தீட்சிதரின் அபூர்வ கிருதிகளை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
00:00

பாடினார் பிரேமா ரங்கராஜன் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் மூவருமே, ஒப்பற்ற இசை படைப்புகளின் மூலம் வரலாறு படைத்தவர்கள். அந்த மும்மூர்த்திகள் ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்புகள் இருந்தன. அண்மையில், சென்னை நாரத கான சபா மினி அரங்கத்தில், சரசுவதி வாக்கேயக்கார அறக்கட்டளையின் ஆதரவில், சங்கீத நாத யோகி ஸ்ரீமுத்து சாமி தீட்சிதருடைய ஜெயந்தி தின இசை நிகழ்ச்சி நடந்தது. இசை விதூஷி டாக்டர் பிரேமா ரங்கராஜன் பாடிய ஸ்ரீ தீட்சிதருடைய ஒப்பற்ற கிருதிகள், ரசிகர்களின் செவிகளைக் குளிர வைத்தன.
இந்த அறக்கட்டளையின், நிகழ்ச்சிகளின் மூலம் அரிய கிருதிகளை கேட்டு மகிழும், நல்ல சந்தர்ப்பம் கிட்டியது. ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர், ஸ்ரீவித்யா மஹாஷோடசாட்சரி மகா மந்திரம் அறிந்தவர். ஸ்ரீவித்யா உபாசகர். காசியில், கங்கை நீரை கையில் எடுத்து, வீணையை நினைத்து வேண்டிய உடன், அவருடைய கையில் "ஸ்ரீராம்' என்று எழுதிய வீணை தோன்றியது.
திருத்தணி முருகப் பெருமானே, கிழவர் ரூபத்தில் அவருடைய வாயில் கற்கண்டைப் போட்டு ஆசீர்வதித்த உடன், ஸ்ரீதீட்சிதர் மெய்மறந்து, "ஸ்ரீ நாதாதி குரு குஹோ ஜயதி' என்று மாயமாளவ கவுளை ராக கிருதியைப் பாடியது வரலாறு. இதுவே, ஸ்ரீ தீட்சிதருடைய முதல் கீர்த்தனம். ஸ்ரீதீட்சிதருடைய வாழ்வில், நிறைய அதிசயங்கள் நடந்தன. எட்டயபுரத்தில் தண்ணீர் கஷ்டம் போக்க, ஆனந்தா மிருதாகர்ஷணி என்று அரும்ருதவர்ஷணி ராகத்தில் பாட, மழை பொன் மாரியாக பொழிந்தது. சகல வியாதிகளையும் தீர்க்க நவகிரக கிருதிகளை இயற்றினார் அவர்.
இப்படிப்பட்ட இந்த மகானுடைய முத்தான கிருதிகளை, இந்த நிகழ்ச்சியில் டாக்டர் பிரேமா பாடியது மெய்மறக்க வைத்த அனுபவம் என்று கூறலாம். ஸ்ரீதீட்சிதர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று ஒவ்வொரு கோவிலையும் கண்டு, அந்த இறை மூர்த்தங்களைப் பற்றிய அத்தனை தல விவரங்களையும், சிறப்புகளையும் பட்டியல் போட்டு விளக்கும் வண்ணம் தம் கீர்த்தனங்களை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வடமொழியில் இயற்றப்பட்ட இந்த கிருதிகளில், ஒரே வரியில் பளிச்சென்று அமைந்த பொருள் நயம் பாராட்டும்படி உள்ளது.
திருச்சி கணேசர் மீது ஸ்ரீதீட்சிதர் இயற்றிய கஜானனயுதம் (வேக வாஹினி) (சதுச்ர ஏகம்) கிருதியில் சிவ கணங்களால் புகழப்பட்ட விநாயகர் பெருமானின் தாமரை போன்ற பாதங்கள், கரங்களின் அழகு, விக்னங்களைப் போக்கும் விக்னேசுவரர் என்று போற்றும் சங்கதிகளை நயமாகப் பாடினார் பிரேமா.
கமாஸ் மனதை மயக்கும் ஒரு ராகம். இதில், ஸ்ரீ தீட்சிதருடைய சாரச தள நயன (திரிபுட) குறிப்பாக, பிரேமா ரங்கராஜன் பாடிய லலித பஞ்சமம் ராகம். ஸ்ரீதீட்சிதர் இந்த ராகத்தை, மாயமாளவ கவுளை ஜன்யமாக இல்லாமல், வகுளாபரணத்தின் ஜன்யமாக வடிவமைத்து, இதில் தஞ்சாவூர் கோவில் அம்பாளான ப்ருகதீஸ்வரீம் என்ற ஒப்பற்ற பாடலை இயற்றியுள்ளதை, இந்த நிகழ்ச்சியில் கேட்டு மகிழ முடிந்தது.
டாக்டர் பிரேமாவின் நிரவல், ஸ்வரப்ரஸ்தாரம் அவருடைய சிறந்த இசை ஞானத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இப்பாடல்கள் தேர்வு இருந்தது என்று பாராட்டலாம். நிறைவாக, ஸ்ரீதீட்சிதர் இயற்றிய தசாவதார ராகமாலிகை (ரூபகம்) அமர்க்களமான, நிறைவாக மனமும் நிறைந்த இசை நிகழ்ச்சியாக இருந்தது.
வயலினில் உஷா ராஜகோபாலனின் அருமையான வாசிப்பில் மெய்மறக்க வைத்தது, ஒவ்வொரு ராகங்களும், சங்கதிகளும் இனிமை மயம். மன்னார்கோவில் பாலாஜியின் அனுபவ முத்திரை பதித்த மிருதங்க வாசிப்பு படு அனுசரணை நயமாக இருந்தது.
நிகழ்ச்சியில், ஸ்ரீரங்கம் ரவிகிருஷ்ணனின் கடம் வாசிப்பும் சிறப்பாக இருந்தது. தரமான அருமையான இசை நிகழ்ச்சி இது.
- மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.