இந்திய இணைய வர்த்தக தளங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
00:00

இணையத்தில் மூலம் வர்த்தகம் அதிகரிக்கும்; இனி பொருளாதார முன்னேற்றம் இணைய வர்த்தகம் மூலமே செழிப்புறும், சிறப்புப் பெறும் என்று பலரும் கூறி வருகின்றனர். இணைய தளம் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு இன்னும் நம் மக்களின் நம்பிக்கை உறுதிப் படவில்லை. என்னதான் இருந்தாலும், ஒரு பொருளைப் பார்த்து, அதனைத் தடவி, முகர்ந்து பார்த்து, தட்டிப் பார்த்து வாங்குவதுதான் நம் மக்களின் வழக்கம். இந்நிலையில் இணையத்தின் மூலம் பொருட்களை வாங்குவது, சில தளங்களில், விலை குறைவாக உள்ளது என்ற நிலை, நம் மக்களை இணைய தளங்கள் பால் ஈர்த்துள்ளது. இங்கு, இந்தியாவில் இயங்கும் வர்த்தக இணைய தளங்களில், முதல் ஆறு இடங்களில் உள்ள தளங்களைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன. இவற்றின் மூலம் வர்த்தகம் மேற்கொள்வதை அவர்களே முடிவு செய்திட வேண்டும்.
1. பிளிப்கார்ட் டாட் காம் (Flipkart.com): பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அமைத்துள்ள வர்த்தக இணைய தளம். 2007 முதல் இயங்கி வருகிறது. நூல்களை விற்பனை செய்வதில் தொடங்கி, தற்போது டிஜிட்டல் சாதனங்கள் உட்பட பலவகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், நெட் பேங்கிங், கிப்ட் வவுச்சர், பொருள் வழங்கும்போது பணம் செலுத்தல் எனப் பலவகைகளில் பொருட்களுக்கான பணத்தைப் பெற்றுக் கொள்கிறது. இணைய தளங்களின் செயல்பாட்டினை, பன்னாட்டளவில் ஆய்வு செய்திடும் அலெக்ஸா நிறுவனம் இதன் செயல் திறன் பற்றிச் சில குறிப்புகளைத் தந்துள்ளது. இந்த தளத்திற்கு வரும் ஒரு வாடிக்கையாளர், சராசரியாக ஒரு நாளில் எட்டு தனிப் பக்கங்களைக் காண்கிறார். அதிகம் பேர் பார்க்கும் தளங்களில், உலக அளவில் இந்த தளம் 233 ஆவது இடத்தினையும், இந்திய அளவில் 13 ஆவது இடத்திøனையும் பெற்றுள்ளது. இந்த தளம், 8,207 தளங்களில் லிங்க் பெற்றுள்ளது.
2. இபே.இன் (Ebay.in): பன்னாட்டளவில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் இதனை நிர்வகிக்கிறது. இதில் பொருட்கள் விற்பனையுடன், ஏலம் வழியாகவும் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. நாம் இதில் பொருட்களை விற்பனையும் செய்திடலாம். 1995 முதல் செயல்படுகிறது. இதன் இந்தியப் பிரிவு மிகச் சிறப்பாக, இந்திய இணைய வர்த்தக தளங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. அலெக்ஸாவின் கணிப்புப்படி, ஒரு வாடிக்கையாளர், இந்த தளத்தில் சராசரியாக 11.8 தனிப் பக்கங்களைக் காண்கிறார். உலக அளவில் 371 ஆவது இடத்தையும், இந்திய அளவில் 23 ஆவது இடத்தையும் இது பெற்றுள்ளது. இந்த தளம், 3,977 தளங்களில் லிங்க் பெற்றுள்ளது.
3. ஜபாங் டாட் காம் (Jabong.com): ராக்கெட் இன்டர்நெட் என்னும் நிறுவனத்திற்குச் சொந்தமான இணைய வர்த்தக தளம் இது. நாகரிக சாதனங்கள் மற்றும் லைப் ஸ்டைல் என அழைக்கப் படுகிற பொருட்களை இந்த தளம் விற்பனை செய்கிறது. நவ நாகரிக உடைகள், காலணிகள், இவற்றிற்கான துணை சாதனங்கள், அழகுப் பொருட்கள், நறுமணத் திரவியங்கள், வீடுகளுக்கான சாதனங்கள் என இந்த தளம் விற்பனை செய்திடும் பட்டியல் நீள்கிறது. சென்ற ஆண்டு ஜனவரியில் இந்த தளம் விற்பனையைத் தொடங்கியது. இதன் சலுகை விற்பனை பற்றி அவ்வப்போது தெரிந்து கொள்ள, இந்த தளம் சென்று உங்கள் மின் அஞ்சல் முகவரியினைப் பதிந்து கொள்ளலாம். அலெக்ஸாவின் கணிப்புப்படி, தேடுதல் சாதனங்களில் 6 சதவீதம் தேடுதல்கள், இந்த தளம் குறித்து அமைந்துள்ளன. பன்னாட்டளவில் 706 ஆவது இடத்தினையும், இந்திய அளவில் 47 ஆவது இடத்தையும் இந்த தளம் கொண்டுள்ளது. இந்த தளம், 1,294 தளங்களில் லிங்க் பெற்றுள்ளது.
4. ஸ்நாப்டீல் டாட் காம் (Snapdeal.com): டில்லி ஐ.ஐ.டி.யில் பயின்ற பொறியாளர்களால், 2010 முதல் செயல்படுத்தப்படும் தளம் இது. தினசரி விற்பனையில் தொடங்கி, இன்று வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்திடும் தளமாக இயங்குகிறது. தினந்தோறும் ஏதேனும் பொருட்களைச் சலுகை விலையில் தருவது இதன் சிறப்பாகும். இத்தகைய சிறப்பு தள்ளுபடி பொருட்களைத் தினந்தோறும் அறிய, இதன் தளத்தில் உங்கள் மின் அஞ்சல் முகவரியினைப் பதிவு செய்து கொள்ளலாம்.
5. ஹோம் ஷாப்18 டாட் காம் (Homeshop18.com): புதுமையான பொருட்களை இந்த தளம் வழியிலும், தொலைக் காட்சி சேனல்களில் விளம்பரமாகவும் இந்த தளம் விற்பனையை மேற்கொள்கிறது. 24 மணி நேர விற்பனை சேனலாக 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது தொடங்கப்பட்டது. பத்து சதவீதம் பேர் தங்கள் தேடுதல்களில் இதனைத் தேடி அறிவதாக அலெக்ஸா அறிவித்துள்ளது.
6. மேக் மைட்ரிப் டாட் காம் (MakeMyTrip.com): முந்தைய தளங்களைப் போல பொருட்கள் விற்பனையை இந்த தளம் மேற்கொள்ளவில்லை என்றாலும், இணையதளம் மூலம் மக்கள் விரும்பும் சிலவற்றைப் பெற்றுத் தருவதால், இந்தப் பட்டியலில் இந்த தளம் இடம் பெறுகிறது. பன்னாடு மற்றும் இந்திய விமானப் பயணங்களுக்கான டிக்கெட், பஸ் டிக்கட், ஹோட்டல் அறை ஏற்பாடு, விடுமுறைப் பயணங்கள் என பயண முறை விற்பனையை இந்த தளம் பெரிய அளவில் மேற்கொள்கிறது. 2,000 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த தளம், தொடர்ந்து தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. இந்தியாவில் 20 நகரங்களில் இதன் அலுவலகங்கள் இயங்கு கின்றன. நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய வெளிநாட்டு நகரங்களிலும் இதற்கு கிளைகள் உள்ளன. அலெக்ஸாவின் கணிப்புப்படி, பன்னாட்டளவில் இந்த தளம் 929 ஆவது இடத்தையும், இந்தியாவில் 64 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த தளம், 4,802 தளங்களில் லிங்க் பெற்றுள்ளது.
மேலே குறிப்பிட்ட தளங்களுடன், வாசகர்கள் கீழ்க்காணும் தளங்களையும் காணலாம். தளங்களின் பெயர்களும், பன்னாட்டளவிலும், இந்திய அளவிலும் அவை தற்சமயம் பெற்றுள்ள இடவரிசை எண்களும் கீழே தரப்படுகின்றன.
7. Myntra.com: இடவரிசை 1,032/73
8. Yebhi.com: இடவரிசை 1,277/89
9. Tradus.com: இடவரிசை 1,330/92
10. Shopclues.com : இடவரிசை 2,050/129
11. Infibeam.com: இடவரிசை 1,966/135
12. Naaptol.com: இடவரிசை 1,809/136

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X