பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 மே
2013
00:00

குரோம் பிரவுசருக்கான கொடுக்கபட்டிருக்கும் செட்டிங்ஸ் அனைத்தும் மிகப் பயனுள்ளவையாக உள்ளன. குறிப்பாக, இதில் டவுண்லோட் செய்யப்படும் பைல்களைக் குறிப்பிட்ட போல்டரில் அமையத் தேவையான செயல்பாடுகள் நன்றாக விளக்கப்பட்டுள்ளன. கீப் இட் அப்.
டாக்டர் பேரா, சம்பந்த மூர்த்தி, கோவை.

எட்டு தலைப்புகளில் தரப்பட்டுள்ள அனைத்து டிப்ஸ் குறிப்புகளும், குரோம் பிரவுசரில் எங்கள் அனுபவத்தினை மிக ஆர்வமூட்டும் வகையில் அமைக்கின்றன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி.
என். சகாதேவன், மதுரை.

"இந்த வாரம் நான் தெரிந்து கொண்டேன்' இணைய தளம் தரும் அனைத்து தகவல்களும், நம்மை ஆச்சரியத்துள் ஆழ்த்துவதுடன், தகவல் தெரிந்த பெரிய மனிதனாகக் காட்டிக் கொள்வதற்கும் உதவுகின்றன.
சி. சோழ ராஜன், உசிலம்பட்டி.

புதியவர் என்ன, பழையவர் என்ன, டிவைஸ் மேனேஜர் குறித்த சிறிய தகவல் கட்டுரை மிக ஜோராக உள்ளது. கம்ப்யூட்டரின் செயல்பாட்டிற்கான சில அடிப்படை விஷயங்களை அடிக்கடி வெளியிடவும்.
என். காளிதாஸ், சென்னை14.

விண்டோஸ் பாதுகாப்பிற்கான பன்னிரண்டு சோதனைகள் அனைத்தும் மிக மிக உண்மையானவையாக உள்ளன.
ஆர்.ஞானப் பிரகாசம், திருப்பூர்.

பைல்களை மீட்டெடுக்கப் பயன்படுத்தப்படும் ரெகுவா புரோகிராமின் புதிய பதிப்பும், அது மேற்கொன்டுள்ள புதிய செயல்பாடுகளும் மிக அருமை.
ஆர். ஜீவசக்தி, பொள்ளாச்சி.

கூகுள் தேடுதல் தளத்தில் பயன்படுத்தக் கூடிய வழிகள் அனைத்தும், நம் தேடல் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், வேலையையும் எளிதாக்குகின்றன. எடுத்து எழுதியவருக்குப் பாராட்டுகள்.
இனி. தெய்வீகன், மதுரை.

உயர்கல்விக்கான நூல்கள் பெற என்ற தலைப்பில் பயனுள்ள இணைய தளம் குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளீர்கள். கல்லூரியிலும், பள்ளிகளிலும் அடுத்த வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களுக்கு இது மிக நன்றாகப் பயன் தரும்.
என். கார்த்திகேயன், திருமங்கலம்.

நல்ல படத்துடன் ஐ பேட் கீ போர்ட் விரிவதனைக் காட்டியுள்ளீர்கள். இது எப்படி சாத்தியமாகும் என்று எண்ணியிருந்த எனக்கு, படமும் விளக்கமும் புதிய செய்தியைக் கொடுத்தன. மிக்க நன்றி.
எஸ். டேனியல், மார்த்தாண்டம்.

சீனாவின் கிரீன் டாம் சாப்ட்வேர் புரோகிராம் போல அனைத்து நாடுகளும், அவ்வழியைப் பின்பற்றினால், நம் இளைய தலைமுறையினர் காப்பாற்றப்படுவார்கள். இந்த வகையில் சீன நாட்டினை நம் முன் மாதிரியாகக் கூடக் கொள்ளலாம்.
எஸ். சுதர்சனம், மயிலாடுதுறை.

நீங்கள் காட்டியுள்ள பிரித்து செயல்படுத்தக் கூடிய ஆன் ஸ்கிரீன் கீ போர்ட் போலவே, மைக்ரோசாப்ட், பிரித்தே ஒரு கீ போர்ட் வெளியிட்டுள்ளது. ஆனால், விர்ச்சுவல் கீ போர்ட் போல அதனை இணைக்க முடியாது.
தெ. செழியன், புதுச்சேரி.

புக்பூன் டாட் காம் தளம், என்னைப் போன்ற பொறியியல் மாணவர்களுக்கு உதவியாய் உள்ளது. தகவலுக்கு நன்றி.
கா. தேவ பிச்சை, களக்காடு.

ஒர்க்புக்குகளை வகைப்படுத்தலாம் என்பதனை தங்களின் டிப்ஸ் பார்த்த பின்னரே புரிந்து கொண்டேன். இதே போல, இத்தனை ஆண்டுகளாக, அதிகம் புழக்கத்தில் இல்லாத பயனுள்ள விஷயங்களை அடிக்கடி தரவும்.
என். எஸ். ஜெனிபர், காரைக்கால்.

குரோம் பிரவுசரில் உள்ள அபவுட் பயன்பாடு, பல வழிகளில் நம் பிரச்னைகளை எப்படித் தீர்க்கலாம் என வழி காட்டுகிறது. பல வழிகளில் குரோம் பிரவுசர் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதை உங்கள் கட்டுரை காட்டுகிறது.
என். எஸ். மணிகண்டன், தாம்பரம்.

விண்டோஸ் 8ல் நாம் எதிர்பார்க்கும் எளிய முறை பயன்பாட்டிற்கான வழிகள் விண்டோஸ் புளு தொகுப்பில் தரப்பட்டால், நிச்சயம் இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மாற்ற இயலாத சிஸ்டமாக மக்கள் பயன்பாட்டில் இடம் பிடிக்கும்.
கே.சத்யகலா, திருநின்றவூர்.

கூகுள் தேடலில் வரையறைகளைக் கொண்டு தேவையானதை விரைவாகவும் எளிதாகவும் பெற இத்தனை வழிகள் உள்ளன என்பதை அறியும் போது, இன்னும் பல வழிகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ஏற்படுகின்றன. அவற்றையும் பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சி.ஆர். சிரஞ்சீவி, கோ.புதூர். மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X