எளிமையான பக்தியே போதும்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 மே
2013
00:00

கடவுள் மிகவும் எளிமையானவர். பக்தியாலேயே அவனை அடைய முடியும். பக்தியே முக்திக்கு வழி. பக்தி செய்வது மிகவும் சுலபம். தவம், தியானம், பூஜை போன்றவைகளை விட, மனதால் பகவானை துதி செய்வது சுலபம். மனதுக்குள்ளேயே பகவானை வழிபடுவது இன்னும் விசேஷமானது. எளிமையாக இருந்தே, எளியவனான கடவுளிடம் பக்தி வைக்கலாம்.
நம்முடைய பூஜை, பக்தி இவைகளை கண்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென் பதில்லை; பகவான் பாராட்டினால் போதும். ஒரு கூடை பூவைப் போட்டு, ஆயிரம் நாமாவால் பூஜை செய்ய வேண்டுமென்பதில்லை; ஒரே ஒரு புஷ்பம் போட்டு, ஒரே நாமாவைச் சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்வான். பூஜை செய்வதற்கான பொருட்களை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை; மானச பூஜையே போதும்.
வள்ளலார் கூட எளிமையாக வாழ்ந்தவர். எளிய முறையிலேயே ஆண்டவனை பூஜித்தவர். அகல் ஜோதியையே கடவுளாக வழிபட்டார். தெய்வங்கள் ஜோதி வடிவமாகத் தான் சொல் லப்பட்டுள்ளது. "ஜோதி ஸ்வரூபன்' என்பர். ஜோதி தான் அவனது வடிவம். கடவுள் மன்னிக்கும் குணம் உடையவர். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால், உடனே மன்னித்து விடுவான்.
கடவுள், என்றாலே, ஒரே பரம் பொருள் தான். பல உருவங்களில் வழிபடுகின்றனர். இந்த உணர்வு வேண்டும். தினமும் கோவிலுக்குப் போய்த் தான் தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது வீட்டில் இருந்து கொண்டே பக்தி செய்ய முடியாதா என்று யோசிக்கலாம். கோவிலுக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, மனம் மட்டும் தெய்வத்திடம் இருக்க வேண்டும். கோவிலுக்குப் போனால், பலவித ஆரவாரங்களுக்கு இடையில், மனதை பகவானிடம் வைக்க முடியுமா என்பதும் கேள்விக் குறிதான்.
அங்கே தான் பல உறவினர், நண்பர்களை சந்திக்க நேரிடும். அவர்களை பார்த்த பின் சும்மா இருக்க முடியுமா? குசலம் விசாரிக்க வேண்டியிருக்கும்... "பெண் கல்யாணம் என்ன ஆயிற்று? பிள்ளை படிப்பு என்ன ஆயிற்று? துபாயில் இருக்கும் பெரிய பையன் பணம் அனுப்புகிறானா?' இப்படி, பலவித குடும்ப விஷயங்கள் கேள்வி - பதிலாக ஆகிவிடுகிறது. அப்புறம் மனதை பகவானிடமே வைப்பது என்பது, எப்படி சாத்தியம். சரி, வீட்டிலேயே இருந்து, மனதை, பகவான் பக்கம் திருப்பலாமே என்றால், இது கூட சிலருக்கு சாத்தியமாவதில்லை.
அப்போதும் கூட குடும்ப விவகாரம்... "சின்ன பையன் ஸ்கூல் போனானா, பெரிய பெண் டியூஷனுக்கு போனாளா, இந்த வாரம் ரேஷன் வாங்கியாச்சா? ஸ்டோர்ல பாமாயில் வந்திருக்கா...' என்று எத்தனையோ கேள்வி - பதில்கள். தெய்வ வழிபாடு, பக்தி என்பது ஒரு பகுதி; குடும்பம், குடும்ப விவகாரம் என்பது இன்னொரு பகுதி. இரண்டையும் கலந்தால், பக்திக்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குக்கிராமத்தில், ஓட்டு வீட்டில் வள்ளலார் தவம் செய்து முக்தி பெற்றார். 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர், திருவப்பாடி கிராமத்தில் பசுக்களை மேய்த்து, வெட்ட வெளியில் மண்ணால் லிங்கம் செய்து அதன் மீது, பால் கறக்கவிட்டு வணங்கி முக்தி பெற்றார். பூசலார் நாயனார் மனதினாலேயே கோவிலை நிர்ணயம் செய்து, சிவபெருமானை வழிபட்டு சிவ தரிசனம் பெற்றார். இப்படி பல சரித்திரங்கள் உள்ளன.
ஆக, மனிதனுக்கு தெய்வ பக்தி அவசியம் இருக்க வேண்டும். இப்படி பக்தி செய்து நற்கதி அடையும் பாக்கியம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு பக்தி, பூஜை, வழிபாடு என்பதெல்லாம் தெரியாது; அதனால், அவை இதில் ஈடுபடுவதில்லை. மனிதன், சுலபமான முறையில், தியானத்தின் மூலமே பக்தி செய்து பகவானை அடைய முடியும். இதற்குத் தான் முயற்சி செய்ய வேண்டும்.
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
* குறித்த காலத்தில், உயிரைப் பறிக்கும் கடமை கொண்ட யமதர்மராஜனுக்கு, பொறுமைக்குப் பெயர் பெற்ற எருமைக்கடா வாகனமாக அமைந்திருப்பதேன்?
அவன் உயிர்களை மெதுவாகப் பிடிக்க வேண்டும் என்பதால். காக்கும் கடவுள் சீக்கிரம் காக்க, கருடனும், மயிலும்; அழிக்கும் கடவுள் மெதுவாக அழிக்க, எருமைக்கடா.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
praj - Melbourn,ஆஸ்திரேலியா
11-மே-201306:33:23 IST Report Abuse
praj ஒரே பரம் பொருள் தான். பல உருவங்களில் வழிபடுகின்றனர்....ஏன் உருவங்களை வழிபடவேண்டும்..அந்த பரம்பொருளையே வழிபடலாமே.. நாம் உருவங்களை வழிபடும்போது அந்த பரம்பொருளின் மனது என்ன பாடுபடும்.யாராவது சிந்தித்திர்களா?
Rate this:
Share this comment
Cancel
Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ
07-மே-201319:42:48 IST Report Abuse
Govindaswamy Nagarajan Bhagwan Krishna says as "Maam Egam Saranam, Vraja" . Gita Chapter 18-66. There is another Sarana Slokam: "Sriman Narayana, Saranow Saranam Prabathye, Srimathe Narayanaya Namah". When we sincerely surrer ourselves to God, we sublime (merge) with God. That surrer is real Bhakthi (devotion) to God. By doing "Saashtaanga Namaskaaram" , we surrer to God. Our sincere surrer to God is the only salvation.
Rate this:
Share this comment
Cancel
Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ
07-மே-201308:39:34 IST Report Abuse
Govindaswamy Nagarajan Bhagwan Krishna says as "Maam Egam Saranam Vraja" - Gita Chapter 18-66. There is another sarana slokam: " Sriman Narayana, Saranow Saranam Prabathye, Srimathe Narayanaya Namah". When we sincerely surrer ourselves to God, we sublime with God. That (surrer) is real Bhakthi (devotion) to God. By doing "Sashtaanga Namaskaram", we surrer to God. Surrer ourselves to God is the only salvation.
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
06-மே-201320:19:20 IST Report Abuse
anandhaprasadh அருமையான கட்டுரை... எதற்கெடுத்தாலும் ஒரு நோட்டைத் தூக்கிகொண்டு வந்து, "கோவில் ராஜ கோபுரத்துக்குத் தங்கக் கவசம் செய்ய நிதி தாருங்கள்" என்று கேட்கும் புண்ணியவான்கள் அந்தப் பணத்தைக் கொண்டு அனாதை விடுதிகளுக்கும் முதியோர் இல்லத்துக்கும் உதவி செய்யலாம்... எந்த சாமி தங்கக் கவசம் கேட்டுச்சு'ன்னு தெரியலை... கோவில்'ல தர்ம தரிசனம், வி.ஐ.பி தரிசனம், ஸ்பெஷல் தரிசனம்'ன்னு இட ஒதுக்கீடு வேற... அதுவும் இந்த விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு நம்ம பிள்ளையார் படும் பாடு இருக்கே... கொடுமை... ஒரு நாள் பிள்ளையாரே வந்து ஐயோ நான் பிள்ளையாரே இல்ல'ன்னு சொன்னாலும் ஆச்சரியப் படறதுக்கு இல்லை...
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
06-மே-201302:22:40 IST Report Abuse
GOWSALYA உண்மைதான்....பச்சிளம் குழந்தைகளைப் பட்டினி போட்டுத் தனக்குக் குடம் குடமாப் பால் ஊற்றச்சொல்லி இறைவன் ஒருபோதும் சொன்னது கிடையாது....அதேபோலத்தான் எல்லாமே....தன்னைக் கூட்டிச் சென்ற சாரதியின் தாகம் தீர்க்க ஒரு இளநீர் வாங்கிக் கொடுக்காதவன்,திருப்பதி உண்டியலில் பத்தாயிரம் ரூபாவை உண்டியலில் போட்டானாம்?...இது எப்படி இருக்கிறது?
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
05-மே-201305:10:49 IST Report Abuse
Skv ஒரேயடியா கடவுளை வேரோடு பிடுங்கவும் வேண்டாம் இல்லேன்னு சொல்லி தூற்றவும் வேண்டாம். பலர் பலவிதமா கும்புடுராக. சிலர் தினம் தீபம் ஏத்தி இறைவா உலகமே க்ஷேமமா இருக்கட்டும் என்று வேண்டுவோரும் உண்டு , தான் தன்குடும்பம் மட்டும் செஜிச்சு வாழ்ந்தால் போரும்னு வேண்டுவோரும் உண்டு. ஒரு ரூம் முழுக்க எல்லா சாமிகளையும் மாட்டிவச்சுண்டு சுத்தமே செய்யாமல் நாள் முழுக்க சாமி கும்புடுவங்களும் உண்டு, நாம் இதுலே எந்த விதம்னு நம்மையே சோதிக்கலாமே
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
05-மே-201307:55:31 IST Report Abuse
Umaரொம்ப சாதாரணமா நல்ல கருத்த சொல்லிட்டீங்க SKV...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.