ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் விடுத்த அம்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2013
00:00

இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியில், சாம்சங் தன் ஜி.டி. எஸ் 5282 என்ற மாடலைப் புதிய அம்பாக எய்துள்ளது. கூடுதல் வசதிகள் (Features Phone) கொண்ட போன்களைப் பயன்படுத்துவோர், அடுத்த நிலை போனுக்கு மாறும் வகையில், மிகக் குறைந்த விலையில், தொடக்க நிலை ஸ்மார்ட் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காலக்ஸி வரிசை யில், மிக மலிவான விலையில் இது கிடைக் கிறது. நோக்கியாவின் ஆஷா மற்றும் இந்த வகையில் அதிக போன்களை வெளியிடும் மைக்ரோ மேக்ஸ் மற்றும் கார்பன் நிறுவனப் போன்களுடன் இது போட்டியில் உள்ளது. இந்த போனுடன், சாம்சங் நிறுவனம் 15 ஸ்மார்ட் போன் மாடல்களை விற்பனைக்கு இறக்கியுள்ளது. இவற்றின் விலை ரூ. 5,240 முதல் ரூ. 41,500 வரையில் உள்ளன. சைபர் மீடியா ரிசர்ச் அமைப்பின் கணிப்பின்படி, சென்ற 2012 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கு 22.1 கோடி போன்கள் அனுப்பப்படுள்ளன. இந்த மொத்த எண்ணிக்கையில், ஸ்மார்ட் போன் களின் எண்ணிக்கை 7 சதவீதமாக இருந்தது. இந்த மாடல் போனின் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
3 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் ஆண்ட்ராய்ட் 4.1. ஜெல்லி பீன் ஓ.எஸ், இரண்டு சிம் இயக்கம் 2 எம்.பி. திறனுடன் கேமரா, 11.9 மிமீ தடிமன், 100.5 கிராம் எடை 2ஜி, வை-பி, புளுடூத் 4.0.,ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் தொழில் நுட்ப வசதிகள், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பதியும் வசதியுடன் எப்.எம். ரேடியோ 512 ராம் மெமரி, ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி, 32 ஜிபி வரை இதனை அதிகப்படுத்தும் வசதி, மற்றும் 1200 mAh திறனுடன் பேட்டரி.
அதிகத் திறனுடன் பேட்டரி உள்ளதால், 14 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். 320 மணி நேரம் மின் சக்தி தாக்குப் பிடிக்கிறது.
இந்த போனின் அதிக பட்ச சில்லரை விலை ரூ.5,240 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சந்தை விலை ரூ.4,990 ஆக உள்ளது. வோடபோன் நிறுவனத்திடம், ஜூலை இறுதிக்குள் சேவையுடன் சேர்த்து வாங்கு வோருக்கு, சில சலுகைகள் அளிக்கப் படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X