நாமும் செய்யலாமே; மின்சாரம் கிடைக்குமே!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2013
00:00

பழைய பேப்பர், புட்டிகள், குப்பைகள் கொடுத்துவிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்கலாம். "எங்கே?' என்று ஆவலாய் கேட்கிறீர்களா? இது, இங்கு அல்ல... ஸ்வீடன் நாட்டில், இந்த முறை அமலில் உள்ளது. அங்கு, ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களிடமிருந்து, 1 கிலோ குப்பை பத்து ரூபாய் வீதம் விலைக்கு வாங்குகிறது. இப்படி பொதுமக்களிடம் இருந்து 45 லட்சம் டன் குப்பையைப் பெற்று, அதை மின்சக்தியாக மாற்றுகிறது அந்நாடு. இதன் மூலம், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளுக்கு, மின்சக்தி வழங்கப்படுகிறது.
குப்பைகள் போதவில்லை என்று, வெளிநாட்டிலிருந்து எட்டு லட்சம் டன், குப்பை கழிவுகளை, இறக்குமதி செய்கிறது. இதில், நார்வே நாடு தான், டன் டன்னாக குப்பையை ஏற்றுமதி செய்கிறது. அதே போல, மெக்ஸிகோ நாட்டில், இரண்டு கோடி மக்கள் வசிக்கின்றனர். மக்களிடமிருந்து, குப்பை, பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புட்டிகள் வாங்கப்படுகிறது. அதற்கு பதிலாக, காய்கறிகள் வாங்கிக் கொள்ளலாம். குப்பை பிரச்னையும் தீர்கிறது; மின்சாரமும் கிடைக்கிறது. நம் நாட்டிலும் இதைப் பின்பற்றினால், "கரன்ட் கட்' இருக்காதே!
ஜோல்னா பையன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201306:29:19 IST Report Abuse
Uma ஆஹா. இப்படி வழி இருக்கும் போது திட்டம் போடலாமே. பாவம் படிக்கிற பசங்க எல்லாமே மின்சாரம் இல்லாம கஷ்டப்படும் போது இந்த முறை உதவியா இருக்குமே.
Rate this:
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
21-ஏப்-201318:03:40 IST Report Abuse
News Commitor இந்த விசயத்த மொதல்ல நம்ம கேரளா அரசாங்கத்துக்கு சொல்லுங்கப்பா. அவங்களுக்கும் உதவுன மாதிரி ஆகும், நம்மளுக்கும் தொல்ல இல்ல.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
21-ஏப்-201305:50:24 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே பேப்பர் சரி, பிளாஸ்டிக் என்று கூறினீர்களே, அதை வைத்து எரித்தால் தான் உங்களால் வெப்பம் உண்டாக்க முடியும், பிளாஸ்டிக் எரித்தால் ஏற்படும் மாசு பற்றி கணக்கில் கொள்ளுவீர்களா?
Rate this:
Share this comment
Hariprasad Govindarajan - Uppsala,சுவீடன்
21-ஏப்-201314:23:40 IST Report Abuse
Hariprasad Govindarajan@Above, they don't burn plastic.... they use a different technology to recycle it.......
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
22-ஏப்-201304:11:02 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேநன்றி ஹரி அவர்களே, கூகுள் பண்ணி தெரிந்து கொண்டேன். ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.