சிஸ்டம் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 மே
2013
00:00

சென்ட் டூ மெனுவை நீட்டலாம்:






Send To மெனுவில் கூடுதலாக பைல்களை பதிப்பதில், விஸ்டா இயக்கம் எக்ஸ்பி இயக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. விஸ்டாவில் Control Panel ஐத் திறக்கவும். அதன்பின் Folder Options பிரிவைத்தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைத் திறக்கவும். இங்கு தரப்படும் ஆப்ஷன்களில் Show hidden Files and Folders என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி ஸ்டார்ட் கம்ப்யூட்டர் எனக் கிளிக் செய்து சி டிரைவினைத் திறக்கவும். இதில் யூசர்ஸ் என்னும் போல்டரைத் திறக்கவும். இதில் உங்களுடைய பெயரை யூசர் நேமாக உள்ளதைத் தேர்தெடுக்கவும். அடுத்து App Data, Roaming, Microsoft Windows, Send To என வரிசையாகச் செல்லவும். போல்டரைக் காண முடியாவிட்டால் % AppData%\Microsoft Windows\ Send To என அட்ரஸ் பாரில் டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்த பின் Send To மெனுவில் நீங்கள் உங்களுக்குத் தேவையானதை இணைக்கலாம்.

குயிக் லாஞ்ச் கீ போர்ட் ஷார்ட் கட்:






அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை உடனுக்குடன் விரைவாக இயக்க நமக்கு Quick Launch பார் பயன்படுகிறது. இந்த பாரில் உள்ள புரோகிராம்களை ஷார்ட் கட் கீகளைக் கொண்டும் இயக்கலாம். இதற்கு விண்டோஸ் கீ அழுத்தவும். அதன் பின் குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகான் எத்தனாவதாக உள்ளதோ அந்த எண்ணை அழுத்தவும். எடுத்துக்காட்டாக குயிக் லாஞ்ச் பாரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூன்றாவதாக அமைக்கப்பட்டிருந்தால் விண்டோஸ் கீயுடன் 3 என்ற எண்ணை அழுத்தினால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கப்படும். இரண்டு கீகளையும் சேர்த்து இயக்க வேண்டும்.

போல்டர் விரிந்து கொடுக்க:






பைல்களைத் தேடுகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் போல்டர்களைத் திறக்கிறோம். பின்னர் அதனுள் பல துணை போல்டர்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாகக் கிளிக் செய்து திறக்க வேண்டியுள்ளது. அவ்வாறின்றி, ஒரே கீ அழுத்தலில் அனைத்து போல்டர்களும் திறக்கப்பட்டால், நமக்கு வேலை மிச்சம் தானே. இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இடது பக்கம் உள்ள பிரிவில் உங்கள் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் நியூமெரிக் கீ பேடில் உள்ள ஆஸ்டெரிஸ்க் கீயினை (*) அழுத்தவும். அவ்வளவுதான். போல்டர்கள் மற்றும் துணை போல்டர்கள் அனைத்தும் காட்டப்படுவதனைப் பார்க்கலாம். உங்கள் ட்ரைவில் அதிக போல்டர்கள் இருந்தால், இதற்கு சில நிமிடங்கள் ஆகலாம். சற்றுப் பொறுமையுடன் காத்திருந்து பார்க்கவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X