அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2013
00:00

அன்புள்ள அம்மாவிற்கு —
நான் 24 வயது பட்டதாரி பெண். என் மாமா வேறொரு பெண்ணை விரும்பி, பெற்றவர்களின் விருப்பப்படியும், என் பிடிவாத குணத்தாலும் அவருடைய அக்கா பெண்ணான என்னை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், கல்யாணத்திற்கு முன் என்னிடம் தான் ஒரு பெண்ணை விரும்புவதாக கூறினார். ஆனால், அவர் மேல் உள்ள நம்பிக்கையில் நான் அதை மறுத்து, "உங்களைத் தான் திருமணம் செய்து கொள்வேன்' என்று சொல்லிவிட்டேன். என் கணவர், வெளியூரில் கல்லூரியில் வேலை பார்ப்பவர்; அவரிடம் படிக்கும் மாணவிதான் அந்தப் பெண்.
திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. என்னை அவர் வேலைபார்க்கும் இடத்திற்கு, கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொல்லிவிட்டார். என் பெற்றோர் வெளியூரில் இருக்கின்றனர். அவர்களிடமும் என்னை கூப்பிட்டு போக மாட்டார், பேச மாட்டார், சிரிக்க மாட்டார்.
படுக்கையறையில் மட்டும் அவரின் சந்தோஷத்திற்காகவோ இல்லை என்னுடைய சந்தோஷத்திற்காகவோ தெரியவில்லை... சில நாட்கள் மட்டும் சேர்ந்திருப்போம். நானும், அவர் இன்று மாறி விடுவார், நாளை... மறுநாள் என்று எண்ணி புது மணப்பெண்ணின் ஆசைகளோடு இருந்து ஏமாந்து விட்டேன். குழந்தை இல்லை.
நான் செய்த தவறு, அவர் என்னிடம் அந்தப் பெண்ணை விரும்புவதாக கூறியும், பிடிவாதமாக என்னை கல்யாணம் செய்யச் சொன்னதுதான். அது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய, மன்னிக்க முடியாத தவறு. என் அத்தை, அவரிடம் விசாரித்ததில் அவர் கூறியது... "இவள் என்னை விரும்பி கல்யாணம் செய்து கொண்டாள். அந்தப் பெண்ணை நான் விரும்புகிறேன். அந்தப் பெண்ணிற்கு நான் துரோகம் செய்ய நினைக்கவில்லை. ஆகையால், அந்தப் பெண்ணையும் எனக்கு திருமணம் செய்து வையுங்கள்; இருவரையும் நான் நன்றாக வைத்துக் கொள்கிறேன். இதுதான் என் முடிவு...' என்று கூறிவிட்டார்.
மேலும், அந்தப் பெண் வெளியூரில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அதை முடித்தால் என் கணவருக்கு சமமாக (படிப்பில்) ஆகிவிடும். என்னிடம், "நீ, உன் மாமாவிற்காக அந்தப் பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் தா' என்று கூறினார். அவர் மேல் வைத்த அளவு கடந்த அன்பினாலும், தூய்மையான காதலினாலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதி கொடுத்து விட்டேன்.
அன்றிலிருந்து சுத்தமாக நான் அவரிடம் பேசவில்லை. ஆனால், லெட்டர் கொடுத்த பிறகு என்னிடம் மிகவும் பிரியமுள்ளவராக மாறிவிட்டார். ஆனால், என்னால்தான் அவரிடம் முகம் கொடுத்து பேச முடியவில்லை. "உனக்கும் சரி, அந்தப் பெண்ணிற்கும் சரி துரோகம் செய்ய மாட்டேன்...' என்று கூறுகிறார்.
என் வீட்டில் உள்ளவர்களும் அவருடைய சந்தோஷத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். நான், என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அந்தப் பெண்ணின் விலாசம் என்னிடம் உள்ளது. ஆனால், அந்தப் பெண்ணிடம் பேசக் கூடாது என்று சொல்லி விட்டார்.
என் வாழ்க்கையில் இன்னொருத்திக்கு பங்கு கொடுக்க முடியாமல், என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் உங்களின் மகளுக்கு ஒரு பதில் சொல்லுங்கள்.
பெயர் வெளியிட விரும்பாத உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. செய்வதை எல்லாம் செய்து விட்டு, யோசனை கேட்டால் எப்படி?
உன்னைப் பிடிக்காத, வேறொருத்தியை விரும்புகிற மனிதரை, பிடிவாதமாய் மணந்து கொண்டது படு முட்டாள்தனம் என்று நீயே எழுதியிருக்கிறாய். அதனால், அதைக் கூறி, நானும் உன்னைக் காயப்படுத்துவதில் எந்தவித பயனும்இல்லை.
இரண்டாவதாக இப்போது நீ செய்திருக்கிறாயே... அதுதான் படு மோசமான முட்டாள்தனம்.
மனமொப்பாமல் வாழ்க்கை நடத்த உன் கணவருக்கு பிடிக்கவில்லை என்றால் - நீ செய்த தவறுக்கு ஒரு பிராயசித்தம் செய்ய விரும்பினால் - விவாகரத்து பெற்று, உன் பிறந்த வீட்டோடு போயிருக்கலாமே நீ!
எதற்காக, நீயும் இருந்து, இன்னொருத்தியும் உன் கணவருடன் சேர்ந்து வாழ கடிதம் மூலம் அனுமதி கொடுத்தாய்? இது என்ன சினிமாவா? சினிமாவில் பார்க்கத்தான் இதெல்லாம் உருக்கமாக, சோகத்தைப் பிழிந்து தருவதாக இருக்கும்; ஒரிஜினல் வாழ்க்கைக்கு இதெல்லாம் ஒத்து வராது.
நாளைக்கு அவளும் நீயும் ஒரே வீட்டில் வாழ்வீர்களா? உனக்கு குழந்தைகள் இல்லை என்கிறாய். நாளைக்கு அவளுக்குப் பிறந்தால், நீ மனமொப்பித் தாலாட்டு பாடுவாயா அல்லது உன் கணவரும், அவளும் ஒரு படுக்கையறையில் கதவைத் தாழிட்டு படுக்க - நீ தனியே படுத்து, "கடவுள் தந்த இரு மலர்கள்...' என்று சோக கீதம் பாடுவாயா? எதற்கு இந்த விஷப்பரிட்சை?
சொந்த அக்காள், மகளை மணந்த உன் மாமா, தன் அக்காள் குடும்பத்துக்குத் துரோகம் செய்யாமல், அதே நேரம் தன் மனசுக்குப் பிடித்தவளையும் கைவிடாமல் வாழ இப்படியொரு திட்டத்தை வகுத்திருக்கலாம். உனக்கும், தற்போதைக்கு மாமாவை மனங்குளிரச் செய்து விட்டோம் என்கிற எண்ணம் இருக்கலாம்.
ஆனால், புதுசாய் வரப் போகிறவள், இதையெல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று என்ன தலையெழுத்து? அவள் யோசிக்காமலா இருப்பாள்? என்னதான் காதலராக இருந்தாலும், வேறு ஒருத்தியை மணந்து இரண்டு வருடம் வாழ்ந்தவரை, அந்த முதல் மனைவியையும் வைத்துக் கொண்டு, உன்னையும் வைத்து காப்பாற்றுகிறேன் என்கிறவரை மணக்க - அந்தப் பெண் யோசிக்க மாட்டாளா?
அவளிடம் உன் கணவர் என்ன சொல்லியிருக்கிறாரோ!
"கொஞ்ச நாள் பல்லைக் கடித்துக் கொண்டு இரு... அப்புறம் அவளை பிறந்த வீட்டுக்கே அனுப்பி விடுகிறேன். பார், அவளிடமிருந்து மறுமணத்துக்கு கடிதம் கூட வாங்கி விட்டேன்...'
- இப்படிச்சொல்லியிருக்கலாம் அல்லது அந்தப் பெண்ணே, மணமாகி வந்த பிறகு, உன்னை விரட்டி விடலாம் என தீர்மானித்திருக்கலாம்.
அந்தப் பெண்ணை மணக்க நீ சம்மதம் அளித்ததனாலேயே உன் கணவர் உன்னுடன் பிரியமாகப் பேசுகிறார் என்றால் அந்த பிரியம் வேண்டாமே! ஒன்றைக் கொடுத்துத்தான் அன்பைப் பெற முடியும் என்றால் அது வியாபாரம் கண்ணம்மா.
மனைவியாக வந்தவளை ஏமாற்றாமல் ஏற்றுக் கொள்வோம். அவளுடன் நல்லபடியாக வாழ்வோம் என்றில்லாமல், பழைய காதலியையே நினைத்துக் கொண்டிருப்பது உன் கணவர் செய்யும் தவறு. எப்போது காதலன் ஒருத்திக்குச் சொந்தமாகி விட்டானோ - அந்தக் கணமே அவனை மறக்க வேண்டியது நல்ல பெண்ணுக்கு அடையாளம். அதை விட்டு, இரண்டாம் தாரமாய் வர அவள் சம்மதிப்பது பெரிய தவறு.
ஆதலால், இந்த வாரமலர் இதழை எடுத்துக் கொண்டு, உன் கணவரின் காதலியைப் பார். நான் கூறியவைகளைப் படித்த பின்பும், "இல்லை, என்னால் அவரை மறந்து இருக்க முடியாது' என்று அவள் அழுது ஆகாத்தியம் செய்தால், "அப்படியானால் நீயே அவரது மனைவியாக இரு; நான் விலகிக் கொள்கிறேன்...' என்று கூறி விலகி விடு.
இதற்காக அழாதே. உனக்குச் சொந்தமில்லாத எதுவும் உனக்கு வேண்டாம். அடுத்த வீட்டிலிருந்து ஒரு கரண்டி காபிப் பொடி இரவல் வாங்குகிறாய். திருப்பிக் கொடுக்கும் போது அழுவாயா என்ன? வாங்கின பொருளைத் திருப்பித் தர வேண்டியதுதானே முறை. ஆதலால், உன் கணவரிடம் கூறி, விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு விலகப்பார். அவரே, தன் மனதை மாற்றிக் கொண்டு, "நீ போதும்' என்றால், அவருடன் வாழ்க்கையைத் தொடரு. ஒரு உறையில் இரண்டு கத்திகள்... ஒரு மனிதனுக்கு இரு மனைவிகள்... எப்போதும் பிரச்னை தான்!
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (67)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajathi raja - doha,கத்தார்
27-ஏப்-201315:07:58 IST Report Abuse
Rajathi raja அவன் பிராட் சார் ..... புடிச்சி உள்ள போடுங்க ....... ரெண்டு பேர ஏமாத்துறான்....
Rate this:
Share this comment
Cancel
பொதுஜனம் - Delhi,இந்தியா
26-ஏப்-201314:59:56 IST Report Abuse
பொதுஜனம் ரெண்டாவது லட்டு திங்க ஆசைபடுறார். ம்ம்ம்ம் கொடுத்து வச்ச மகாராசன்.
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
25-ஏப்-201319:28:07 IST Report Abuse
Rajesh முதல் முழு முதற் காரணம் இந்த மாமன் ( தெரிந்தே ரெட்டை குதிரை சவாரி செய்ய விரும்பியவன் ). இவன் ஒரு கயவன், காம மிருகம் etc . இரண்டாம் காரணம் கேடுகெட்ட அக்கா மகள். மாமன் காதலிப்பது தெரிந்தும் மணமுடிக்க ஒப்புகொண்டது. இதில் பாவப்பட்டது, காதலி மட்டும்தான். ஏனெனில் காதலனின் சுயரூபம் மற்றும் காதலனின் அக்காள் மகள் பற்றி தெரியாதவள். என்னை கேட்டால் இதுவும் ஒரு வகையான வன் புணர்ச்சிதான். அக்காள் மகள் உடனடியாக சுயநலமில்லாமல் இதை போலிசுக்கு சொல்லி மாமனின் கையில் விளங்கு மாட்டவேண்டும். இப்படி எத்தனையோ மாமன்கள் இன்றும் சுபபோகமாக இந்த சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். மாத்தி யோசியிங்கள், சமுதாயத்தை சுயநலமில்லாமல் சுத்தப்படுத்துங்கள்...........
Rate this:
Share this comment
Cancel
sathish - coimbatore,இந்தியா
24-ஏப்-201315:59:12 IST Report Abuse
sathish 1) நான் செய்த தவறு, அவர் என்னிடம் அந்தப் பெண்ணை விரும்புவதாக கூறியும், பிடிவாதமாக என்னை கல்யாணம் செய்யச் சொன்னதுதான். அது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய, மன்னிக்க முடியாத தவறு. 2) அந்தப் பெண் வெளியூரில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அதை முடித்தால் என் கணவருக்கு சமமாக (படிப்பில்) ஆகிவிடும். ........ its clear she has some inferiority. He is using her weakness. he should punish with proper Chanel.
Rate this:
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
24-ஏப்-201312:37:59 IST Report Abuse
LOTUS வழக்கம் போல சரவெடி 1000 வாலா உமா .............. 5000 மைலுக்கு அப்பால் இருந்து வரும் வலுவான அஸ்த்ரங்கள்.............ரெட்டை மட்டு வண்டி பிரியரான மாமன்................experience ஆனவருக்கு மட்டுமே offer தரும் விவரமான கல்லூரி மாணவி...........பிடிவாதமே பக்கவாதமாகி போன வாசகி.........எந்த மோசமான கதாசிரியனுக்குமே தோன்றாத ஒரு எடுபடாத முக்கோண முடங்கி போன காதல் சாம்ராஜ்யம்....மன்னவனின் அந்தபுரம் படிப்படியாக கூடுகிறது..........இருக்கிற முடியெல்லாம் கொட்டி போய் விடும். ஒரு psychiatrist இதை deal செய்தால்..........தேடி தேடி பார்த்தாலும் கெடைக்க வில்லை. காதல் என்பதன் பொருளை என்ற உமாவின் வார்த்தை... பொருள் பொதிந்தது.......தூக்கி ஏறி உன் மாமாவின் காதலை / அன்பை / பாசத்தை. பார்ட் டைம் / புல் டைம் என்று வேலையில் சேர்........பார்ட் டைம் ஏதேனும் கோர்ஸ் படி...மனம் கோனும் நேரதில்லேல்லாம் நல்ல சுலோகம் படி / embroidary / ஆர்ட் வொர்க் / விஸ்காம் / com படி.... online earnings , ... tuition எடு....உருப்புடுற வேலையை பாரு தாயே ...........
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201315:54:43 IST Report Abuse
Umaதேடி தேடி பார்த்தாலும் கெடைக்க வில்லை. காதல் என்பதன் பொருளை என்ற உமாவின் வார்த்தை... பொருள் பொதிந்தது....ஸாரி லோட்டஸ், இந்த பாயிண்ட் என்னோடது இல்ல. காயத்ரியோடது. தேங்க்ஸ்பா....
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
23-ஏப்-201317:28:19 IST Report Abuse
LAX கோபுரங்கள் சாய்வதில்லையோ....?
Rate this:
Share this comment
Cancel
Ma. PARAIYARAIVON - Thoothukudi,இந்தியா
23-ஏப்-201316:25:20 IST Report Abuse
Ma. PARAIYARAIVON சரி, ஆனது ஆச்சு, அவரு ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி ரெண்டு பேருக்கும் துரோகம் பண்ணாமல் வாழட்டும். ஆனால் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு மட்டும் பண்ணிருவோம்.
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201320:09:30 IST Report Abuse
HoustonRajaநறுக்குனு சொல்லிடீங்க...
Rate this:
Share this comment
காயத்ரி - Chennai,இந்தியா
24-ஏப்-201301:15:03 IST Report Abuse
காயத்ரி அன்புத் தோழிக்கு, நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்கள், அவர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று காலத்தின் கணக்கு இருந்தால் நீங்கள் நேசித்தவரை வாழ்த்தி விலகினாலும் சேருவீர்கள், விரும்பியவரைச் சேரும் விதியில்லை என்றால் எவ்வளவு பழகினாலும் சேர முடியாது. இது கடவுள் போடும் முடிச்சு. முதலிலிருந்தே உங்கள் மாமாவின் மனதில் நீங்கள் இல்லை, அவர் திருமணத்திற்கு முன்பு வேறொரு பெண்ணைக் காதலிப்பதாகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதை மீறிப் பிடிவாதம் பிடித்துத் திருமணம் செய்தது தவறு. நீங்கள் தொடக்கத்திலேயே பிரியமானவருக்காக, பிரியமாய், நல்ல புரிதலுடன் பிரிந்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. தான் நேசித்தவர் எங்கிருந்தாலும் பிரியமானவருடன் மகிழ்வுடன் வாழட்டும் என்றே காதல் உள்ளம் விரும்பும். "பிரிவு என்பது யாராலும் மறுக்க முடியாத வலி, நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம்", ஆனால் வாழ்த்தி விடை பெறவில்லை. அடுத்தத் தவறு மாமனுடையது.மணமாகியும் மனைவியிடம் பாசமில்லாமல் உடல்சுகத்திற்கு மட்டும் பழகிக் கொண்டு அந்தப் பெண்ணுடன் இன்னொரு ஊரில் குடித்தனம் நடத்தும் போக்கு கண்டிப்பிற்குரியது. மூன்றாவது அந்தப் பெண், என்ன தான் காதலித்திருந்தாலும் மணமான, இன்னொரு பெண்ணிற்குச் சொந்தமானவருடன் வாழ்ந்து வருவது தவறானது.. ஆக மூவரும் தவறுகள் செய்திருக்கிறார்கள். வாசகியின் சுயநலத்திற்காய் மணம், மனைவி வந்த பின்பும் காதலியுடனும் சேரத் துடிக்கும் கணவர், காதலித்தவருக்கு மணமாகி விட்டது, நன்றாக வாழட்டும் என்று வாழ்த்தி விலகாமல் அடம் பிடித்து இடம் பிடிக்கத் துடிக்கிறாள் இன்னொரு பெண். உங்கள் மூவரிடமும் காதலைத் தேடிக் களைத்து விட்டேன். முதலில் தவறு செய்திருந்தாலும் மாமனின் மகிழ்விற்காகத் தன் வாழ்க்கையையே பங்கு போடத் துணிந்த இந்தத் தோழி காதலைப் புரிந்து கொண்டிருக்கிறார். கணவர் இருவரில் ஒருவருடன் வாழ முயற்சிப்பது தான் யதார்த்த வாழ்க்கைக்கு நல்லது. உங்கள் திருமணத்தைப் பதிவு செய்திருந்தீர்களா? என்று குறிப்பிடவில்லை. அவர்கள் காதலித்து ஒன்றாகக் குடித்தனம் நடத்துகிறார்கள் என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் உங்களுக்கு முன்பு அவர்கள் ஊரறிய மணமுடிக்காமல் பதிவுத்திருமணம் செய்திருக்கிறார்களா? என்ற விவரங்கள் அவசியம். இல்லை உங்களைத் தான் முதலில் மணமுடித்துப் பதிவும் செய்திருக்கிறார் என்றால் சட்டப்படி நீங்கள் தான் முதல் மனைவி, கணவர் சம்பாதிக்கும் அனைத்திலும் உங்களுக்கும் உங்களுக்குப் பிறக்கும் வாரிசுக்கும் தான் அனைத்து உரிமைகளும் உண்டு. இதை எல்லாம் அந்தப் பெண் யோசிக்காமல் இருந்திருப்பாரா? மணமான போதும் தன் காதலரை விட்டுத் தராத பெண் தன் உரிமைகளை எப்படி விட்டுக் கொடுப்பார்? தன் பாதுகாப்பிற்காய் துணிச்சலாய் இறங்குவார். கூடிய சீக்கிரமே உங்களை விவாகரத்து செய்யச் சொல்லி நச்சரிப்பார், அதில் வெற்றியும் பெறுவார். இரட்டைக் குதிரையில் சவாரி செய்யலாம் என்று நினைக்கும் மாமனது எண்ணம் சாத்தியமில்லாதது. சுயநலமானது. வாழ்க்கை விளையாட்டல்ல. இரு பெண்களுக்குமிடையில் போராட வேண்டி இருக்கும். உரிமைச்சிக்கல், உணர்வு ரீதியான போராட்டங்கள் என்று சந்திக்க வேண்டி வரும். உதாரணமாக மூத்தாருக்குப் பிறக்கும் பிள்ளையை வெளியில் கூட்டிக் கொண்டு போவாரா? இளையாள் பிள்ளையுடன் சுற்றுவாரா? வெவ்வேறு ஊரில் தங்கிக் கொண்டாலும் நாளை பெண் என்றாலோ பையன் என்றாலோ வளர்ப்பிலும் எதிர்காலத்திலும் பிரச்சினைகள் தோன்றும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள், படிப்பு, வாழ்க்கைக்கான செலவு. இப்படி நிறைய. அவர்கள் திருமணப்பேச்சு எழும் வேளையிலே இவர் அப்பாவிற்கே இரண்டு மனைவிகள், இந்த வீட்டில் எப்படி பெண் கொடுப்பது? எடுப்பது போன்ற சிக்கல்கள். உங்களுக்கு உங்கள் மாமனுடன் வாழ வேண்டும், வாழ்க்கையை இன்னொருத்தியுடன் பங்கு போட விருப்பமில்லை என்றால் சட்டத்தின் உதவியை நாடலாம். அப்படி இல்லை என்றால் விவாகரத்து செய்து விட்டு தனியே செல்வது உத்தமம். குழந்தை இல்லாததால் புரிந்த துணையை மறுமணமும் செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதனால் விலகுவது புத்திசாலித்தனம். காதலி, மனைவி இருவரில் ஒருவருடன் மட்டுமே வாழ வேண்டும். அதைக் கணவரும் முடிவு செய்ய வேண்டும், அதை விட்டு விட்டு இருவருடன் சேர்ந்து வாழலாம் என்று சொல்வது அபத்தம். ஒரு புடவையைச் சொந்த அக்கா, தங்கைக்கே விட்டுக் கொடுக்காதது பெண் மனம், நாத்தனார், மாமியாருக்குள்ளே உரிமைப் போராட்டங்கள் வரும், எப்படி இந்தப் பெண்ணால் தன் கணவரைச் சொந்தம் கொண்டாடுபவரை அனுசரித்துக் கடைசி வரை வாழ முடியும்? இரு தார மணம் சட்டம் அங்கீகரிக்காத ஒன்று. இரண்டு பேரைத் திருமணம் செய்தால் அதற்கே வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பலாம். நல்ல வழக்கறிஞரைப் பெரியவர்கள், நலம்விரும்பிகளுடன் சந்தித்து என்னென்ன செய்யலாம் என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்பாவியாய் இருக்காதீர்கள். பெண்களுக்குச் சட்ட விழிப்புணர்வு அவசியம். உணர்ச்சிவயப்படாமல் அழாமல் நிதானமாகச் சிந்தித்து அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். ...
Rate this:
Share this comment
Cancel
JOY - Chennai,இந்தியா
23-ஏப்-201314:37:34 IST Report Abuse
JOY நான் மிகவும் யோசிச்சு ஒன்றை சொல்கிறேன். பலரின் எதிர்ப்பு இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் கொஞ்சம் யோசிச்சு பார்த்தால் இந்த வாசகி எடுத்த முதல் முடிவு மிகவும் தவறு. நான் நினைகிறேன் இவர் மீது உள்ள ஆசையில் அவரின் காதல் தெரிந்தும் பறித்து எடுத்து பின்பு அவர் மாறி விடுவார் என்று இவர் நினைத்திருப்பார்..சரி நடந்ததை விட்டு விடுவோம் ,அவர் எடுத்த இரண்டாவது முடிவு ,அது சரியா? கண்டிப்பாக.. காரணம் வாசகியின் கடிதத்தில் இருந்து குறிப்பிடுகிறேன்..." என்னை அவர் வேலை பார்க்கும் இடத்திற்கு, கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொல்லி விட்டார்"ஏன் தெரியுமா அவள் இருக்கும் ஊரில் அதாவது இவர் வேலை பார்க்கும் ஊரில் ,வாரத்தில் 5 நாள்கள இவர் தங்கும் இடத்தில இவரும் இவர் காதலியும் சேர்ந்து ஒரே விட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்..அந்த ஊரில் எல்லாருக்கும் தெரிந்த ஜோடி இவர்கள் தான். அவர்களுக்கு இவர்கள் தன் உண்மையான ஜோடி ..அதில் குழப்பம் இல்லாமல் இவர் பார்த்து கொள்கிறார். இப்படி முதல் மனைவியாக இருந்தும் அந்த தகுதி இல்லாமல் சின்ன விடு போல எப்போதாவது வந்து போகிரதுக்கு ,அவர் நல்ல வேலைளும் பிற குணத்தில் நல்லவராக படுகின்றதால் தான் இவரை வாசகி போட்டி போட்டு மனந்திருப்பாள் ..அதலால் அவரின் இந்த யோசனைக்கு உடன் படுவதால் தனக்கும் மனைவியின் அங்கீகாரம் எல்லாருக்கும் முன்பாக கிடைப்பதும் அல்லாமல் அவரின் அன்பும் கணவனின் அரவணைப்பும் எபோதும் கிடைக்கும் ..குறிப்பாக வரும் பெண்ணிடம் அன்பாக இருந்து அவரை ஏற்று கொள்ளும் பக்குவமும் வேண்டும்..உங்கள் இடத்தையும் விட்டு கொடுக்காமல் பார்த்து கொள்ளுங்கள் ,தகுந்த treatment எடுத்து நீங்களும் ஒரு குழந்தைக்கு தாயாவது அவசியம் ..எனக்கு தெரிந்த வரைக்கும் அவர் நீங்கள் கருத்தரிக்காமல் இதுவரை ஜாக்கிரதையாக இருந்திருப்பார் ...இனி அவர் அன்பு உங்கள் வசம் திரும்பும் பொது நிங்கள் தாயாவீர்கள் ..இனி எல்லாம் நன்றாக நாடக்கும் என்று நம்புவோம் ..அவரை அவரிடம் இருந்து நிங்கள் தனியாய் பிரித்து எடுப்பது நடக்காதது ,நடந்தாலும் அவர் உங்களையும் வெறுப்பார்.. அதற்கு இருவரும் ஆனந்தமாக இருக்கலாம் .அன்பு தோண்ட தோண்ட அதிகமாகுமே தவிர குறையாது...அதலால் உங்கள் சூழ்நிலையில் இருவரும் அதனை பகிர்ந்து கொள்வதை புத்திசாலிதனம் ..இரண்டாவதாக வாய்க் மேல் படித்து முடித்த பின்பு அவள் யோசித்தால் உங்களுக்கு லக் ,கணவர் அவளை வெறுத்து உங்களிடம் முழுமையாக வருவர்..இல்லை என்றாலும் என்றும் நிங்கள் தான் 1ச்ட்..
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201320:18:57 IST Report Abuse
HoustonRajaஜாய் அவர்களே, நீங்கள் மாற்றார் உணர்வு அறிந்து (Empathy யுடன்) சொல்ல வருவது நடக்கலாம் - அந்த ஆண் ஒழுக்கமானவனாக இருந்தால். ஆனால், ஒரு குழந்தை பிறக்கும் முன்பே இவ்வாறு இரு பெண்களுடன் உறவு வைத்திருக்கும் ஒருவன், நாளை இரு குடும்பங்களின் சுமைகளால் "Sudhir Kumar" கீழே சொல்வது போல மூன்றவதாக இன்னொருத்தியை நாடலாம். அப்போது இவ்விருவரின் நிலைமையும், அவர்தம் குழந்தைகளின் நிலைமையும் ரொம்ப மோசம் ஆகிவிடும்....
Rate this:
Share this comment
JOY - Chennai,இந்தியா
24-ஏப்-201317:18:36 IST Report Abuse
JOYநான், ஒருவர் இருவரை திருமணம் செய்வதை ஆதரிகவில்லை ,ஆனால் இவர்கள் சூழ்நிலையில் இது சரியாக தோன்றுகிறது ...எனக்கு தெரிந்து இருவரை மணந்து இருவருக்கும் உண்மையாக நேசமாகவும் இருக்கும் சிலரை தெரியும் ,அவர்கள் இருவர் பிள்ளைகளுக்கும் ( முதல் மனைவியின் இரண்டாவது மனைவியின் ) இப்பொது திருமணம் கூட நடத்தி முடித்து விட்டார் .. எல்லோரும் ஒரே வீட்டில் சகோதர சகோதிரி பாசத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள்..லெட்ஸ் ஹோப் தி பெஸ்ட் ஹியார் டூ...
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
24-ஏப்-201318:28:08 IST Report Abuse
Umaஹூஸ்டன் ராஜூவின் கருத்தை ஆமோதிக்கிறேன். ஜாய், நல்லா யோசிங்க. எப்படி இப்படி சொல்லிட்டீங்க? ஒரு பொண்ணோட உணர்வுகள் புரியாதா? எல்லா உயிருக்குமே தன் துணை தனக்கு மட்டுமே சொந்தம்னு இருக்கும். யாரு கூட பங்கு போடவும் மனசுவாராது. சில மனைவிங்க புருஷன் தன் தங்கச்சி பேர சொல்லி கூப்பிட்டாலே உன் மனசுலே அவ தான் இருக்காளானு பொங்குவாங்க. அப்படி ஒரு பொஸஸ்ஸிவ்வான மனசு பொண்ணுங்களுக்கு. ஒரு பேச்சுக்கு கேக்கிறேன். இப்போ இவரோட பொண்டாட்டி தன்னோட படிச்சவன், வேல பார்க்கிறவன் கூட சாதாரணமா சிரிச்சுப் பேசினா தாங்குவாங்களா? அதுக்கே எரியும்ல? அப்போ இந்த பொண்ணு மட்டும் வாழ்க்கைய பங்கு போடணும்னு சொல்லறது மிருகத்தனமா இல்ல? அந்தாளுக்கு புத்தி வேணாம்? ராத்திரி எப்படி படுத்துப்பாங்க? ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீடா? இத நினைச்சா இன்னும் கேவலமா இல்ல. இதே இந்த பொண்ணு மனசுலே வேற ஒருத்தன் இருந்து நான் ரெண்டு பேரயும் வச்சு வாழறேன்னா எப்படி இருக்கும்? கற்பு ரெண்டு பேருக்கும் உண்டு தானே, அதுலே பொண்ணுனா பொறுத்து அட்ஜஸ்ட் பண்ணி வாழணும்னு சொல்லறது எப்படி நியாயமாகும்? ரெட்டை வால் குருவி படம் போல ரெண்டு புள்ளங்களும் ஒண்ணா புள்ளத்தாச்சி ஆச்சுனா, மோகன் ஸ்டைல்ல இந்த ஊருக்கும் அந்த ஊருக்கும் ஓடி ஓடி சேவகம் செய்வாரா? இல்லை. வாழ்க்கை விளையாட்டா போச்சா? நான் இந்த பொண்ணோட நிலையில இருந்தா, ஒன்னு அந்த பொண்ணுகிட்டே போட்டு கொடுத்து பிரளயமே ஆனாலும் உண்டு இல்லைனு பண்ணிருப்பேன். அப்படி இல்லையா ஒத்து வரலையா, மன ரீதியான போராட்டத்துக்கு பதில் சொல்லுனு சட்டப்படி போயிருப்பேன். என்ன ஆணவம்? திமிர்? ஆண் என்ற மமதை? பொண்ணுங்க எல்லாம் கிள்ளுகீரையா போச்சா? நிறைய விஷயம் இருக்கு ஜாய். ஒரு உறையில் ஒரு வாள் தான் இருக்க முடியும். இருக்கணும். இவுக திருந்தி வர்றதுக்குள்ளே அந்த புள்ள கிழவியாச்சுனா, இழந்த சந்தொசம், இளமை திரும்ப வருமா? சிந்தின கண்ணீரு?கஷ்டமா இருக்கு. ஆனா காயத்ரி அவர்கள் சொன்ன இந்த கருத்திலேர்ந்து மாறுபடறேன். இவனுங்களெல்லாம் டைவர்ஸ் கொடுத்து சொகுசா வாழ விட கூடாது. இப்போ இவங்க வாழ்க்கையே போச்சுல்ல? அப்போ அதுக்கு பதிலு???? அதனால கேஸ் போட்டு உண்டு இல்லைனு நிம்மதியை குலைக்கணும், அதுவும் தப்பான அர்த்தத்துலே சொல்லல. வலி என்னனு உணரணும். பொண்ணுங்க பயந்து அடங்கினது மலையேறிப் போச்சு. இப்போ கொடுமை பண்ணினா பொங்குவாங்க,பொசுக்குவாங்கனு காட்டணும், அவ்வளவு தான். நாமலாம் மாஞ்சு மாஞ்சு எழுதறோம், சம்மந்தப்பட்ட பொண்ணு வாசிச்சா நல்லாருக்கும். ம்ம். ...
Rate this:
Share this comment
Cancel
ramachandran n - madurai,இந்தியா
23-ஏப்-201313:48:12 IST Report Abuse
ramachandran n தயவு செய்து இந்த பகுதியை தடை செய்யவும். ஆலோசனைகளை பெரும்பாலோனோர் படிப்பதில்லை, கேட்பதுவுமில்லை. இப்படியும் கலாச்சார சீர்கேடுகளை இந்த பகுதி ஊக்குவிக்கிறது. அவரவர் வாழ்க்கை அவர்கள் கையில்.
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
23-ஏப்-201317:27:13 IST Report Abuse
LAXபடிக்காமதான் இத்தனை பேர் பொருத்தமான கருத்துக்களை மாஞ்சு மாஞ்சு எழுதுறாங்கன்னு சொல்ல வறீங்களா....?...
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201320:05:50 IST Report Abuse
HoustonRajaதிரு ராமசந்திரன் அவர்கள், இந்த பகுதி எப்படி கலாச்சார சீர்கேடுகளை ஊக்குவிக்கிறது என்று சற்று விளக்கமாக சொன்னால் உதவியாக இருக்கும். பிரிச்சனைகளை விவாதித்தால், விழிப்புணர்ச்சியும் (AWARENESS) செல்லத்தக்கதாக்கலும் (VALIDATION) சமூகத்தில் வளர்ந்து ஒரு ஆரோக்கியமான சூழலே உருவாக உதவும். புரிதலும் கருணையுமே, அமைதிக்கான திண்ணமான வழி. மாறாக, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது அன்பரே....
Rate this:
Share this comment
Cancel
rajasekar - abbasiya,குவைத்
23-ஏப்-201312:58:20 IST Report Abuse
rajasekar இரு பெண்கள் ஒரு ஆணை அடிமையாக்க முயற்சிக்கிறார்கள் .... ஒரு மனிதனுக்கு இரு மனைவிகள்... எப்போதும் பிரச்னை தான்
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
24-ஏப்-201318:11:38 IST Report Abuse
Umaஎன்ன சார். இரு பெண்கள் அடிமையாக்கிறாங்களா? எப்படி சொல்லறீங்க? ஆணினம் என்பதாலா??? இந்த ஆணுக்கு கூழுக்கும் ஆச, மீசைக்கும் ஆச, பொண்டாட்டியோட கூட படுத்தாச்சு, அதனால இவங்கள விடவும் மனசில்ல, அங்க மனசார காதலிச்சவ, அவளையும் கட்டிக்கணும்னு திட்டம் போடறார். இந்த பொண்ணு பண்ணினது தப்பாவே இருக்கட்டும், ஏன் கட்டணும்? சரி, கட்டியாச்சு, மனசுலே லவ் பண்ணினவ தான் இருக்கானா ஏன் தொடணும்??? அப்போவே டைவர்ஸ் பண்ணிட்டு பிடிச்சவள தான் கட்டுவேன்னு இருக்கலாமே. நல்லா வாசிங்க, அந்த பொண்ணு தெளிவா சொல்லிருக்கு, படுத்துப்போம், பகல்ல பாசமா இல்லைனு. அப்போ என்ன அர்த்தம்? இது தப்பு இல்லையா? இந்த ஆணோட புத்தி தப்பான புத்தி. நம்பி வந்தவ கூடவும் வாழ ஆசை, காதலிச்சவளையும் கட்ட ஆசை. இதான் குரூர புத்தி. ...
Rate this:
Share this comment
rajasekar - abbasiya,குவைத்
25-ஏப்-201312:46:29 IST Report Abuse
rajasekarஎந்த ஆண்மகனும் தப்பான புத்தியோடும்... நீங்கள் கூரும் குரூர புத்தியோடும் பிறப்பதில்லை.. நீங்கள் கூறும் புத்தி பெண்களுக்கும் நிறையவே உண்டு..உங்கள் பார்வை ஒருவன் இருபெண்களுக்கு ஆசைபடுகிறான் யென்பது..என்பார்வை இருபெண்கள் ஒரு ஆணை விரும்புகிறார்கள்..அப்போ அவள்களுக்கும் குரூர புத்திதானே.. இது மூன்று பேரோட வழக்கை அவங்க முண்டுபேரும் ஒன்ன உக்காந்து பேசி ..யோசிச்சி யார் யார்க்கு எந்த எந்த வழக்கை வழாவேனும்னு அவங்கதான் முடிவேடுக்கணும்..சும்மா எதுகை மொனைல மாங்கு மாங்குன்னு பக்கம் பக்கமா கட்டுரை எழுதறத நிறுத்துங்க முதல்ல.. ...
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201322:44:52 IST Report Abuse
Umaநான் ஆண்களை திட்டவும் வரல, பெண்களை போற்றி புகழுங்கனும் சொல்லலை. சரி. ஒரு ஆண்..இரண்டு பேரு லவ் பண்ணறாங்க, ஆனால் இந்த ஆண் மனசுலே கல்யாணத்துக்கு முன்னாடியே காதலி இருந்திருக்காங்க. அப்போ என்ன பண்ணிருக்கணும், அக்கா மகள கட்ட மாட்டேன்னு ஒத்த கால்ல நின்னாச்சும் லவ்வுலே ஜெயிச்சிருக்கணும். அது தான் வருத்தம். அப்படி பண்ணாம இந்த பொண்ணை கட்டும் போது இவ கூடவாச்சும் வாழணும், ரெண்டு பேரோட வாழ திட்டம் போடறது தான் குரூர புத்தினேன். மிச்சபடி இந்த பொண்ணுங்க செஞ்சதையும் நியாயப்படுதலையே. உங்களுக்கு ஏன் சார் அவ்வளவு எரிச்சல்? படிக்க கஷ்டமா இருந்தா படிக்காதீங்க. ஆனா நீங்க சொன்ன ஒரு பாயிண்ட் பிடிச்சது. அவங்க மூணு பேரும் உட்கார்ந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கலாம். நான் பொதுவா நிறைய எழுதறதில்ல. இந்த பிராப்ளம்ஸ் படிச்சு கொந்தளிச்சுப் போயி எழுதினேன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.