பாரதி கனவு நனவாவது எப்போது?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 மே
2013
00:00

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்... என்ற பாரதியின் பாடல் இன்றும் கனவாகவே இருக்கிறது.
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 66 ஆண்டுகளாக பேசப்படும் திட்டம், நதிநீர் இணைப்பு. லோக்சபா, சட்டசபை தேர்தல்களின் போது மட்டும், அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரமாக இத்திட்டம் அமையும். ஆனால், ஆட்சிக்கு வரும் கட்சிகளோ இத்திட்டத்தை கண்டுகொள்வது இல்லை. தண்ணீருக்காகவே, மூன்றாம் உலகப் போர் மூளும் என்கின்றனர் அறிஞர்கள். தேசிய ஒருமைப்பாடு பேணும் நாட்டில், ஒரு புறம் வாட்டி எடுக்கும் வறட்சி, மறுபுறம் அடித்து செல்லும் வெள்ளம் என, இயற்கை தாண்டவமாடுகிறது. இந்நிலை மாற நதிநீர் இணைப்பு முக்கியம்.
ஏற்கனவே, இத்திட்டத்தை கொடுத்த கே.எல்.ராவ், நீர் வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டும் கூட, மின்செலவை காரணம் காட்டி திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் கேப்டன் தஸ்தர் கொடுத்த திட்டமும், தொழில் நுட்ப ரீதியாக ஏற்க முடியாது என கைவிடப்பட்டது. நாடு முழுவதும் எழுந்த கோரிக்கையை அடுத்து, நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, "தேசிய நீர்வள மேம்பாட்டு ஏஜென்சி' ஏற்படுத்தப்பட்டது. 30 ஆண்டுகளாகியும் பல்வேறு காரணங்களால், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.
"கங்கா-குமரி தேசிய நீர்வழிச்சாலை' திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், நாட்டிற்கு ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்கிறார், மதுரை மத்திய அரசின் நதிநீர் இணைப்பு உயர்மட்ட கமிட்டி உறுப்பினரும், தேசிய நீர்வள மேம்பாட்டு தொழில்நுட்ப ஏஜென்சி தலைவருமான ஏ.சி.காமராஜ். இவர் தலைமையில் 100 பொறியியல் வல்லுனர்களால் தொழில் நுட்ப ரீதியாகவும், பூகோள அமைப்பின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டது, "கங்கா-குமரி தேசிய நீர்வழிச்சாலை' திட்டம்.
நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வரப்பெற்ற, அனைத்து நதிநீர் திட்டங்களையும் மத்திய அரசு ஆராய்ந்த பின், இத்திட்டத்தை சிறந்தது என அறிவித்தது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை, ஏ.சி.காமராஜ் தலைமையிலான குழுவினர் சந்தித்து, இத்திட்டம் குறித்து தெரிவித்த போது, பாராட்டியுள்ளார். ஆனாலும், மத்திய அரசு என்ன காரணத்தினாலோ, இத்திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டவில்லை.
இத்திட்டம் குறித்து ஏ.சி.காமராஜ் கூறியதாவது: தேசிய நீர்வழிச்சாலை திட்டம், இமயமலை நீர்வழிச்சாலைகள், மத்திய நீர்வழிச்சாலைகள், தெற்கு நீர்வழிச்சாலைகள் என வரைவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான தண்ணீரும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலில் வீணாவதிலிருந்து தடுக்கப்படும். இமயமலை நீர்வழிச்சாலை திட்டத்தில், நீர்வழிச்சாலைகள் 10 மீட்டர் ஆழத்தில் இருக்கும்.
நீர்வழிச்சாலைகளில், ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு தண்ணீரை அனுப்பலாம். கங்கையிலிருந்து காவிரிக்கு அனுப்பலாம். பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளத்தை இதில் திருப்பலாம். நாட்டில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. நீர்வழிச்சாலைகள் திட்டம், பல்வேறு பொருட்களை படகு மூலம் கொண்டு செல்லவும், மனிதர்களுக்கு ஏற்ற போக்குவரத்தாகவும் அமையும். 15ஆயிரம் கி.மீ., நீளத்தில் அமையும்.
அறுநூறு மில்லியன் பேருக்கு, தடையின்றி குடிநீர் கிடைக்கும். 1,500 கோடி ஏக்கர் கூடுதல் பாசன வசதி பெறும். 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். 2,500 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிட்டும். 40 ஆயிரம் கோடி வெள்ளச்சேதம் தவிர்க்கப்படும். அரசு, தனியார் முதலீடு என திட்டத்திற்கு ஏற்ப செயல்படுத்தலாம். ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இதன் ஒரு பகுதியான தமிழக நீர் வழிச்சாலை மூலம் 900 கி.மீ., நீளமுள்ள நீர்வழிப்பாதை அமையும். ஐந்து கோடி பேருக்கு தண்ணீர், 17 ஆறுகள் இணைப்பு, 75 லட்சம் ஏக்கருக்கு கூடுதல் பாசன வசதி, 1800 மெகாவாட் மின் உற்பத்தி சாத்தியம்...' இப்படி அவர் கூறுகினார்.
காவிரி தீர்ப்பு குறித்து மத்திய அரசு இதழில் வெளியிட்டு சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதா, நதிநீர் இணைப்புக்கு குரல் கொடுக்க வேண்டும். முதற்கட்டமாக தமிழக நீர்வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாரதியின் கனவை நனவாக்க வேண்டும்.
எம். ரமேஷ்பாபு

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anandhaprasadh - Bangalore,இந்தியா
06-மே-201319:59:02 IST Report Abuse
anandhaprasadh ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இதுதான் வித்தியாசம்.. அங்கு திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப் படுத்தப் படுகின்றன.. இங்கே கிடப்பில் போடப் படுகின்றன... இத் திட்டத்தின் நன்மைகள் பற்றிப் படிக்கும்போது என்று இது நனவாகும் என்ற ஏக்கப் பெருமூச்சு ஒவ்வொரு பொறுப்புள்ள இந்தியனுக்கும் எழுவது உண்மை...
Rate this:
Share this comment
Cancel
balajiu - Chennai,இந்தியா
06-மே-201318:50:55 IST Report Abuse
balajiu கூகுள் செயற்கைக்கோள் உலக வரைபடத்தை பாருங்கள் உலகில் உள்ள நாடுகளில் தென் அமெரிக்க நாடுகளுக்கு அடுத்து இந்தியாதான் பசுமையான இயற்கை வளங்களை கொண்ட நாடு. ஆனால் சரியான நீர் மேலாண்மை திட்டங்கள் இல்லாத காரணத்தால் நாம் இன்னும் இஸ்ரேல போன்ற வரட்சியான நாடுகளை காட்டிலும் பின்தங்கியே இருக்குறோம்..
Rate this:
Share this comment
Cancel
N.K - bangalore,இந்தியா
06-மே-201311:23:16 IST Report Abuse
N.K இதனை நன்மைகள் இருந்தும் இந்த மாதிரியான திட்டங்கள் நிறைவேற்ற படாமல் இருபது உண்மையிலேயே வருத்ததுக்குரிய விஷயம் தான்.
Rate this:
Share this comment
Cancel
06-மே-201308:38:29 IST Report Abuse
பெருவை பார்த்தசாரதி 66 ஆண்டுகளாகப் பேசப்படும், இதுபோன்ற பெரிய திட்டங்களைச் செயல் படுத்த முடியாவிட்டால் அந்தந்த மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளைத் தூர் வாரி, ஆழப்படுத்தினாலே மழைநீரைச் சேமித்து மாநிலங்களை வளமாக்க முடியும். தமிழகத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஏரி, மற்றும் செங்குன்றம் ஏரி, புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, செங்கல்பட்டு ஏரி, மதுராந்தகம் ஏரி, வீராணம் ஏரி, வெலிங்டன் ஏரி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், சூலார்க் குளம், முத்தண்ணன் குளம், குறிச்சி குளம், ஈரோடு மாவட்டம், கெட்டிசமுத்திரம் ஏரி (அந்தியூர்), பெரிய ஏரி (அந்தியூர்) இருக்கிறது. தற்போது இவை தூர் வாராமல் வறண்டு கிடக்கிறது. ஒவ்வொரு முறையும் மழையினால் கிடைக்கும் உபரி நீர், அவ்வப்போது தூர் எடுக்காததால் அனைத்தும் கடலில் வீணாகச் சேர்ந்து விடுகிறது. இன்று மகாகவி இருந்திருந்தால், “மையத்தில் தேங்கி வரும் நீரின் மிகையால், மாநிலம் முழுவதும் பயிர் செய்குவோம்” என்றுதான் பாடியிருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
06-மே-201301:39:22 IST Report Abuse
GOWSALYA பலபல விஷயங்களில் அவர் கனவு நினைவாகவில்லை......அழிக்கப்பட்டே இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Poornima - Singapore,சிங்கப்பூர்
05-மே-201319:08:04 IST Report Abuse
Poornima கனவு மெய்ப்பட வேண்டும். விவசாயின் கண்ணீர் துடைக்கப் பட வேண்டும். நினைத்துப் பார்க்கும் பொழுதே திட்டத்தின் அருமை புரிகிறது. பசுமையான பாரதம் திகழ மாநிலங்கள் எல்லாம் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.