தியாகராஜர் பாணியில் சாச்வதியின் இன்னிசை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2013
00:00

கர்நாடக இசை, உலகில் சாச்வதி ஓசையின்றி புரட்சி செய்து வருகிறார் என்றால், அது மிகையில்லை. கச்சேரிகளில் அதிகமான நேரம் ராக ஆலாபனை பாட, பல்லவி பாட, நிரவல் மற்றும் கற்பனை ஸ்வரம் பாட என்று, தங்கள் நேரத்தை ஒதுக்கிப் பாடி வருவது இன்று மட்டுமல்ல. தியாகராஜர் காலத்திற்கும் முன்னதாகவே நடைமுறையில் உள்ளவை.
ஆனால், பாடல்களே இல்லாத கச்சேரியாக முன்பு இருந்தது. புரந்தரதாசர் மற்றும் அன்னமாச்சாரியார் இருவரும், 15ம் நூற்றாண்டில் இறைவனின் பெருமைகளை சங்கீர்த்தனங்களாக இயற்றத் துவங்கினர். அதன் விளைவாக பஜனை இசை பிறந்தது.
பஜனை இசை ஒரு பக்கம், பழைய பாரம்பரிய இசை மறுபக்கம், இதை கூர்ந்து கவனித்த சத்குரு தியாகராஜர், வித்தியாசங்களை மிக அழகாக கணித்து ராக ஆலாபனை கச்சேரியை காட்டிலும், சிறுபாடல்கள் கொண்ட கச்சேரிகளில் மக்களுக்கு அதிக நாட்டம் இருப்பதைக் கண்டறிந்தார்.
அதனால், தானும் சிறிய அளவிலான கீர்த்தனைகளை சங்கீத பாவம், சாகித்யபாவம், பக்தி பாவம் மூன்றும் நிறைந்ததை இயற்றி பாட துவங்கினார். ராக பாவத்தை கீர்த்தனைகளில் கொடுக்கும்போது, சங்கதிகள் போட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட தியாகராஜர், தான் இயற்றிய கீர்த்தனைகளை சங்கதிகளுடன் இயற்றிப் பாடினார்.
இப்படித்தான் ரசானுபாவ கீர்த்தனைகள் தியாகராஜர் மூலம் நமக்கு பக்தி பாவத்துடன் கிடைக்க வழி பிறந்தது. இந்தக் கருத்தை முற்றிலும் உள்வாங்கியது தான், சாச்வதியின் ரசானுபாவக் கச்சேரி. அந்த அடிப்படையில் சாச்வதியின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. குரு வந்தனமாக குருப்ரம்மா ஸ்தோத்திரத்துடன் துவங்கி, தியாகராஜரின் ஸோபில்லு சப்தஸ்வர ஜகன் மோகினி ராக பாடலுடன் துவங்கி, மிக அழகாக சிட்டைஸ்வரத்தைப்பாடி முடித்தார்.
நாத உபாசனையை எப்படி ஏழு ஸ்வரங்கள் மூலமாக பெறமுடியும் என்பதை எளிதான பாடல் மூலம் உணர்த்தியது அறிவுத் தேடலாக அமைந்தது. அடுத்து, "சொகசீ காம்ருதங்க தாளமு' என்ற ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல். பொதுவாகத் தியாகராஜர் தெலுங்கு மொழியில் பாடல்கள் இயற்றி இருந்தாலும் அவை மிக எளிதாக பாமரனும் புரிந்து கொள்ளும் படிதான் அக்காலத்தில் இருந்துள்ளது.
அவர் காலத்தில், தெலுங்கு மன்னர்கள் ஆட்சியின் கீழ் நம் இன்றைய தமிழகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் இருந்தமையால், தெலுங்கு மொழியில், அவர் பாடலை கேட்டு ரசித்தவர் பலர். மேலும், இறைவனை நெக்குருகப் பாடி பக்தியால் துதித்து, பஜனை செய்து மட்டும் வித்வத் எனப்படும் இசை அறிவை ராக ஆலாபனை மூலமாகவோ, நிரவல், ஸ்வரம் என்று பாடாமல் கொடுத்தார் தியாகராஜர். சாச்வதியும், இம்முறையை நன்கு ஆராய்ந்து தனக்கென்று, இவ்வழியை தேர்ந்தெடுத்து கொடுத்து வருவதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
நிறைவாக, மோகனராமா கீர்த்தனைக்கு ஆலாபனை செய்து, கற்பனைஸ்வரம் பாடி தனி ஆவர்த்தனம் கொடுத்து முடித்தார்.
சாச்வதிக்கு பக்கப்பலமாக பக்க வாத்தியத்தில், முத்துக்குமார் குழலிலும், கும்பகோணம் சுவாமிநாதன் மிருதங்கத்திலும், அருளானந்தம் தவிலிலும், நாகரத்தினம் சிறப்பு சப்தங்களிலும், கைகோர்த்து கச்சேரியை மெருகேற்றி கொடுத்தனர்.
- ரசிகப்ரியா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.