சுண்டியிழுக்கும் மதுரை சுங்குடி சேலைகள்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன் கைத்தறி தொழில் நலிவுற்றிருந்த போது, கஞ்சி தொட்டிகளை திறந்து நெசவாளர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது. இதையடுத்து கைத்தறிக்கு முன்னுரிமை கொடுப்போம் என, அனைத்து தரப்பினரும் அப்போது முன்வந்து, கைத்தறி சேலைகள், வேட்டிகளை அணிய துவங்கினர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் போட்டி போட்டு கைத்தறி வேட்டி, சேலைகளை அணிய, கைத் தறி விற்பனை உயர்ந்தது.
சமீபத்தில் பிப்ரவரியில், "மாமதுரை போற்றுவோம்' என்ற கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையின் பாரம்பரியங்களில் ஒன்றான சுங்குடி சேலைகளை அனைவரும் வாங்கி அணிய வேண்டுமேன, மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கேட்டு கொண்டார். அதையடுத்து அனைத்து தரப்பினரும் சுங்குடி சேலைகளை வாங்கி அணிந்தனர். இதன் மூலம் பாரம்பரியத்தையும், பெருமையையும் சுங்குடி சேலைகள் ஓரளவு தக்க வைத்தன.
மதுரையின் பாரம்பரிய மும், நவீனமயத்தின் கலவையாகவும் திகழும் சுங்குடி சேலைகள், காண்போரை சுண்டி இழுப்பவை.
நூறு ஆண்டு கால வரலாறு கொண்ட சுங்குடி சேலை உற்பத்தியில் சவுராஷ்டிரா இனத்தவர் பின்னணியில் உள்ளனர். "சுங்கு' என்றால் தெலுங்கில், "மடிப்பு' என பொருள். சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தை சேர்ந்த சவுராஷ்டிரா மக்களிடம் மஸ்லீன் துணி வகைகள் பெயர் பெற்றிருந்தன. அங்கிருந்தும் சில மாறுபாடுகளுடன் சுங்குடி புடவைகள் வந்ததாக தகவல்கள் உண்டு.
மதுரை, சின்னாளப்பட்டி உட்பட ஓரிரு இடங்களில் உற்பத்தியாகும் சுங்குடி சேலைகளை, அனைத்து மாநில பெண்களும் விரும்பி அணிவர். முன்னாள் பிரதமர் இந்திரா சுங்குடி சேலைகளை அணிவதில் ஆர்வம் கொண்டவர். கோராகாட்டன் போன்ற மிக்ஸடு காட்டன் சேலைகள் போலின்றி, சுங்குடி சேலைகள் நூறு சதவீத பருத்தியால், தயாராகுபவை. கோடைக்கு மட்டுமின்றி குளிருக்கும் இதம் அளிப்பவை. மதுரையில் 6, 7, 9, பத்தரை முழம் கொண்ட சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சுங்குடி சேலைகள் உற்பத்தி, மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள ஓ.ஜி.சரவணன் கூறுகிறார்: வெள்ளை நிறமாக வரும் காட்டன் சேலைகளை சாயம் அடித்து, அதில் கை அச்சு பதித்து, காய வைத்து, கஞ்சி போட்டு, சலவை செய்து சுங்குடிகளாக உருமாற்றுகிறோம். சுங்குடி சேலைகள் ரூ.150 முதல் 750 வரை விற்பனையாகின்றன. தரமான சுங்குடி சேலைகளை தண்ணீரில் எத்தனை முறை துவைத்தாலும், கலரோ, அச்சுக்களோ மறையாது, என அடுக்கினார்.
சுங்குடியில் இவ்வளவு சங்கதிகள் இருக்கும் போது, சுண்டி இழுக்காதா பின்னே? மதுரைக்கு போனால், மல்லிகைப்பூ மட்டுமின்றி சுங்குடி சேலைகளையும் இனி மறக்க மாட்டீர்கள் தானே!

எம். ரமேஷ்பாபு

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காயத்ரி - Chennai,இந்தியா
10-ஜூன்-201308:09:01 IST Report Abuse
காயத்ரி தகவல்களுக்கு நன்றி. சுங்குடிச் சேலை பெண்களுக்குக் கம்பீரத்தையும் தனிப் பொலிவையும் கொடுக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், குடும்பத்தலைவிகள் விரும்பி அணியும் சேலை சுங்குடி சேலைகள். குறிப்பாக வயதானவர்களுக்கு மிகவும் நல்லது, 100% பருத்தியில் தயாராவதால் தோலிற்கும் ஏற்றது. கண்ணியமான தோற்றத்தை இவ்வகைச் சேலைகள் வழங்குவதை மறுக்க இயலாது. மதுரையில் சுங்குடிச் சேலையுடன் பிரபலமான நிறைய விஷயங்கள் உண்டு. குண்டு மல்லி(பிற இடங்களில் இருக்கும் மல்லிகைப்பூவை விட இங்கு நெருக்கமாகத் தொடுக்கப்பட்டிருக்கும் குண்டுமல்லி வாசனையுடன் தனியழகும் தரும்) மீனாக்ஷி அம்மன் கோவில், அழகர் கோவில் என்று அதிகக் கோவில்களைக் கொண்ட அழகான கோவில் மாநகரம். வைகை நதி, விரகனூர் அணை என்று சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள் உண்டு. மதுரையின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
09-ஜூன்-201304:40:58 IST Report Abuse
Skv சுங்கடி சேலைக்கு ஈடு இணையே இல்லே அவ்ளோ சுகம் கம்பீரம் அழகு எல்லாம் உண்டு நான் சேலை அணிய துவங்கிய நாள் லேந்தே சுங்கடி தான் என் அபிமான சேலை விலை குடகொடுத்ஹு சரிகை கரை போட்டதை திருமணம் பார்ட்டிலேயும் அணிவேன் யாரு மதுரை போனாலும் நேக்கு சுங்கடி வாங்கிவரவும் சொல்லிடுவேன் அவ்லூஊஊஊஊஇஷ்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X