Advertisement
ஆண் வேடமிட்டு பார்க்கு சென்ற இளவரசி!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 மே
2013
00:00

பிரிட்டன் இளவரசி டயானா, தன்னுடைய, மனிதாபிமான செயல்களால், உலக மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். கடந்த, 1997ல், பாரீசில் நடந்த கார் விபத்தில், அவர் மரணமடைந்தார். அவருடன் மிக நெருங்கி பழகிய, பிரபல ஹாலிவுட் நடிகை ஷெலோ ரோகாஸ், தன், கடந்த கால நிகழ்வுகளை, "தி பவர் ஆப் பாசிடிவ் டிரிங்கிங்' என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில், இளவரசி டயானாவை பற்றிய, சுவராசியமான சம்பவங்களையும், எழுதியுள்ளார்.
கடந்த, 1988ல், தெற்கு லண்டனில் இருந்த, பிரபலமான இரவு விடுதிக்கு, டயானா செல்ல விரும்பியதாகவும், அதற்காக, டயானாவுக்கு ஆண் வேடமிட்டு, அங்கு அழைத்துச் சென்றதாகவும், ரோகாஸ் அந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ஆண்கள் அணிவது போன்ற, மேலங்கியும், கண்களை மறைக்கும் வகையில் கருப்பு கண்ணாடியும், டயானாவுக்கு அணிவித்து, "பார்'க்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து, ரோகாஸ் கூறுகையில், "விடுதியில் உள்ளவர்கள், எந்த நேரத்திலும், இளவரசியை அடையாளம் கண்டுபிடித்து விடுவர் என, நினைத்தோம். கடைசிவரை, யாராலும் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தான், ஒரு இளவரசி என்பதை மறந்து, அங்கிருந்த ஒவ்வொரு நொடியையும், சந்தோஷமாக அனுபவித்தார் டயானா...' என்று, தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் ரோகாஸ்.
ஜோல்னா பையன்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
07-மே-201314:29:54 IST Report Abuse
amukkusaamy சார்லஸ் என்கிற குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை டயானா. பின் பாதியில் பாதை மாறி அவரே அவருக்கு எமனை அழைத்துக்கொண்டார்.
Rate this:
4 members
0 members
0 members
Share this comment
kooli - saakkadai,இத்தாலி
08-மே-201322:51:44 IST Report Abuse
kooli சார்லஸ் கையில் கிடைத்த கருநாகமாய்க் கூட கருதலாம்...
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.