பெர்சனல் ப்ரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஆக
2010
00:00

ஒரு பக்கம் முழுவதும் வேர்ட் தொகுப்பிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக் கொடுத்தது மிகவும் உதவியாய் இருந்தது.
–சி. புவனேஸ்வரி, விருதுநகர்
கூகுள் தொடங்கும் அனைத்தும் வெற்றி பெறுவதில்லை என்பதனைத் தெளிவாகக் கூறி உள்ளீர்கள். உங்கள் கட்டுரையைப் படித்த பின்னரே இதனைத் தெரிந்து கொண்டோம்.
–ஆ. விக்னேஷ், ஸ்ரீவில்லிபுத்தூர்
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில்,நாம் இன்டர்நெட் பயன்பாட்டில் முன்னேறித் தான் இருக்கிறோம். தகவலுக்கு நன்றி.
–டி. சிவராஜ குமார், செங்கல்பட்டு
அடிக்கடி வெளியூர் செல்லும் என்னைப் போன்ற அலுவலக ஊழியர்களுக்கு போர்ட்டபிள் அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ள தொகுப்பு. அப்ளிகேஷன் தொகுப்புகள் அடுத்த கம்ப்யூட்டர்களில் உள்ளதா என்ற கவலையே இல்லை.
–கா. நமசிவாயம், சிவகாசி
பண்டா வைரஸ் பதிந்தேன். ஆனால் அது பிரவுசர்களில் டூல் பார் போல அமர்ந்து கொண்டு அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறதே!
–டி. அருண் பிரகாஷ், சென்னை
கம்ப்யூட்டர் மலரின் பழைய இதழ்கள், இணையத்தில் கிடைக்கிறது என்ற செய்தி இதுவரை தெரியாமல், பழைய இதழ்களைத் தேடி வந்தேன். மிகவும் உபயோகமான சேவை இது.
–சா. இறையரசன், சின்னமனூர்
கடிகாரமாக மொபைல், அதுவும் ரூ.40 ஆயிரத்தில். தாங்காதுடா சாமி! இருப்பினும் இப்படி ஒன்று உள்ளது என்று பெருமூச்சுவிட்டோம்.
–எஸ். ராமசாமி, விடத்தகுளம்
வேர்டுக்கு ஆட் இன் தொகுப்புகளா! கேட்கவே வியப்பாக இருந்தது. நல்ல பயனுள்ளவையாகவும் உள்ளன.
–கே. ஆல்பர்ட், புதுச்சேரி
டைட்டில் பாரினை வண்ணமயமாக்கும் டிப்ஸ், கம்ப்யூட்டரை அழகாக வைத்திருக்க உதவுகிறது.
–சா. விஜயகுமாரி, கோவை
விசுவல் பேசிக் குறித்து விவரமான தகவல் எழுதினால், கம்ப்யூட்டர் படிக்கும் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
–எஸ்.ருத்ர குமார்,   காரைக்குடி
இணையப் பயன்பாடு குறித்த அனைத்து தகவல்களும் ஸ்வீட் தான். நல்ல ருசி; நல்ல தலைப்பு.
–டி.பிலோமினா, சென்னை
ஸ்டாப் ஆட்டோ பிளே, யு–ட்யூப் வீடியோவினைக் கையாளக் கிடைத்த இன்னொரு அருமையான சாப்ட்வேர். மிகவும் உபயோகமாக உள்ளது.
–ச. அமுதகுமார், ராஜபாளையம்
எப்1 கீ அழுத்தாதே என்ற எச்சரிக்கைக் குறிப்புக்கு நன்றி. எனக்கு அது போல பல லிங்க்குகள் வந்தன. என்னதான் பயர்வால், ஆண்ட்டி வைரஸ் போட்டாலும், இந்த கெடுக்கும் புரோகிராம்கள் வருவதனைத் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
–கே. சுந்தர்தாஸ், கோயம்புத்தூர்
ஜெயில் பிரேக்கிங் குறித்த தகவல்கள்,இதுவரை நான் கொண்டிருந்த தவறான எண்ணத்தை நீக்கியதுடன், ஆச்சரியத்தையும் தந்தது. வில்லனுக்கு வில்லன் உலகத்தில் உண்டு என்பது, கம்ப்யூட்டருக்கும், டிஜிட்டல் உலகத்திற்கும் தான் நன்கு பொருந்தி வருகிறது.
–எஸ் .ஜெயா பாரத், சென்னை
மொபைல் தொழில் நுட்ப தகவல் குறித்து அதிக தகவல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
–என். தண்டபாணி,  திண்டுக்கல்
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் புதிய பதிப்பு, என்னைப் போன்ற எக்ஸ்பி பயன்படுத்து பவர்களுக்குப் பயனில்லை என்றால், நிச்சயம் அது பிரபலமாகாது. கம்ப்யூட்டர் உலகில், இன்னும் அதிகமாகப் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி என நீங்கள் தானே புள்ளிவிபரத்தோடு தெரிவித்தீர்கள். எனவே மைக்ரோசாப்ட் நிறுவனம், இதனைப் பயன்படுத்தி வருபவர்களை மதிக்க வேண்டும்.
–என். தயாளன், சென்னை

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயப்ரகாஷ்.A - வடலூர்,இந்தியா
01-செப்-201019:19:50 IST Report Abuse
ஜெயப்ரகாஷ்.A சார், நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறேன், Construction store சாப்ட்வேர் (Inventory Software ) ஏதவது இலவசமாக உள்ளதா ? இருந்தால் எந்த தளத்தில் உள்ளது என்பதை தெரியபடுத்தவும். நான் பல சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணினேன். அனால் எல்லாம் incompele ஆக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Ravi - Haryana,இந்தியா
30-ஆக-201020:39:26 IST Report Abuse
Ravi Ununtu LTS payan paduththi பாருங்கள் வாவ். Arumai
Rate this:
Share this comment
Cancel
கே . முத்து குமார் - திருப்பனந்தாள்,இந்தியா
30-ஆக-201014:53:31 IST Report Abuse
கே . முத்து குமார் ஆம், இது ரொம்பவும் உபயோகமான தளம். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X