அதிகம், ஆனா அதிகம் இல்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 மே
2013
00:00

இந்த தலைப்பைப் பார்த்தவுடன், ""வரும், ஆனா வராது'' என்ற காமெடி டயலாக் நினைவிற்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த தலைப்பு ஒரு கவலை கொள்ளத்தக்க நிகழ்வு சார்ந்ததாகும். இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில், இந்தியா, உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. ஆனால், இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவாகவே உள்ளது. நூறில் 11 பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு கவலைப்படத்தக்க விஷயமாகும்.
இந்தியாவில், 1998 ஆம் ஆண்டில், 14 லட்சம் பேர் மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டிருந்தனர். 2010 ஆம் ஆண்டில் தான், இது 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. அதன்பின், சிறிது வேகமாகவே இந்த எண்ணிக்கை வளர்ந்தது. அண்மைக் காலத்திய கணக்கில், இது 12 கோடியாக இருந்தது. உலகின் மொத்த இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கையில்,முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பிடித்தாலும், ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், மிகவும் குறைவான விகிதத்திலேயே, இன்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர்.
தற்போது, ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. 2012 இறுதியில் 2 கோடி ஸ்மார்ட்போன்கள் புழக்கத்தில், இணையப் பயன்பாட்டில் இருந்தன. 2016ல், இது 3 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 4ஜி அலைவரிசை இணைப்பு தருவதற்கு, அடிப்படைக் கட்டமைப்புகள் வேகமாக அமைக்கப்பட்டு வருவதால், இது இன்னும் உயரும் என எதிர்பார்க்கலாம்.
உலக அளவில், 270 கோடி மக்கள் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். உலக மக்கள் தொகையுடன் இதனைக் கணக்கிடு கையில், இது 39 சதவீதம் ஆகும். ஆனால், இந்தியாவில் இது 11 சதவீதமாக மட்டுமே இருப்பது கவலைக்குரியது.
இந்த வகையில், சீன மக்களில், 40 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். இதுவே, பன்னாட்டளவில், அதிக பயன் பாட்டு விகிதம் ஆகும். அங்கு 51 கோடியே 10 லட்சம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளனர். அமெரிக்காவில் 24 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவை அடுத்து, அதிகமாக இணையம் பயன்படுத்துவோர் வாழும் நாடு ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகும்.
ஒரு நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அதிக இணையப் பயன்பாடு உள்ள நாடு எது என்று பார்க்கையில், ஐரோப்பா மொத்தமாக 75 சதவீத பயன்பாட்டுடன் முதல் இடத்தைப் பெறுகிறது. அடுத்து அமெரிக்கா 61 சதவீதப் பயன்பாட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலக அளவில் ஆண்களே அதிகம் (41%) இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகின்றனர். பெண்களில் 37% பேர். உலக ஜனத்தொகையில் இது 103 கோடி பெண்கள் மற்றும் 105 கோடி ஆண்கள் எனக் கணக்காகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravikumar Solaiappan - Sankarankovil,இந்தியா
13-மே-201315:29:16 IST Report Abuse
Ravikumar Solaiappan நான் தவறுதலாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஹோம் 2010 சாப்ட்வேர் அழித்து விட்டேன். மீண்டும் அதனை எனது டெல் விண்டோ 7 லேப்டாப் எல் கொண்டு வர என்ன செய்ய வேண்டும். தயவு செய்து explain தரவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X