நோக்கியாவின் டச் அண்ட் டைப்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஆக
2010
00:00

வழக்கமான 12 கீ கள் அடங்கிய போன் கீ பேடுடன், தொடுதிரை வசதியையும் அளித்துத் தன் எக்ஸ் 3 டச் அண்ட் டைப் மொபைல் போனை நோக்கியா வடிவமைத்துள்ளது. இவை இரண்டும் இணைந்து வடிவமைக்கப்பட்ட  முதல் நோக்கியா போன் இதுதான்.  இதன் சிறப்பு இதன் ஸ்லிம் தன்மையில் உள்ளது.  9.6 மிமீ தடிமனில், 78 கிராம் எடையில் இந்த போன்  அமைந்துள்ளது.  பளிச் என்ற 2.4 அங்குல வண்ணத்திரை மூலமாகவும், கீ பேட் மூலமாகவும் இதனைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் செய்திகள் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். வரும் அக்டோபர்  மாதத்தில்  வர இருக்கும் இந்த போனின் விலை  ரூ. 7,500க்குள் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.   இந்த மாடல் போன் நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் தன்மை கொண்டது. 3G, HSPA and WiFi  ஆகிய தொழில் நுட்பங்களைக்  கொண்டுள்ளது.  மிகச் சிறியதாக இருந்தாலும், 3ஜி, டபிள்யூ லான், மியூசிக் பிளேயர்,  எப்.எம். ரேடியோ, 4எக்ஸ் ஸூம் வசதி கொண்ட, ஸ்டில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கக் கூடிய 5 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. மெசேஜ் மற்றும் மியூசிக் செயல்பாடுகளுக்கென தனி கீகள் இருப்பது இதன் சிறப்பு. இதன் மூலம் ஓவி ஸ்டோர்ஸ் தரும் சிலவற்றை நேரடியாகப் பெறலாம்.  நோக்கியா  மெசேஜிங் மூலம், திரை வழி  உரையாடல் (சேட்) வசதியினை மேற்கொள்ளலாம்.  டச் ஸ்கிரீன் மூலம் மிக எளிதாக, ஆன்லைன் செல்ல முடியும். இதில் 16 ஜிபி வரை இதன் மெமரியை  மெமரி கார்ட் மூலம் அதிகப்படுத்த முடியும் என்பதால், கணக்கற்ற பாடல்கள், போட்டோக்கள், வீடியோ கிளிப்களை பதிந்து ரசிக்க முடியும். இதன் பேட்டரி, இதனைப் பயன்படுத்தாமல் இருந்தால், 17 நாட்களுக்கு மின்சக்தியைத் தக்க வைக்கிறது. சுற்றிலும் அலுமினிய பார்டருடன், நான்கு வண்ணங்களில் இது கிடைக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinodhkumar - chennai,இந்தியா
09-செப்-201017:54:12 IST Report Abuse
vinodhkumar ஹாய் to all , this model no is X3 , But relesed at Eroupe. In india X3 model is different. This very good model, Thanks to dinamalar.
Rate this:
Share this comment
Cancel
vinodhkumar - chennai,இந்தியா
04-செப்-201021:39:53 IST Report Abuse
vinodhkumar When we compare with நோக்கியா web site தி x3 மாடல் இஸ் differ with actual model which is shown on computre மலர் . WE need clear .
Rate this:
Share this comment
Cancel
ந.மகேஷ் - துபாய்,இந்தியா
03-செப்-201014:25:46 IST Report Abuse
ந.மகேஷ் இட்ஸ் ரியேல்லி ஹெல்ப்புல் பார் தி பிகினர். ஆல்சோ கெட்டிங் மோர் information.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X