20 ஆண்டைக் கடந்த "மொசைக்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
00:00

இன்றைக்கு இணையம், அதனைக் கொண்டு வந்து தரும் பிரவுசர் எல்லாம், நாம் எப்போதும் பயன்படுத்தும் கைக்குட்டை போல ஆகிவிட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்னால், “WEB” என்ப தெல்லாம் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தது. பின்னர், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழக வல்லுநர்கள் இணைந்து மொசைக் (Mosaic) என்னும் பிரவுசரை உருவாக்கி நமக்கு அளித்தனர். இதுதான் கிராபிகல் முறையில் நமக்குக் கிடைத்த முதல் பிரவுசர். இதன் பின்னரே, இதனைப் பின்பற்றி மற்ற பிரவுசர்கள் நமக்குக் கிடைத்தன. இப்போது நீங்கள் எந்த சாதனத்தையும் ஒரு நிமிடம் இயக்கினால் போதும். இணையத்தில் நீங்கள் இருப்பீர்கள்.
மொசைக் பிரவுசர் வருவதற்கு முன்னால், இணையம் உங்களுக்குக் கிடைக்க பெரும்பாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். அப்போது கேரக்டர் அடிப்படையிலான இன்டர்பேஸ் புரோகிராம் மூலம் தான், நமக்கு இணையம் கிடைத்து வந்தது. மொசைக் தொடங்கிய பிரவுசர் வரிசை, இன்று நன்றாக வளர்ந்து, பலத்த போட்டியுடன், நீயா? நானா? என்ற வகையில் கம்ப்யூட்டர் பயனாளர்களைப் பிடிக்க தொடர்ந்து மாற்றங்களை மேற்கொண்டு இயங்கி வருகின்றன. தொடக்க காலத்தில் வந்த பிரவுசர்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
மொசைக் பிரவுசரை உருவாக்கியவர்கள் மார்க் ஆண்ட்ரீசென் மற்றும் எர்க் பினா (Marc Andreessen and Eric Bina) ஆவார்கள். ஆனால், முதன் முதலில் உருவான பிரவுசர் Mosaic அல்ல. அதற்கு முன்னால், ஒரு பிரவுசர் யூனிக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்பட்டது. விண்டோஸ் இயக்கத்தில் முதல் பிரவுசராக செல்லோ (Cello) வெளியானது. பின்னரே மொசைக் வெளியானது.
மொசைக் பிரவுசர் அவ்வளவு எளிய நடைமுறையைப் பெற்றிருக்கவில்லை. 1990 வரை இதனைப் பயன்படுத்துவது, ஏதோ மேஜிக் போல இருக்கும். அப்போதிருந்த விண்டோஸ் இயக்கமும், இன்டர்நெட் வழிமுறையான டி.சி.பி/ஐ.பி இயக்கத்தினை அவ்வளவாக சப்போர்ட் செய்திடவில்லை. விண்டோஸ் 95 சிஸ்டம் தான், இணைய வழிமுறைக்கேற்ற பயன்படுத்துவதற்கு எளிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக வெளியானது. இன்டர்நெட் பக்கம் மக்களின் விருப்பம் செல்வதனை அறிந்த, மொசைக் பிரவுசர் தயாரித்த இருவரும், இதன் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்த திட்டமிட்டு, பிரவுசர் ஒன்றை உருவாக்கினார்கள். அப்போது கிடைத்ததுதான் Netscape. மைக்ரோசாப்ட் நிறுவனமும், மக்களின் இணைய ஆர்வத் தினைத் தாமதாமாகவே புரிந்து கொண்டது. மொசைக் குறியீடுகளைப் பயன்படுத்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் முதல் பதிப்பினை, ஆகஸ்ட் 1995 மாதம், விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் தந்தது. ஆனால், இன்றும் வெளியாகும் அனைத்து பிரவுசர்களிலும் மொசைக் பிரவுசரின் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.
ஏறத்தாழ பத்து ஆண்டுகள், 1991 வரை இன்டநெட் நமக்கு கேரக்டர் அடிப்படை யிலேயே கிடைத்து வந்தது. இன்றைய இன்டர்நெட் என்பது அப்போது கற்பனை யாகக் கூட மக்கள் அறிந்திருக்கவில்லை. 1993 வரை, தொழில் நுட்ப வல்லுநர்களான சிலரே இன்டர்நெட் பெற்று பயன்படுத்த முடிந்தது. பின்னரே, வேர்ல்ட் வைட் வெப் World Wide Web (WEB) என அழைக்கப்படும் வெப் உலகம் நம்மை அழைத்தது. இதன் காரண கர்த்தா டிம் பெர்னர்ஸ் லீ. அவருக்கு நாம் வணக்கம் கூறுவோம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X