கவிதைச்சோலை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
00:00

காலம் மாறித்தான் போச்சு!

* கூண்டு வண்டிக்குள்
எழுந்து நின்ற நிலைமாறி
இன்று கூகுளுக்குள்
கை குலுக்குகின்றனர்
மாமனாரும் - மருமகளும்!

* கொல்லையில் உரல்கள்
பல கிடக்க, பத்து ரூபாய்
கொடுத்து உரலில் மாவரைத்து
பார்க்கின்றனர் - என் மருமக்கள்
"தட்ஷன் சித்ரா'வில்

* பாட்டியின் அன்பு ஸ்பரிசமின்றி
பாட்டி சொன்ன கதைகளை
ரசிக்கின்றனர் - பேரக்குழந்தைகள்
பாட்டுடன் கதை சொல்லும்
ஒலி தகட்டில்!

* தொப்புள் கொடி தாயத்தில்
அடைத்தது போக
இன்று பிறந்த குழந்தை
தன்முதல் சேமிப்பு கணக்கை
தொடங்குகிறது ஸ்டெம்செல்
வங்கியில்!

* கூட்டு குடும்பத்தில்
குஷியாக இருந்த முதியவரை
கூவி கூவி அழைக்கின்றன
முதியோர் காப்பகங்கள்!

* சிட்டுக்குருவி கூட எங்கோ
போய்விட்டது
சிறகு விரிக்க மனமின்றி
அதற்கும் ஒரு வருத்தம்
நம்மை நேசித்த மனிதர்கள்
யோசிக்க மறந்து விட்டனரே!

* விஞ்ஞான முன்னேற்றம்
பிரமிக்க வைக்கிறது!
உறவுகளின் தடுமாற்றம்
யோசிக்க வைக்கிறது!

சங்கமித்ரா, நெல்லை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Er. Sankaranarayanan, Neyveli - Neyveli,இந்தியா
14-ஏப்-201322:51:35 IST Report Abuse
Er. Sankaranarayanan, Neyveli சூப்பர் ... இளைய தலைமுறைக்கு சிந்திக்க நேரமில்லை...டெக்னாலஜி உதவியுடன் சந்தோஷமாக இருப்பதாக கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.. இதுவும் ஒருநாள் மாறும்..
Rate this:
Share this comment
Cancel
Dr.s.s.thirumalaikolundu - kokkirakulam,இந்தியா
14-ஏப்-201314:28:46 IST Report Abuse
Dr.s.s.thirumalaikolundu நன்று///புத்தாண்டில் புதிய சாதனை///ஸ்டெம்செல் கருத்ஹூ ஈக்களில் சாதனை ///டாக்டர்.//திருமலை கொழுந்து/
Rate this:
Share this comment
Cancel
gangaimani - madurai,இந்தியா
14-ஏப்-201309:20:19 IST Report Abuse
gangaimani முதியோர்காப்பகங்கள் எங்கே கூவிக்கூவி அழைக்கிறது சகோதரி.,இளையசமுதாயமன்றோ முதியோர்களை குப்பைகளாய் எண்ணி தூக்கிஎரிந்துவிடுகிரது குப்பைதொட்டிகலாகிப்போன முதியோர்காப்பகங்களில். இலையுதிர்க்கும் கோடைகாலமன்று, இது மனிதம் உதிர்க்கும் நிகழ்காலம். நன்றி அருமையான ஹைக்கூ.,
Rate this:
Share this comment
Cancel
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
14-ஏப்-201301:32:19 IST Report Abuse
Uma கவிதையாக இல்லாமல் கட்டுரையாக இருந்தது, பட் பாயிண்ட்ஸ் சூப்பர். குட் ஒன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.