அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2013
00:00

"பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்றொரு நூல், சென்ற நூற்றாண்டு வரை, நம்மூரில், பெண்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை, விலாவாரியாக விளக்கியுள்ளது. அதில்:
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் முதலிய மாநிலங்களில், பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக் காணப்பட்டன என்று, ஆங்கிலேய அரசின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில், ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள், ஒரு பெண் மகவு கூட இல்லை.
மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில், ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை. இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அப்பகுதியில், பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை, உடனுக்குடன் அறிவிக்க ஆட்களை நியமித்தார் அலகாபாத் நீதிபதி.
குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர் காவலாளிகள், காவல் அதிகாரிகள் முதலியோரும், அப்பகுதியில் பிறக்கும் பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள் அனைவரும், தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தனர்.
மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக்கூட அறிய இயலாத பாலகர்களுக்கு, திருமணம் செய்து வைத்தனர். இதனால், பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல. பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க, 10 வயது முடியும் முன், அவளுடன், அவள் கணவன், பாலுறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு வந்தது ஆங்கிலேய அரசாங்கம். இதுவே எவ்வளவு கொடுமை.
ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்திக் கொண்டே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை அமைத்து, தங்கள் நியாயமற்ற, மற்ற இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர் ஆண்கள்.
இந்தியாவின், முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1871ல் எடுக்கப்பட்டது. அப்பொழுது, கல்வி அறிவு பெற்ற பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர். அதாவது, நூற்றுக்கு ஒருவர் கூட இல்லை.
பின், 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய ஜனத்தொகை, 29 கோடி பேர். இதில் 14 கோடி பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடிப் பெண்கள் விதவைகள். இதில் வயதான விதவைகளைச் சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட கொடுமை இது! இதில்...
1 வயது விதவை - 579 பேர்.
1-2 வயது விதவை - 492 பேர்.
2-3 வயது விதவை- 1257 பேர்.
3-4 வயது விதவை- 2827 பேர்.
— இப்படிப் போகிறது இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!

பல பெண்களை, ஒரு ஆண் மணக்கும் பழக்கமும் இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில், திருமணமாகி செல்லும் பெண், எந்த வகையிலாவது தன் கணவனது, கணவனின் பிற உறவினர்களது, விருப்பத்திற்கு மாறாக நடந்தால், வேறு பெண்களை கணவன் திருமணம் செய்து கொள்ள முடியும். பல கணவன்மார் தங்கள் மலட்டுத் தனத்தை பெண் மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.
கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன் அவளையும் உடன்கட்டை ஏற்றினர். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு கருத்தை, சமூகத்தில் இவர்கள் பரப்பி, அதன் மூலம் இதற்கு பெண்ணை நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.
— இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நூல். நாம், நம் கலாச்சாரம், பண்பாடு பற்றி பீற்றிக்கொள்வதில் ஒன்றும் குறைச்சலில்லை.
***

சமீபத்தில் ஒரு வித்தியாசமான புத்தகத்தை படிக்க நேர்ந்தது. புத்தகத்தின் பெயர்: "மூதாதையரைத் தேடி!'
மூதாதையர் என்றால் யார்? மனிதனின் மூதாதை எது? குரங்கு என்று சொன்னார் சார்லஸ் டார்வின் என்ற ஆராய்ச்சியாளர்.
அப்படியானால் ஒரு கேள்வி... குரங்கிலிருந்து தோன்றினான் மனிதன் என்றால், இன்னும் ஏன் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன? இந்தக் கேள்வி இன்னும் பல ஆராய்ச்சியாளர்களின் மண்டையைக் குடைந்து கொண்டே இருக்கிறது.
இதற்கும், இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கும் பதில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் நூலாசிரியர் சு.கி.ஜெயகரன்.
புத்தகத்திலிருந்து: 700 கோடி ஆண்டுகளுக்கு முன் - அப்போது பூமியில் எந்த உயிர் இனங்களும் தோன்றியிருக்கவில்லை - இருந்த பாறைகள் தான் இப்போதும் நீலகிரி மலைத் தொடரிலும், சேர்வராயன், கல்வராயன், ஜவ்வாது மலைத் தொடர்களிலும் இருக்கின்றன.
அடுத்து, நம் மூதாதையரின் (அதாவது, குரங்கு!) படிப்படியான வளர்ச்சியை படங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர்.
ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த குரங்கு, 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த குரங்கு, பிறகு 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஹோமோ ஹேமிலைன் என்ற குரங்கு. இதற்குப் பிறகு தான் குரங்கு உருவம் கொண்ட நியாண்டர்தால் மனிதனின் வளர்ச்சி!
இந்தப் புத்தகத்தைப் பற்றி லென்ஸ் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்: இதே போல் வேறொரு புத்தகம் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது..."கரப்பான் பூச்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும்' - படிக்கிறாயா? என்று கேட்டார்.
"வேலை இருக்கிறது...' என்று சொல்லி, தப்பியோடி வந்து விட்டேன்!
***

"திருடத் தெரிஞ்சாலும், தேத்தத் தெரியணும். சில அபிஷ்ட்டுகளுக்கு அந்த சாமர்த்தியம் போறாது...' என்றார் குப்பண்ணா.
"ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில், ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கைச் சரித்திரம் முன்பு வெளியாகியிருந்தது...'
"நேதாஜியுடையதா?' — லென்ஸ் மாமா.
"இல்லை இல்லை. இவர் சாதாரண சிப்பாய் தான். ஆனால், ஜெர்மானியரிடம் அகப்பட்டு அனுபவித்த சித்ரவதைகளும், தப்பி வந்த வீரச் செயல்களும் அவருக்கு நேர்ந்த மாதிரி யாருக்கும் நேர்ந்ததில்லை. எதிரிகள் பிரதேசத்தில் பாராசூட் மூலமாய் குதித்து அகப்பட்டுக் கொண்டாராம். எப்போது? இரண்டாம் உலகப் போரின் போது.
"அவருடைய வாயைப் பலவந்தமாக திறந்து, கொதிக்க கொதிக்க, வெந்நீர் ஊற்றினராம், ஹிட்லரின், நாஜிக்கள்! இப்படிப் பல செய்திகள்; ஊரெங்கும் சொற்பொழிவுகள்; பத்திரிகைகளிலெல்லாம் அவருடைய அனுபவங்கள். அமெரிக்காவில் அவருக்கு நிகரான வீரர் கிடையாதென்று ஆகிவிட்டது!'
"அடடே... அதை வாசிக்க வேண்டுமே!' — லென்ஸ் மாமா.
"முழுவதையும் கேளும் ஓய்... அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகமாக வந்து, அதன் சுருக்கம், "டைஜஸ்ட்' பத்திரிகையில் வெளிவந்தபோது தான், குட்டும் வெளிவந்தது. ஆசாமி முதல் நம்பர் சரடு என்று!'
"அடப்பாவி... எப்படி அது யாருக்குமே தெரியாமலிருந்தது?'
"அது தான் ஆச்சர்யம்! சுற்று வட்டாரம் ஐந்து மைலுக்கு அந்தண்டை அடி எடுத்து வைத்ததில்லை அந்த ஆசாமி. சும்மா ஒரு சமயம், யுத்தத்தில் தான் சேர்ந்தது போலவும், தமக்கு நேர்ந்த அனுபவங்கள் போலவும் கற்பனையாக நண்பர்களிடம் என்னவோ சொல்லப் போக, அது மற்றவர்களுக்குப் பரவ, கேட்கிறவர்களிடமெல்லாம் தன் கற்பனையை விரித்துக் கொண்டே போய் விட்டார். அப்புறம் அவராலேயே தப்ப முடியாத அளவுக்கு பிரபலமாகி விட்டார்!'
"பாவம்... ரீடர்ஸ் டைஜஸ்ட்காரனுக்கு ஒரே அவமானமாகப் போயிருக்குமே!'
"அவன் கெட்டிக்காரன். கட்டுரையை நிறுத்த முடியாத அளவுக்கு காலம் கடந்து விட்டது. "நீங்களே வாசித்துப் பாருங்கள். இவ்வளவும் பொய் என்று யாராலும் சொல்ல முடியுமா? அவ்வளவு உண்மை போல் இருக்கிறது...' என்று ஒரு குறிப்புடன் கட்டுரையை வெளியிட்டு விட்டான்...!' என்றார் குப்பண்ணா.
— இது எப்படி இருக்கு?
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravidhya - Erode,இந்தியா
24-ஏப்-201319:50:54 IST Report Abuse
ravidhya உண்மை உண்மை ... ஆங்கிலேயர்கள் மட்டும் நம்மை ஆளாவிட்டால் இந்த முன்னேற்றமும் இருந்திருக்காது. சமுகத்தை பொறுத்தவரை இன்றும் பெண்கள் ஒரு போகப்பொருளே. இன்றும் இளம் விதவைகள் உள்ளனரே. பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வேற்றுமை பாலினம்,மற்றும் இவர்கள் மெல்லியவர், ஆண்கள் வல்லிய்வர் மட்டுமே . அதனால் தான் இந்த அடக்குமுறை ..
Rate this:
Share this comment
Cancel
N...N - Chicago,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201321:54:56 IST Report Abuse
N...N Current monkey species and human monkey species were evolved from one of the previous monkey species (this monkey species is not the same as current monkey species). Also, mutation is the biggest contribution to all the changes we see now (different skin color, hair type, etc.). Religious people came up with "Intelligent Design" concept to disprove "Evolution theory", but, it failed.
Rate this:
Share this comment
Cancel
kooli - saakkadai,இத்தாலி
23-ஏப்-201301:44:10 IST Report Abuse
kooli பால்ய விவாஹம் கூட தேவலை விதவா புனர் விவாஹம் செய்ய சமுதாயம் அனுமதித்து இருந்தால்
Rate this:
Share this comment
Cancel
rengasamy chandrasekaran - chennai,இந்தியா
22-ஏப்-201318:25:06 IST Report Abuse
rengasamy chandrasekaran இந்த அவலம் நம் நாட்டில் ஏன் ராஜஸ்தான், பஞ்சாப், உத்தர்பிரதேஷ், ஹரியானா ஆகிய எல்லை மாநிலங்களில் மட்டுமே இருந்தது. அந்நிய படைஎடுப்பாளர்கள் நமது நாட்டு பெண்கள் மற்றும் நமது சமுதாயத்திற்கு செய்த தொல்லைகள் கொஞ்சம் அல்ல. நம் பெண்கள் மற்றும் சமுதாயத்தை காப்பதற்காக செய்த பழக்கம் தான் இது. போரில் கொல்லப்பட்ட கணவனின் மனைவிகள் அன்னியனிடம் மானம் இழப்தைவிட சாவதே மேல் என்ற பழக்கம் வந்து விட்டது. இதை குறிப்பாக யாரும் சொல்வதில்லை. ஏனெனில் அன்னியனை பார்த்து பயம். அவர்களை குறை சொன்னால் உயிருடன் இருக்க முடியாது. அதனால் ஊருக்கு இளைத்தவர்களை குறை சொல்லி சோசியலிச பகுத்தறிவு வாதியாக காட்டிகொள்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
MentalTamilan - London,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201316:58:12 IST Report Abuse
MentalTamilan புண்ணிய நாடு, கலாச்சார நாடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கிற நம்ம நாட்டு flash back-a பார்த்தா எவ்ளோ கேவலமா இருக்குது பெண்களை மதிக்காத எந்த சமுதாயமும் உருபடாத சரித்திரமே இல்ல... அது இப்பவும் 'கற்பழிப்பு' கலாச்சாரம் என்ற பேர்ல நம்ம தலை நகரத்துல எப்பவும் நடந்துட்டு தானே இருக்கு வெட்க கேடு.....
Rate this:
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
22-ஏப்-201308:56:14 IST Report Abuse
News Commitor 1-4 வயது விதவையா? சுத்தம். எவ்வளவு அட்வான்சா இருதிருக்காங்க நம்ம மக்கள். புல்லரிக்குது.
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
22-ஏப்-201306:06:40 IST Report Abuse
mangai இந்த கட்டுரை கலாசார காவலர்களுக்கு செருப்படி.. நம்ம பழக்கமே idhu தான் செய்யுறதெல்லாம் செய்றது அப்புறம் மாட்டிக்கொண்டதும் அவன் வருகையால் தன இவன் வருகையால் தான் (கிருஸ்துவ முஸ்லிம் ) என்று பழியை மற்றவர்கள் மேலே போடுவது.. எவன் வந்தால் என்ன? நம்ம நியாயமா ஒழுங்கா இருக்கலாமே.. உடன்கட்டை ஏறும் ஒரு விஷயம் போதும் நம்ம யாரு எப்படி பட்டவங்க என்பது புரிய.. எனக்கு பள்ளிக்கூடத்தில் இந்த உஅன்கட்டை vishayangalai படிக்கும் போதே புரிந்து விட்டது நம் கலாச்சாரத்தை பற்றி... idhellam வெளியில் சொன்னால் நம்மை ஏதோ ஒரு மாறி பார்பார்கள்.. இதன் பாதிப்பு இன்னும் நம் ஜீன்களில் உள்ளது.. அழிய நெடுங்காலம் ஆகும்..
Rate this:
Share this comment
Cancel
Damodardeshvaasi Tribhuvanapathi dasa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201311:50:45 IST Report Abuse
Damodardeshvaasi Tribhuvanapathi dasa அருமை எழுத்தாளர் ஜெயகரனுக்கு என் அனுதாபங்கள். டார்வினிஸம் என்பது நம்ப முடியாத ஒரு கோட்பாடு. 160 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த அடிப்படையற்ற விஷயம் அது. உலகில் 84 லட்சம் உயிர்வாழிகள் இருப்பதை இவர்களால் மறுக்க முடியுமா. எந்த எந்த வகை உயிரனங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளது என்பது இந்த டார்வினுக்குத் தெரியுமா. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வியாசதேவர் எழுதிய ஸ்ரீமத் பாகவதத்தில் அத்துணை கேள்விகளுக்கான பதில்களும் உள்ளது. ஆகவே இந்த பரிதாபப்பட்ட விஞ்ஞானிகளை நம்புவதை விட்டு சனாதன தர்மத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,ஏமன்
22-ஏப்-201315:09:20 IST Report Abuse
Raj Pu1-4 வயதுக்குள் இத்தனை விதவைகள்?? மற்றவர்கள் வந்ததினால் தன நாம இவ்ளோ கேவலமா போனோமா?? எல்லா துன்பங்களுக்கும் காரணம் பெண்களை ஒரு பொருளாக பார்த்தால் தான்.. என் கெளரவம் காப்பாற்ற நீ சாவு உனக்கு விருப்பம் இல்லா விட்டாலும் ra ennam ... பெண்களை அழித்து தான் இவர்கள் இன சமூக பற்றினை velippaduthikondaargal.. ...// இது மங்கை அவர்கிளின் கருத்து, சனாதன தர்மம் தான் இதற்க்கு காரணமா?...
Rate this:
Share this comment
Cancel
rengasamy chandrasekaran - chennai,இந்தியா
21-ஏப்-201308:31:28 IST Report Abuse
rengasamy chandrasekaran நம் முன்னோர்கள் பெண்ணிற்கும், மண்ணிற்கும், உலகில் உள்ள ஜீவராசிகளுக்கும் மற்றும் மனிதாபிமானத்திற்கும் மிக பெரிய மரியாதையை அளித்தார்கள். மன்னர்கள் போரை எப்படி நியாயமாக மற்றும் தர்மத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்றும் கற்று தந்தார்கள். ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் நுழைந்த இசங்கள் (கம்யுநிசம் , சோசியலிசம், இஸ்லாமிசம், காபிடலிசம், கிருஷ்டியநிசம் மற்றும் போலி மதச்சார்பின்மை பேசி நாட்டை கொள்ளை அடிக்கும் போலி ஜனநாயகவாதிகள், மற்றும் பணம் மட்டுமே பெரிது என்று நினைக்கும் பண நாயகவதிகள், பிறப்பு நியாயத்தை மறந்த மக்கள், ஏமாற்றுவோர் பின் செல்லும் மக்கள், உழைக்காமல் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று நினைக்கும் பேராசை மக்கள் ஆகியோர் செய்யும் செயல்களை உங்களால் விமர்சிக்கமுடியுமா) பெண் சிசு கொலை ஏற்பட யார் காரணம். மேற் சொன்ன மக்கள் தானே. இவ் வுலகு மற்றும் எல்லா ஜீவராசிகளையும் நேசிக்கும், தர்மத்தின் வழியில் செல்லும் ஒரு சாதாரண இந்தியன். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
mangai - Chennai,இந்தியா
22-ஏப்-201306:24:17 IST Report Abuse
mangai1-4 வயதுக்குள் இத்தனை விதவைகள்?? மற்றவர்கள் வந்ததினால் தன நாம இவ்ளோ கேவலமா போனோமா?? எல்லா துன்பங்களுக்கும் காரணம் பெண்களை ஒரு பொருளாக பார்த்தால் தான்.. என் கெளரவம் காப்பாற்ற நீ சாவு உனக்கு விருப்பம் இல்லா விட்டாலும் ra ennam ... பெண்களை அழித்து தான் இவர்கள் இன சமூக பற்றினை velippaduthikondaargal.. ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.