கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2013
00:00

கேள்வி: என் லேப்டாப் மானிட்டரில் மவுஸின் பாய்ண்ட்டர் மிகவும் சிறியதாக, சட்டென்று பார்க்க முடியாத அளவில் கிடைக்கிறது. என் வயதிற்கு. பார்வைத் திறனுக்கு, இன்னும் சற்றுப் பெரியதாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். நான் லேப்டாப்பில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். இதற்கான தீர்வு என்ன?
சீ. ஆறுமுகம், தேனி.
பதில்
: தாரளமாக உங்கள் வசதிப்படி மாற்றிக் கொள்ளலாம். கீழே தந்துள்ள குறிப்புகளைப் பின்பற்றவும்.
1. “Start” கிளிக் செய்து “Control Panel” –ஐத் தேர்ந்தெடுக்கவும்.
2. “Mouse” என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
3. உடன் “Mouse Properties” என்ற பல டேப்கள் கொண்ட டயலாக் பாக்ஸ் தோன்றும். இங்கு “Pointers/Options” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இதில் “Display pointer trails” என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் அருகில் உள்ள ஸ்லைடரை பெரிய அளவு நோக்கி இழுத்து அமைக்கவும்.
5. நீங்கள் விரும்பினால் “Hide pointer while typing” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது டைப் செய்திடும் போதும் மவுஸ் கர்சர் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும்.
6. “Show location of pointer when I press the CTRL key” என்று உள்ள இடத்தில் கிளிக் செய்திடவும். இது கண்ட்ரோல் கீயை அழுத்துகையில் உங்கள் மவுஸ் பாய்ண்டரைச் சுற்றி ஒரு மின்னும் வட்டத்தை ஏற்படுத்தும்.
7. ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியே வரவும்.

கேள்வி: நான் அரசுப் பள்ளியில் பணி புரிகிறேன். என் மாணவர்களுக்கு ஸ்லைட் பிரசன்டேஷன் மூலம் வகுப்பு எடுக்கிறேன். மாணவர்கள், அப்போது காட்டப்படும் ஸ்லைடுக்கு முன்னால் அல்லது பின்னால் உள்ள ஸ்லைடுகள் குறித்து தகவல் கேட்கையில், அதிக நேரம் எடுத்து ஒவ்வொன்றாகச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு சுருக்க வழி உள்ளதா? உதவவும்.
என். கண்மணி, சிவகாசி.
பதில்:
லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி பிரசன்டேஷன் தொகுப்பு மூலம் வகுப்பு எடுப்பதாக எழுதி உள்ளீர்கள். அதுவும் சிவகாசி அருகே உள்ள கிராமப் பள்ளி ஒன்றில். தங்களுக்கு என் பாராட்டுக்கள். தீர்வைப் பார்ப்போமா!
ஸ்லைடுக்காக ஜம்ப் செய்ய வேண்டியதிருந்தால் பிரசன்டேஷன் மெனுவினை இயக்கவும். இதற்கு “a” கீ உங்களுக்கு உதவும். இந்த மெனுவில் எணி என்று ஒரு சப் மெனு இருக்கும். இதில் By Title என்ற சாய்ஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் கிளிக் செய்தால் அனைத்து ஸ்லைட்களின் பட்டியல் கிடைக்கும். ஸ்லைடுகளுக்கு டைட்டில் கொடுத்திருந்தால் தலைப்புகளும், இல்லை என்றால் அவற்றின் எண்களும் கிடைக்கும். இதனைக் கொண்டு தேவைப்பட்ட ஸ்லைடைப் பெறலாம். நீங்கள் விண்டோஸ் 2007 பயன்படுத்துபவராக இருந்தால் Go To Slide என்ற சாய்ஸ் இருக்கும். அதில் கிளிக் செய்து பட்டியலைப் பெற்றுத் தேவையான ஸ்லடைப் பெறலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் வைரஸ் இருந்ததால், அதனை நீக்கி விண்டோஸ் எக்ஸ்பியினை ரீ இன்ஸ்டால் செய்தேன். இப்போது திறந்திருக்கும் புரோகிராம்களைக் காட்டும் நீளமான கட்டம் இல்லை. இதனால், அனைத்து விண்டோக்களையும் மூடி, அடுத்த புரோகிராமினைப் பெற வேண்டியுள்ளது. குயிக் லாஞ்ச் புரோகிராம்களாக, எந்த புரோகிராமின் ஐகானை இழுத்து அமைத்தாலும், டாஸ்க் பாரில் நிற்க மறுக்கிறது. எங்கே பிரச்னை இருக்கிறது? வழி காட்டவும்.
சி.என். கிருஷ்ணன், திருப்பூர்.
பதில்:
ரீ இன்ஸ்டால் செய்தவர், டாஸ்க் பாரினை அனைத்து விண்டோக்களுக்கும் மேலாக அமைக்கவில்லை என்று தெரிகிறது. அவ்வாறு அமைக்கப்பட்டால் தான், நாம் விரும்பும் புரோகிராம்களை தேவைப்பட்ட போதெல்லாம் திறந்து இயக்க முடியும். பின் மினிமைஸ் செய்து வைக்க முடியும்.
உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள். கீழே கொடுத்துள்ள குறிப்புகள் விஸ்டா மற்றும் எக்ஸ்பி ஆகிய இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பயன்படுத்தலாம்.
1. ஸ்டார்ட் மெனுக்கு அடுத்தபடியாக உள்ள டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.
2. இப்போதுகிடைக்கும் விண்டோவில் இரண்டு டேப்கள் இருக்கும். இவை டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு ஆகிய பிரிவுகளாகும். இதில் டாஸ்க் பாரினைக் கிளிக் செய்தால் இரு பிரிவுகள் கிடைக்கும். முதல் பிரிவில் உள்ள ஐந்து வசதிகளில் நடுவில் கீப் த டாஸ்க் பார் ஆன் டாப் ஆப் அதர் விண்டோஸ் என்று ஒரு வரி இருக்கும். இதன் முன் உள்ள கட்டத்தில் உங்கள் கம்ப்யூட்டரில் டிக் அடையாளம் இருக்காது. மவுஸின் கர்சரைக் கொண்டு டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இங்கேயே குயிக் லாஞ்ச் பார் காட்டவும் ஒரு வரி கிடைக்கும். அதிலும் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். பின் மற்ற வரிகளையும் படித்துப் பார்த்து உங்கள் விருப்பத்திற்கேற்ப டிக் அடையாளங்களை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி டாஸ்க் பார் மற்ற விண்டோக் களின் மேலாக இருக்கும். நீங்கள் திறந்து இயக்கும் அனைத்து புரோகிராம்களின் டேப்களும் அவற்றின் ஐகான்களுடன் காட்டப்படும். நீங்கள் செயல்பட விரும்பும் புரோகிராமினைத் இந்த டேப்பில் கிளிக் செய்து விண்டோவைப் பெற்று இயங்கலாம். குயிக் லாஞ்ச் பாரில், நீங்கள் விரும்பும் புரோகிராம்களின் ஐகான்களை இழுத்து வந்து அமைக்கலாம்.

கேள்வி: வேர்டில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் அடிக்கடி உருவாக்குகிறேன். என் சக ஊழியர்களுக்குத் தெரியாமல் சில வரிகளை அல்லது பாராக்களை மறைத்துக் காட்ட விரும்புகிறேன். ஆனால், அவர்களுக்கு இது இருப்பதே தெரியக் கூடாது. இதற்கான வழி என்ன?
எஸ். மகேஸ்வரி, காரைக்கால்.
பதில்:
டாகுமெண்ட்டில் எந்த பகுதியையும் மறைத்து, பின் மீண்டும் பார்க்கும் வசதியை வேர்ட் கொண்டுள்ளது.
மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.

கேள்வி: ஒரு டைரக்டரியில் உள்ள பைல் ஒன்றை, இன்னொரு டைரக்டரியில் உள்ள போல்டருக்கு இழுத்து சென்று காப்பி செய்திட முடியுமா? என்ன வழி?
கே. மிருணாளினி, சென்னை.
பதில்:
இது மிக எளிது. எடுக்க வேண்டிய டைரக்டரி, சேர்க்க வேண்டிய டைரக்டரி என இரண்டையும் ஒரே திரையில் அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு, முதலில் பைல் இருக்கும் டைரக்டரி அல்லது போல்டரை விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் திறந்து கொள்ளுங்கள். பின் அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். இனி மீண்டும் இன்னொரு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளவும். இப்போது அந்த பைலை எந்த போல்டர் அல்லது டைரக்டரிக்கு மாற்ற வேண்டுமோ அதனைத் திறக்கவும். இப்போது இரண்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவினையும் ரெஸ்டோர் டவுண் செய்திடவும். இதனை விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கட்டங்களில், நடுவில் உள்ள இரண்டு சதுரங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள கட்டத்தின் மேல் கிளிக் செய்து மேற்கொள்ளலாம். இப்போது உங்கள் மானிட்டர் திரையில் பைல் இருக்கும் இடமும், அது செல்ல வேண்டிய இடமும் தெரியும். இனி தேர்ந்தெடுத்த பைலின் மீது மவுஸின் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்துச் சென்று, அது இருக்க வேண்டிய இன்னொரு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள டைரக்டரி அல்லது போல்டரில் விடவும். சிறிய மெனு ஒன்று தெரியும். காப்பி/மூவ் செய்திடவா என்று கேட்கும். உங்களுக்கு எது விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுத்துவிடுங்கள். பைல் இடம் மாறிவிடும்.

கேள்வி: எக்ஸ்பி சிஸ்டத்தில், மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன் படுத்துகிறேன். நிறைய புக் மார்க் சேர்ந்து நீளமாக பட்டியல் ஏற்பட்டுவிட்டது. தேவையற்ற புக்மார்க்கினை எப்படி நீக்குவது?
கே.என்.சிவராமன், திருவேற்காடு.
பதில்:
நீக்க விரும்பும் பேவரிட் தளம் சார்ந்த புக் மார்க் செல்லவும். கர்சரைக் கொண்டு சென்றவுடனேயே அந்த முகவரி தேர்ந்தெடுக்கப்படும். இனி அதனை இயக்குவதற்கான, இடது கிளிக் செய்திட வேண்டாம். வலது பக்கம் கிளிக் செய்திடுங்கள். உடனே ஒரு மெனு விரியும். இதில் டெலீட் பட்டன் தெரியும். அதனை அழுத்தவும். அழித்து நீக்கி விடவா? இல்லை என்றால் ஜஸ்ட் நீக்கிவிடவா என்று கேட்கப்படும். உடனே யெஸ் என்ற பட்டனில் அழுத்தினால் பேவரிட் தள லிஸ்ட்டில் இருந்து அது நீக்கப்படும்.

கேள்வி: வேர்ட் போன்ற சில புரோகிராம்களை மூடுகையில், கிளிப் போர்டில் பெரிய அளவிலான பைல் உள்ளது. அதனை நீக்கவா? என்ற கேள்வி கேட்கப்படுகிறது? புரோகிராமினையே மூடுகையில் இந்த கேள்வி எதற்கு?
சா. இளங்கவி, தஞ்சாவூர்.
பதில்:
நல்ல கேள்வி. காப்பி செய்யப்படுபவை, கிளிப் போர்டில் இருக்கும். இயக்கப்படும் புரோகிராமிற்கும் அதற்கும் சம்பந்த மில்லை. குறிப்பிட்ட புரோகிராமினை மூடினாலும், கிளிப் போர்டில் அது இருக்கும். எனவே, அடுத்து திறந்து இயக்கப்படும் புரோகிராமில், அதனை பேஸ்ட் செய்திடலாம். இருப்பினும் தேவை இல்லை எனில், நீக்குவதற்கு விருப்பம் தெரிவிப்பதே நல்லது. கிளிப் போர்டில் வைக்கப்படும் பைல்கள், ராம் மெமரியில் இடம் பிடித்துக் கொள்கின்றன. எனவே இவற்றை நீக்கினால், நமக்கு ராம் மெமரி இடம் காலியாகும். கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையாது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X