நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2013
00:00

மனவளர்ச்சி குன்றியோர், டவுன் சின்ட்ரோம், ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் எண்ணிக்கை, இப்போது அதிகப் படியாகி வருவது வருத்தத்திற்குரிய செய்தி என்றால், அவர்களுக்கான பயிற்சி பள்ளிகள் குறைவாக இருப்பது, மேலும் வேதனையான விஷயம்.
இந்த வகையான குழந்தைகளுக்கு, மருந்து மாத்திரையுடன், அன்பும், அரவணைப்புமே முக்கிய தேவை. இப்பிரச்னைகளுடன், பிறக்கும் குழந்தைக்கு தாயாக இருப்பவர், கருவில் மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் இந்த குழந்தையை சுமக்க வேண்டியவராகி விடு கிறார்.
பதினைந்து வயது உடல்வாகுடன், ஐந்து வயது பையனின் குணாதி சயத்துடன் காணப்பெறும் குழந்தையை, பார்த்துக் கொள்வதும், கவனித்துக் கொள்வதும், திறனை வளர்ப்பதும், பெற்ற தாயால் மட்டும் நிச்சயம் முடிகிற காரியமில்லை. தாயாரையே கடிப்பது, காயப்படுத்துவது என்ற நிலை, சிலருக்கு வரும் போது, இன்னும் சிரமம்.
"இதற்கு தீர்வே இல்லையா?' என்றால், "இருக்கிறது' என்கிறார் சென்னை, ஒய்.எம்.சி.ஏ., கல்லூரி சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் என்.ரவிச்சந்திரன். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., விளையாட்டு பயிற்சி கல்லூரி வளாகத் தில், பசுமை சூழ்ந்த பரந்த வெளியில் அமைந்துள்ளது இந்த சிறப்பு பள்ளி.
பள்ளியில் பெரிதும் சிறிதுமான, ஆண், பெண் குழந்தைகள் 20 பேர் உள்ளனர். இவர்களுக்கு படிப்பை விட, உடல் மற்றும் மூளைத்திறனை வளர்ப்பதே முக்கியம் என்பதால், அதற்கேற்ப இங்கே பல்வேறு பயிற்சி கள், தகுதி வாய்ந்த ஆண், பெண் ஆசிரியர்களால் வழங்கப்படுகிறது. இங்கு குழந்தைகள் சேர்க்கப் பட்ட உடனேயே, அவர்களது நுண்ணறிவுத்திறன் சோதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர் களுக்கு யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல் போன்ற உடல்திறன் கல்வி வழங்கப்படுகிறது.
கற்றல் திறனுக்கு ஏற்ப, குழந்தைகள் பிரிக்கப்பட்டு, கல்வியும் சொல்லித் தரப்படுகிறது. இங்கு வழங்கப்படும் பயிற்சியின் காரணமாக, பெற்றோராலும், சமூகத்தாலும் சுமையாக கருதப் பட்ட குழந்தைகள், ஒரு கட்டத்தில் மெழுகுதிரி, பேப்பர் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகளை கச்சிதமாக பெற்று, தனக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும், தாங்கள் உபயோகமானவர்களே என்றும் நிரூபித்து வருகின்றனர்.
எந்த ஒரு குழந்தையும், குழுவாக இயங்கும் போதுதான் பரிணமிக்கும்; தம் திறனை அதிகப்படுத்தி, பாராட்டைப் பெற விரும்பும். அதிலும், இது போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, குழுவாக இயங்குவதுதான் நல்ல பலன் தரும். "எங்கள் பள்ளி வளாகத் திலேயே, "நார்மலாக' உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளியும் இயங்குகிறது. இந்த சிறப்பு குழந்தைகளை, அந்த குழந்தை களுடன், அவர்களது பொறுப்பில் சில வகுப்புகள் படிக்க ஏற்பாடு செய்கிறோம். இது, இரு பாலாருக்குமே பெரிதும் உதவுகிறது.
"நார்மலாக உள்ள குழந்தை கள், இவர்கள் மீது பாசம் மிகக்கொண்டு கையை பிடித்து விளையாடுவது, உணவு சாப்பிடுவது என்று பாசத்துடன் நடந்து கொள்கின்றனர். இதன் மூலம், நார்மலாக உள்ள குழந்தை களின், அன்பின் மகிமையை புரிந்து மகிழ்கின்றனர், இந்த சிறப்பு குழந்தைகள். இந்த மகிழ்ச்சி பல நல்ல பலன்களை தருகிறது...' என்கிறார் ரவிச்சந்திரன்.
சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி, கோடை விடுமுறைக்கு பின், ஜுன் முதல் வாரம் முதல் செயல்படத் துவங்கும். இப்போது விண்ணப்ப படிவம் வழங்கப் பட்டு வருகிறது. பள்ளியில் ஹாஸ்டல் வசதி கிடையாது. காலையில் கொண்டுவந்து விட்டு விட்டு, மாலையில் அழைத்துச் சென்றுவிட வேண்டும்.
அதற்கு தயாராக உள்ள பெற்றோர், நல்ல நோக்கத்துடன், ஆரோக்கியமான சிந்தனையுடன், செயல்படும் ஒய்.எம்.சி.ஏ., சிறப்பு பள்ளியில், குழந்தைகளை சேர்த்து விடலாம். மேலும், விவரம் அறிய, தலைமை ஆசிரியருடன் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் மற்றும் தொலைபேசி எண்: 9840158373, 044-24353892.
***

எல். முருகராஜ்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
26-ஏப்-201321:00:18 IST Report Abuse
Rajesh ஆடிசம் ஏன் வருகிறதென்றால், பிள்ளையை சரியாக கண்டுகொள்ளாமல் TV முன் உட்காரவைத்துவிட்டு, நாம் நம் வேலையை பார்பதினால். As per the experts the root cause is due to the ignorance and unawareness. If the Kid is not interactive, we should be more careful in identifying the issue at an early stage rather than reacting later. The foremost reason is not interacting with Kids and ignoring them. Please do not do this as this might help autism to develop and the Kid will get in to serious stage. I consulted a great Doctor/expert/consultant Dr.Vijayanthini (Kodambakkam Child Hospital) ://www.healthcaremagic.com/doctors/dr-jayanthini-v/6952. I would say she is a great person in identifying the Kid whether they have Autism or not. I am writing this to the greater audience as I have personally suffered for my Son and came out of that due to right treatment. One great thing is now my Son is one of the great Kid who knows many things and teach me many great things (how Valcano is formed, cause for earthquake etc. ). He is in 3rd grade now  thanks to GOD and the good Doctors. The treatment is simple, NO TV, interact more with Kid, take them to new places and keep talking. Put big posters on wall and tell them what it is, make them to listen to the rhymes and sing along with the song etc. Speech therapy will also help along with the above.
Rate this:
Share this comment
Tamilan - Coimbatore,இந்தியா
27-ஏப்-201322:09:56 IST Report Abuse
Tamilanif you don't know anything about autism, just keep quit....
Rate this:
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
24-ஏப்-201313:41:39 IST Report Abuse
News Commitor நல்ல செய்தி. இந்த பக்கத்தை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
24-ஏப்-201311:56:37 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில்தான் இப்படி மன/உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன. அதற்கு காரணம் நம்முடைய சைவ உணவு பழக்க வழக்கங்கள். தாய் உட்கொள்ளும் உணவுதான் குழந்தையின் உடல் நலத்தை தீர்மானிக்கிறது. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.
Rate this:
Share this comment
News Commitor - chennai,இந்தியா
24-ஏப்-201321:46:19 IST Report Abuse
News Commitorநீங்க சொல்லியிருக்குற மொதோ வரியே தப்பு பாசு. ஆடிசம் பத்தின அவார்னஸ் வெளிநாட்டுல அதிகமா? இந்தியாவுல அதிகமா? zero knowledge - no problem, full knowledge - very helpful, half knowledge - dangerous. மேற்கூறிய குறைபாடுகள் எதனால் வருகின்றன என்பது இன்னமும் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது....
Rate this:
Share this comment
praven.dr@gmail.com - UK,யுனைடெட் கிங்டம்
25-ஏப்-201310:06:12 IST Report Abuse
praven.dr@gmail.compls. provide more info......
Rate this:
Share this comment
Cancel
JEYAKUMAR - madurai,இந்தியா
23-ஏப்-201319:58:12 IST Report Abuse
JEYAKUMAR நல்ல சேதி. வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201306:30:59 IST Report Abuse
Uma பயனுள்ள செய்தி. அன்புடன் அந்தரங்கத்துக்கும் பிற பகுதிகளுக்கும் எழுதி குவிக்கும் மக்கள் இந்த மாதிரி உபயோகமான விஷயங்களுக்கும் கருத்து தெரிவிக்கலாமே.
Rate this:
Share this comment
praven.dr@gmail.com - UK,யுனைடெட் கிங்டம்
23-ஏப்-201316:08:13 IST Report Abuse
praven.dr@gmail.comஅய்யோ அந்த கூட்டத்த இங்க கூப்பிடாதிங்க ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.