அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 மே
2013
00:00

லென்ஸ் மாமாவின் அமெரிக்க தோழி... வெள்ளைக்காரப் பெண்... இவருக்கு இசை ஆர்வம் அதிகம். அதிலும், தமிழ் படித்தவர்! தன் பெயரை மீனாட்சி என்று மாற்றி வைத்துக் கொண்டவர்.
"அவ, சென்னை வந்து இருக்காளாம்... போன் பண்ணினா... சாயங்காலமா கன்னிமாரா ஓட்டல் வரச் சொல்லி இருக்கா... உன்னையும் தான்...' என்றார் லென்ஸ் மாமா.
மாலை — கன்னிமாரா ஓட்டல்!
முதலிலேயே கிளம்பிச் சென்று இருந்தார் மாமா! அங்கு, என்னை, "ரெஸ்டரன்ட்'க்கு வரச் சொல்லி இருந்தார்...
அங்கே —
மீனாட்சியும், லென்ஸ் மாமாவும் வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின், சீரியசான மீனாட்சி, "உங்களுக்கு பேஸ் பால் தெரியுமா?' என்று இலக்கண சுத்தமான தமிழில் கேட்டார்.
"விளையாடத் தெரியாது... ஆனால், அமெரிக்காவில் பிரபலமான விளையாட்டு என்று தெரியும்...'
"பைபிள் படித்திருக்கிறீர்களா?' என்று அடுத்த கேள்விக் கணையை எடுத்து விட்டார் அப்பெண்மணி. "முழுமையாகப் படித்ததில்லை; ஆனாலும், சாராம்சம் தெரியும்...' என்றேன். இப்படி பதில் சொல்லி விட்டாலும், எனக்குள் ஒரு பயங்கலந்த சந்தேகம்... எதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்?
மீனாட்சியே தொடர்ந்தார்... "பயப்படாதீர்கள்... ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காகத் தான் இதையெல்லாம் கேட்கிறேன். இன்னும் ஒரே ஒரு கேள்வி... கூரத்தாழ்வார் கதை தெரியுமா உங்களுக்கு?'
"தெரியாது...' என்று சங்கடமாக பதில் சொல்லி, மாமாவைப் பார்த்தேன். அவரோ வைத்த கண் வாங்காமல் மீனாட்சியை ரசித்துக் கொண்டிருந்தார்.
"சரி... அந்த கூரத்தாழ்வார் கதையை இப்போது சொல்கிறேன்...' என்று ஆரம்பித்தார் மீனாட்சி. கதையின் சுருக்கம்...
அந்தக் காலத்தில் திருவரங்கத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவன் வைணவர்களையெல்லாம் மிகவும் துன்புறுத்தி வந்தான். ஆனால், எவ்வளவு துன்புறுத்தினாலும் மக்களின் ஆதரவு மட்டும் வைணவத்திற்கு குறைந்தபாடில்லை. குழம்பிய மன்னன், மந்திரி நாலூரானிடம் காரணம் கேட்டான்...
"அந்த ராமானுஜன் என்ற பேர்வழியைப் பிடித்து சிரசேதம் செய்து விட்டால் சரியாய் போய் விடும்...' என்றார் மந்திரி.
இந்தியாவின் ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவரான ராமானுஜரை பிடித்து வர கிளம்பியது வீரர் கூட்டம். அப்போது ராமானுஜரின் சீடர்களில் ஒருவரான கூரத்தாழ்வார் தன் குருவைப் பார்த்து, "தாங்கள் வேறு எங்காவது சென்று விடுங்கள்; தங்களை பிடிக்க அரசனின் வீரர்கள் வருகின்றனர்...' என்று பதறினார்.
சம்மதிக்கவில்லை குரு; ஆனால், சீடரும் விடவில்லை...
"தாங்கள் உயிரோடு இருக்க வேண்டியது உங்களுக்காக அல்ல; எங்களுக்காக, மக்களுக்காக...' என்று வாதாடி ராமானுஜரை வெளி தேசத்திற்கு ரகசியமாக அனுப்பி வைத்தார் சிஷ்யரான கூரத்தாழ்வார்!
இதை அறிந்த மந்திரி நாலூரான், கூரத்தாழ்வாரைப் பிடித்து, அவரது இரு கண்களையும் தோண்டியெடுத்து விட்டான்.
காலம் மாறியது... ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் சந்தித்தனர். கூரத்தாழ்வாரின் நிலையைப் பார்த்து கலங்கிய ராமானுஜர், "பெருமாளிடம் வேண்டிக் கொள். இழந்த கண்களை திரும்பப் பெறுவாய்...' என்றார்.
கூரத்தாழ்வாரும், பெருமாளை தரிசித்தார்.
இதற்கு மேல் தான் கதையில் முக்கியமான பாயின்ட்!
திரும்பவும் ராமானுஜரிடம் வந்தார் கூரத்தாழ்வார். ஆனால், ராமானுஜருக்கு ஒரே குழப்பம். கூரத்தாழ்வாரின் கண்கள் குழிகளாகவே இருந்தன.
"ஏன், பெருமாளிடம் கேட்கவில்லையா?' ராமானுஜர்.
"கேட்டேனே!'
"என்ன கேட்டீர்... கண்களைத் தானே?'
அதற்கு கூரத்தாழ்வார் சொன்ன பதில் இது:
"நாலூரான் அறியாமல் செய்து விட்டான். பிழைத்துப் போகட்டும் என்று பெருமாளிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்...' என்றார்.
— கதையைக் கேட்ட பிறகும், இந்த கதையை சொல்வதற்கு முன், ஏன் பைபிள் பற்றி மீனாட்சி கேட்டார் என்று எனக்கு புரியவில்லை.
கேட்டேன்.
"இந்தியர்களாகிய உங்களுக்கு அமெரிக்க விளையாட்டான பேஸ் பால் பற்றி தெரிந்திருக்கிறது. "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...' என்றும், தான் சிலுவையில் அறையப்படும் போது, "இவர்கள் தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கின்றனர். பிதாவே; இவர்களை மன்னியும்...' என்றும் சொன்ன இயேசுவின் காவியம் தெரிகிறது. ஆனால், அதே போன்ற கூரத்தாழ்வாரின் கதை தெரியவில்லை...' என்றார் மீனாட்சி.
நட்சத்திர ஓட்டலில் அழகிய அமெரிக்கப் பெண், நம் நாட்டின் அற்புதமான வரலாற்றுச் சம்பவத்தைச் சொல்லக் கேட்டது அரிதான விஷயம் தான்... ஆனாலும், நம் வரலாற்றை வெளிநாட்டவர், நம்மிடமே சொல்ல வேண்டியிருப்பதை நினைத்து, நெளியத்தான் செய்தேன்!
***

எங்கள் தெரு கொஞ்சம் பெரியது. பல தரப்பட்ட, பல தட்டு மக்கள் வசிக்கும் பகுதி... அவர்களில் ஒருவர் அரசு பதவி வகிப்பவர். மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, லென்ஸ் மாமாவின் நண்பர் என்பதால் எனக்கும் பழக்கம்.
ஆசாமி, அரசு அலுவலராயிற்றே... "சைடு இன்கம்' தாராளம்... "அது' தாராளம் என்றால், "நல்ல' பழக்கங்களும் தாமாக தொற்றிக் கொள்ளும்தானே!
காலையில், டிப்-டாப்பாக, சட்டையை, "டக்-இன்' செய்து, ஷூ அணிந்து, கம்பீரமாக ஆபிஸ் செல்வார். மாலையில் - மாலை எங்கே, இரவில் வீடு திரும்பும் போது, "உற்சாக பானம்' ஏற்றிக் கொண்டு, தன் நிலை தெரியாமல்,"அங்கிள் ஜான் எக்ஷா' (உ.பா.,வின் பெயர்)வின் உத்தரவுக்குக் கட்டுபட்டு, தலைவிரி கோலமாக, சட்டையை வெளியே எடுத்துவிட்டு, இரண்டு, மூன்று பட்டன்கள் போடாமல் நடை பயிலும் குழந்தை, "ஸ்டைலில்' வருவார்!
சமீபத்தில் ஒரு நாள் இரவு, அவர் வீட்டைக் கடந்து வரும் நேரத்தில், ஆசாமிக்கு மண்டகப்படி நடந்து கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது...
அவர் மனைவி... "என்ன மனுஷன்யா நீ? காலையிலே அரச கட்டளை எம்.ஜி.ஆர்., மாதிரி ஆபிசுக்குப் போறே; ராத்திரி வரும்போது, அடிமைப் பெண் எம்.ஜி.ஆர்., மாதிரி வீடு திரும்புறியே... வெட்கமா இல்லயா?' என்றார்!
— அந்தப் பெண்மணியின் உவமை நயத்தை ரசித்தபடி அங்கிருந்து கிளம்பினேன்.
***

அவர் ஒரு காலத்தில் ஜமீந்தார் பட்டத்துடன் இருந்தவர். ஜமீந்தாரி முறை ஒழிந்த பின்னரும், அவ்வூர் மக்கள் அப்பெரியவரை, "ஜமீந்தார்' என்றே அழைக்கின்றனர். பெரிய ஜமீந்தார், ஒரு வேட்டைப்பிரியர். வேட்டையாட தடை செய்யப்படாத காலத்தில், பெரிய ஜமீந்தார், வேட்டைக்கு சென்ற பகுதிகளுக்கெல்லாம் சமீபத்தில், எங்களை அழைத்துச் சென்று காட்டினார், அவரது மகனான சின்ன ஜமீந்தார். அப்படி சுற்றி வரும் போது, காட்டில், மரத்தின் மீது இருந்த ஒரு குருவியைக் காட்டி, "இது ஆள் காட்டி குருவி தெரியுமா?' என்றார்.
"அதென்ன ஆள்காட்டி குருவி?' என்றேன்.
ஆள் காட்டி குருவி பற்றி மேலும் அவர் சொன்ன தகவல்கள் சுவையானவை:
நம் தமிழகக் காடுகளில் இக்குருவிகள் காணப்படுகின்றன... மனிதர்களை கண்டால் மட்டுமே இந்தக் குருவி பயங்கரமாக அலறி, கூச்சலிடும். இதனால், மனிதர்கள் வருவதை அறிந்து, வனவிலங்குகள் மறைவிடம் தேடி ஓடி விடும்.
இரவிலும், பகலிலும் இப்படி ஆளை காட்டிக் கொடுக்கக்கூடிய இந்தக் குருவியை, பழங்கால அரசர்கள் பிடித்து கூண்டில் அடைத்து, தங்களது கோட்டைக்கு சற்று தள்ளி வைத்து விடுவர். எதிரிகளோ, ஒற்றர்களோ ரகசியமாக மறைந்து வந்தால்கூட இந்தக் குருவிகள் உரக்கக் கத்தி, காட்டிக் கொடுத்து விடும்!' என்றார்.
— ஆச்சரியம் தான்!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devadas - salem india. ,இந்தியா
11-மே-201318:48:52 IST Report Abuse
Devadas Is it a fact that Siva devotees and Rama devotees were at war in those days, to propagate their faith on the other? Kirumi kanda Cholan is a good example. If so, what is news, if we dont co.exist with other religions in our nation now? This a question to me from my grandson. Can anybody give an answer?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-மே-201317:35:03 IST Report Abuse
D.Ambujavalli அவர் பெயர் கூரத்தாழ்வார் இல்லை: பன்னிரு ஆழ்வார்கள் தவிர்த்து ஏனையவர் ஆழ்வான் எனவே அழைக்கப்படுகின்றனர். அவர் இயற்பெயர் ஸ்ரீவத்சாங்கன். ஊர் காஞ்சிக்கு அருகில் உள்ள கூரம்.
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
07-மே-201315:53:11 IST Report Abuse
adithyan கூரத்தாழ்வார் தமிழில் மட்டுமல்ல, வடமொழியிலும் நல்ல ஞானம் உள்ளவர். அது ஓட்டகூத்தனால் வந்த வினை.
Rate this:
Share this comment
Cancel
Kumar - Trichy,இந்தியா
07-மே-201306:46:03 IST Report Abuse
Kumar வரலாறு படிப்பது முக்கியம் இல்லை.அதில் உள்ள நல்ல விழயங்கல நாம கடைபிடிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
balajiu - Chennai,இந்தியா
06-மே-201318:39:10 IST Report Abuse
balajiu இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு தமிழன் வரலாறு, இந்திய வரலாறு தெரியவில்லை. அதற்கு காரணம் பெற்றோர்களே . தம் பிள்ளைகள் ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தில் பேசுவதே பெருமை என்று நினைகிறார்கலே தவிர நம் வரலாறு பற்றிய புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை.. முன்பெல்லாம் பள்ளி விடுமுறை நாட்களில் காலை நேரத்தில் நூலகங்களுக்கு சென்று படிப்போம். மாலையில் மைதானங்களுக்கு சென்று விளையாடுவோம். இன்று டான்ஸ் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் ஸ்பெஷல் கிளாஸ் செல்லும் மாணவர்களுக்கு நூலகம் செல்ல ஏது நேரம்?
Rate this:
Share this comment
Cancel
Silambarasan - Thiruvannamalai,இந்தியா
06-மே-201315:27:11 IST Report Abuse
Silambarasan சரிதான். அனால் நம்மவர்களில் 100 % தமிழக,இந்திய புராணத்தில் ஆர்வம் இன்றி இன்றைய தலைமுறை வளர்வது காணமுடிகிறது. ஆர்வம் என்பது ஒரு விசயத்தில் சிறிய அறிவு பெற்றபின் மட்டுமே தெரியவரும். அனால் இன்று அந்த சிறிய கேள்வி ஞானம் இல்லாமல் புராணங்கள் அழிந்து வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
06-மே-201306:47:36 IST Report Abuse
Ajaykumar நம்முடைய கதைகளையும் கோவில் சுற்றுசுவர்களில், பேருந்துகளில், ரயில்களில் எழுதி இலவசமாக புத்தகவடிவில் மாணவர்களுக்கு குடுத்தால் நன்று.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
06-மே-201304:26:37 IST Report Abuse
Skv இன்று நடக்கும் விஷயமே பலருக்கு த்தெரியாது கூரத்தாழ்வாரை தெரியுமா சொல்லுங்க .பொதுஜனத்துக்கு தினம் தினம் தினறலேன்னு வாழரொம் கரண்ட் இல்லே தன்னிவர்லேன்னும் ரேஷன்கிடைக்குமான்னும் தவிக்கிரவாளுக்கு எப்படி தெரியும் சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel
Jagannathan B - New York,யூ.எஸ்.ஏ
06-மே-201302:26:07 IST Report Abuse
Jagannathan B ராமானுஜர் காலத்தில் இருந்த மன்னன் ஸ்ரீரங்கத்தில் இல்லை தஞ்சையை ஆண்ட மூன்றாம் குலோத்தூங்கன் அவன் ஒருநாள் கூரத்தாழ்வானை கூப்பிட்டு திருமால் உழக்கு ( ஆழாக்கு) ஐ விட சிறியது என்று பாட சொன்னான் முடியாது என்று சொல்லி சிவன் அழாக்கை விட சிறியது என்றார் குலோத்தூங்கனோ சிவ பக்தன் எனவே கூர சேனனின் கண்களை பிடுடுங்க சொல்லி கட்டளையிட்டான். இந்த மன்னனே ராமானுஜரை பிடித்து வர சொன்னான் அவர் தப்பித்து மைசூர் சென்றார் . ஆதாரம் பீ ஸ்ரீ எழுதி சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற " ராமானுஜர் " என்ர நூல் இந்த குலோத்தூன்கனே பின்னால் கழுத்தில் கிருமி வந்து இறந்ததால் " கிருமி கண்ட சோழன் " என்று பெயர் பெற்றான்
Rate this:
Share this comment
Narayanan Krishnamurthy - New Delhi,இந்தியா
06-மே-201317:12:04 IST Report Abuse
Narayanan Krishnamurthyஎன்னால் திருமாலை இழித்து பாட முடியாது என்று பணிவாக சொல்லி இருந்திருந்தால் பிரச்சினை வந்து இருக்காது. சும்மா இருந்த சிவனை இழித்து பாடியதால் வந்தது வினை...
Rate this:
Share this comment
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
10-மே-201318:55:14 IST Report Abuse
Nagan Srinivasanமூவரும் ஆகி, இருவரும் ஆகி, முதல்வனும் ஆய் நின்ற மூர்த்தி, பாவங்கள் தீர நல்வினை நல்கி, பல் கணம் நின்று பரவ.. தேவர்கள் தேவர் பெருமானார்... சம்பந்தர். மால் ஒரு பாகம் மாதொர்பாகம்.. சம்பந்தர். திருமாலுக்கு பாகன், வேல்விடைக்கும் பாகன் சுந்தரர் ... திருமால் நெடுமால் குறுகி தோன்றிய குன்றால நாதர்.. கடவுளை நாம் முழுமையாக அரிந்துகொள்ளாததன் வினையே இதில் சைவம் வைணவம் என்ற இருபிரிவுகள் ஆய்ந்து செய்யப்பட்ட சமயங்கள். ஒன்றை ஓன்று குறை கூறி பயன் என் மனிதன் கடவுளை அறிந்துகொள்ளும் அறிவு இல்லாமையால் ஏற்படும் விளைவுகள். எல்லாம் சிவனென்று நின்றாய் போற்றி அப்பர். ஒருருவாயினை மாநாங்கரத்து சம்பந்தர்.....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
05-மே-201307:13:30 IST Report Abuse
Natarajan Iyer அவரை புகழ்வது தேவை இல்லை. ஆனால் நமது பாரம்பரியம் மிக்க நாட்டின் சிறப்புகளை அறிவது அவசியம். உலகம் முழுதும் சுற்றுபவர்கள்கூட இந்தியாவை முழுமையாக சுற்றி பார்ப்பதில்லை. காஷ்மீரிலும்,ராஜஸ்தானிலும்,குஜராத்திலும்,கர்நாடகாவிலும்,உத்தராகண்டிலும்,அஸ்ஸாமிலும், கோவாவிலும்,புதுடில்லியிலும்,வங்காளத்திலும்,தமிழ்நாட்டிலும்,பஞ்சாபிலும்,மேகாலயாவிலும்,அந்தமானிலும், சிக்கிமிலும் பீகாரிலும் ஆந்திராவிலும், அருணாச்சல் பிரதேசிலும் இன்னும் பல மாநிலங்களிலும் பார்க்கவேண்டிய அருமையான இடங்கள் ஆயிரம் இருக்கின்றன.
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
08-மே-201303:26:24 IST Report Abuse
Umaநடராஜன் சாரும் இராமன் சாரும் நல்லா சொல்லிருக்கீங்க. அன்புடன் அந்தரங்கத்துக்கு எதுவும் எழுதலியா ராமன் சார்????...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.