அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 மே
2013
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், "டிகிரி' படித்தவள். எனக்கு திருமணம் முடிந்த முதல் மாதத்திலேயே பிரச்னை துவங்கியது. இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவர் ஒரு அம்மா பைத்தியம். எனக்கு என்ன வாங்கி கொடுத்தாலும், நான் என்ன சொன்னாலும், அதை அப்படியே அம்மாவிடம் போய் சொல்லி விடுவார்.
இது தவிர, "செக்ஸ்' விஷயத்திலும் அவர் சரியில்லை. நான் வலிய போனாலும் ஈடுபாடு காட்ட மாட்டார். நானே, அவரிடம் நெருங்கினால் என்னை ஒதுக்கி தள்ளுவார். அந்த நேரம், கையை வெட்டிக் கொள்வேன்... சூடு போட்டுக் கொள்வேன்...
இவ்வாறு என்னை கட்டுப்படுத்தி, அழுது தூங்குவேன்.
ஆக, எங்களுக்குள் சின்ன பிரச்னை கூட தீராமல், இழுத்துக்கொண்டே போகும். விஷம் குடித்து காப்பாற்றப்பட்டேன். இரண்டு மூன்று முறை இதே போல சாகத் துணிந்தேன்.
மேலும், இவர் குடிகாரர். என் வீட்டில் சொல்லி, "எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள்' என்றால், "ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியாது. அது குடும்பத்திற்கு அழகு அல்ல... மாப்பிள்ளை வேண்டாம் என்றால் பிள்ளைகளுக்காக அந்த வீட்டிலே விதவையாக வாழு...' என்கின்றனர்.
என் கணவரும் நல்லவர் தான். யார் சொன்னாலும் கேட்பார். சுயபுத்தி கிடையாது. "அம்மா அம்மா' என்றுதான் புலம்புவார். நான் ஒரு நாள் அவரைப் பார்த்து, "நீங்க ஒரு மனோதத்துவ டாக்டரைப் பாருங்கள். ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியவில்லையே... நான் வேண்டாம் என்றால் என் வாழ்க்கையை ஏன் கெடுத்து விட்டீர்கள்?' என்றெல்லாம் கேட்டேன்.
"மூன்று வேளை நன்றாக சாப்பிடு... நன்றாக துணி உடுத்து. வீட்டோடு இரு. என்னிடம் வேறு எதுவும் எதிர்பார்க்காதே. என் விஷயத்திலும் தலையிடாதே...' என்கிறார் என் கணவர்.
எங்களுக்கு கொஞ்சம் கடன் உள்ளது. கடன் தீர்ந்த பிறகு என்னிடம் நன்றாக இருப்பாராம். மனிதர் என்றால் நிச்சயம் கடன் இருக்கும்; கஷ்டம் இருக்கும். இவர் மனம் சந்தோஷமாக இருந்தால்தான் என் கூட வருவாராம். இப்ப மூன்று மாதமாக, எங்கள் வீட்டில் நாங்கள் இருவரும் தனித்தனியே வாழ்கிறோம். அவர் வருகிறார், சாப்பிடுகிறார், போகிறார். எனக்கு மனம் ரொம்ப வேதனைப்படுகிறது. என்னை கண்டாலே அவருக்கு அப்படி ஒரு வெறுப்பு. சம்பளம் இல்லா வேலைக்காரி போல் நடத்துகிறார். எனக்கு எப்படியாவது ஒரு நல்ல வழி கூறி எழுதுங்கள்.
இப்படிக்கு,
அன்பு சகோதரி.


அன்பு சகோதரி,
உன் கடிதம் கண்டேன். சொன்னால் கோபிக்க மாட்டாயே... அனுபவ அறிவே இல்லாத, பத்து வயது சிறுமி போல் எழுதியிருக்கிறாய்... உன் மனக்கஷ்டங்கள் எல்லாம் புரிகிறது. ஆனால், இத்தனை கஷ்டமும் யாரால், எதனால் என்று கொஞ்சமாவது யோசித்து பார்த்திருக்கிறாயா நீ?
கணவர் ஒரு அம்மா பைத்தியம் என்று எழுதியிருக்கிறாயே கண்ணம்மா... உன் அம்மாவிடம் உனக்குப் பாசமில்லையா, ஆசையில்லையா, அம்மாவை நினைத்தாலே கண்கள் கலங்கி, குளமாகி விடவில்லையா?
ஆணுக்கும் அது போன்ற உணர்ச்சிகள் எல்லாம் உண்டும்மா... அதுவும் திருமணமான புதிதில், பெண்ணை விடவும், ஆணுக்கு பொறுப்பு இரண்டு மடங்கு. இந்த பக்கம் புதுசாய் வந்தவளின் மனம் கோணாமலும் நடந்து கொள்ள வேண்டும்; அந்த பக்கம் அம்மாவின் கண்களில் ஈரம் படராமலும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இது போன்ற சமயங்களில் யார் விட்டுக் கொடுக்கின்றனரோ - அவர்கள் பக்கம் அந்த ஆணின் மனம் மிகச் சுலபமாக சேர்ந்து விடும். இன்னொன்றும் சொல்வேன்; தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. "செக்ஸ்' என்பது - தாம்பத்யத்துக்கு மிக அவசியமான ஒன்று தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால், வெறும், "செக்ஸ்' மட் டுமே தாம்பத்யமாகி விடாது.
இந்த நுண்மையான உணர்வு, முள் செடியில் இருந்து ரோஜாவைப் பறிப்பது போல - அத்தனை மென்மையாக இருக்க வேண்டிய ஒன்று சகோதரி! முள் இல்லாத இடம் பார்த்து விரல் வைக்க வேண்டும். அழுத்திப் பறித்தால் ரோஜா இதழ் உதிரும். அவசரப்பட்டால் முள் கிழிக்கும். புரிகிறதா?
கணவனுக்கு என்ன பிடிக்கும்... காபியில் டிகாஷன் தூக்கலா - தோசை முறுகலா - சட்னியா - சாம்பாரா என்பதில் ஆரம்பித்து - அவருக்கு மிகவும் பிடித்த நபர் யார் அம்மாவா... அவர்களிடம் நாமும் அன்பு காட்டிப் பேசினோமா... அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டோமா... மருந்து எடுத்துத் தந்தோமா... கோவில், குளம் என்று அழைத்துப் போனோமா?
— இது எதுவுமே செய்யா விட்டாலும், "உங்கம்மா பாவம்... அவங்களுக்கும் நம்மை விட்டா வேற யார் இருக்காங்க' - என்று ஒரு வார்த்தை... இதெல்லாம் நீ, உன் கணவன் மீது உனக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிற வார்த்தைகள்; செயல்கள்.
இதை ஆதாரமாய் வைத்துதான் உன்னுடைய இல்லறம் தீர்மானிக்கப்படுகிறது.
"உன் அம்மா வேண்டாம்... உன் உறவினர் வேண்டாம்... ஆனால், நீ மட்டும் நான் விரும்பியபடி எல்லாம் நடக்க வேண்டும்' என்றால் கொஞ்சம் சர்வாதிகாரத்தனமாய் தோன்றவில்லையா?
அடுத்தது - தம்பதியருக்குள் மலரும் நட்பு! தூய்மையான களங்கமில்லாத நட்பு. அப்படிப்பட்ட சினேகம் இருந்தால்தான், வேலை முடிந்ததும் வீட்டுக்கு ஓடி வரத் தோன்றும் கணவனுக்கு... அவன் வரும்போது சந்தோஷமாய் எதிர்கொள்ளத் தோன்றும் மனைவிக்கு.
சினேகம் இருக்கிற இடத்தில், நான் ஒசத்தி - நீ மட்டம் என்கிற பேதமெல்லாம் கிடையாது... இரண்டு நல்ல நண்பர்களுக்கு, இரவெல்லாம் விழித்துப் பேச எத்தனையோ கதைகள் இருக்கும்.
கடைசியாக - உனக்கு, உன் கணவனிடத்திலும், அவருக்கு உன்னிடத்திலும் கருணை - பரிவு இதெல்லாம் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அக்கறையுடன், கருணையும், பரிவும் உள்ள துணையிடத்தில், தானாகவே எதிராளிக்கு நம்பிக்கை உண்டாகும். இந்த நம்பிக்கையே அவனை, சகலத்தையும் அவளிடத்தில் ஒப்படைக்கச் செய்து, அவளது அரவணைப்புக்குள் கட்டுண்டு கிடக்க வைக்கும்...
சகோதரி, குடிபோதையில் கூட அவர், "அம்மா, அம்மா' என்று புலம்பி அழுகிறார் என்றால் - அந்த அவருடைய அம்மாவிடத்தில் - அவர்கள் நல்லவரோ, பொல்லாதவரோ - நீயும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டாமா?
மனோதத்துவ டாக்டரிடம் முதலில் நீ கலந்து பேச வேண்டிய நிலையில் இருக்கிறாய்... கோபத்தின் உச்சத்தில் கையை பிளேடால் கிழித்துக் கொள்வது, தற்கொலை முயற்சியில் இறங்குவது - இதெல்லாம், மற்றவர்களின் கவனம் நம் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக, மன ஊனமுற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் விபரீத முயற்சி...
உன் அன்பும், பரிவும் இருந்தாலே, உன் கணவரின் குடிப்பழக்கத்தை மாற்றி விடலாம். இந்த விஷயத்தில் நீ, உன் மாமியாருடன் சேர்ந்து இருந்தாலே போதும்... கண்டிப்பாய் மாமியாரின் உதவி உனக்கு கிடைக்கும். வாழ்க்கையை, மணமுள்ள மலர் தோட்டமாக மாற்றும் சக்தி உன்னிடத்தில்தான் உள்ளது. குழந்தைகள் பாவம்... உங்களுடைய பிரச்னையில் அவர்களுக்கு ஏன் தண்டனை?
புலம்பலை நிறுத்து... கணவருக்குள் இருக்கும் காதலையும், பிரியத்தையும் வெளிக் கொண்டு வர வேண்டுமானால், அவரின் இதயத்துக்குள் எப்படி நுழைவது என்று யோசி. அதை விட்டு அசுர முயற்சிகளில் இறங்காதே!
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (103)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201319:55:23 IST Report Abuse
kumaresan.m " நல்ல அறிவுரை .மற்றும் நல்ல சூடு ...பெரும்பாலும் வீட்டில் நடக்கும் மாமியார் மருமகள் பிரச்சினை "
Rate this:
Share this comment
Cancel
டவுட் கோபாலு - Chennai,இந்தியா
09-மே-201313:08:18 IST Report Abuse
டவுட் கோபாலு எப்படிப்பா இம்மாம்பேறு.....மெனக்கெட்டு ஒக்காந்து கருத்து எழுதரிங்க.......இந்த பக்கம் படிக்க ஆரம்பித்தாலே ஒரு அரை மணி நேரம் ஒதுக்க வேண்டும் போல் உள்ளது....எழுதுங்க.... எழுதுங்க......எழுதிகிட்டே இருங்க.....
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
09-மே-201310:18:36 IST Report Abuse
Divaharan அனுபவம் இல்லாதவர்களின் கருத்துகளுக்கும் அனுபவமுள்ளவர்களின் முதிர்த கருத்துகளுக்கும் வித்தியாசம் நன்றாக தெரிகிறது. ஈகோ பார்க்காமல் கடைபிடித்தால் 70 சதவிகித பிரச்னைகளை தீர்த்து விடலாம் . விதண்டாவாதங்கள் போய்விடும்
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
09-மே-201320:40:45 IST Report Abuse
HoustonRajaசுருக்கமான நறுக்கான கருத்துக்கு வாழ்த்துகள்...
Rate this:
Share this comment
Cancel
sugeesan - salem,இந்தியா
08-மே-201320:15:49 IST Report Abuse
sugeesan நானும் ஒரு மருமகள் தான். எனக்கு என் அம்மா சொல்லி வளர்த்ததே மாமியாரை அம்மா என்று கூப்பிடு. கூப்பிட கூப்பிட அம்மா வாகவே உனக்கு தோன்றும். மாமியார் என்ற எண்ணம் வராதுன்னு. அதை இப்போது அனுபவபூர்வமாக உணர்கிறேன். என் கணவருக்கு அம்மா என்றால் உயிர். ஏன் எதுக்கு ன்னு கூட எதிர் கேள்வி கேக்க மாட்டாங்க அம்மா பேச்சுக்கு, அதை நன் ரசிக்கிறேன். அந்த தாய் ரொம்ப குடுத்து வச்சவங்க. நான் அடிகடி சொல்வேன் நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க இப்டி பையன் கிடைக்கன்னு, வெள்ளந்தியாய் சிரிப்பாங்க. என்னிடமும் ரொம்ப அன்பா இருக்காங்க. நம் பிள்ளையை ரொம்ப சந்தோசமா வச்சிருக்காள் ன்னு என் கிட்ட ரொம்ப பிரியமாய் இருகாங்க. சின்ன சின்ன விஷயத்தை கூட நான் சொல்ற போது சரி ன்னு ஏத்துக்காத என் கணவர் அம்மா சொன்னவுடன் சரிம்மா ன்னு சொல்வாங்க. நான் சிரிச்சிக்கிட்டே இதுலாம் என்னால தாங்க முடில ரொம்ப ஓவரா இருக்கு ன்னு சொல்வேன்.. மாமியார் உடனே ஏண்டா அவ சொல்றத கேளு ன்னு சப்போர்ட் பண்ணுவாங்க என்னை பொறுத்த வரை நாம் எப்படி இருக்கோமோ அதே மாதிரி தான் நம்ம கிட்டயும் மாமியார் இருபாங்க என்பது என் தாழ்மையான கருத்து. என் தோழிகளுக்கும் சொல்லி குடுத்து அவங்களும் விட்டு குடுத்து நான் சொல்றது உண்மை ன்னு அனுபவித்து நன்றி சொல்லிருக்காங்க. விட்டு கொடுங்க கண்டிப்பா கேட்டுட மாட்டோம்
Rate this:
Share this comment
villan - chennai,இந்தியா
09-மே-201314:22:39 IST Report Abuse
villanஉண்மைய சொல்லகூடாது| சீரியல் பைத்தியங்கள் நெறைய இருக்கு.கடிச்சி வைச்சிடும் உங்கள>...............
Rate this:
Share this comment
Iniya - Viluppuram,இந்தியா
10-மே-201302:51:38 IST Report Abuse
Iniyaகர்ப்பிணி பொண்ண கார்ல இருந்து தள்ள முயற்சி பண்ணி கார் விபத்துக்குள்ளாகி காய்ந்த சருகாக சிறப்பு விமானம் மூலம் கொண்டுவந்து இறக்கிய தகப்பனை கேளுங்கள் வலி என்றால் என்ன என்று? விட்டுகுடுத்துப்போவது அனைவருக்கும் சரி வராது. சிலருக்கு மருமகள் உயிரை விடும் வரை திருப்தி வராது....
Rate this:
Share this comment
Cancel
Amudha Thiru - Chennai,இந்தியா
08-மே-201309:04:35 IST Report Abuse
Amudha Thiru நான் ஒரு பட்டதாரி. 1.5 வயது குழந்தைக்கு தாய். ஒரு வருடமாக இல்லத்தரசியாக இருக்கிறேன். என் கணவர் ஒரு அம்மா பைத்தியம். அவர் என்னை பாசமாகவே கவனிக்கிறார் இரண்டு மாதங்களாக. அதற்கு முன்பு என் மனதை காயபடுத்தி அடித்து என் உடலை காயபடுத்துவது வரை அனுபவித்து விட்டேன். வேலையை விட்ட பத்து மாதங்கள் நரக வேதனை மட்டுமே. வீடு எடுப்பதற்காக என் நகைகளை எல்லாம் எடுத்து கொடுத்தேன். அவர் எப்போதுமே என் குடும்பம் என் குழந்தை என்ற எண்ணமே இருப்பதே இல்லை. எல்லாம் என் அம்மா என் அக்கா என்றே தூக்கி வைத்து கொண்டாடுகிறார். என்னை அடித்ததற்காக என் குடும்பம் என் அண்ணன் என் அக்கா அக்கா கணவர் என்று எல்லாருமே கேள்வி கேட்டதற்கு, என்னை அவர்களுடனே வைத்து கொள்ளுமாறும் குழந்தையை மட்டும் கொடுத்து விடுமாறும் இவர் கண்டபடி பேசி விட்டார். பிரச்சினையை வளர்க்க வேண்டாமென்று என்னை அழைத்து வந்து விட்டு விட்டார்கள். அவர் அடித்ததற்கு நியாயம் கூட கேட்கவில்லை. இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்தேன். இதில் எனக்கு இப்போது pf settlement 1.25 lacs வந்தது. ஒரு லட்சத்தை என் நகை திருப்ப கொடுத்தேன். இவர் வட்டி கட்டுவதே அதிசயம். அசல் ஒன்றும் கட்டுவதே இல்லை. இவர் சம்பளம் ஹோட்டல் சாப்பாடுக்கே மாதம் 6 - 7000 செலவாகிறது. கேட்டால் சண்டை. என் நகை திரும்ப வரவே இல்லை. அதில் அவர் அக்கா நகையை தான் திருப்பி கொடுப்பேன் என்று ஒரே சண்டை. நீ சம்பாதித்து திருப்பி கொடு என்றேன். கேட்கவில்லை. பிடிவாதமாக இருக்கிறார். விட்டு கொடுத்து விட்டேன். ஆனால், சமீபத்தில் என் அக்கா மகள் சடங்கு வந்தது. என்னிடம் இருந்த கொஞ்சம் பணத்தில் ஒரு மோதிரம் வாங்கி வைத்தேன். சடங்குக்கு நானும் இரவு 8 மணிக்கு தான் கெளம்ப வேண்டும் என்றான். நான் கேட்கவில்லை. காலை 12 மணிக்கு சென்று என் பணிகளை செய்தேன். நான் வர மாட்டேன் என்றான். ஆனால் 8 மணிக்கு அவர் வீட்டு அருகில் குடியிருந்த ஒரு பெண்ணை (அக்கா என்றே 3 வருடங்களாக கூப்பிட்டு எனக்கு தெரியும்) ஜோடியாக வண்டியில் கூப்பிட்டு வந்தார். அவரும் என்னிடம் வந்து திரும்பி செல்லும்போது உன் மனைவி கேட்டால் என்ன செய்வாய் என்று கேட்டதாகவும், மாமியாருடன் அனுப்பி விடுவேன் என்று சொன்னதாகவும் சொன்னார். நான் வேண்டுமென்றே சென்று கேட்டேன். அவரும் அதையே சொன்னாய். மனம் வெறுத்து விட்டது. இவரை சந்தேகிப்பதா வேண்டாமா. இதில் என் வீட்டவர்கள் தங்கை கணவர் என்ற மரியாதையில் பழையதை எல்லாம் மறந்து விட்டு மரியாதை கொடுத்து பேசினார்கள். ஒருவரையும் மதிக்கவில்லை. நேற்று என்னிடம் உன் அக்காகளை நாக்கை புடுங்கி கொள்வது போல் கேட்டு தான் வந்தேன் இனி ஒரு function கும் குப்பிடவே கூடாது என்று மீசையை முறுக்குகிறார். நான் மட்டும் என் மாமியார் நாத்தனாரை அனுசரித்து போகவேண்டுமா. மிகவும் குழம்பி உள்ளேன். அறிவுரை கூறுங்கள்.
Rate this:
Share this comment
JOY - Chennai,இந்தியா
08-மே-201313:48:35 IST Report Abuse
JOYஅமுதா,மனிக்கவும் நிங்கள் பிற்பகுதியல் குறி இருபது சுத்தமாக புரியவில்லை. உங்கள் குடும்பத்தை மதிக்கவில்லை ஆதலால் அவர் குடும்பத்தை மதிக்க வேண்டுமா என்று கேட்டு உள்ளீர்கள். எனக்கு ஒரு சந்தேகம். ஏன் அவர் உங்கள் குடும்பத்தையும் குறிப்பாக உங்களையும் வெறுக்கிறார். குறிப்பாக அழகான குழந்தையின் தாயாகிய உங்களை அடிக்கும் அளவிற்கு அவருக்கு ஏன் வெறுப்பு ..நன்றாக யோசியுங்கள்.தவறு உங்கள் பக்கம் இல்லையென்ரறால் உங்கள் சந்தேகம் அலசி பார்க்க வேண்டிய ஒன்று தான்.அவருக்கு தவறான தொடர்பு இருக்க வாய்புகள் இருக்கு,,ஆனால் அதிகமாக உங்கள் பக்கம் தவறுகள் இருக்க வாய்ப்பு இருகிறது. ஆதலால் நன்றாக யோசியுங்கள் ..எடுத்த உடனே அவரை நாம் சந்தேக பட வேண்டாம்...உங்கள் இறுதி கேள்விக்கு பதில் ,கண்டிப்பாக உங்கள் நாத்தனாரை அனுசரித்து போகவேண்டும். காரணம் நாளைக்கு உங்கள் கணவர் பக்கம் தவறுகள் இருபின் இவர்கள் உங்களுக்கு பெரிய துணையாக நிற்பார்கள் ,சிரிக்க வேண்டாம் இது தான் எதார்த்தம் .......
Rate this:
Share this comment
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-மே-201315:44:12 IST Report Abuse
sunilஉங்கள் கணவர் உங்கள் குடும்பத்தாரை அனுசரித்து போகவில்லை என்பதற்காக நீங்களும் அதையே அவருடைய குடும்பத்தாருக்கு செய்தால் எப்படி.... நீங்கள் எப்படியோ அப்படியே இருங்கள், அதுதான் உங்களுக்கு பலம் சேர்க்கும். ஏட்டிக்கு போட்டியாக எதையாவது செய்வதால்தான் பிரச்சனை பெரிதாகும்....
Rate this:
Share this comment
காயத்ரி - Chennai,இந்தியா
10-மே-201307:04:18 IST Report Abuse
காயத்ரி தோழி அமுதா, பெண்கள் அதிர்ஷ்டசாலிகள், எப்படி என்று கேட்டால் அவர்களுக்கு பிறந்தகம், புக்ககம் என்று இரண்டு வீடுகள், பிறந்த வீட்டில் தொப்புள் கொடி மற்றும் ரத்த சம்மந்தமென்றால் புகுந்த வீட்டில் தாலிக்கொடி, கணவரை வைத்துக் கிடைக்கும் உறவுகள் என்று அமையும். உங்களுக்கு மட்டுமில்லாமல் அனேகம் பேருக்கு அம்மா, அக்கா, தங்கை மேல் பாசம் கொண்ட கணவரே கிடைத்துள்ளனர். சமீபத்தில் என் தோழியை அடிக்கும் கணவரிடம் மனைவி கணவரையோ கணவர் மனைவியையோ அடிப்பது சரியா? தவறா என்பது குறித்த விவாதம். கணவர் மனைவியை அடிப்பது தவறு, திருப்பி அடித்தால் உங்கள் நிலைமை? ஆணுக்கு எதிலும் பெண் இளைத்தவரில்லை,ஏனடிக்கிறீர்கள்?என்றதற்கு,பின்னே என்னங்க, நாக்கா அது? சுழட்டி சுழட்டி அடிக்கிறா..அதான் இந்த பஞ்ச் கொடுத்தால் அந்த நாக்கோட இஞ்ச் குறையும் என்று சொன்னார். சில வீடுகளில் மனைவியின் வாயை அடக்கக் கூடக் கணவர்கள் அடிப்பதுண்டு. ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது தவறான செயல். முதலில் உங்களை அடிக்கும் அளவிற்கு நிலைமையைக் கொண்டு செல்லாதீர்கள். அடித்தால் பதிலுக்குத் திருப்பி அடியுங்கள்................அன்பால்.....மெளனத்தினால்....பொறுமையால்.....பக்குவமான அணுகுமுறையினால்....ஆண்கள் உருவத்தில் பெரியவர்கள், உள்ளத்தில் குழந்தை மனதுக்காரர்கள். கொடுமைக்காரக் கணவரையும் அன்பால் திருத்த முடியும். மீசையை முறுக்கிக் கொண்டு , பார்ப்பதற்குக் கரடு முரடாக, வல்லினமாய் இருக்கும் ஆணினம், அன்பு காட்டும் பெண்ணினம் முன்பு தோற்று விடுவது கண்கூடு. கணவரது பலவீனம் எது என்பதைப் பார்த்து அங்கே அன்பாலே தட்டுங்கள். அன்பு, புரிதல், மதித்தல்,அனுசரித்தல் போன்றவை எளிய சூத்திரங்கள்...ஆத்திரங்கள் சாதிக்காததை இந்தச் சூத்திரங்கள் சாதிக்கும்.. இடி வீட்டில் விழப் போகிறது என்ற சூழலைத் தவிர இடித்துரைத்தல்,அதிர்ந்து பேசுதல் வேண்டாமே. பணிவது பெண்ணியமா? நிச்சயமாக. சூறாவளிக் காற்றில் வேரோடு சாயும் மரங்களின் நடுவில் வளைந்து கொடுத்து நாணல் வாழவில்லையா?எங்கள் வீடு, உங்கள் வீடு என்று எப்போதுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். நம் வீடு என்று சொல்லுங்கள், செயலிலும் நிரூபியுங்கள்.அவர் உங்கள் வீட்டு விசேஷத்திற்கு வரவில்லையென்றாலும் நீங்கள் உங்கள் விசேஷமாக அவர் வீட்டு விசேஷத்தில் அன்புடன் வேலை செய்யுங்கள். முதலில் உங்கள் விரிசல்களைப் பேசியோ அன்பு காட்டியோ சரி செய்யுங்கள். இடைவெளி குறையும் போது இடையில் வந்தவர்களும்(பக்கத்து வீட்டு அக்கா) விலகும் வாய்ப்பு இருக்கிறது. 'ஒரு கை ஓசை தராது', வாக்குவாதத்தின் போது மெளனம், தவறுகள் தன்பால் இருந்தால் ஏற்றுக் கொள்ளுதல், அடுத்த முறை மீண்டும் அவ்வாறு நடக்காமல் பார்த்தல், நிதானம், தன்மையாகப் பேசுதல், உணர்வுகளைப் புரிந்து மதித்து நடத்தல் ஒவ்வொரு கணவரும் மனைவியும் கடைபிடிக்க வேண்டிய நல்ல பண்புகள். முடிந்தால் புகுந்த வீட்டு உறவுகளிடம் மனம் விட்டுப் பேசி அன்புடன் பழக முயற்சியுங்கள். மிரட்டியோ தட்டியோ அன்பைப் பெற முடியாது., தானாகப் பூத்து வர வேண்டும், கேட்டு வாங்கும் பொருளல்ல காதல். மனதார உணர்ந்து பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டியது நேசங்கள். அதற்கு உங்கள் அன்பான நடவடிக்கைகள் அடித்தளம் அமைக்கட்டும்.அதிகாரம் 'அதி' காரமாகாமல் அன்பு ஆதாரமாகட்டும். புரிதல் பிறந்தால் தெளிவு பிறக்கும், பக்குவமாகப் பிரச்சினைகளைக் கையாளலாம்....
Rate this:
Share this comment
Pachiappan - bengaluru,இந்தியா
10-மே-201320:33:46 IST Report Abuse
Pachiappanகாயத்திரி அக்காவிற்கு நிகர் அவர்களே. பல பேருடைய வரம், உங்கள் கருத்துகள். வாழ்க உங்கள் நலஉள்ளம் வளர்க தங்களின் அன்பு சேவை....
Rate this:
Share this comment
காயத்ரி - Chennai,இந்தியா
12-மே-201303:08:27 IST Report Abuse
காயத்ரி அன்புத்தம்பி பச்சி அவர்களுக்கு, நீங்கள், குடும்பத்தினர் நலமா? செல்ல மகள் எப்படி இருக்கிறாள்? நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவென்று நினைக்கிறேன். மனைவி, குழந்தையுடன் நலமுடன் வாழப் பிரார்த்தனைகளுடனும் வாழ்த்துகளுடனும்........
Rate this:
Share this comment
Cancel
Rekha Rekha - Chennai,இந்தியா
07-மே-201322:00:33 IST Report Abuse
Rekha Rekha மாமியார் குற்றம் மருமகள் குற்றம் என்ற வாதம் யாருக்கும் பயன் இல்லை....எல்லோரும் தனிமனிதர்கள் எனவே ஒரு பொது முறை படுத்த முடியாது.......உனக்கு வாழ்க்கை வேண்டுமென்றால் நீதான் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்...........மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அன்போடும் பண்படோடும் வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை நம்முடையது......'வலிமையான மற்றும் சிறந்தவை விட தக்கன பிழைக்கும்' என்பதுதான் பரிணாம வளர்ச்சி விதி......எனவே உன்னை சார்தவரை எப்போதும் கைவிட கூடாது உன்னுடைய அன்புக்கு உரியர்களுக்கு சரியான அன்பை கொடு....எனக்கு மட்டும் அன்பு அல்லது பணம் சொந்தம் என்றால் கஷ்டம் தான் மிஞ்சும்.......பத்திரம் (character) அறிந்து பிச்சைஇடவேண்டும்.......இங்கு யாரும் நிரந்திரம் கிடையாது....இதில் ஸ்டாடிஸ்டிக்ஸ் வேறு .... இங்கு ஒருவர் தன் மகனுக்கு பாரமாய் இருப்பின் செத்துவிடுவேன் என்கிறார் ஒருவர் தம்முடைய கருத்தை ஆதரித்தல் சூப்பர் என்கிறார் ஒருவர் மங்கை இனியாவை புரிந்துகொள் என்கிறார் (அவர்களுது மனதை புரியாமல் இல்லை)...ஆனால் இந்த கடிதம் எழுதிய சகோதிர்யும் அவரது குடும்பமும் நல்வழி படுத்த சிந்திட்டால் மிக சிறப்பானதை அமையும்..... வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் வரும்போது உலகத்தில் எங்ககொ வாழும் நாம் ஏன் அனைவரும் ஒன்று சேருந்து ஒரு நேரம் அமைத்து கூட்டு பிரத்தனை கூடாது?
Rate this:
Share this comment
JOY - Chennai,இந்தியா
08-மே-201314:07:42 IST Report Abuse
JOYஒரு பெண்ணிடம் இருந்து இந்த கருத்து வரவேற்கதக்கது......
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - Chennai,இந்தியா
07-மே-201321:33:32 IST Report Abuse
Siva Kumar My Beloved sister mangai, i applaud your views, many exploiding male dominant minded that last long from medieval age in our culture. yes ,we agree being a feminist, a woman unconditionally suffers mentally, physically with lots of burden ,because of the our whole world thinks ,saw,women like none other than commodity,subordinate to men etc. but we must accept the truth from the 21st century onwords ,women slowly as well as steadily move from the old perverted bias ,partiality,undeny,opressed to dramitically liberalized ,participate social stigma in all sectors .and we must not forget ,the perception of women in family values among men's side also changing a lot .yes its only a tiny little percentage only but human civiization is always d itself from getting best of mankind. finally i think above all is enough here to nurture my fellows. i thank you for all, to participate the great debate , to providing solutions ,nurturing some innovotive out of box ideas, especially womens like from uma ma'am to kayathri ma'am. i beleive ,our fore father 'the great "Bharathiyar", dream will preavail. See you again my fellows . Yours lovely, shiva
Rate this:
Share this comment
Cancel
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
07-மே-201319:31:46 IST Report Abuse
Uma ஈ காக்கா கூட சமீபத்துலே இந்த பகுதியிலே எட்டி பார்க்கல. இந்த வாரம் பயங்கர கருத்துப் போரா ஆகிருக்கே. பாவம்பா, பிரச்சினையிலே தவிக்கிறவங்களுக்கு உங்க அறிவ பயன்படுத்தி ஆறுதல் சொல்லுவீங்களா. அத விட்டுட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறது நல்லாவாருக்கு? இந்த சண்டை பார்க்கிற இன்ட்ரஸ்ட்லே இந்த பிரச்சினை என்ன, என்ன சொல்லணும்னே பாதி பேருக்கு விளங்காம போவப் போவுது.
Rate this:
Share this comment
Goindha - Shangai,சீனா
10-மே-201314:26:14 IST Report Abuse
Goindhaரொம்ப நன்னா சொன்னிங்க...
Rate this:
Share this comment
Cancel
praven.dr@gmail.com - UK,யுனைடெட் கிங்டம்
07-மே-201318:11:36 IST Report Abuse
praven.dr@gmail.com For many married couples, an active sex life is an integral factor in keeping the relationship strong. In fact, sexual compatibility is what may have drawn couples together to with. Unfortunately, not all couples enjoy regular sex, especially with the passing of time. It can be very frustrating, for example, for wives who have husbands that have lost interest in sex. While the problem can be relatively complex, wives can take definite steps to increase their husband's sex dive. Step 1 Make changes in physical appearance. The changes could include losing weight, or changing hair color and style. These changes could cause a husband to pay more attention to his wife's physical qualities, which could stimulate his sexual desires. Step 2 Wear more revealing clothing. This is especially important before going to bed. Visual stimulation is an important key in sexual arousal. Also, looking as attractive as possible at all times can attract positive attention. Step 3 a relaxing environment. A relaxing massage, for example, can help eliminate the symptoms of stress. Stress can be a contributing factor to a reduced interest in sex. Playing soothing music during the massage can be helpful in reducing stress as well. Step 4 Set up a time to discuss mutual feelings. This is especially important if the first three steps are unsuccessful. The meeting should be in a quiet place with limited distractions. An attempt should be made to allow both partners to speak freely. Step 5 Set a date to go away for a week together. a location where activities can be enjoyed together. Make an effort to look as good as possible, and have a romantic dinner together. Initiate as much physical contact as possible by holding hands and embracing. Step 6 Make an appointment, as a couple, to speak with a counselor. This is essential if the first five steps fail to bring satisfactory results. It is important to a counselor with extensive experience handling couples with intimacy problems...,
Rate this:
Share this comment
Cancel
07-மே-201312:36:15 IST Report Abuse
ந. தங்கமணி வேம்பத்தி இந்த பிரச்னைக்கு காரணம் அளவு கடந்த சுயநலம் . தான் மட்டுமே. தன நலம் மட்டுமே முக்கிய மாக கருதும் மனைவி மற்றும் கணவன். இதை தான்டி குடும்பம், பெரியவர்கள், சமுதாயம் குறித்த அக்கறை இன்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.