பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 மே
2013
00:00

விண்டோஸ் தடைகளை முந்தைய வாரத்தில் தந்து, பின்னர் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, உடனே அதற்கான தீர்வுகளைத் தொடர்ந்து தந்தமைக்கு மிக்க நன்றி. என்னைப் போல மற்ற வாசகர்களும் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். வாசகர்களுக்கு மதிப்பு கொடுத்து வழி நடத்தும் தங்களுக்கு என் மனதார்ந்த நன்றி.
ஆ. பாக்யராஜ், சென்னை.

அதிகம், ஆனால் அதிகம் இல்லை என்ற கட்டுரையில் உள்ள தகவல்கள், நம்மில் ஒரு சிலரே அறிவியல் முன்னேற்றம் கண்டு வருகிறோம் என்பதனைக் காட்டுகிறது. இணையப் பயன்பாட்டில், இவ்வகையில் நம் மக்கள் பின்தங்கிவிடக் கூடாது. நீங்கள் தந்துள்ள புள்ளி விபரங்களை அரசு உணர்ந்து பின்பற்றினால், நிச்சயம் நாம் உயரலாம்.
பேரா. கா. சத்தியசீலன், கோவை.

குரோம் பிரவுசர், பி.டி.எப். பைல் குறித்த எச்சரிக்கை தரும்போதெல்லாம், இது நிறுவனங்களுக்கிடையேயான பிரச்னை என்றிருந்தேன். ஆனால், இதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன என்பது உங்கள் கட்டுரையைப் படித்த பின்னரே தெரிந்தது.
சி. சந்தோஷ், மதுரை.

நீங்கள் தந்துள்ள அளவிற்கு பி.டி.எப். பைல்களில் ஆபத்து இருக்கும் என நான் எண்ணவில்லை. இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான்.
சி.பரணி செண்பகம், திருப்பூர்.

WinDirStat புரோகிராம் மிகச் சிறப்பான பயன்களைத் தருகிறது. தகவலுக்கு நன்றி.
இரா. கண்ணன், திருமங்கலம்.

வெப் கேமரா பயன்படுத்த இவ்வளவு சங்கதிகளைத் தெரிந்து வைத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதனைத் தெளிவாக விளக்கத்துடன் தந்திருக்கிறீர்கள். நல்ல தகவல்கள் கொண்ட பாடமாக இருந்தது.
உமாராணி, காரைக்கால்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தினை டூயல் பூட் ஆகப் பயன்படுத்துவதால், அடிக்கடி அதில் குழப்பமேற்பட்டு, பயன்படுத்துவதையே விட்டுவிடுவேன். நீங்கள் அளித்துள்ள ஒவ்வொரு கட்டளைக்கும், தொடு திரை கட்டளை மற்றும் மவுஸ் – கீ போர்ட் கட்டளை விளக்கம் சிறப்பாக உள்ளது. இப்படியே ஒவ்வொரு வாரமும் விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்த தகவல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கே.எஸ். ஞானராஜ், சிவகாசி.

மியூசிக் உலகில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வரும் ஐ ட்யூன்ஸ், தமிழகத்தில் பெரும் அளவில் இடம் பெறவில்லை. இருப்பினும் தகவல்கள் ஆர்வமூட்டும் வகையில் உள்ளன.
நா. சுந்தரம், பொள்ளாச்சி.

ஐ ட்யூன்ஸ் தொடங்கிய நாள் முதல் பயன்படுத்தி வருகிறேன். மியூசிக் உலகைப் புதுத் திசையில் பயணிக்க வைத்த பெருமை, ஐ ட்யூன்ஸ் மற்றும் அதனைத் தந்த ஆப்பிள் நிறுவனத்திற்கு என்றும் உண்டு.
ஆர். வைத்யநாதன், சிங்கப்பூர்.

சென்னை சிவராஜ் கேட்ட கேள்விக்கான பதில், அவருக்கு மட்டுமல்ல, வீட்டில் சிறுவர்களை இணையத்தில் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் உறுதுணையாக இருக்கும். இந்த வகையில் நல்ல விளக்கமான பதிலைத் தந்த ஆசிரியருக்கு நன்றி.
பி.ஆர். இனிமை ராஜ், புதுச்சேரி.

சிஸ்டத்திற்கும் டேட்டாவிற்கும் என தனித்தனியே ஹார்ட் டிஸ்க் அல்லது ட்ரைவ் அமைப்பது குறித்த தகவல் மிகவும் பயனுள்ள ஒன்றாகும். ஹார்ட் டிஸ்க் விலை குறைந்த இந்த நாட்களில் எல்லாரும் இதனைப் பயன்படுத்தலாம்.
கா. சிகாமணி, தேனி.

இன்டர்நெட் பெனட்ரேஷன் என்னும் இணையப் பயன்பாட்டு மக்கள் விகிதம், ஒரு நாட்டின் தகவல் தொழில் நுட்ப பரவலின் அடையாளம் ஆகும். இந்தியாவில் இது மிக மோசமாக உள்ளது. படித்த அனைவரும் இதனை உயர்த்தப் பாடு பட வேண்டும். இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும்.
டாக்டர் என். கிருஷ்ணன். சேலம்.

எக்ஸெல் ஷார்ட் கட் கீ பட்டியல் மிக அருமை. அப்படியே பிரிண்ட் எடுத்து எங்கள் அலுவலகத்தில் பயன்படுத்தி வருகிறோம். நன்றி.
செ. பரந்தாமன், கோவை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X