வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
00:00

வரியினை எளிதாக நீக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வரி டெக்ஸ்ட்டை டைப் செய்துவிட்டீர்கள். அப்புறம் தான் தெரிகிறது. அந்த வரி தேவையில்லையே என்று. உடனே என்ன செய்யலாம்? பின்னால் உள்ள கர்சரை பேக் ஸ்பேஸ் கீ மூலம் தட தட தட் என்று தட்டிக் கொண்டே செல்லுகிறீர்களா? ஏன், சார் இந்த வேலை? வரியின் தொடக்கத்தில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஷிப்ட் + என்ட் கீகளை அழுத்துங்கள். வரியின் முடிவு வரை தேர்ந்தெடுக்கப்படும். அடுத்து பேக் ஸ்பேஸ் அல்லது டெலீட் அழுத்துங்கள். ஏன், ஸ்பேஸ் கீ அழுத்தினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வரி அழிக்கப்படும்.
புள்ளி வைத்த பின் இரண்டு ஸ்பேஸ் அமைக்க: இரண்டு வாக்கியங்களுக்கிடையே இரண்டு ஸ்பேஸ் இடைவெளி அமைப்பது எப்போதும் வழக்கமாகும். இதனை வேர்ட் புரோகிராமில் எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம். தட்டச்சு இயந்திரங்கள் மட்டுமே இருந்த காலத்தில், தட்டச்சு செய்வதனைச் சொல்லிக் கொடுத்த பயிற்சி நிலையங்களில், முற்றுப் புள்ளி வைத்து வாக்கியம் ஒன்றை முடிக்கையில், இரண்டு எழுத்து இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தினைத் தொடங்கச் சொல்வார்கள். (இந்த நாட்களில் இளைஞர்கள் அது போன்ற வரைமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்று தெரியவில்லை.) திட்ட ஆய்வு அறிக்கைகளை தட்டச்சு செய்கையில் இதனைக் கட்டாயமாகப் பின்பற்றச் சொல்வார்கள். சரி, இதனைத் தானாக அமையும்படி எப்படி வேர்ட் புரோகிராமில் அமைப்பது எனப் பார்க்கலாம். வேர்ட் தானாக இதனை அமைத்துக் கொள்வதில்லை; நாம் தான் அமைக்க வேண்டும்.
1. Tools மெனுவிலிருந்து Options பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இந்த பாக்ஸில், Spelling & Grammar டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இனி Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Spaces Required Between Sentences என்ற கீழ்விரி பட்டியலைத் திறக்கவும். இங்கு எத்தனை ஸ்பேஸ் வேண்டும் என்பதற்கான அளவுகள் 1, 2 எனக் கிடைக்கும்.
5. எத்தனை ஸ்பேஸ் எனத் தேர்ந்தெடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்து Grammar Settings டயலாக் பாக்ஸை மூடவும். அதன் பின்னர், ஆப்ஷன் டயலாக் பாக்ஸையும் அதே போல் மூடவும்.
இனி, இலக்கண தவறுகளைச் சோதனை செய்கையில், வாக்கியங்களுக்கு இடையில், இரண்டு இடைவெளி இல்லாமல் அமையும் இடங்களில், அந்த பிழையைச் சுட்டிக் காட்டும். இதில் ரைட் கிளிக் செய்து, தானாக பிழையைச் சரி செய்திட ஆப்ஷன் கொடுத்தால், இரண்டு ஸ்பேஸ் தரப்படும்.
ஹைலைட்டிங் கலர்: அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம்.
மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே ab என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X