Advertisement
அனைவரும் ரசித்து மகிழ்ந்த "ரங்கநாத வைபவம்'
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
00:00

பூலோக வைகுண்டம் என, போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு, அழகே ரங்கநாதனின், அந்த பிரமாண்டமான சயனக் கோலம். அதைக் கண்டு ரசித்த ஆழ்வார்கள் தங்கள் உடல், பொருள், ஆவி என, அனைத்தும் அவனுள் கரைந்து எழுதிய பாசுரங்கள் ஏராளம்.
கார்த்திக் சபா ஆதரவில் கம்பீர நடை போட்ட, ரங்கநாத வைபவ நிகழ்ச்சியின் கதாநாயகிகளான அபிராமி ஸ்ரீராம், அபராஜிதா ஸ்ரீராம், தங்கள் நடனத்தால் ஸ்ரீரங்கநாதனை மயிலைக்கு பெயர்த்து கொண்டு வந்தனர் என்றால் அது மிகையில்லை. இவர்கள், மறைந்த பழம் பெரும் நடிகர், "காதலிக்க நேரமில்லை' புகழ் ரவிச்சந்திரனின் பேத்திகள். ரசிகப் பெருமக்களுக்கு, கங்கை நீரை செம்பில் அடக்குவது போல், மூன்று பாகங்களாக பிரித்து, முதல் பாகம் ஸ்ரீரங்கநாதனின் பெருமை, இரண்டாம் பாகத்தில் ரங்க விமானம் ஸ்தாபனம், மூன்றாவது பகுதி ரங்கநாத வைபவத்தின் சிறப்பு சேவைகள் நடனத்தில் தரப்பட்டன.
முதல் பாகத்தில் ரங்கநாதனின் பெருமையை ரசிகர்களின், கண் முன் கொண்டு நிறுத்த, மேடையின் பின் திரை ஸ்ரீரங்கம் கோவிலின் அமைப்பும், ரங்கநாதரும் ரங்கநாயகியும் இணைந்த திருக்கோலத்தை கொடுத்தனர். அதன் முன் அபிராமியும், அபராஜிதாவும் தங்கள் நடனத்தை துவக்க, நாம் அரங்கனின் ராஜதர்பாரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஸ்ரீரங்கநாத ÷க்ஷத்திரத்தின் கோவில் மணிகள் ஒலிக்கின்றன. "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்று பாசுரம் மடை திறந்த வெள்ளமாய் காவிரியும் கொள்ளிடமும் தன் புனிதத்துவத்தை ஸ்ரீரங்கத்தைத் தொட்டுப் பெற்றது என்று சொல்ல, சகோதரிகள் ரங்கனின் பெருமையை விவரிக்கத் துவங்கினர்.
நீர் இன்றி அமையாது உலகம், நெருப்பின்றி உணவும், காற்றின்றி உயிரும், நிலமின்றி உடலும், வானின்றி மழையும் என்று பஞ்ச பூதங்கள் அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு கிடந்தாய் ஸ்ரீரங்கா என்று, ரங்கனை ஆதிசேஷன் குடை விரிக்க, ரங்கநாதன் நம்மை அருள்பாலிக்கும் காட்சிகள் அருமை. பச்சைமாமலை போல் மேனி, பவள வாய் கமல செங்கண்ணின் பெருமையை பக்கவாத்ய கலைஞர்கள் நெக்குருகி கொடுக்க, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளாய் வந்து ஸ்ரீரங்கனின் பெருமையை இன்னும் ஒரு படி மேல் சென்று "மாலே மணிவண்ணா' பாசுரங்களுக்கு நடனத்தை பொழிந்தார் அபராஜிதா. சர்வம் வேதமயம் சகலமும் நாத மயம் என, அனைத்திலும் பெரிது ஸ்ரீரங்கம் என்று முதல் பாகம் நிறைவுற்றது.
ஸ்ரீரங்க விமானம் ஸ்தாபிதம் எப்படி நடைபெற்றது என்பது கதையாக பலருக்கு தெரிந்தாலும் தெரியாத புராணம். அதை விளக்கும் வண்ணமாக அமைந்தது இரண்டாவது பகுதி. அயோத்தியில் முடிசூட்டி பரிசுகளை வழங்கிய போது விபீஷணன், ராமனையே பரிசாக கேட்க, அதில் இருந்து ஸ்ரீரங்க விமானம் ஸ்தாபிதமான புராணக் கருத்துக்களை குறும்புடன் சொல்லி
நடனமாடினர். அதில் முக்கிய காட்சியான முக்கால பூஜை. இதில், உச்சிக்கால பூஜையின்போது, விபீஷணன் கையில் இருந்த ரங்க விமானத்தை கீழே வைத்து, நதியில் புண்ணிய நீராடி, மீண்டும் எடுக்க முற்பட்டபோது, அது வராமல் போக, அதை பெயர்த்து எடுக்க எடுத்த அத்தனை முயற்சிகளும் தோற்றுப் போக, கதறிய காட்சியை அபராஜிதா, நடனத்தில் சொன்ன விதம் சிறப்பானது.
இது தான் ராமனின் சித்தம் போல என்று, அங்கிருந்து பிரிய மனம் வராமல், விபீஷணன் விடைபெற்ற காட்சி அற்புதம். ராமாயணத்தை ரத்தினச் சுருக்கமாக சொல்லி, ரங்கநாத வைபவத்தின் கருப்பொருளை நன்கு புரியும்படி கொடுத்தது சிறப்பு.
நிறைவுப் பகுதியில் ஸ்ரீரங்க வைபவம் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் பள்ளி கொண்டிருக்க, நான்மறைகள் சாமரம் வீச, முன்பக்கம் பெரிய திருவடியாகிய கருட னின் மீது கால் பதித்த கோலமும், பின்புறம் சிறிய திருவடியாகிய அனுமனின் மீது கால் பதித்து நின்ற கோலத்தை தத்ரூபமாக படம் பிடித்து காட்டினர் இச்சகோதரிகள். இதில் ஆடியது இருவர் என்றாலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் காட்சிப் பொருளாக வந்த வண்ணம் இருக்க, இவர்கள் சளைக்காமல் சர்வ சாதாரணமாய் ஆடி, அதை ரசிகப் பெருமக்களும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரும் கண்டு களித்து ஆசி கூற, நிறைவடைந்தது.
ஸ்ரீரங்கநாத வைபவத்திற்கு, கதைக் கரு மற்றும் அரங்கனின் முக்கிய பிரவேசப் பாடல்களை ஸ்ரீகவி எழுதி கொடுத்து, அதற்கு இசை அமைத்து பாடியிருந்தார் கானக்குயில் ராதாபத்ரி. நடன அமைப்பு மற்றும் நட்டுவாங்கம் குரு கிருஷ்ணகுமாரி நரேந்திரன்.
சிறப்பாக அரங்க அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை செய்தது, மகள் வைஜயந்தி நரேந்திரன்.
வயலினில் ஸ்வர ஜாலங்களை குழைத்தளித்தவர் எம்.எஸ்.கண்ணன். குழலூதியது கண்ணன் தேவராஜன். ஜதிகளின் ஜாலத்தை தன் மிருதங்கத்தின் கட்டுக்குள் கொண்டு வைத்து ஆட வைத்தவர், நெல்லை கண்ணன். ரங்கநாத வைபவத்தை உயிரோட்டமாக, ஜிலுஜிலு வென்று, தன் தபலா, குடமுழா, செண்டை என்று சிறப்பு சப்தங்கள் மூலம் காட்சியை நிஜமாக்கியவர் மது.
- ரசிகப்ரியா

Advertisement

 

மேலும் கலை மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.