E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஜெயவர்ஷிணியின் அற்புதமான அரங்கேற்றம்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2013
00:00

கிருஷ்ணகுமாரி நரேந்திரன் மிகப் பாரம்பரியமான நடனக் கலைஞர், இவரது அபிநயா நாட்டியாலயா மூலம், நம் நாட்டிலும், உலகெங்கிலும் நடனத் துறையில், கோலோச்சி வருபவர். ஜதிகளின் சொற்கட்டுகளை சொல்லும் விதத்தில், அரங்கத்தையே அதிரவைத்து, அசர வைத்து விடுவார்.
இப்படி பல சிறப்புகளை தன்னுள்ளே கொண்டு, தன் மாணவி ஜெயவர்ஷிணி கேசவராமின் நடன அரங்கேற்றத்தை மிக அற்புதமாக நடத்திக் கொடுத்தார். அரங்க வாசலில் ஜெயவர்ஷிணியின் உருவப்படம் நம்மை ஈர்க்க, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம், அதைத் தாண்டி அரங்கினுள் சென்றால், நாம் நாரத கான சபாவில் இருக்கிறோமா, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைகிறோமா என்று சந்தேகப்பட வைத்தது.
இம்மாதிரி பிரமாண்ட ஏற்பாட்டை, ஜெயவர்ஷிணியின் பெற்றோரான கேசவராம் குடும்பத்தினர் செய்திருந்தனர். மதுரை மீனாட்சியை கேசவராம் குடும்பத்தினர், தன் குல தெய்வமாக வரித்து போற்றி ஆராதிப்பதால், ஜெயவர்ஷிணியின் சொக்கேசர் கவுத்துவம் நம்மை சொக்கத்தான் வைத்தது.
தியாகராஜரின் மிகப் பிரபலமான கீர்த்தனை, அடானா ராக "பாலகனகமய' பாடல் நடனத் துறையின் இசையரசி ராதா பத்ரி பாடலை தேவகானமாக பொழிய, அதை நெல்லை கண்ணன் நந்திகேசுவரராய் மிருதங்கத்தில் வார்த்து கொடுக்க, ஸ்வரங்களை வானவில்லாக வர்ணம் தீட்டி, வயலினில் குழைத்துக் கொடுத்தார் எம்.எஸ்.கண்ணன். அதன் நடுவே, வீணா கானமும், பாலாஜியின் கவண்ணத்தில் கலக்க, நான் மாடக்கூடலில் குழலும், தேவராஜன் கைக ளால் இணைய, தன் தாய் கிருஷ்ண
குமாரியுடன், மகள் வைஜயந்தியும் இணைந்து மிகப் பலமான பக்கவாத்திய குழுவினருடன், ஜெயவர்ஷிணியோ மிக பரபரப்பாக நடனத்தில் ஊறியது போல் ஆடியது சிறப்பாக இருந்தது.
பாட்டில் நல்ல ஈடுபாடு கொண்டு, நன்கு உழைத்துச் சொல்லிக் கொடுத்ததை சலிக்காமல் ஆடுகிறார் இவர். உடலும் சிக்கென்று இருப்பது அதற்கு வசதியாக உள்ளது. அடுத்து, பிரதான உருப்படியான வர்ணம் "நாட்டியகலா பேரொளி' தண்டாயுதபாணி பிள்ளையின் காம்போதி வர்ணம். பல்லவியின் "வருவானோ என் ஆருயிர் கண்ணன்' என்று ஏங்கித் தவிக்கும், நாயகியின் உணர்ச்சிப் பெருக்கை சித்தரிக்க வர்ஷிணிக்காக அமைத்திருந்த, அனைத்து ஜதிகளும் குருவின் பெயரைச் சொன்னது.
மிக வித்தியாசமாக, ஜதி அமைப்பு செய்திருந்தார். அடுத்த பாடலான மதுராஷ்டகம், இதுவும் கண்ணனின் கேசாதிபாத வர்ணனை, ஏற்கனவே நம்மை உருகி இருக்க, இவர் இன்னும் கொஞ்சம் ஒரு படி மேல் சென்று கண்ணனின் சிரிப்பு முதல், அவன் உறங்குவது கூட மதுரம் என்று சொல்ல, நம் மனம் கண்ணனுடன் கரைந்து போயிற்று. "மீனாட்சி லாலி! எத்தனையோ தாலாட்டை பார்த்திருக்கலாம். ஆனால், தாய்க்கு, குமாரி மீனாட்சிக்கு செய்து கொடுத்த தாலாட்டை அரங்கம் நிசப்தமாய் கொடுக்க, அன்பு கட்டளை பிறப்பித்து லாலி துவங்கியது.
வண்டார்குழலி மாமதுரை இளம் குயில் அவளைக் காணாதகண்கள் பிறவிப் பயனை அடையாது. என்னை காப்பது, உன் கடமை என்று குறிப்பிடும் இடங்கள் சிறப்பாக அமைந்தன. மகராசி அருள்வாய் சித்திரை பவுர்ணமி நாளில் தெய்வீக அருள் கூடும். நாடோடி மெட்டில் அமைந்த இப்பாட்டு மீனாட்சியை புகழும் தாலாட்டாகும். காலில் கட்டியிருந்த சலங்கையின் சத்தத்தை கூட அடக்கி ஜெயவர்ஷிணி ஆடியது பிரமிக்க வைத்தது. அடுத்து, காவடி சிந்தாக வள்ளி கணவன் பெயரை பாடலும், அதைத் தொடர்ந்து, குந்தளவராளி ராக தில்லானாவுடன் நிகழ்ச்சியை முடித்தார்.
- ரசிகப்ரியா

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.