்கத் தேவையில்லை.ஆனால்,நாம எழுதுவதைப் படிக்க ஒருஇருவர்.....ஆனால்,அதைக் கொச்சைப்படுத்தி,அநாகரீகமா அதற்குக் கருத்து எழுதுபவர்கள் நிறைய.....அதுவும் இந்த புள்ளி போடத் தொடங்கியதும் பலவிதக் கோலங்கள்.......நாம் நல்லதுசெய்ய நம்ம நேரத்தையும் ஒதுக்கி உதவியென எழுதினால்,..."வீட்டில் வேலைவெட்டி இல்லாமல் கணணி முன்னே இருந்துகிட்டு இதுதான் சிலரின் வேலைபோலும்"" .....அப்படி இப்படி என எழுதி அடுத்தவா மனதைப் புண்படுத்துவார்கள்.யாரவது எதாவது சொல்லட்டும்,நல்லதும் கேட்டதும் "" கண்ணனுக்கே" எனத் தான் சில எழுதினேன்......ஆனால், பலரின் தேவையற்ற வார்த்தைகளால்,மனவேதைப் பட்டேன்.......நானோ ஒரு நோயாளி .....இதற்குமேல் நமக்கு ஏன் இந்தப் பழியென விட்டுவிட்டேன்.....எல்லோருக்கும் [ தூற்றினவர்கள்,தூற்றாதவர்கள் ] நன்றியும் வணக்கமும்.அன்புடன் கௌசல்யா சிவம்.தினமலர் நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
18-ஏப்-201310:22:31 IST Report Abuse
Divaharan பிரச்னைகளை சுலபமாக தீர்க்க வழி (?) கண்டு பிடிக்க பட்டு இருக்கிறது. முன்பு கம்ப்யுட்டரில் ஒரு தகவல் தேவை என்றால் கம்மண்ட் டைப் பண்ண வேண்டும் . அது பெரிதாக கூட இருக்கும் எல்லோரும் செய்ய முடியாது . ஆனால் இப்பொழுது மவுஸ் வைத்து கிளிக் பண்ணினால் போதும் . முடிந்துவிடும் . முற்காலத்தில் கண்ணன் சீதையை தீ குளிக்க சொன்னான் . ஆனால் இப்பொழுது புத்தகத்தில் எழுதி கொளுத்த சொல்கிறார்கள் . பிரச்னை முடிந்துவிட்டது அதற்காக தவறு செய்தவர்களை நான் தீ குளிக்க சொல்லவில்லை . தற்காலத்தில் பிரச்னையை எவ்வளவு எளிதாக தீர்க்க வழி கண்டு பிடித்து இருகிறார்கள் என சொன்னேன் .
Rate this:
Share this comment
Cancel
Siva - Houston,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201309:06:16 IST Report Abuse
Siva வாசகியின் கேள்விக்கு சகுந்தலா கோபிநாத் அளித்த பதில் அதிர்ச்சியை அளித்தது. பாலியல் வல்லுறவுக்கு தீர்வாக ஒரு நோட்டு புத்தகத்தில் வார்த்தைகளாக கொட்டுவது தான் என்று கூறி விட்டு பெரும் பாராட்டுகளை அள்ளிக் கொண்டு போய் விட்டார். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்ற பொன்மொழியை வல்லுறவவை சித்தரிப்பதுக்கு பயன்படுத்தியது மிகப் பிரமாதம். எதிர்பார்த்தது போலவே தமிழ் வாசக அன்பர்களின் உணர்ச்சியில்லாத கருத்துக்கள் ஏமாற்றம் அளிக்கவில்லை. ஒருவர் கூட அந்த வாசகி வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது பற்றி கண்டனம் தெரிவிக்கவில்லை. போலீஸில் புகார் கூற அறிவுரை கூறவில்லை. இதற்கு நேர் எதிராக நடந்தது விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் மேல் உள்ள பாலியல் வல்லுறவு வழக்கில். ஸ்வீடனில் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு இது தான். தன்னுடன் விருப்பத்துடன் பாலுறவு கொண்ட பெண்ணுடன், அந்த பெண் பிறகு தூங்கும் போது, மறுபடியும் அவளுடன் அவள் மறுப்புக்கு எதிராக அசாஞ் மீண்டும் உறவு கொண்டது வல்லுறவு என்பது தான் . ஸ்வீடன் செய்த புகாரின் படி பிரிட்டன் கைது செய்து திருப்பு அனுப்பும் முன் தப்பி எக்வடார் நாட்டு தூதகரத்தில் தலைமறைவாக இருக்கிறார். எப்படி இருக்கிறது நாம் இந்த வாசகிக்கு செய்யும் அநியாயம். போலீசில் புகார் கூறினால் குடும்பம் குட்டிச்சுவராகி விடும் போன்ற பத்தாம்பசலித்தனமான விவாதங்கள் இனி உதவாது, தில்லி ரேப்பில் மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டு நாடே கொதித்த பின்னும் இப்படி பலர் எழுதுவது வருத்தமாக உள்ளது. இன்னொன்று, பெரும்பாலான பாலியல் வல்லுறவு குற்றங்கள் தெரிந்தவர் மூலமாக உட்படுத்தப் படுவது. தான் மிகவும் நம்பிய ஒருவர் தன்னை இரையாக்குவது பாதிக்கப்பட்டவரை மனநிலை நிலைகுலைய செய்யும். போராடினால் தன் குடும்பம் அந்த தெரிந்தவரின் குடும்பம் அடைய கூடிய அவமானம் முதல் பல்வேறு வகையான மன உளைச்சல் ஏற்பட்டு போராட முடியாமல் போய் விடும். இது பற்றி பல ஆய்வுகள் உள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கு அதனை அதிகாரப்பூர்வமான நடவடிக்கை மூலம் சந்திப்பது தான் ஒரே வழி. வேறு தீர்வே இல்லை.
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201302:25:30 IST Report Abuse
HoustonRaja அந்த வாசகியின் மடலில் இருந்து சிவாவின் கவனத்திற்கு இரண்டு வரிகள் - 1. "வேலை செய்யும் போதும், தூங்கும் போதும் நான் செய்த தப்பு என்னை முள்ளாய் குத்துகிறது." 2. "நான் மிகவும் பயந்து, 'இதெல்லாம் தப்பு' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை" அவ்விருவரை தவிர யாருக்கும் அங்கே நடந்தது தெரியாது - அதனால் அனுமானித்து எழுத ஒன்றும் இல்லை.[Furthermore, my 20 minutes of distraction is done] ...
Rate this:
Share this comment
Siva - Houston,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201322:07:38 IST Report Abuse
Sivaநான் சொல்ல வந்தது இது தான். ஒரு பெண் தன் கணவனுடனேயே உறவு கொள்ளும் போது கூட அவள் எதோ காரணத்துக்காக மறுத்த பிறகும் கணவன் விடாப்பிடியாக உறவு கொண்டால் அது வல்லுறவு என்பது தான். நூறு நாடுகளுக்கு மேலாக திருமண வல்லுறவைக் குற்றமாக கருதுகின்றன. இந்தியாவில் இன்னும் அது சட்டமாக்கப் படவில்லை. அந்த வாசகியின் நடத்தை பற்றி எனக்கு சொல்ல ஏதும் இல்லை. அது எப்படி இருந்தாலும் அவர் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருந்தால் அது குற்றமாகவே கருதப் படவேண்டும். சட்டத்தின் மூலம் தண்டிக்கப் படவேண்டிய குற்றாமாக கருத நாம் அனைவரும் உதவ வேண்டும். கற்பு என்பது ஒரு பெண்ணின் இன்றியமையாத அங்கம், அது போய் விட்டால் அவள் களங்கப்பட்டவளாக, அவள் குடும்பம் மானம் என்னும் பாரம் அவள் மேல் சுமத்தப் படுவது இந்த குற்றங்கள் குறைய வழியமைக்காது. கற்பு + அழிப்பு என்னும் சொற்றொடரை விட்டுவிட்டு வல்லுறவு என்பது பயன்படுத்தப் பட்டாலே நல்ல தொடக்கமாக அமையும்....
Rate this:
Share this comment
Cancel
THARMARAJ VEERAPPAN - kalpakkam,இந்தியா
17-ஏப்-201323:43:25 IST Report Abuse
THARMARAJ VEERAPPAN எல்லோரும் நேரத்தை வீண் செய்ய வேண்டம்
Rate this:
Share this comment
Cancel
ambi - mumbai,இந்தியா
17-ஏப்-201315:41:46 IST Report Abuse
ambi இது என்னவோ ப்ளான் பண்ணி செய்த தப்பு என்றுதான் எனக்கு தோன்றுகிறது. 37 வயது. 20 வருட திருமண வாழ்க்கை. கணவர் ரொம்ப நல்லவர். கணவருக்கு 20 நாள் வெளியில் வேலை. 10 நாள் வீட்டு வாழ்க்கை. கணவரின் நண்பருடன் (நல்லவர்) வீட்டில் எல்லோருக்கும் 10 வருட நல்ல பழக்கம், தனியாக அவர் வீட்டில் போய் அவர் வீட்டில் பார்த்ததில் தவறு நடந்துவிட்டது. நல்லவர் நல்லவராகவே நடந்து கொண்டிருக்கிறார். அவர் வீட்டில் வைத்துதான் ......... நடந்து இருக்கிறது. உன் வீட்டில் இல்லை. சோ, நீதான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆதலால் நீ நல்லவரான????? உன் கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுது உண்மையான மன்னிப்புக் கேள். நல்லவர் என்றால் வீட்டில் கொஞ்சம் கோபம் சண்டை மௌன விரதம் பிறகு மன்னிப்பு என்று நடந்தேறும். இல்லையென்றால் இவர் அவர் வீட்டில் தண்ணீர் குடித்து இருப்பார். அந்த நல்லவர் தன் வீட்டில் காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டிருப்பார். எது எப்படி நடந்து இருந்தாலும் உன்னுடைய வீட்டு நடவடிக்கையால் பாதிக்கப் படப் போவது உன் டீன் ஏஜ் குழந்தைகள்தான். அதனால் உன் கோபம் ஆத்திரம் மற்றும் ???? வகையறாக்களை மூட்டை கட்டி வைத்து விட்டு குழந்தைகள் நேர் வழியில் நடக்க உதவியாய் இருப்பதே நல்ல அம்மாவின் கடமை.
Rate this:
Share this comment
Cancel
Parameswaran L - KL,மலேஷியா
17-ஏப்-201314:57:48 IST Report Abuse
Parameswaran L "அந்த நண்பர் இப்போது, என் குழந்தைகள், என்னுடன் எல்லாம் பேசுவது இல்லை. அன்பு, பாசம் எல்லாம் பொய் தானா யாரையும் நம்ப கூடாதா? இவ்வளவு நாள் பழகியதெல்லாம் உண்மையில்லையா? " இப்படி கேட்டா என்ன அர்த்தம்? ஐயோ அடுத்து அவன் அட்டம்ப்ட் செய்ய மாட்டானா? என்று தானே? அன்பு பாசம் எல்லாம் நண்பனிடம் எதற்கு? அதுவும் எல்லாம் முடிந்தபிறகு தவறு என்று உணர்ந்தது உண்மை என்றால்? கலிகாலம்டா சாமீ
Rate this:
Share this comment
Cancel
Sundaramurthy Suresh - Chennai,இந்தியா
17-ஏப்-201311:36:35 IST Report Abuse
Sundaramurthy Suresh மனிதர்கள் உணர்சிகளை கட்டுபடுத்த முயல்கிறார்கள். ஆனால் சில சமயம் உணர்சிகள் மனிதனை கட்டுபடுத்துகின்றன. இந்த பெண்ணும் அந்த நண்பரும் அப்படி ஒரு சுழ்நிலையில் தவறு செய்திருக்கலாம். தவறு மனித வாழ்கையின் இயல்பு. அதனால் நடந்ததை நினைத்து அந்த பெண் கோபப்படுவது அவளுடைய மற்றும் குழந்தைகளுடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல. நடந்ததை மறந்து குழந்தைகள் மீது அன்பு செலுத்தி அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
17-ஏப்-201310:02:51 IST Report Abuse
p.manimaran ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.