நம்பிக்கை தரும் ஜனனீ இசை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2013
00:00

இது கம்ப்யூட்டர் காலம். இசையில் நிறைய இளம் இசை மொட்டுக்கள் அரும்பி, மேடையில் மணம் பரப்பி வருகின்றனர். குருகுல பயிற்சி மாறி, தற்போது, கணினியே இசையிலும் குருவாக உள்ள நிலை உள்ளது. இளம் பாடகி கடலூர் எஸ்.ஜே.ஜனனீ அவ்வரிசையில் முன்நிற்பவர். உலகப் புகழ் இசை மேதைகள், டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா மற்றும் நெய்வேலி சந்தானகோபாலனின் அருமை மாணவி இவர். அந்த மேதாவிலாசத்தின் அடிச்சுவட்டில் அருமையாகப் பாடி வருகிறார்.
அண்மையில், மயிலை நாத இன்பம் இசை அமைப்பின் ஆதரவில், ராக சுதா அரங்கில் ஜனனீயின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பமே படு தூள். டாக்டர் பாலமுரளியின் அம்மா ஆனந்த தாயினி (கம்பீர நாட்டை - ஆதி) வர்ணத்தின் அழகிய வருணனைகள் - அதன் வடிவமைப்பு - அகார - உகார - சிவே சிவே இடத்தின் ஸ்வர அமைப்பு, இப்படி சிறப்பான அதன் அத்தனை உயர்வுகளையும், குரலில் உணர்த்தி ஜனனீ சற்றும் பிசகே செய்யாமல் அமர்க்களமாக பாடியது மெய்மறக்கச் செய்தது.
நிகழ்ச்சியில், ஜனனீ கையாண்ட சாவேரி வராளி மற்றும் பிரதான காம்போதி ராக ஆலாபனைகளை மிக அழகாக - குறிப்பாக மத்யம ஸ்தாயி முதல் மேல் ஸ்தாயி சஞ்சாரங்களை அதி துல்லியமாக பளிச்சென்று விரிவுபடுத்தி பாடினார். சியாமா சாஸ்திரிகளுடைய சம்கரி சம்குரு நிரவல் (சாவேரி) படு க்ளாஸ். ஸ்வரங்கள் சொகுசாக அமைந்திருந்தது கூடுதல் நயம்.
ஆனந்த பைரவியில், ஸ்ரீ தீட்சிதருடைய கமலாம்பாம் சம்ரஷது படு நெருடலான இதை அநாயாசமாகப் பாடினார் ஜனனீ.
பிரதான காம்போதியில் (ஸ்ரீதியாகராஜர்) கிருதி - எவரி மாட அருமையான சங்கதி விரிவுகள் - நிரவல் - அட்டகாசமான ஸ்வரப்பிரஸ்தாரம்.
வேறு என்ன வேண்டும், ஒரு நல்ல இசை ரசிகர்களுக்கு. மதுரமான குரலில் நல்ல இசை அணுகுமுறை உத்திகள் மனம் கவர்ந்தன. ஜனனீ கர்நாடக இசையில் மட்டுமின்றி - "கீ' போர்டு வாசிப்பு - இசை மெட்டமைப்பு என்று இந்த இளம் வயதிலேயே சக்கைப் போடு போட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் வயலின் வாசித்த அனந்த பத்மநாபனுடைய வாசிப்பு, சில இடங்களில் நன்றாக இருந்தாலும், பல இடங்களில் அவ்வளவு திருப்தி தரவில்லை. சுமேஷ் நாராயணன் மிருதங்க வாசிப்பு நிகழ்ச்சியில், நல்ல அனுசரணையுடன் நன்றாக இருந்தது.
- மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.