காரைத்தேடி உள் அமைப்பை மாற்றும் ஐ போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 மே
2013
00:00

மிகப் பெரிய கார் நிறுத்துமிடத்தில், உங்கள் காரை நிறுத்திவிட்டு வேகமாக திரைப்படம் பார்க்கவோ, அல்லது பெரிய வணிக வளாகங்களில் பொருள் வாங்கவோ சென்றுவிடுகிறீர்கள். எல்லாம் முடிந்து வந்த பின்னரே, அந்தக் கூட்டத்தில், உங்கள் காரை எங்கு பார்க் செய்திருக்கிறீர்கள் என அறிய முடியவில்லை. சென்னை ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்பிரஸ் அவின்யூ போன்ற இடங்களில் பல அடுக்குகளில் கார்களை பார்க் செய்திடுகையில், எந்த நிலை அடுக்கில் உங்கள் கார் உள்ளது என்பதை அறிவதே குழப்பமாக இருக்கும்.
இதே போல, கார்களை இயக்கும் ஒவ்வொருவரும், ஒரு வகையில், அதனை ஓட்டுபவர் அமரும் இருக்கை, பின்புறம் காட்டும் கண்ணாடி, குளிர் காற்று வரும் வழிகள், ரேடியோ அல்லது சிடி பிளேயர் போன்றவற்றை அமைப்பார்கள். இதனால், ஒருவர் தான் அதனை ஓட்டிச் செல்ல அமரும்போது, இந்த செட்டிங்ஸ் அனைத்தையும் முதலில் மாற்றி அமைத்த பின்னரே, காரை இயக்க வேண்டும். அதனையே அவரும் விரும்புவார்.
இவை அனைத்தையும், ஐபோனில் செட் செய்து விரைவாக மாற்றி அமைக்கும் வழியினை, ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர்கள் அமைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பிற்கான உரிமையை விண்ணப்பித்து பெற்றுள்ளனர்.
ஐ போன் மூலம், புளுடூத் இணைப்பில், ஒரு கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தினைக் கண்டறிய முடியும். உங்களுடைய மொபைல் போன், உங்கள் காருடன் பேச முடியும். கார் நிறுத்துமிடத்தில், இன்னொரு டிஜிட்டல் சாதனத்தை இயக்கினால், மொபைல் போன் அதனுடன் தொடர்பு கொண்டு, கார் சரியாக எங்கே நிறுத்தப்பட்டுள்ளது எனத் தன் திரையில் மேப் மூலம் சுட்டிக் காட்டும். அதே மேப் மூலம், கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்குச் செல்ல, வழியும் காட்டப்படும். தற்போது எப்படி ஜி.பி.எஸ். சிஸ்டம் மூலம், இடங்களுக்குச் செல்ல மேப் மூலம் வழி காட்டப்படுகிறதோ, அதே போல இதனை மேற்கொள்ளலாம்.
சரி, உங்கள் காரைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். அதனைத் திறக்கத் தேவைப்படும் சாவியை எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது மறந்து போய்விட்டதா? பேண்ட் பாக்கெட்டிலா, மனைவியின் கைப்பையிலா? பொருட்கள் வாங்கி நிரப்பி விட்ட பையின் கீழ்ப் புறத்திலா? அல்லது சாப்பிட்ட ஹோட்டலில் கை கழுவும் இடத்திலா? எனத் தேட வேண்டியதுள்ளதா? கவலையே பட வேண்டாம். இதற்கும் ஐ போன் வழி சொல்லும். அப்படியே, சாவி இருக்குமிடம் அறிய முடியவில்லை என்றாலும், உங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தி, காரின் கதவினைத் திறந்து, காரின் இஞ்சினையும் இயக்க முடியும். (அப்புறம் அதனை இயக்கி, மற்றவர் மீது மோதாமல் கார் ஓட்டுவது உங்கள் சாமர்த்தியம்.) அப்படியானால், யார் வேண்டுமானாலும், உங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தி, காரை எடுத்துச் சென்றுவிடலாம் என்று எண்ணுகிறீர்களா? அதற்காகவே, ஒன்று அல்லது இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை ஐ போனில் தரப்படுகிறது.
காரைத் திறந்து இயக்கிய பின்னர், தொடக்கத்தில் கூறப்பட்ட, ட்ரைவர் இருக்கை சரி செய்தல், பின்புறக் கண்ணாடி அமைப்பு, ரேடியோ, தொலைக்காட்சி சேனல், மொபைல் போன் அமைப்பு போன்றவற்றையும், ஐ போன் மூலமே சரி செய்துவிடலாம். இந்த செயல்பாடு, நம் நேரத்தை அதிகம் மிச்சப்படுத்தும். போனில் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம், நாம் பல மாற்றங்களை மேற்கொள்ள முடியும். உங்கள் மனைவியோ அல்லது மகனோ காரை இயக்கிய பின்னர், நீங்கள் அதனை இயக்க அமருகையில், கவலை இன்றி, உங்கள் மொபைல் போனில் ஒரு பட்டனை அழுத்திவிட்டு, காரை கவலை இன்றி ஓட்டிச் செல்லலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranjith Kumar - Tirunelveli,இந்தியா
06-மே-201301:54:38 IST Report Abuse
Ranjith Kumar Iphone வாங்கிவிடலாம். ஆனால் Iphone ல் இயங்கும் காரை வாங்க முடியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X